புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_m10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_m10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_m10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_m10இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 05, 2011 10:14 pm

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, "மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களுக்கும் வந்து விட்டது.
மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். சாதாரண நிலையில் அதிகம் பெயர் பெறாத மருத்துவக் கல்லுரிகளில், ஒரு சீட்டின் விலை, 20 - 25 லட்ச ரூபாயும், பெயர் பெற்ற கல்லூரிகளில், 60 லட்ச ரூபாயும் போகிறது. இது போக ஐந்து வருட படிப்பிற்கு, வருடம் இரண்டு லட்ச ரூபாய் வீதம், 10 லட்ச ரூபாய் செலவாகும். வெறும் எம்.பி.பி.எஸ்.,க்கு இன்று மதிப்பில்லை; எம்.எஸ்.,ஸோ, எம்.டி.,யோ முடிக்க வேண்டும். அதற்கு, 30 லட்ச ரூபாய் குறைந்தபட்சமாகத் தேவை.
ஆக, சாதாரண மருத்துவக் கல்லூரியில், ஏழு வருடங்கள் படித்து, முழுமையான ஒரு டாக்டராக வெளி வர, 70 - 75 லட்சம் ரூபாய் தேவை.
சரி... செலவு செய்தாயிற்று... என்ன சம்பளம் கிடைக்கும்?
அரசாங்க வேலை வேண்டாம்... புது வரவுகளுக்கு, தனியாரிடம் என்ன சம்பளம் கிடைக்கும்? 5,000 - 6,000 ரூபாய் - சென்னை நிலவரப் படி கிடைக்கிறது! 40 வயது ஆகும் போது தான், ஒரு டாக்டரால் நாலு காசு பார்க்க முடிகிறது!
இதுவே, போட்டியில்லாத கிராமப்புறத்தில் ஒரு, "ஷட்டர் கிளினிக்' (10 அடிக்கு, 10 அடி இடம்) போட்டால், 20 - 30 ஆயிரம் ரூபாயை எம்.பி. பி.எஸ்., டாக்டர் கூட சம்பாதிக்க முடியும் - ஆனால், கிராமத்தில் பணியாற்ற, 95 சதவீதத்தினர் விரும்புவதில்லையே! போகட்டும் —
கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகள் படித்தவர்களுக்கு உடனடி வேலை... உள்நாட்டில் என்றால், 20 - 30 ஆயிரம் ரூபாய் சம்பளம்... வெளிநாடுகளில் வேலை கிடைத்து விட்டாலோ மாதம், இரண்டு லட்சம் ரூபாய் என்ற நிலையும் மாறி விட்டது. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது... அப்படியே கிடைத்தாலும் 3,000 - 3,500 ரூபாய்க்கு, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.
நிலைமை இப்படி மோசமாக இருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கயவர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.
காசைக் கொட்டி, மூளையைத் தீட்டி, கஷ்டப்பட்டு படித்து, வெற்றி வாகை சூடிய இளைஞர்களை, அதைரியப்படுத்தும் விதமாக இதை எழுதவில்லை... "எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்...' என்ற எண்ணத்தில் ஏமாறாமல், எச்சரிக்கையாக இருக்கவே எழுதுகிறேன்...
சென்னையில் தங்கி வேலை தேடி வரும் கிராமத்து பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் எழுதிய எச்சரிக்கைக் கடிதம் இது... படியுங்கள்...

அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு,
என் பெயர் ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) நான் கிளின்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளேன்.
சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உங்கள் பணி தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது! அந்த வகையில், என்னைப் போன்ற படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களை ஏமாற்றும் போலியான, "கன்சல்டன்சி' அமைப்புகளைப் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் தங்கி, வேலை தேடி வருகிறேன். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், கோவையில் உள்ள ஒரு கன்சல்டன்சியின் விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது; நான் விண்ணப்பித்து இருந்தேன். ஒரு வாரத்தில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில், ஐநூறு ரூபாய் மற்றும் சான்றிதழ் நகல்களை நேரிலோ அல்லது மணியார்டர், தபாலிலோ அனுப்பும்படி இருந்தது.
ஆனால், என் நண்பர்கள் சிலர், "இது ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்கும்; பணம் அனுப்ப வேண்டாம்...' என்று கூறினர்; அதனால், நான் பணம் அனுப்பவில்லை. ஆனால், அடுத்த இரண்டு வாரத்தில் மறுபடியும் ஒரு தபால் வந்தது. அதில், என் தகுதிக்கேற்ற வேலை தயாராக இருப்ப தாகவும், 1,950 ரூபாய் நேரில் கொண்டு வரும்படி கேட்டு இருந்தனர்.
நான், தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டேன். கடிதத்தில் உள்ளதையே, தொலைபேசியிலும் கூறினர். பணம் கட்டினால் பெங்களூருவில் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று கூறினர். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்த காலத்தில், இவ்வளவு எளிதாக வேலை கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு 2,000 ரூபாயை வீட்டில் வாங்கி, என் கூடப் படித்த நண்பனுடன் கோவை சென்றேன்.
அங்கு, 1,950 ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு வாரத்தில் பெங்களூரு அழைத்துச் சென்று வேலையில் சேர்த்து விடுவதாகக் கூறினர். மேலும், என் கூட வந்த நண்பனையும் மூளைச்சலவை செய்து, இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். வேலை பற்றிய கனவுடன் ஊர் திரும்பினோம்.
என் நண்பன் பணம் கட்டாததால், அவன் கட்டியவுடன் இருவரையும் சேர்த்து பெங்களூரு அனுப்புவதாக கூறினர். இரண்டு வாரத்திற்குப் பின், நானும், நண்பனும் மறுபடியும் கோவை சென்றோம். என் நண்பனும், 1,950 ரூபாய் கட்டினான். ஒரு வாரத்தில் வேலையில் சேர்வதற்காக உத்தரவு வரும் என்று கூறினர்.
கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தோம். இரண்டு, மூன்று வாரங்களாகியும் ஒரு பதிலும் இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இரண்டு மாதம் சென்றது.
இந்த இரண்டு மாதமும், ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என் நண்பனும், நானும் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தோம். அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.
நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டதால், அடுத்த மாதம் பெங்களூருவில் உள்ள ஐ.டி.சி.,யில் கால் சென்டருக்கான எழுத்து தேர்வை எழுதுமாறு கூறினர். அதற்கு அவர்களிடம் இருந்து முறையான தகவல் இல்லை. எந்த விதத்தில் அவர்களை நம்பி பெங்களூரு செல்வது என்று தெரியாமல், அவர்களிடம் விசாரித்ததற்கு எரிந்து விழுந்தனர். அந்த தேர்வை எழுதினால் மட்டும் போதும், ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.
மறுபடியும் நாங்கள் நம்பிக்கை கொண்டு பெங்களூரு சென்றோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, இந்த, "கன்சல்டன்சி'க்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று! அந்த தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம், தினமும் அந்த தேர்வு நடக்கிறது என்று அங்கு போய் தான் தெரிந்து கொண்டோம்.
பெங்களூருவில் இருந்து கோவையை தொடர்பு கொண்டோம். அதற்கு அவர்கள், எங்களை ஊருக்குப் போக கூறினர். ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு வரும் என்றனர்; ஆனால், மறுபடியும் நாங்கள் ஏமாந்தோம். மறுபடி, மறுபடி தொடர்பு கொண்டாலும், "ஒரு வாரத்தில் வேலை கிடைத்து விடும்...' என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டனர்.
விரக்தியின் உச்சத்தில், நானும், என் நண்பனும் தற்போது சென்னையில் தங்கி வேலை தேடி வருகிறோம். இப்போது தான் இந்த போலியான, "கன்சல்டன்சி' பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான், என் நண்பன் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ இளைஞர்கள் எங்களைப் போல போலியான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, பணத்தைத் தொலைத்து விட்டு நிற்கின்றனர்.
தமிழக அரசு ஏதாவது செய்து, போலி, "கன்சல்டன்சி'க்களுக்கு தடை விதித்தும், "கன்சல்டன்சி'க்களை முறைப்படுத்தியும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.
படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, இந்த மாதிரி போலியான அமைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதையும் தங்களின் சேவைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— "புரொபஷனல் கோர்ஸ்' முடித்த பட்டதாரி இளைஞர்களே... இதைப் படித்த பின்னும் கவனமின்றி செயல்பட்டு, நொந்து போகாதீர்கள்!
நன்றி : வாரமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 1:05 am

நல்ல கட்டுரை எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை

இந்தியாவில் பணம் இருப்பவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள்
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் ஆக்கபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 06, 2011 12:09 pm

ஆமாம் மாறன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 06, 2011 2:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

படிக்கவே பரிதாபமாக இருக்கிறது.....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... 154550 இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... 154550 இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி... 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக