ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

View previous topic View next topic Go down

கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:02 am

கருத்தரிக்க திட்டமிடும்போதே சில விஷயங்களை பெண் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.

கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:02 am

அம்மைத்தடுப்பு

ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.

கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:03 am

புகை, மதுவைத் தவிர்த்தல்

கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.

குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.

புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:03 am

மருந்து மாத்திரைகள்

கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.

தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:04 am

பணியிடங்களில் அபாயம்

கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.

இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:04 am

பாரம்பரியப் பிரச்சினைகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.

கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.

தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.

தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க

Post by Guest on Wed Dec 17, 2008 3:04 am

ஏற்கனவே, ரத்தம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் அல்லது அதிகமாக ஊசி மருந்து போடப்பட்டுள்ள நிலை இருந்தால் ஹெபடைடிஸ் போன்ற கிருமிகள், …வேறு சில கிருமிகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கும் சேர்த்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.

கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.

இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.

தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum