ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நவரத்தினங்கள்

View previous topic View next topic Go down

நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:43 pm

ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர்.

தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.

ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!

நவரத்தினங்களான

மாணிக்கம்,முத்து,மரகதம்,புஷ்பராகம்,பவழம்,வைரம்,வைடூரியம், நீலம்,கோமேதகம்

ஆகியவற்றின் பண்புகளை பற்றி விரிவாக காணலாம்...!
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:44 pm

நவரத்தினங்களின் பண்புகள் - மாணிக்கம்
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .

பண்புகள்

மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .

மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம் . எண்கணித படி 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும் , பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:45 pm

நவரத்தினங்களின் பண்புகள் - முத்துமுத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.


வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.

முத்தின் மருத்துவ குணங்கள்

முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.

இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.


யாரெல்லாம் முத்து அணியலாம்

கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:46 pm

நவரத்தினங்களின் பண்புகள் - மரகத பச்சைஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.

பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்

மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:47 pm

நவரத்தினங்களின் பண்புகள் - புஷ்பராகம்இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்

தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.

தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:48 pm

நவரத்தினங்களின் பண்புகள் - பவழம்இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

பவழத்தின் மருத்துவ குணங்கள்

ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.

யாரெல்லாம் பவழம் அணியலாம்

பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:50 pm

நவரத்தினங்களின் பண்புகள் - வைரம்

உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள்

மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!

சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:51 pm

நவரத்தினங்களின் பண்புகள் - வைடூரியம்இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது . நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல் .மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும் .பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும் .மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும் .

சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும் .பூர்வீக சொத்து கிடைக்கும் .நிலையான வருமானம் அமையும் .முகத்தில் வசீகரம் உண்டாகும் .

வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்


வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்

அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் ,7 16 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும் ,2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:54 pm

நவரத்தினங்களின் பண்புகள் - நீலம்ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.


நீலகல்லின் மருத்துவ குணம்

கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.

மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:55 pm

நவரத்தினங்களின் பண்புகள் - கோமேதகம்

புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்

கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.


யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?

திருவாதிரை,சுவாதி,சதய நட்சத்திர காரர்கள்.மற்றும் எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நவரத்தினங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum