புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10 
42 Posts - 63%
heezulia
முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு கைது! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் நேரு கைது!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 10:55 am

திருச்சி: நில அபகரிப்பு புகாரில், முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர், டாக்டர் சீனிவாசன், 60. இவருக்கு, துறையூரில் சீனிவாசன் மருத்துவமனை, சீனிவாசன் மணிமேகலை நர்சிங் மற்றும் பி.எட்., கல்லூரி உள்ளது. ஒரு காம்ப்ளக்சும், திருச்சி ரோட்டில் உள்ளது. இவர், சில நாட்களுக்கு முன், திருச்சி மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார். புகாரில், "தற்போது திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள, தி.மு.க., கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்ட, என்னுடைய, 13 ஆயிரத்து, 920 சதுர அடி நிலத்தை மிரட்டி, அபகரித்துக் கொண்டனர். நில அபகரிப்பு நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, திருச்சி மாநகராட்சி துணைமேயர் அன்பழகன், தி.மு.க., நிர்வாகி குடமுருட்டி சேகர், லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு, லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தர்ராஜன், நில புரோக்கர்கள் தமிழ்மாறன், அவரது மகன் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., பிரமுகர் ஷெரீப், பந்தல் கான்ட்ராக்டர் மாமுண்டி ஆகிய 11 பேர், என்னையும், என் குடும்பத்தாரையும் கடத்தி, கொலைமிரட்டல் விடுத்து, வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த புகாரின் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று காலை 6 மணிக்கு, திருச்சி தில்லை நகரில் உள்ள வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் நேரு, கைது செய்யப்பட்டார். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜுலு ஆகிய இருவரும், அவரவர் வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும், கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்துக்கு கொண்டு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி உள்ளிட்ட மூவரின் கைது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.,வினரும், கட்சி வழக்கறிஞர்களும், ஆயுதப்படை திருமண மண்டபம் முன் குவிந்தனர். அவர்களை வாசலில் தடுத்து நிறுத்திய போலீசார், வழக்கறிஞர்கள், ஒரு சில கட்சியினர் தவிர யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க.,வினர், போலீசாருக்கும், அ.தி.மு.க., அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: துறையூர் டாக்டர் சீனிவாசன் கொடுத்த நில அபகரிப்பு, கொலைமிரட்டல் புகாரின் பேரில், கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இது பொய் புகார். ஏற்கனவே எங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதற்கு, முன்ஜாமின் கேட்டு, மதுரை கோர்ட்டில் வழக்கு உள்ளது. அப்படியிருந்தும், கைது செய்யப்பட்டுள்ளோம். வழக்கை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு நேரு கூறினார்.

நேரு உள்ளிட்ட மூவரையும், போலீசார், ஜே.எம்., 1 நீதிமன்ற (பொ) நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை, வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரையும், போலீசார், திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று, பின், அங்கிருந்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

கடலூர் சிறைக்கு, நேரு அழைத்து வரப்படுகிறார் என்பதை அறிந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சேர்மன் தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, ஏ.ஜி.ராஜேந்திரன் உட்பட ஏராளமான தி.மு.க., தொண்டர்கள், மத்திய சிறை வளாகத்தில் குவியத் துவங்கினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி.,க்கள் மணி, வனிதா தலைமையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம் 1.25 மணிக்கு, நேரு உள்ளிட்ட மூவரும், சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். 1.43 மணிக்கு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

"தட்டு கொடுங்க' : வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை, சிறை வளாகத்தில், வேனில் இருந்த படியே, நேரு உள்ளிட்ட மூவரும் சாப்பிட்டனர். சாப்பிடுவதற்குக் கட்சியினர் இலை கொண்டு வந்ததால், டென்ஷனான நேரு, "இலையில் எப்படிச் சாப்பிடுவது? தட்டு கொடுங்க...' என, கூச்சலிட்டார்.

வெளிநாட்டில் ராமஜெயம் : வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். ஏதாவது வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், அண்ணன் நேருவின் ஆலோசனைப்படி, ராமஜெயம் கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். தற்போது, அண்ணன் நேரு கைது செய்யப்பட்டுள்ளதால், வெளிநாட்டிலிருக்கும் ராமஜெயம், இன்னும் சில நாட்களில் தமிழகம் வந்து, போலீசில் சரணடைவார் என தெரிகிறது.

குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டால் தான் ஜாமின் கிடைப்பது எளிதாகும் என்ற காரணத்தாலும், ராமஜெயம் விரைவில் போலீசில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 26, 2011 11:02 am

புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 11:02 am

கே.என்.நேரு கைது: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஆக.26 - அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது நில ஆக்ரமிப்பில் ஈடுபட்டவர்கள் கைதாகி வருகின்றனர். தி.மு.க.வினருக்காக திருச்சி சிறை திறந்தே இருக்கிறது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஜெயலலிதா, உறுப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தி நில அபகரிப்பு வழக்கில் முன்னால் தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவும், அன்பில் பெரியசாமியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பிறகு அவையில் குறிப்பு ஒன்றை ஜெயலலிதா வாசித்தார். ஏற்கனவே தெரிவித்த செய்திதான் நில அபகரிப்பு வழக்கில் கே.என்.நேரு, அன்பில் பெரியசாமி குடமுருட்டி சேகர், ஷெரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக