ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

+13
உமா
பிஜிராமன்
அ.இராஜ்திலக்
Manik
சுரேஷ்
செல்ல கணேஷ்
kitcha
krishnaamma
ரேவதி
dsudhanandan
ayyamperumal
உதயசுதா
மகா பிரபு
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 3:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
வணக்கம்.
இது நல்லதொரு திரி. இதில் உங்கள் ஊர் அருகே உள்ள புகழ்பெற்ற அல்லது புகழ் பெற வேண்டிய சுற்றுத்தளங்கள் அல்லது கோவில்களை பற்றி இங்கே பதிவிடுங்கள். நம்ம ஊரின் வாசத்தை பிறரறிய செய்யலாம். நீங்கள் வெளியூர் சென்று ரசித்த இடங்களைப் பற்றியும் எழுதலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty அன்பின் பகிர்வு

Post by செல்ல கணேஷ் Mon Sep 19, 2011 5:02 pm

மகா பிரபு wrote:விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலூப்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் விராலிமலை. இது திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சிறிய மலைக்குன்றின் மேல் "முருகன்" எழுந்தருளியுள்ளார். நல்ல பிரமாண்டமான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு மயில்கள் அதிகமாக வாழ்கிறது. இது மயில்களின் சரணாலயமாகவும் போற்றப்படுகிறது. இந்த மலையில் கனிசமான அளவு குரங்குகளும் வாழ்கிறது. இங்கு பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் காணப்படுகிறது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் விராலிமலை.
தோழமைக்கு, தோழரே தங்களின் இந்த திரி என்னை போன்ற ஊர் சுற்ற விரும்பும் தோழமைகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மேலும் விரலிமலை பற்றிய சில செய்திகள், தோழமையின் அன்பின் அனுமதியுடன்,
1.ஊர் பெயர்காரணம்: விரலியர் மலை என்பதே மருவி உள்ளது.
விரலியர்- அதாவது இறைவனுக்கு பணி செய்யும் பெண்கள்.
2.விரலிமலை முருகன் தான், அருணகிரி நாதருக்கு ஞானோதயம் அருளியதாக வரலாறு தெரிவிக்கிறது.
அருணகிரிநாதர் முடுகு சந்தத்தில் கவி பாடுவதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததே!
வாழ்க தமிழுடன்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Oct 01, 2011 5:14 pm

விராலிமலையை பற்றிய கூடுதல் தகவலுக்கு நன்றி கணேஷ் நன்றி .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by சுரேஷ் Sat Oct 01, 2011 5:49 pm

எனக்கும் திருச்சி தான் சொந்த ஊரு... புன்னகை புன்னகை புன்னகை

நானும் எனக்கு தெரிஞ்சதை பத்தி எழுதறேன்......


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by Manik Sat Oct 01, 2011 5:53 pm

எங்க ஊரைப் பத்தி ஏற்கனவே சிவா அண்ணா ஈகரையில் பெரிய கட்டுரையே போட்டுவிட்டார்........ முடிந்தால் தேடிப்பாருங்கள் ஈகரையில் சிங்கம்புணரி என்று ஜாலி ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Wed Oct 19, 2011 12:55 pm

கொடும்பாளூர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலாகா, விராலிமலை ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் தான் கொடும்பாளூர். இங்கு வரலாற்று சிறப்புமிக்க மூவர் கோவில் இருக்கிறது. இங்கு பல சோழர் கால கல்வெட்டுக்களும் காணப்படுகிறது. அது போல ஐவர் கோவில் இருந்ததாகவும் பின்னர் அழிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கொடும்பாளூரில் பழங்காலத்தில் சத்திரம் (தங்கும் விடுதி) இருந்திருக்கிறது. மதுரை சென்ற கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தியடிகள் ஆகியோர் இந்த சத்திரத்தில் தங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவ்வூர் கொடும்பாளூர் சத்திரம் என்றே தற்போதும் அழைக்கப்படுகிறது.

மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வரலாற்று சிறப்புக் கொண்ட கற்கோவில்களைக் கொண்டது கொடும்பாளூர். இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல நினைவுச்சின்னங்கள் இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று மூவர் கோயில் மற்றொன்று முசுகுந்தேஸ்வரர் கோயில். மேலும் ஐவர் கோயில் இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு சிவன் கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோயில். இந்தக் கோயில்கள் பிற்காலச் சோழர்களின் கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன. முக்கியமாகக் கருதப்படும் கல்வெட்டுக்களும் இங்கே காணக்கிடைக்கின்றன.

செல்லும் வழி: மணப்பாறையில் இருந்து 12 கி மீ. விராலிமலையில் இருந்து 7 கிமீ.

நன்றி: விக்கிப்பீடியா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by அ.இராஜ்திலக் Wed Oct 19, 2011 1:25 pm

பயனுள்ள பதிவு பாராட்டுகள்


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Wed Oct 19, 2011 1:51 pm

அ.இராஜ்திலக் wrote:பயனுள்ள பதிவு பாராட்டுகள்
:வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty எனது குல தெய்வம் !

Post by ayyamperumal Fri Dec 16, 2011 2:19 pm

சக்தி விகடனில் ஜனவரி 2008 இல் வெளிவந்த கட்டுரை. என் கோவில் பற்றி பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. பிறகு பார்ப்போம்


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana1j

இந்த பூமியில் ஜலப் பிரளயங்களால் (நீரால் ஏற்படும் அழிவுகள்) பல இடங்களில் இருந்த ஆலயங்களும் அங்கு குடியிருந்த தெய்வங்களும் மண்ணுக்குள் புதைந்து போனதுண்டு. அப்படி புதையுண்ட தெய்வங்கள் பிற்காலத்தில், ஏதோ ஒரு சூழலில் மீண்டும் இந்த பூமியில் அருள்பாலிக்க அவதாரமெடுப்பதுண்டு. அப்படி அவதாரமெடுத்து வந்தவரே தண்டீஸ்வர ஐயனார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புவனம். இங்கிருந்து தென் மேற்காகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரம் பயணித்தால் வருவது, அல்லிநகரம் என்ற கிராமம். இதன் வடமேற்கு எல்லையில், இயற்கை எழிலார்ந்த சூழலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் தண்டீஸ்வர ஐயனார்.

முன்பொரு காலம், இப்போதைய தண்டீஸ்வரர் ஆலயத்துக்குத் தென் கிழக்கில், ஆயர்கள் (யாதவர்கள்) குடியிருந்தனர். விவசாயம் தவிர, பால், நெய், மோர், தயிர் ஆகியவற்றை விற்றும் பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரத்துக்காக செல்லும் அவர்கள், இப்போது தண்டீஸ் வரர் அமர்ந்துள்ள இடத்தின் அருகே இருந்த ஒற்றையடிப் பாதையில்தான் போய் வருவர்.

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana2o

ஒரு நாள் இந்த வழியில் வியாபாரத்துக்கு சென்ற ஒருவர் கால் இடறி விழுந்தார். அவர் வைத்திருந்த பால் முழுவதும் கீழே கொட்டியது. இதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டார் அவர். ஆனால், மறு நாளும் அதே இடத்தில் கால் இடற... பால் குடத் தைக் கீழே போட்டார் அந்த நபர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த சம்பவம் தொடர்ந்தது! இதனால் பீதியடைந்த அந்த மனிதர், ''இன்னிக்கும் கால் இடறி பால் கொட்டினால், அந்த இடத்துல என்னதான் இருக்குனு வெட்டிப் பார்க்காம விடமாட்டேன்'' என்று தன் மனைவியிடம் சபதம் போட்டுவிட்டுக் கிளம்பினார்.

மீண்டும் அதே இடம். கால் இடறி பால் கொட்டியது. உடனே, தான் கையோடு கொண்டு வந்திருந்த மண்வெட்டியால் அந்த இடத்தை ஆக்ரோஷத்தோடு தோண்ட ஆரம்பித்தார். எதுவுமே தட்டுப்படவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தோண்டினார்.

திடீரென அவர் வெட்டிய குழியில் இருந்து 'குபுக்'கென ரத்தம் பீறிட்டது. இதைக் கண்டு, அந்தக் குழியிலேயே மயங்கி விழுந்தார் அந்த மனிதர். அவருடன் வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட... அப் போது அதில் ஒருவருக்கு அருள் வந்து இறங்கியது. ''இந்த உலகத்தையும் மக்களையும் காக்க, இந்த இடத்தில் நான் அவதாரம் எடுத்திருக்கிறேன். நீங்கள் பக்தியோடு வணங்கி எனக்கு படையல் வைத்தால், செல்வம் சிறக்க வைத்து உங்களைக் காப்பேன்!'' என் றார். இதைக் கேட்டுப் பரவசம் அடைந்த மக்கள், அந்தக் குழியில் இருந்து ஜடாமுடி தரித்து தியான நிலையில் அமர்ந்திருந்த கடவுள் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனர். மண்வெட்டியின் வெட்டு விழுந் ததால், விக்கிரகத்தின் இடது புஜத்தில் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. விக்கிரகம் பதிந்திருந்த பூமி, ............................இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதால் ''விக்கிரகம் எங்களுக்குத்தான்!'' என்று சொன்ன அந்த மக்கள், அதே இடத்தில் சிறிய ஆலயம் எழுப்பி, பிரதிஷ்டை செய்த னர். காலை தட்டிவிட்டு தனது இருப் பிடத்தை உணர்த்தியவர் என்பதால் அந்த விக்கிரகத்தை, 'தட்டீஸ்வரர்' என்று வழிபடத் தொடங்கினர் ஊர் மக்கள். காலப் போக்கில் அதுவே தண்டீஸ்வரராகி பிறகு, தண்டீஸ்வர ஐயனாராகவும் மாறி யதாம். தண்டீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பிய ............................. இனத்தாரே பூஜைகளை செய்து வந்தனர்.

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana9yg


Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Dec 16, 2011 2:40 pm; edited 1 time in total


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by ayyamperumal Fri Dec 16, 2011 2:29 pm

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana3

அந்தக் காலத்தில் 'பூப்பெய்திய பெண்கள் திருமணத்துக்கு முன்பு வேற்று ஆண்களைப் பார்த்தாலே கற்பு களங்கப்பட்டு விடும்!' என்று அவர்களை வீட்டுக்குள்ளேயே திரை போட்டு மூடி வளர்த்தனர். அப்படி வளர்ந் தவளே .............. இனத்தில் பிறந்த அன்னகாமு என்ற முத்துப்பேச்சி. ஒரு நாள் சேதுச்சீமையை ஆண்ட மன் னர் ஒருவர், வேட்டைக்குப் போய்விட்டுத் திரும்பும் போது, குதிரைகளின் குளம்பொலி சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அன்னகாமு, திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தாள். மின்னல் கீற்று போல் பளிச்சென முகம் காட்டி மறைந்த அன்னகாமுவின் அழகில் மயங்கிய மன்னர், அவளைப் பெண் கேட்டு ஆள் அனுப்பினார்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட அன்னகாமுவின் பெற்றோர், சாதி விட்டு சாதி பெண்ணைக் கட்டிக் கொடுக்க சம்மதிக்க முடியாமல் தவித்தனர். அதோடு 'ஒரு ஆண்மகனின் கண்ணில் பட்டு, அவனது இச்சை யைத் தூண்டிவிட்ட இவளை இனி யாருக்கும் கட் டிக் கொடுக்க முடியாது' என்று தீர்மானித்தனர். வீட்டுக்கு அருகிலேயே ஆழமாகக் குழியை வெட்டி, அதில் அன்னகாமுவை இறக்கிவிட்டு அவளையே மூடும் அளவுக்கு, குழிக்குள் கம்பரிசியை கொட்டி, அதற்கு மேலே மண்ணைப் போட்டு மூடினர். அதன் மீது இறந்தவர்களுக்கு விளக்கேற்றும் விதமாக, ஒரு ஒற்றை விளக்கை ஏற்றி வைத்தனர்.

'இனி இந்த ஊரில் இருந்தால் நம்மையும் மண்ணோடு மண்ணாக்கி விடுவான் மன்னன்' என்று அஞ்சிய .................. இரவோடு இரவாக, அந்த ஊரை விட்டே கிளம்பி மதுரையம்பதியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அதற்கு முன், தண்டீஸ்வரர் ஆலயத்தை, அங்கு வசித்த ............ சமூகத்து மக்களிடம் ஒப்படைத்து, ''பின்னொரு காலத்தில் நாங்கள் இங்கு வந்தால், தண்டீஸ்வரரை தடையின்றி வணங்கிப் போக அனுமதிக்க வேண்டும்!' என்று சொல்லி விட்டுக் கிளம்பினர்.

வழியில், நள்ளிரவைத் தாண்டிய வேளையில், களைப்பு தீர ஓரிடத்தில் மூட்டை- முடிச்சுகளை இறக்கி வைத்து விட்டு அனைவரும் அயர்ந்து உறங்கிப் போனார்கள். அதில் ஒருவர், 'எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்களா?' என பார்ப்பதற்காக ஆட்களை எண்ணினார். அப்போது படுத்திருந்த கூட்டத்துக்கு நடுவே உறங்கிக் கொண்டிருந்தாள் அன்னகாமு. அந்த ஆசாமி மிரண்டு போனார்.



மற்றவர்களை எழுப்பி, அன்னகாமு உயிரோடு வந்து விட்டதையும் அவள் தூங்குவதையும் சொன் னார் அவர். ஆச்சர்யமடைந்த மற்றவர்கள், அன்ன காமு படுத்திருந்த இடத்தை ஆர்வத்தோடு வந்து பார்த்தனர். அவள் அங்கு இல்லை. ஆனால் அவ ளுக்கு அருகே படுத்திருந்த பெண், பித்துப் பிடித்தது போல் கண் மூடி உட்கார்ந்திருந்தாள். அவளைத் தட்டி எழுப்பியதும் 'ஓ'வென அழ ஆரம்பித்தவள், ''நீங்க எல்லாருமா சேர்ந்து என்னைய மட்டும் அங்க விட்டுட்டு வந்துட்டீங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அதனால வந்துட்டேன். இனி என்னிக் குமே உங்களுக்கு துணையா இருப்பேன்'' என்று சொல்லி, மயங்கிப் போனாள்.

'அன்னகாமு தெய்வமாகி விட்டாள்' என்பதைப் புரிந்து கொண்டனர் மக்கள். விடிந்ததும் பயணத் தைத் தொடர்ந்தவர்கள், மதுரையைக் கடந்து ஆண்டி பட்டிக்கு அருகில் உள்ள ....... பகுதியில் குடிசைகளை அமைத்து நிரந்தரமாகத் தங்கினர். தங்களுக்குத் துணை நிற்பதாக வாக்குக் கொடுத்த அன்னகாமுவுக்கும் தண்டீஸ்வரருக்கும் அங்கே ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அல்லிநகரத்தில் அடுத்தடுத்து அதிசயங்கள் நடந்தன. ............................... இடம் பெயர்ந்த பிறகு, ................... தண்டீஸ்வரருக்கு பூஜை செய்தனர். அதே நேரம் ஆலயப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட .............. இனத்தவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களான முத்துப்பேச்சியம்மன், சமயன் சாமி, இருளாயி அம்மன், வெள்ளாளங் கருப்பு, தாழம்பூ கருப்பு ஆகிய தெய்வங்களையும் இந்த ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தார்கள்.

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana4s

சில ஆண்டுகளுக்குப் பிறகு, வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அல்லி நகரத்துக்காரர் ஒருவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அவரால் தண்டீஸ்வரர் ஆலயத்தைக் கடந்து ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனால் பயந்த அந்த மனிதர் ஆலய வாசலில் பெட்டியை இறக்கி திறந்து பார்த்தார். உள்ளே முத்துக்கன்னி, காமாட்சி, பெரியராஜா, ஆதிநாராயணன், துல்லுகுட்டி, போத்தி ராஜா, சன்னாசி ஆகிய ஏழு சாமிகளின் சிலைகள் இருந்தன. அவற்றையும் தண்டீஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

காலங்கள் கடந்தன. அல்லிநகரத்தில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இளைஞனும் பெண்ணும் காதல் வசப்பட்டனர். சாதிய சம்பிரதாயங்கள் கடுமையாக இருந்த காலம் என்பதால், இவர்களது காதலுக்கு ஊரே சிவப்பு கொடி தூக்கியது. 'ஊரைப் பகைத்துக் கொண்டு இங்கு வாழ முடியாது' என்று முடிவெடுத்த காதலர்கள், ஒரு நாள் ஊரைவிட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.



ஆண்டுகள் கடந்தன. தண்டீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து மக்களும் இனப் பாகுபாடின்றி பொங்கல் வைத்து வழிபடும் களறித் திருவிழா நடந்தது. தண்டீஸ்வர ருக்கு பொங்கல் வைக்க கணவனையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அல்லிநகரத்துக்கு வந்தாள் அந்தப் பெண். நினைத்தபடியே தண்டீஸ்வரருக்கு பொங்கல் வைத்தாள். ஆனால், பால் பொங்கும் நேரத்தில் அருளோடு வந்து நின்ற வெள்ளாளங்கருப்பு சாமியாடி, ''நீ பிறஞ்சாஞ்சு ஓடுனவ. உனக்கு என் வாசலில் இடம் இல்லை போ!'' என்று, அவளது பொங்கல் பானையை காலால் எத்தி விட்டார். சுமார் நூறடி தூரம் உருண்டு ஓடிய அந்தப் பானை, தானாக நிமிர்ந்து நிற்க... பால் பொங்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ''தண்டீஸ்வரர் எங்ககிட்டதான் இருக்காரு. அவரோட மகிமையாலதான் இந்த அதி சயம் நடந்துருக்கு!'' என்றாள் அந்தப் பெண். இதன் பிறகு, பானை உருண்டு பால் பொங்கிய அந்த இடத்திலேயே பெரியராஜா, காமாட்சி உள்ளிட்ட ஏழு தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். மேலும் தண்டீஸ்வரர் ஆலயத்தில் அந்தப் பெண்ணின் வாரிசுகளுக்கு இப்போதும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது.

பல தலைமுறைகள் கடந்து, அந்தப் பெண்ணின் வழி வந்த வாரிசுகள் ஐந்து பேர் இருந்தனர். மூத்தவருக்கு முதல் மரியாதை தரப்பட்டது. அடுத்த மூன்று வாரிசுகள் பெண் வாரிசு என்பதால், அவர் களுக்கு எந்த பங்கும் இல்லாமல் போனது. கடைசி ஆள் சூரன். பெயருக்கு ஏற்றபடியே அசகாய சூரனாக இருந்தார். ஒரு முறை சூரனின் மைத்துனர்கள், அவரை தானிய குதிருக்குள் இறக்கி, உள்ளே கொஞ்சம் நெருப்பையும் காய்ந்த மிளகாயையும் போட்டு மூடினர். அத்துடன், ''நீ உண்மை யிலேயே சூரனா இருந்தா, இதுல இருந்து தப்பிச்சு வா பார்ப்போம்!'' என்று வம்பும் பேசினர். குதிருக்குள் சிறு தும்மல்கூட தும்மாமல் உட்கார்ந்திருந்த சூரன், சிறிது நேரத்தில் புது மாப்பிள்ளை போல் வெளியே வந்தார். மிரண்டுபோன மைத்துனர்கள், அவரை, கடவுளாகவே வணங்கி வந்தனர். சூரன் மறைந்ததும், தண்டீஸ்வரர் கோயிலுக்குச் சற்று தள்ளி அவருக்கும் சிலை வைத்து வழிபடத் துவங்கினர்.


தண்டீஸ்வரர் ஆலயத்துக்குள் நுழையும்போதே இரு புறமும் பிரமாண்டமான பூதகணங்கள். இவர் களுக்கு இடப் பக்கம் வெள்ளாளங் கருப்பும் வலப் பக்கம் சாட்டையை சுழற்றியபடி தண்டீஸ்வரரும் குதிரைகளில் அமர்ந்துள்ளனர். இவர்களைக் கடந்து சென்றால் மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் தண்டீஸ்வர ஐயனார்.

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana5u

இவரை வணங்கி விட்டு பிராகார வலம் வந்தால் முதலில் வெள்ளாளங் கருப்பு, முத்துப்பேச்சி உள்ளிட்ட அந்த ஐந்து சாமிகளும், அவர்களுக்கு எதிரில் ஆதிமூல லிங்கமும் இருக்கின்றன. பிராகாரத்தின் பின்பக்கத்தை தொடுமுன், கிழக்கு நோக்கிய சந்நிதியில் பெரியராஜா, காமாட்சி உள்ளிட்ட ஏழு தெய்வங்கள். வலப் பக்க பிராகாரத்தில் துர்கை, இருளப்பசாமி, அக்னி வீரபத்திரன், ராக்காயி அம்மன் உள்ளிட்ட தெய்வங் களும், சற்று தள்ளி நவக்கிரகங்களும் இருக்கின்றனர்.


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Ana6d


வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கட்கிழமைகளில் தண்டீஸ்வர ஐயனாரை தரிசிக்க கணிசமானவர்கள் வந்து போகிறார்கள். கோர்ட் விவகாரங்கள் சுமுகமாக முடியவும், குழந்தை வரம் கேட்டும், விவசாயக் கிணறு களை வெட்டும் முன்பு நல்ல விதமாக தண்ணீர் ஊற்று வர வேண்டும் என்றும், திருமணத் தடை நீங்கவும், நீண்ட நாட்களாக பூப்பெய்தாமல் இருக்கும் பெண்கள் பூப்பெய்திடவும் தண்டீஸ்வரரிடம் வேண்டுதல் வைத்தால், அதை நிறைவேற்றித் தருகிறார். பிரார்த்தனை நிறைவேறியதும், புரவி எடுப்புத் திருவிழாவின்போது தண்டீஸ்வரருக்கு இரட்டை மண் குதிரைகளை காணிக்கை செலுத்துகின்றனர். குடும்பத்துடன் வந்து முடி காணிக்கை செலுத்தி, திரு விழாவின்போது கலை நிகழ்ச்சி நடத்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்பவர்களும் உண்டு.

வருடந்தோறும் வைகாசியில் நடக்கும் மஹா அபி ஷேக திருவிழாவே இங்கு பிரதானம். வைகாசி 2-ஆம் தேதி தண்டீஸ்வரருக்கு காப்பு கட்டி, 12-ஆம் தேதி மஹா அபிஷேகம் நடக்கிறது. இந்த பத்து நாட்களும் சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சி என களை கட்டும்.

புரட்டாசி மாதத்தின் ஏதேனும் ஒரு புதன் கிழமையில் நடக்கும் புரவி எடுப்பு விழாவும் இங்கு பிரசித்தம்.இந்த விழாவுக்கு 15 நாட்களுக்கு முன்பே மண்குதிரை செய்ய ஆர்டர் கொடுக்கிறார்கள். ஆலயத்தின் சார்பில் இரண்டு குதிரைகள்; நேர்த்திக்கடனாக ஏராளமா னோர் குதிரைகளை செய்து வைக்கின்றனர். அருகில் உள்ள வெள்ளக்கரை என்ற கிராமத்தில் செய்யப்படும் இந்தக் குதிரைகளை புதன் கிழமை மாலை அங்கிருந்து மேள தாளத்துடன் தூக்கி வந்து அல்லிநகரம் கிராமத்து மந்தையில் நிறுத்துவர். பிறகு, ஊரோடு சேர்ந்து, குறிப்பிட்ட இனத்தவரின் வீட்டுக்குப் போய், 'குதிரைக்கு கண் திறக்க வாருங்கள்' என்று அழைப்பர். அப்போது அவர், ஒரு மரக்கால் நிறைய நெல் எடுத்து அதற்கு பூ போட்டு ஜோடித்து, கையில் ஒரு சேவலு டன் மந்தைக்கு கிளம்புவார். இந்தச் சடங்கை, 'பூ மரக்கால் அழைப்பு' என்கிறார்கள்.

இப்படி அழைத்து வருபவர், மந்தையில் அந்த சேவலின் நகத்தை வெட்டி, ரத்த பலி கொடுத்ததும் குதிரைகளுக்கு கண்கள் திறக்கப்படும். பிறகு ஆட்டம், பாட்டத்துடன் குதிரைகளை தூக்கிக் கொண்டு வந்து, தண்டீஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தெப்பக் குளக் கரையில் நிறுத்துவர். தண்டீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்து, விழா முடிவுக்கு வரும். அன்று மதியம் ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஒவ்வொரு விழாவிலும் ஒரு காளை தேர்ந்தெடுக்கப்பட்டு, 'கோயில் காளை' பட்டம் சூட்டப்படுகிறது.

புரவி எடுப்புத் திருவிழா, முன்பெல்லாம் ஐந்து அல்லது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப் பட்டு வந்ததாம். ஆனால் கடந்த 15 வருடங்களாக சில தடைகளினால் புரவி எடுப்புத் திருவிழாவையே கொண்டாடாமல் இருக்கிறார்கள் இந்த ஊர்மக்கள்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Dec 16, 2011 2:47 pm; edited 1 time in total


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by kitcha Fri Dec 16, 2011 2:32 pm

பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள் மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 2 Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum