ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

இன்றைய சினிமா செய்திகள்

Post by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 11:50 am

கார்த்தி நடித்த ‘பையா’வில் சூர்யா!
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம்’ படம் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சூர்யா. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

சூர்யா நடிப்பில் ‘அயன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’7ஆம் அறிவு’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தனது படங்களின் ரீமேக் படங்களின் வெற்றியும், தனக்கு இருக்கும் இந்தி மார்க்கெட்டையும் பார்த்த சூர்யா தற்போது நேரடியாக இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா’. கார்த்தி, தமன்னா நடிப்பில் யுவன் இசையமைக்க, லிங்குசாமி இயக்கிய ‘பையா’ வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் இங்கு வரவேற்பை பெற்றதால், அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. சூர்யாவுடன் யார் நடிக்கிறார்கள். இயக்குநர் யார், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பின்னே… பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கணும்ல……
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் பணத்தாசை பிடித்தவள் இல்லை: ஐஸ்வர்யா ராய்!

Post by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 11:51 am

ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருந்தும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். ‘ஹீரோயின்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமானார். கர்ப்பமான தகவல் தெரிந்ததும் அப்படத்தில் இருந்து இயக்குநர் நீக்கி விட்டார். ஆனாலும் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாராய் நடவடிக்கைகள் இந்தி பட உலகினரை அதிர்ச்சியூட்டி உள்ளது. பணத்தாசை பிடித்தவர் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுபற்றிய தகவல் ஐஸ்வர்யாராய் காதுக்கு வந்ததும் எரிச்சலானார்.

கர்ப்பம் என்பது நோய் அல்ல. சினிமாவில் நடிக்க உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருப்பதால் விளம்பர படங்களில் நடிக்கிறேன் என்றார். இதற்கிடையில் ‘ஹீரோயின்’ படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் படத்துக்கான செக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் மதூர் பண்டாகருக்கு ஐஸ்வர்யாராய் திருப்பி அனுப்பி விட்டார்.

இதுபற்றி மதூர் பண்டார்கர் கூறும்போது,

ஐஸ்வர்யாராய்க்கு பணத்தாசை கிடையாது. எங்களிடம் வாங்கிய செக்கை திருப்பி கொடுத்ததில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம். அந்த பணத்தை அவர் எடுத்து இருந்தாலும் நாங்கள் கேட்டு இருக்க மாட்டோம். பணத்தாசை இல்லாததால்தான் திருப்பி அனுப்பினார் என்றார்.

புள்ளதாச்சியக்கூட விட்டு வைக்க மாட்டாங்களே…..!
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வதந்திகளை விரும்பும் ஹீரோயின்!

Post by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 11:52 am

பேருக்கு ஏற்ப அழகின் முழுமையோடு வலம் வரும் பூர்ணா அறிமுகமானது ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு`, படத்தில். அதன்பிறகு `ஆடு புலி` ‘துரோகி’என்று அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன. தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூர்ணா, `அர்ஜுனன் காதலி`, `வேலூர் மாவட்டம்` ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் `ஆடுபுலி` படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் நாயகன் ஆதிக்கும், பூர்ணாவுக்கும் காதல் துளிர்விட்டதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் சூடு பறந்தது செய்தி. ஆனால் இந்த செய்திகள் எதற்கும் வாய் திறக்காத பூர்ணா, அசத்தலான ஒரு பதிலை மீடியாவிடம் வீசியெறிந்திருக்கிறார். “ என்னை பற்றி வரும் வதந்திகளை எனது வளர்ச்சியாகப் பார்க்கிறேன். என்னைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருந்ததால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தயவுசெய்து ஜாலியாக என்னைப் பற்றி ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.

ஆனால் சீரியஸாக எதையும் எழுதி விடாதீர்கள். ஏனென்றால் நான் சினிமாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன். எனது பெற்றோர்கள் யாரை திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்களோ அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் வேலூர் மாவட்டம் படத்தின் இசை வெளியீட்டில்! ஒரு பிரபல கதாநாயகி வதந்திகளை விரும்புவது ஆச்சர்யம்தான்!
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சீயான் விக்ரம் பாதுகாக்கும் படப் பொக்கிஷங்கள்!

Post by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 11:53 am

கிரிக்கெட் விளையாட்டில் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, போட்டியின் போது நடைபெற்ற ஸ்டம்ப், பந்து, பேட் உள்ளிட்ட பொருட்களை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள் அது போல சீயான் விக்ரமும், தான் நடித்த படங்களில், பயன்படுத்திய பொருட்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாராம்.

‘சேது’ படத்தில் அணிந்த கை காப்பு, ‘சாமி’யில் பயன்படுத்தி கர்ச்சீப், ‘ஜெமினி’யில் வந்த வெற்றிலைப் பெட்டி, ‘ராவணன்’ படத்தில் கையில் கட்டியிருந்த கறுப்பு கயிறு என பட்டியலில் எல்லாமும் இருக்கும்.

இதுகுறித்து சீயான் விக்ரமிடம் கேட்டால் “இதை பார்க்கும் போதெல்லாம் என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஞாபகத்துக்கு வரும்’’என்கிறார்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஹிந்திக்குப் போகும் ‘காஞ்சனா’ – ராகவா லாரன்ஸ் வேடத்தில் சல்மான்கான்

Post by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 11:54 am

‘முனி’ படத்தை அடுத்து, அதன் இரண்டாவது பாகமான ‘காஞ்சனா’ திரைப்படம் தமிழகமெங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தினை இயக்கி நடித்திருப்பவர் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் திருநங்கையாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் துணிச்சலாக நடித்திருக்கிறார். இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. லாரன்ஸ் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்க இருக்கிறார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது;

‘காஞ்சனா’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. இதில் காமெடியும் கலந்துள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். சென்னையில் மாணவிகள் ஒரு ஷோ டிக்கெட்டை மொத்தமாக ‘புக்கிங்’ செய்து பார்த்துள்ளனர்.

முதலில் இப்படத்துக்கு 65 பிரிண்ட்கள் போடப்பட்டன. பல தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தற்போது 120 பிரிண்ட்களை போட்டிருக்கிறோம்.

இப்படத்தில் பிரியா என்ற திருநங்கை நடித்து இருந்தார். அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்து இருந்தனர். படத்தை பார்த்த பிறகு மனம் மாறி வீட்டில் சேர்த்துக் கொண்டனர்.

இதுபோன்று நிறைய திருநங்கைகளின் பெற்றோர் மத்தியில் இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘காஞ்சனா’ ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. நான் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். அவருக்கு இப்படத்தை திரையிட்டு காட்ட உள்ளோம்.’’ என்றார்.
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இன்றைய சினிமா செய்திகள்

Post by அருண் on Thu Sep 01, 2011 12:06 pm

காஞ்சனா ஹிந்தியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இன்றைய சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum