ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மங்காத்தா - விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மங்காத்தா - விமர்சனம்

Post by பிரசன்னா on Wed Aug 31, 2011 2:39 pm

First topic message reminder :

மங்காத்தா - விமர்சனம்
மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு புன்னகை ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.

இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.

சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.

த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,

அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.

ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.

வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.

ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.

விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.

யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.

படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.

ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.

அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் புன்னகை தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.

http://ennuley.blogspot.com/2011/08/blog-post.html
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down


Re: மங்காத்தா - விமர்சனம்

Post by சிவா on Thu Sep 01, 2011 2:19 am

@ரபீக் wrote:30 தேதி அன்றே துபாயில் படம் வெளியானது ,,,,

படத்தைப் பற்றி சொல்வதென்றால் முதல் பாதி பொறுமையாக போகிறது ,,அனைத்து விதமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டிய காரணத்தாலும் அவர்களுடைய பின்னணி பற்றியும் வருவதால் அவ்வாறு இருக்கிறது ,,அதை சரிக்கட்டும் விதமாக இரண்டாம் பகுதி மின்னல் வேகத்தில் படம் வேகமாக உள்ளது ,,அஜீத் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிய்த்து விளையாடி உள்ளார் ,,,அர்ஜூன் ,த்ரிஷா ,லக்ஷ்மி ராய் ,போலீஸாக வரும் கணேஷ் அனைவரும் தங்களுக்கு உரித்தான பங்களிப்பை செய்துள்ளனர் ,,,,

மொத்தத்தில் தல தன்னுடைய பொன்விழாப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கியுள்ளார் என்பது என்னுடைய கருத்து

சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி ரபீக். நாளை எப்படியும் படத்தைப் பார்த்துவிட வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மங்காத்தா - விமர்சனம்

Post by ரபீக் on Thu Sep 01, 2011 2:23 am

நான் செவ்வாய் இரவே பார்த்து விட்டேன் தல ,,,இங்கே நிறைய இடத்தில் படம் ரெலீஸ் ஆகி உள்ளதால் அனைவருக்கும் பார்க்கக் கூடிய வாய்ப்பு உள்ளது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - விமர்சனம்

Post by கே. பாலா on Thu Sep 01, 2011 7:48 am

மாங்காத்தா- விமர்சனம் . கேபிள் சங்கர்

டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.
aj-09 டி20 பைனலை வைத்து ஆடப்படும் கிரிக்கெட் சூதாட்ட பணமான 500 கோடியை போலீஸ் ப்ரச்சனை காரணமாய் ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலை செய்யும் ஜெயப்ரகாஷ் மூலமாய் ட்ரான்ஸாக்‌ஷன் செய்ய நினைத்திருக்க, அந்த பணத்தை கொள்ளையடிக்க அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பிரேம்ஜி, பிரேம்ஜியின் பார் ஓனர் நண்பன் என்று எல்லோரும் சேர்ந்து ப்ளான் செய்திருக்க, நடு ப்ளானில் ஆட்டத்தில் நுழைகிறார் அஜித். அதை எப்படி கொள்ளையடித்தார்கள்? அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.


44 நிஜமாகவே ரொம்ப நாள் ஆச்சு அஜித்தின் பர்மாமென்ஸை பார்த்து. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், நாற்பது வயது ஆள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளூம் கேரக்டர் செம. முதல் நாள் ராத்திரி போதையில் லஷ்மிராயை கூட்டி வந்து பொரட்டி எடுத்துவிட்டு கேர்ள் ப்ரெண்டான திரிஷாவுடன் சல்லாபிக்கும் இடத்தில் ஆரம்பித்து, மெல்ல, மெல்ல தன் ஆளுமையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அஜித். அதிலும் இடைவேளைக்கு முன் ஆட்டத்தை ஆட தனியாய் செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம், இரண்டாவது பாதியில் பண வெறி பிடித்தலையும் காட்சிகளும் நல்ல பெர்மாமென்ஸ். முழுக்க முழுக்க அஜித்தின் ராஜ்யம் தான்.


வெங்கட் பிரபு டீம் முழுவதும் அஜித்தை ஆராதிக்கும் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. சும்மா உட்காருகிற நிற்கிற ஷாட்டுகளில் எல்லாம் என்னன்ன செய்ய முடியுமோ அத்துனை டெக்னிக்குகளையும் உபயோகித்து பில்டப் செய்திருக்கிறார்கள்.


51 அர்ஜுன்க்கு போலீஸ் கேரக்டர். வழக்கம் போல ரெண்டு காட்சிக்கு ஒரு முறை சீரியஸாய் வருகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். காரில் துரத்துகிறார். படத்தில் லஷ்மிராய், திரிஷா, அஞ்சலி ஆகியோர் இருந்தாலும் லஷ்மிராய்க்கு கிடைத்திருக்கும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. என்னா ஒரு இடுப்புடா? அஞ்சலிக்கு இன்னொரு வெத்து கேரக்டர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இதிலும் ஆஜர். கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது. முக்கியமாய் ப்ரேம்ஜி அமரன். கொஞ்சம் சலிக்க ஆரம்பித்துவிட்டார். ஜாக்கிரதை வெங்கட் பிரபு.


43 படத்திற்கு மிகப் பெரிய பலம் சக்தி சரவணின் ஒளிப்பதிவு. அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெசென்ஸை அருமையாய் பிரதியெடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் சில பல இடங்களில் கண்களை உறுத்துகிறது. யுவனின் இசையில் மங்காத்தா டைட்டில் மீசீக்கும், ஒரு பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் வேகத்திற்கு பெரிய தடையாய் இருப்பது பாடல்கள் தான். ஒட்டவேயில்லை. பின்னணியிசையில் மிஷன் இம்பாஸிபிள் ட்ராக்கையெல்லாம் தூசு தட்டி போட்டிருப்பது வேடிக்கையாய் இருக்கிறது. இத்தனைக்கு கார்த்திக் ராஜா வேறு வேலை செய்திருக்கிறார் பின்னணியிசையில்.

40 வெங்கட்பிரபுவின் ஆட்டம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஓஷன் 11, ஹீட், பேங்க் ஜாப் போன்று இன்னும் சில படங்களிலிருந்து எல்லாம் உட்டாலக்கடி அடித்திருக்கிறார் வழக்கம் போல. மெயில் அனுப்புகிறவர்கள் குறைந்தது ஏழு எட்டு மெயில் அனுப்ப வேண்டியிருக்கும். ஐந்நூறு கோடியை கொள்ளையடிக்க வேண்டும் சொல்லும் போதே பிரம்மாண்டமாய் இருக்கிறது அல்லவா.. அதை கொள்ளையடிக்கும் காட்சி எப்படியிருக்க வேண்டும்? படு மொக்கையாய் ஒரு கொள்ளை. அதுவும் அதற்கு ப்ளான் பண்ணுகிறேன் பேர்விழி என்று திரைக்கதையை ஜவ்வாக இழுத்து முதல் பாதியை கொட்டாவி விட்டே டயர்டாக்கி விடுகிறார்கள்.

அதே போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஆக்‌ஷன் காட்சிகளை செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். சும்மாவாச்சும் டப்பு டுப்பு என சுடுவதும், யார் யாரை சுடுகிறர்கள் என்று உத்து பார்த்தே கண்டுபிடிக்க வேண்டிய க்ட்டாயம் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதே போல் திரிஷா காதல் சோகத்தில் பாடும் காட்சி, அஞ்சலி தேவையேயில்லாமல் வைபவிடம் கோபித்துக் கொள்வதும், கட்டி பிடித்து அழுவதும் படத்தின் ஓட்டத்திற்கு தேவையில்லாதது.


35 படத்தை காப்பாற்றுவதே ரெண்டாவது பாதிதான். முழுக்க, முழுக்க, அஜித்தையும், ஆக்‌ஷன் கோரியோகிராபர்களை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சும்மா திகுதிகுவென போகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா சேர்த்து குறைந்த பட்சம் நானூறு ஷோக்கள் ஒரு நாளைக்கு ஓட்டுகிறார்கள். தேவிகருமாரி தியேட்டர் மூணு லட்சம் ஹயர். இன்றைக்கே ஒன்னரை க்ராஸ் செய்துவிடும் என்கிறார்கள்.

ரொம்ப நாளாய் பெரிய ஆட்டம் ஆடாத குறையிருந்த்தை மங்காத்தா தன் பேயாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐம்பதாவது படம், நூறாவது படமெல்லாம் எல்லாருக்கும் ஹிட் ஆவதில்லை. ரஜினி, கமல், விஜய், என்று பெரிய நடிகர்கள் அனைவரது படங்களின் நிலை அதே. ஒரு சில பேருக்கே அந்த அதிர்ஷ்டம் உண்டு. அஜித்துக்கு அது நிறையவே இருக்கிறது.

thanks: www.cablesankar.blogspot.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மங்காத்தா - விமர்சனம்

Post by பிரசன்னா on Thu Sep 01, 2011 12:13 pm

@கே. பாலா wrote:மாங்காத்தா- விமர்சனம் . கேபிள் சங்கர்

டூயட் பாடவில்லை, ஏழை குழந்தைகளை தூக்கி வைத்து, ஆயாக்களை கட்டிக் கொண்டு பாடவில்லை. நான் வளர்ந்ததே உன்னால்தான் என்று பார்வையாளர்களை பார்த்து பாடவில்லை. ஆனால் இதுவெல்லாம் இல்லாமல் அஜித் ஒரு அஜித் படம். பல சமயங்களில் ஓவர் பில்டப் சொதப்பிவிடும். ஆனால் அதே சமயம் ஓவர் பில்டப் சும்மா எகிறி அடித்து தூள் பரத்தவும் செய்யும். மங்காத்தா ரெண்டாவது வகை. சும்மா அடித்து தூள் பரத்தியிருக்கிறார்கள்.

thanks: www.cablesankar.blogspot.com

நன்றி பாலா.
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum