ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நன்றி
 wannie

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிடம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

ஜோதிடம் என்றால் என்ன?

Post by aathma on Tue Sep 06, 2011 6:11 pmஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ் வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர் என்று பொருள், இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம் என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள்.

அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், மற்றும் சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, என்பது குறித்த விஞ்ஞானம் ஆகும்.

இந்த விஞ்ஞான யுகத்தில், கம்ப்யூட்டர் காலத்தில் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

இதே கேள்வியை நான் சற்று மாற்றி அமைக்கிறேன். ஜோதிடம் கலையா? விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா ?

1. ஜோதிடம் கலையா?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் ஜோதிடத்தை கலை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் ஜோதிடம் கலை அல்ல.

காரணம், கலை என்பது மெய், வாய், கண்,மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களால் உணர்ந்து ரசிக்கக் கூடியது.

உதாரணமாக, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, சமையல் கலை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியல் (Astronomy)-ஐயும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே ஜோதிடம் கலை அல்ல.

பிறகு ஏன் காலங்காலமாக இன்று வரை ஜோதிடத்தை கலை என்று கூறி வருகின்றனர் என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.

இன்றைய அறிவியல் பாடங்களாகிய B.Sc (Bachelor of Science) Maths, Physics, Chemistry போனன்றவை சுமார் 40-45 ஆண்டுகளுக்கு முன் B.A (Bachelor of Arts) என்றுதான் வழங்கப்பட்டது. முன்பு கலையாக இருந்தவை இன்று அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அறிவியாலாளர்களும், கல்வியாளர்களும் ஜோதிடத்தை அறிவியலாக அங்கீகரிக்காமல் இருக்கின்றனர்.

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஜோதிடம் அறிவியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பது திண்ணம்.

2. ஜோதிடம் அஞ்ஞானமா? (மூடநம்பிக்கையா? அறிவீனமா?)

நிச்சயமாக ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. தனக்கு முன்னால் ஒரு திரையை வைத்துக் கொண்டு திரைக்கு பின்னால் எதுவுமே இல்லை என்று கூறுவதும், திரைக்கு பின்னால் ஏதேனும் (something) இருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் கூட எழாமல் திரைக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பதும், தனக்கு தெரியாத ஒரு பொருளை ( Subject or Concept) பொய், தவறு என்று விமர்சிப்பதுதான் அறிவீனம், மூட நம்பிக்கை, அஞ்ஞானம் ஆகும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் - 355

அதாவது ஒரு பொருள் (Subject or Concept) எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மை, ஆழம் (Reality and Depth) இவற்றை ஆராய்ந்து அறிதலே அறிவு என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த அடிப்படையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அடிப்படை கூட தெரியாமல் ஜோதிடத்தை பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் விமர்சிப்பது அறிவீனமே அன்றி அறிவுடமை ஆகாது.

3) ஜோதிடம் விஞ்ஞானமா? (அறிவியலா?)

இல்லை, அறிவியல் என்று தவறாக எழுதி விட்டேன். உண்மையில் ஜோதிடம் ஒரு நுண் அறிவியல் (Micro Science) என்பதே சரி.

ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... வேடிக்கையாக இருக்கிறது... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த இடத்தில் அறிவியல் என்றால் என்ன? என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தனது Out of my later years -ல் கூறியிருப்பது.

Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.

அதாவது ஒரு பொருளை (Subject or Concept) பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும் முயற்சியே அறிவியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் மனிதர்கள் உடற்கட்டமைப்பில் ஒத்திருந்தாலும் கல்வி, வாழ்க்கைத்தரம், குணாதிசயங்கள், உடலில் ஏற்படும் நோய்... போன்றவற்றில் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்களாகிய சித்தர்களும், ஞானிகளும் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.

சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று யாரோ கேட்கிறார்கள்.

அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜோதிடம் நுண்விஞ்ஞானம் என்பதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன்.

ஒரு 100 CC – மோட்டார்சைக்கிள்-நல்ல நிலையில் உள்ளது- ஒன்றில், ஓட்டுவதில் அனுபவமும் திறமையும் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மற்றோரிடத்திற்க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்.

வண்டியின் திறன், பெட்ரோலின் தன்மை, இடையில் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சீராக சென்றால் 5 மணி நேரத்தில் சென்றடைவார் என்று கூறுவது அறிவியல். இதைதான் அறிவியல் மூலம் கூற முடியும்.

ஆனால் இதனிலும் ஒரு படி மேலே போய் துவங்கிய பயணம் தடையின்றி முழுமையடையுமா? இடையில் தடை, தாமதம் ஏற்படுமா? என்பது பற்றியும் தெரிவிப்பது ஜோதிடம்.

எனவேதான் ஜோதிடம் அறிவியலை விட உயர்ந்து நுண் அறிவியலாக பரிணமித்து நிற்கிறது.

ஜோதிடம் மூடநம்பிக்கை, பயனற்றது என்று கூறுபவர்கள் நிச்சயமாக பகுத்தறிவாளர்களாகவோ,அறிவியலாளர்களாகவோ இருக்கமுடியாது. காரணம், இப்பூவுலகில் எந்த ஒரு பொருளையும் (Things (or) Subject (or) Concept) பயனற்றதாக இயற்கை அன்னை படைக்கவில்லை. ஒவ்வொரு பொருளும் ஏதாவதொரு விதத்தில் பயன்படும் என்பதே இயற்கையின் நியதி. உதாரணமாக பாம்பன விஷம்கூட விஷமுறிவுக்காகப் பயன்படுகிறது.

ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்லாமலேயே அதைப்பற்றி விமர்சிப்பவர்களை பகுத்தறிவுப் பாமரர்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஜோதிடம் மூடநம்பிக்கை, எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறுவது தற்காலத்தில் நாகரீகம் (fasion) ஆகிவிட்டது. உண்மையில் யார்யாரெல்லாம் ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று கிண்டல், கேலி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள், - இது ஊரறிந்த, நாடறிந்த ரகசியம்.

ஜோதிடம் மூடனம்பிக்கை இல்லை, ஜோதிடம் பயனுள்ளது, ஜோதிடம் விஞ்ஞானதைவிட உயர்ந்தது.


பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் – 423

ஒரு பொருளைப்பற்றி யார் கூறியிருந்தாலும், கூறியவர் படித்தவரா? படிக்காதவரா? வறியவரா? செல்வந்தரா? வயதில் அல்லது அனுபவத்தில் பெரியவரா? சிறியவரா? மகானா? பாமரனா? யார் கூறியிருந்தாலும், கூறியவரைப் பற்றி சிந்திக்காமல் கூறப்பட்ட பொருளின் உண்மைத் தண்மையை ஆராய்வதே அறிவுடைமை ஆகும்.

ஜோதிடத்தை எழுதியது பாபிலோனியர்களா? கிரேக்கர்களா? என்பதல்ல பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, யூகங்கள் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம், என்று வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களால் கூறப்பட்டதுதான் பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதைவிட, யூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டது என்பதுதான் மிகச்சரியானது.

விஞ்ஞானம் அல்லது அறிவியலின் அடிப்படையே யூகங்கள்தானே?
யூகம் இல்லாமல் அறிவியல் ஏது? அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யூகிக்காமல் எப்படி ஆய்வை மேற்கொண்டு தொடர முடியும்?

அணுவைத்துளைத்து எழுகடல் புகுத்தி குறுக தறித்த குறள் – என்ற ஒளவையாரின் யூகத்தின் விஸ்வரூபம்தானே இன்றைய அணு விஞ்ஞானம்.

இரவையும் ஒளிர வைக்க முடியும் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் யூகத்தின் விளைவுதானே இன்றைய மெர்குரி, சோடியம் வேப்பர், நியான் இன்னும் பலவிதமான மின் விளக்குகள்.

தந்திக் கம்பி மூலம் பேசமுடியும் என்ற கிரகாம் பெல்லின் யூகத்தின் அபரிதமான வளர்ச்சிதானே இன்றைய செல்போன்.

இப்படி யூகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய விஞ்ஞானிகளின் அதிகப் பொருட்செலவில் செய்யப்பட ஆய்வுகள் தோல்வியடைந்திருக்கின்றனவே! எனவே விஞ்ஞானம் என்பது சுத்த ஹம்பக் என்று கூறுவது சரியாகுமா? நியாயம்தான் ஆகுமா?

அதுபோல ஜோதிடத்தை மூடநம்பிக்கை, ஹம்பக் என்று கூறுவது சரியல்ல. நியாயமும் அல்ல.

விஞ்ஞானிகள் யூகித்தால் அது விஞ்ஞானம், பழங்கால முனிவர்களும், சித்தர்களும் யூகித்தால் அது வெறும் யூகம். இது சரியா?

நன்றி - ஜனியா
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by இளமாறன் on Tue Sep 06, 2011 8:10 pm

நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்
வாழ்க்கை நன்றாக வாழ ஒரு உதவி என்று சொல்லலாம் ஆனால் ஜோதிடமே வாழ்க்கை ஆகாது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by aathma on Tue Sep 06, 2011 8:55 pm

@இளமாறன் wrote:நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்
வாழ்க்கை நன்றாக வாழ ஒரு உதவி என்று சொல்லலாம் ஆனால் ஜோதிடமே வாழ்க்கை ஆகாது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

நன்றி நன்றி

நம் வாழ்க்கையின் போக்கு எவ்வாறு இருக்கும் ? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஜோதிடம்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by சிவா on Mon Sep 17, 2012 11:53 pm

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by யினியவன் on Tue Sep 18, 2012 12:09 am

என்ன பாஸ் வீடு சுத்தம் பன்றாப்ல இருக்கே?
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by சிவா on Tue Sep 18, 2012 12:13 am

@யினியவன் wrote:என்ன பாஸ் வீடு சுத்தம் பன்றாப்ல இருக்கே?

சும்மா லைட்டா! சூப்பருங்க
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by ராஜா on Tue Sep 18, 2012 12:16 am

@சிவா wrote:
@யினியவன் wrote:என்ன பாஸ் வீடு சுத்தம் பன்றாப்ல இருக்கே?
சும்மா லைட்டா! சூப்பருங்க
ஓகே ஓகே எனக்கு புரிந்துடுச்சு சியர்ஸ்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 10:25 pm

கற்பனையில் வாழ நினைப்பவர்களே சோதிடத்தின் பின் செல்வார்கள். நிஜ வாழ்க்கைக்கு ஜோதிடம் தீர்வாக முடியாது. கற்பனையில் நாம் நினைப்பது ஏதாவது ஒரு சந்தர்பத்தில் பொருந்தி விடலாம். ஆனால் எப்போதும் பொருந்தாது. தன்னை நம்பி வருபவர்களுக்கு சாதகமாக பலன் சொவது தான் ஜாதகம். இது ஒரு தந்திர ஜாலம். மற்றவர்களின் இயலாமையில் வாழ விரும்புபவர்களே சோதிடர்கள். நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட விஷயம். நன்றி.
avatar
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Muthumohamed on Thu Jan 24, 2013 10:32 pm

@இளமாறன் wrote:நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்
வாழ்க்கை நன்றாக வாழ ஒரு உதவி என்று சொல்லலாம் ஆனால் ஜோதிடமே வாழ்க்கை ஆகாது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து


சூப்பருங்க அருமையிருக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Muthumohamed on Thu Jan 24, 2013 10:33 pm

@THIYAAGOOHOOL wrote:கற்பனையில் வாழ நினைப்பவர்களே சோதிடத்தின் பின் செல்வார்கள். நிஜ வாழ்க்கைக்கு ஜோதிடம் தீர்வாக முடியாது. கற்பனையில் நாம் நினைப்பது ஏதாவது ஒரு சந்தர்பத்தில் பொருந்தி விடலாம். ஆனால் எப்போதும் பொருந்தாது. தன்னை நம்பி வருபவர்களுக்கு சாதகமாக பலன் சொவது தான் ஜாதகம். இது ஒரு தந்திர ஜாலம். மற்றவர்களின் இயலாமையில் வாழ விரும்புபவர்களே சோதிடர்கள். நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட விஷயம். நன்றி.


சூப்பருங்க அருமையிருக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by ramubabu on Tue Jun 11, 2013 11:32 am

போலியான பகுத்தறிவாளர்களுக்கு சரியான சௌக்கடி சபாஷ்
avatar
ramubabu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by ராஜு சரவணன் on Tue Jun 11, 2013 12:30 pm

சோதிடம் மூடநம்பிக்கை என்று சொல்பவர்

- தாங்கள் படித்தவர்கள் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பவர்கள்.

- நமது பண்பாடு-பாரம்பரியம் தவறு என்று சொல்பவர்கள்.

- நமது மூதாதையர்கள் முட்டாள்கள் என்று சொல்பவர்கள்.

தனக்கு பிரச்னை வரும் நேரங்களில் "ஐயோ தெய்வமே" என்று கும்பிடுவது ஏன்?. அது மட்டும் மூட நம்பிக்கை ஆகாதா?

இறை நம்பிக்கையும் சோதிடமும் கிட்டத்தட்ட ஓன்று தான்.

சும்மா கண்ணை மூடிக்கொண்டு வனம் இருட்டு என்று சொல்லாதீர்கள். சோதிடம் தமிழரின் வாழ்கையுடம் பின்னி பிணைந்த ஓன்று. அவற்றால் நமக்கு நன்மையே தவிர தீமை இல்லை.

பண்டைய தமிழன் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சோதிடமும், வான சாஸ்திரமும் போன்றவற்றை பற்பல தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறான். குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், படிப்பு, திருமணம், ருது , திருவிழா, காலநிலை, கட்டுமானம், பயணம், பணி போன்ற எல்லா துறைகளிலும் பயன்படுத்தியிருக்கிறான்.

சோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோல் போன்றது, அதை பயன்படுத்தி சென்றால் உங்கள் வாழ்கை பயணம் இனிதாக அமையும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by சிவா on Tue Jun 11, 2013 12:36 pm

@ராஜு சரவணன் wrote:சோதிடம் மூடநம்பிக்கை என்று சொல்பவர்

- தாங்கள் படித்தவர்கள் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பவர்கள்.

- நமது பண்பாடு-பாரம்பரியம் தவறு என்று சொல்பவர்கள்.

- நமது மூதாதையர்கள் முட்டாள்கள் என்று சொல்பவர்கள்.

தனக்கு பிரச்னை வரும் நேரங்களில் "ஐயோ தெய்வமே" என்று கும்பிடுவது ஏன்?. அது மட்டும் மூட நம்பிக்கை ஆகாதா?

இறை நம்பிக்கையும் சோதிடமும் கிட்டத்தட்ட ஓன்று தான்.

சும்மா கண்ணை மூடிக்கொண்டு வனம் இருட்டு என்று சொல்லாதீர்கள். சோதிடம் தமிழரின் வாழ்கையுடம் பின்னி பிணைந்த ஓன்று. அவற்றால் நமக்கு நன்மையே தவிர தீமை இல்லை.

பண்டைய தமிழன் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சோதிடமும், வான சாஸ்திரமும் போன்றவற்றை பற்பல தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறான். குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், படிப்பு, திருமணம், ருது , திருவிழா, காலநிலை, கட்டுமானம், பயணம், பணி போன்ற எல்லா துறைகளிலும் பயன்படுத்தியிருக்கிறான்.

சோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோல் போன்றது, அதை பயன்படுத்தி சென்றால் உங்கள் வாழ்கை பயணம் இனிதாக அமையும்.

வழிமொழிகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Alavandhan on Mon Aug 19, 2013 6:46 pm

இந்தப் பதிவு janya.freeforums.org என்ற வலைதளத்தில் ஞானசூனியன் என்ற பெயரில் என்னால் எழுதப்பட்டது. இந்த தளம் தற்போது இல்லை.

இதுபற்றி இன்னும் அதிகமாக என்னுடைய ப்ளாக் ஸ்பாட்டில் எழுதியுள்ளேன்.

ஈகரையின் நிவாகம் அனுமதித்தால் என் தளத்தின் முகவரியை தருகிறேன்.

இங்கிருக்கும் உறுப்பினர்களை என் தளத்திற்கு இழுக்கும் நோக்கம் சிறிதும் இல்லை.

நல்ல குடும்பத்தை பிரித்தல் மஹா பாவம் என்பதை நான் அறிவேன்.

இந்தப்பதிவை இங்கு பதிவிட்டமைக்கு (ஜனியா என்ற பெயரிலேயே) சகோதரி ஆத்மா அவர்களுக்கு நன்றி.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by ராஜு சரவணன் on Mon Aug 19, 2013 7:20 pm

@Alavandhan wrote:இந்தப் பதிவு janya.freeforums.org என்ற வலைதளத்தில் ஞானசூனியன் என்ற பெயரில் என்னால் எழுதப்பட்டது. இந்த தளம் தற்போது இல்லை.

இதுபற்றி இன்னும் அதிகமாக என்னுடைய ப்ளாக் ஸ்பாட்டில் எழுதியுள்ளேன்.

ஈகரையின் நிவாகம் அனுமதித்தால் என் தளத்தின் முகவரியை தருகிறேன்.

இங்கிருக்கும் உறுப்பினர்களை என் தளத்திற்கு இழுக்கும் நோக்கம் சிறிதும் இல்லை.

நல்ல குடும்பத்தை பிரித்தல் மஹா பாவம்  என்பதை நான் அறிவேன்.

இந்தப்பதிவை இங்கு பதிவிட்டமைக்கு (ஜனியா என்ற பெயரிலேயே) சகோதரி ஆத்மா அவர்களுக்கு நன்றி.
 
உங்கள் தளத்தில் உள்ள இது சம்பந்தமான தகவல்களை இதே பதிவில் தொடர்ச்சியாக போடலாம் அல்லது புதிய பதிவாக கூட உங்கள் வலைதளத்தின் பெயருக்கு நன்றி சொல்லி போடலாம்.

மற்ற தளங்களின் லிங்குகள் இங்கு கொடுக்க கூடாது என்பது ஈகரை விதி (தரவிறக்க லிங்குகள் தவிர)


Last edited by ராஜு சரவணன் on Mon Aug 19, 2013 7:33 pm; edited 2 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Alavandhan on Mon Aug 19, 2013 7:27 pm

@ராஜு சரவணன் wrote:
@Alavandhan wrote:இந்தப் பதிவு janya.freeforums.org என்ற வலைதளத்தில் ஞானசூனியன் என்ற பெயரில் என்னால் எழுதப்பட்டது. இந்த தளம் தற்போது இல்லை.

இதுபற்றி இன்னும் அதிகமாக என்னுடைய ப்ளாக் ஸ்பாட்டில் எழுதியுள்ளேன்.

ஈகரையின் நிவாகம் அனுமதித்தால் என் தளத்தின் முகவரியை தருகிறேன்.

இங்கிருக்கும் உறுப்பினர்களை என் தளத்திற்கு இழுக்கும் நோக்கம் சிறிதும் இல்லை.

நல்ல குடும்பத்தை பிரித்தல் மஹா பாவம்  என்பதை நான் அறிவேன்.

இந்தப்பதிவை இங்கு பதிவிட்டமைக்கு (ஜனியா என்ற பெயரிலேயே) சகோதரி ஆத்மா அவர்களுக்கு நன்றி.
 
உங்கள் தளத்தில் உள்ள இது சம்பந்தமான தகவல்களை இதே பதிவில் தொடர்ச்சியாக போடலாம் அல்லது புதிய பதிவாக கூட உங்கள் வலைதளத்தின் பெயருக்கு நன்றி சொல்லி போடலாம்.

மற்ற தளங்களின் லிங்குகள் இங்கு கொடுக்க கூடாது என்பது ஈகரை விதி (தரவிறக்க லிங்குகள் தவிர)
நன்றி திரு ராஜு சரவணன்
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Alavandhan on Mon Aug 19, 2013 7:41 pm

சூரியன் நிலையானது, பூமி முதற்கொண்டு புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இது ஆறாம் வகுப்புப் பாடம். ஆனால் ஜோதிடத்தில் சூரியன் முதற்கொண்டு அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆனால் ஜோதிடமோ கோள் என்கிறது. சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆனால் இதையும் கோள் என்றே ஜோதிடம் கூறுகிறது. இப்படி ஜோதிடத்தின் அடிப்படையே விஞ்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. நீரோ நுண்விஞ்ஞானம் என்கிறீர். வேடிக்கையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக்க்ள்ள முடியும்?

விளக்கம்

விஞ்ஞானக் கருத்து என்று கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அதாவது பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்பதும், சூரியன் ஒரு விண்மீன் என்பதும், சந்திரன் ஒரு துணைக்கோள் என்பதும் முற்றிலும் மறுக்கமுடியாத உண்மையே.

ஆனால், ஜோதிடத்தில் கூறப்பட்டிருப்பது விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது, என்று கூறுவதுதான் தவறு. ஜோதிடத்தில் விஞ்ஞானத்தின்படிதான் கூறப்பட்டிருக்கிறது.

என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை எப்போதும் வியப்பாகத்தானே இருக்கும்.

நாம் வசிப்பது பூமியில் எனவே ஜோதிடம் பூமியை மையப்படுத்தி எழுதப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும்போது, பூமியிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் என்ன கோணத்தில் இருக்கிறது என்று அளவிட்டு கணித்து, எழுதப்பட்டதுதான் ஜோதிடம். இந்த வகையில் பார்க்கும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் பூமியைச் சுற்றுவது போல தோன்றும்.

ஜோதிடம் விஞ்ஞானத்திற்கு முரணாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையான விஞ்ஞானம், விஞ்ஞானத்திற்கு எதிராகவோ, முரனாகவோ இருக்காது.

மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சூரியன் ஒரு விண்மீன், சந்திரன் பூமியின் துணைக்கோள். ஆனால் ஜோதிடத்தில் இவ்விரண்டையும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டிருக்கின்றணவே, இது எப்படி விஞ்ஞானம் ஆகும்?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கோள்களும் ராகு, கேது என்ற நிழல் கோள்களும், பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேற்படி கோள்களுடன் சூரியனும், சந்திரனும் சேர்ந்து பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அனைத்திற்கும் சேர்த்து பொதுவாக கோள்கள் என்று பெயரிட்டுள்ளனர். பொதுப் பெயர். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து ஜோதிடம் விஞ்ஞானமற்றது, என்று கூறுவது நியாயமற்றது.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by ராஜு சரவணன் on Mon Aug 19, 2013 7:47 pm

நாம் வசிப்பது பூமியில் எனவே ஜோதிடம் பூமியை மையப்படுத்தி எழுதப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும்போது, பூமியிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் என்ன கோணத்தில் இருக்கிறது என்று அளவிட்டு கணித்து, எழுதப்பட்டதுதான் ஜோதிடம். இந்த வகையில் பார்க்கும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் பூமியைச் சுற்றுவது போல தோன்றும்.
நல்ல விளக்கம் நண்பரே புன்னகை

நல்ல பதிவு தொடருங்கள் புன்னகை

எனது விருப்பம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Alavandhan on Mon Aug 19, 2013 8:00 pm

@ராஜு சரவணன் wrote:
நாம் வசிப்பது பூமியில் எனவே ஜோதிடம் பூமியை மையப்படுத்தி எழுதப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும்போது, பூமியிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் என்ன கோணத்தில் இருக்கிறது என்று அளவிட்டு கணித்து, எழுதப்பட்டதுதான் ஜோதிடம். இந்த வகையில் பார்க்கும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் பூமியைச் சுற்றுவது போல தோன்றும்.
நல்ல விளக்கம் நண்பரே புன்னகை

நல்ல பதிவு தொடருங்கள் புன்னகை

எனது விருப்பம் புன்னகை
மிக்க நன்றி நண்பரே.

இன்னும் நிறைய இருக்கு.

தருகிறேன்.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Alavandhan on Tue Aug 20, 2013 9:33 pm

(OK இதுவரை கூறப்பட்டவைகளை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றே வைத்துக்கொள்வோம்) ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானவியலின்படி, தங்களது சுற்றுப் பாதையில் எக்காலத்திலும் பின்னோக்கிச் செல்வதில்லை. ஆனால் ஜோதிடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதையும் விஞ்ஞானம் என்று கூறுகிறீர்களா?

விளக்கம்

நிச்சயமாக. இதிலென்ன சந்தேகம்.? மேற்படி கிரகங்களின் வக்கிரத்தை விஞ்ஞானம் என்றுதான் கூறுவேன். இந்த வக்கிரகதியை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்கினால் புரியும்.

நாம் பேருந்தில் செல்லும் போது நம் பேருந்து வேறொரு பேருந்தை முந்தி செல்லும்போது அந்தப் பேருந்து பின்னோக்கி செல்வது போலத் தோன்றும்.
உண்மையில் இரண்டுமே முன்னோக்கிதான் செல்கின்றன. இந்த மாயத்தோற்றத்திற்குக் காரணம் இரண்டு பேருந்துகளின் வேக மாறுபாடுதான். இதுவும் ஆறாம் வகுப்புப் பாடமே. (இந்த ஆறாம் வகுப்பு பாடத்தை நீங்கள் படிக்கவில்லையோ?)

இதே போலத்தான் பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வரும்போது, வேகமாறுபாட்டால் ஏற்படும் மாயத் தோற்றமே வக்கிரம்.

இப்பொழுது சொல்லுங்கள் ஜோதிடம் விஞ்ஞானம்தானே?

அவசரம் வேண்டாம் நண்பரே, இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

சரி & sory,கேளுங்கள் முடிந்தவரை, தெரிந்தவரை விளக்கம் தருகிறேன்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஏன் வக்கிரம் இல்லை?

சூரியன் நிலையானது, சூரியனை பூமி சுற்றும் வேகமும், சந்திரன் பூமியுடன் சேர்ந்து சுற்றும் வேகமும் ஒன்றே. எனவே சூரிய சந்திரர்களுக்கு வக்கிரம் இல்லை.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum