ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

View previous topic View next topic Go down

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

Post by பிரசன்னா on Fri Sep 23, 2011 10:05 pm

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல!

வாழ்க்கையினை நாம் எல்லோரும் சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தடைகளையும்- தடங்கல்களையும் தாண்டி வளர்ச்சியடைய முடியும். சவால்கள் நிறைந்த தமது வாழ்க்கையினைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் அமைவதில்லை. தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து, பிறருக்காகப் போராடுகின்ற சவால்கள் நிறைந்த மனிதனின் திரைக் கதையினை உள்ளடக்கிய ஒரு படத்தினைப் பற்றித் தான் நாம் இப் பதிவினூடாகப் பார்க்கப் போகின்றோம்.
2010ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 10ம் திகதியன்று 20th Century நிறுவனத்தின் வெளியிட்டீல், டன்ஷல் வோஷிங்டன் (Danzel Washington) , டோனி ஸ்கோர்ட் (Tony Scott) , கிறிஸ் பைன் (Chris Pine) மற்றும் பல ஹோலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பில் ரிலீஸ் ஆகிய படம் தான் இந்த UNSTOPPABLE. முற்று முழுதாக உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து (INSPIRED BY TRUE EVENTS) தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரில்- ஆக்சன் படமானது, அமெரிக்காவின் Walbridge Ohio பகுதியில் 2001ம் ஆண்டு தன் கட்டுப்பாட்டினை இழந்து அசம்பாவிதத்தினை ஏற்படுத்திய ரயிலின் கதையினைத் தன்னகத்தே உண்மைச் சம்வமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்து 150 பள்ளிச் சிறார்களை ஏற்றியபடி ஒரு புகை வண்டி புறப்படத் தயாராகும் வேளை, இன்னோர் புகை வண்டியான 777எனும் பெயர் கொண்ட புகைவண்டி, 30,000 தொன் இராசயன- வாயுக்களை உள்ளடக்கிய கொள்கலன்களோடு மறு திசையிலிருந்து சம நேரத்தில் தமது பயணத்தினைத் ஆரம்பிக்கின்றது. இரசாயன வாயுக்களை உள்ளடக்கிய 777 ரயிலின் தண்டவாளத்தில் ஏதோ தடங்கல்கள் உள்ளதென்று அறிந்த ஓட்டுனர், முதலில் உதவியாளரை அழைத்து, கீழே இறங்கிப் பார்க்குமாறு கூறுகின்றார்.

உதவியாளரால் ரயிலில் என்ன கோளாறு என்று கண்டறிய முடியாத சூழ் நிலை ஏற்பட்டுக் கொள்ள, 777 வண்டியின் ஓட்டுனர் புகை வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பரிசோதிக்கும் சமயம் வண்டியானது AIR BREAK அறுந்ததும் வேகமாக கட்டுப்பாட்டினை இழந்து ஓடத் தொடங்குன்றது. பத்து இலட்சம் மக்கள் செறிந்து வாழும் பென்சில்வேனியா மாநிலத்தின் முக்கிய நகருக்கூடாக இந்தப் புகை வண்டியானது கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அதி வேகமாகச் செல்லும் போது, ஆபத்துக்கள் நிகழும் என்பதால், தமது உயிரினைப் பணயம் வைத்துப் புகை வண்டியினை நிறுத்துவதற்காகப் போராடுகின்றார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.

முதலில் கட்டுப்பாட்டினை இழந்த ரயிலின் ஓட்டுனரும், அவரது உதவியாளரும் வேகமாக காரின் உதவியோடு கலைத்துச் சென்று, புகை வண்டிக்குள் நுழைந்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் சமயம், நொடிக்கொரு தரம் அதிகரிக்கும் புகை வண்டியின் வேகம் காரணமாக அம் முயற்சி தோல்வியில் முடிவடைகின்றது.

அடுத்து முன் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் உதவியுடன், அதே தண்டவாளத்தில் பின்னே வரும் 777 வண்டியினைத் தடுத்தி நிறுத்திப் இரு பெட்டிகளையும் இணைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தோல்வியினைத் தழுவிக் கொள்ள, 777 வண்டியானது அதி வேகமாகத் தனக்கு முன்னே செல்லும் வண்டியினை உடைத்து நொறுக்கியவாறு பயணிக்கையில் தடுத்து நிறுத்த முயற்சித்த வண்டி தீப்பற்றி வெடித்துச் சிதறுகின்றது.

ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் மேற் புறத்தில் குதித்து, உள்ளே சென்று ரயிலினைத் தடுத்து நிறுத்தலாம் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியும் விபரீதமான உயிரிழப்பில் முடிவடைந்து கொள்ள, பென்சில்வேனியா மாநிலத்தின் போலீஸ் படைப் பிரிவின் உதவியானது கோரப்படுகின்றது.

ஓடுகின்ற ரயிலின் Emergency Stop Button ஐத் துப்பாக்கியால் கூட்டாகத் தாக்குதல் நடாத்தி உடைத்துப் புகை வண்டியினை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியும் தோல்வியில் தழுவிக் கொள்ள படத்தின் கதாநாயகன் டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள்- 20 வருடங்களாகப் ரயில்வே பணியில் இருக்கும் தன்னால் இப் புகையிரதத்தினை நிறுத்த முடியும் எனச் சவால் மேற்கொண்டு, பலத்த தடைகளின் மத்தியில், ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உதவி பெற்று 70mph வேகத்தில் செல்லும் ரயிலைத் தனது ரயிலின் மூலம் பின் பக்கமாகக் கலைத்துச் சென்று, ரயிலினை நிறுத்தினாரா இல்லையா, எதிர்த் திசையில் 150 பள்ளிச் சிறார்களோடு வருகின்ற புகையிரதத்திற்கு என்ன ஆச்சு எனும் விடயங்களைக் கூறி நிற்கின்ற படம் தான் இந்த Unstoppable.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் அடுத்தது என்ன நடக்கும் என்கின்ற திரிலிங் உணர்வினையும், மயிர்க் கூச்செரியும் காட்சிகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய இப் படத்திற்கு HARRY GREGSON- WILLIAMS அவர்கள் இசையமைத்திருக்கிறார். விசுவல் எபக்ட் மூலம் துல்லியமான ஒலிக் கலவைகளைத் தன்னகத்தே தாங்கி வந்திருக்கிறது இப் படம்.

MARK BOMBACK அவர்களின் எண்ணத்திலும், எழுத்துருவாக்கத்திலும் உருவாகியுள்ள இப் படத்தினை Julie Yor, Tony Scott, Mimi Roger, Eric Mcleod, Alex Young முதலியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். திரிலிங் படம் என்றாலும் ஆங்காங்கே ஒரு சில செண்டிமெண்டல் காட்சிகளையும் தவழ விட்டிருக்கிறார்கள் படக் குழுவினர். டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள் தன் இரண்டாவது மகளின் பிறந்த நாளிற்கு வாழ்த்துச் சொல்லாது, வேலை பிசியால் மறந்து போய் வேலைக்கு வந்த பின்னர் மகளோடு தன் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ள முயற்சி செய்கின்றார். ஆனால், அவரது மகள் செல்லமாய்க் கோபம் கொண்டு தன் தந்தை வாழ்த்துத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளும் ஒவ்வோர் நிமிடமும், அவரது தொலைபேசி அழைப்பினை அவொய்ட் பண்ணிக் கொள்கின்றார்.

இறுதியில் மக்களுக்காக தம் உயிர் போனாலும் பரவாயில்லை, கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பயணிக்கும் இந்தப் புகையிரதத்தினைத் தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொண்டவர்களாக டன்ஷேல் வோஷிங்டன் அவர்களும், புதிதாக ரயில்வே பணிக்குச் சேர்ந்த டோனி ஸ்கோர்ட் அவர்களும் தீர்மானம் மேற்கொள்ளும் சமயத்தில், தன் மகளைப் பற்றிய நினைப்பானது மீண்டும் வந்து கொள்ளத் தொலைபேசி அழைப்பினை எடுக்கின்றார் டன்ஷேல் அவர்கள்.

அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என்ற சொல்ல, மகளோ மீண்டும் தந்தையினை அவொய்ட் பண்ணி, அவரோடு பேசமாட்டேன் என்று சொல்ல, அந்த நிமிடத்தில்
"Tell you'r Sister, I Love You, I Have to go"....எனச் சொல்லும் சமயத்தில் அவர் கண்களிலிருந்து நீர் சொரிகின்றது.

தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தாலும், பாலியல் சீன்கள் ஏதுமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த திரிலிங் படமானது 83வது அக்கடமி அவார்ட்டிற்கு சிறந்த சவுண்ட் எடிற்றிங் எனும் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. $85-95 மில்லியன் பட்ஜெட்டில் வெளிவந்துள்ள இப் படமானது வசூலில் சாதனை நிலை நாட்டியிருக்கிறது.


நன்றி
http://www.thamilnattu.com/2011/09/unstoppable.html

98 நிமிடங்கள் கொண்ட இப் படத்தினைப் பார்த்து மகிழ:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

Post by kitcha on Fri Sep 23, 2011 10:13 pm

உங்களின் பின்னூட்டத்தை நம்பி நான் படம் பார்க்கப் போகிறேன்.படம் பார்த்துவிட்டு என் பதிலைச் சொல்கிறேன்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

Post by பிரசன்னா on Fri Sep 23, 2011 10:17 pm

@kitcha wrote:உங்களின் பின்னூட்டத்தை நம்பி நான் படம் பார்க்கப் போகிறேன்.படம் பார்த்துவிட்டு என் பதிலைச் சொல்கிறேன்

படம் நன்றாக தான் உள்ளது - பாருங்கள், தமிழில் மொழிபெயர்ச்சி பண்ணுனது இருந்தால் சூப்பர்...

நான் subtitle உடன் பார்த்தேன்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum