ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ப்ப கால நோய்கள்

View previous topic View next topic Go down

கர்ப்ப கால நோய்கள்

Post by Guest on Wed Dec 17, 2008 3:44 am

கர்ப்பக்காலத்தில் மிகை ரத்த அழுத்தம், ரத்தசோகை, மூலநோய், ரத்த நாளச்சிதைவு, மலச்சிக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் வருகின்றன. இவற்றில் சில நோய்கள் கர்ப்பிணியின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.

மிகை ரத்த அழுத்தம்

கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.

ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.

கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.

கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்ப கால நோய்கள்

Post by Guest on Wed Dec 17, 2008 3:45 am

ரத்தசோகை

கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.

இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.

இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.

கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.

ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.

சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்ப கால நோய்கள்

Post by Guest on Wed Dec 17, 2008 3:45 am

ஜீரண மண்ட நோய்கள்

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.

மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.

இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.

பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்ப கால நோய்கள்

Post by Guest on Wed Dec 17, 2008 3:46 am

உதிரப்போக்கு

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.

ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

ரத்தநாளச் சிதைவுகள்

தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.

இதயப் படபடப்பு

மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்ப கால நோய்கள்

Post by Guest on Wed Dec 17, 2008 3:46 am

சுவாசக் குழல் நோய்கள்

வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.

சிறுநீரக பாதிப்புகள்

கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.

சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்

கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.

இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.

ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்ப கால நோய்கள்

Post by சபீர் on Wed Aug 04, 2010 1:17 pm

மிகவும் அழகிய பகிர்வுக்கு நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum