ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 SK

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

View previous topic View next topic Go down

கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 28, 2011 2:05 pm


அமராவதி’யில் ஆரம்பிச்ச ஆட்டம்… இப்போ ‘மங்காத்தா’ என் 50-வது கேம். முதல் படம் செய்யும்போது ரொம்பச் சின்ன வயசு. சினிமாவுல ஒரு இடத்தைப் பிடிக்கணும்னு கடுமையா உழைச்சேன். இப்போ 40 வயசு. முன்பைவிட இப்போதான் அதிகமா உழைக்கிறேன். உடம்பில் நிறையக் காயங்கள். அதைவிட மனசுலயும் காயங்கள் அதிகம். சுமந்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்!” – அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத். அவரே தயாரித்த காபி!

”கோடம்பாக்கத்தின் ஸ்டார் ஹீரோக்கள் ‘எங்க படத்துல அஜீத் வில்லனா நடிப்பாரா?’னு விசாரிச்சுட்டு இருக்காங்களாமே! ஒரு ரேஞ்சுக்குப் பிறகு, ஹீரோக்கள் வில்லனா நடிக்கத் தயங்குவாங்க. ஆனா, அஜீத் வழி தனி வழியா?”

”நான் ‘மங்காத்தா’வில் முதல்முறையா வில்லனா நடிக்கலையே! ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’னு தொடர்ச்சியா நெகட்டிவ் ரோல் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இடையில சின்ன கேப் விழுந்துடுச்சு. சினிமாவுல மட்டும்தான் நெகட்டிவ். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷத்தையும் பாசிட்டிவா கழிக்கிறவன் நான். நான் ஒண்ணும் வானத்துல இருந்து திடீர்னு குதிச்ச தேவகுமாரன் இல்லை. பாவமே செய்யாத பரிசுத்த ஆவியும் இல்லை.

சாதாரண சராசரி மனுஷன். உலகத்துல இருக்குற எல்லாரையும் போலவே நானும் குறைகள் நிரம்பப்பெற்ற மனுஷன். அம்மா – அப்பாவுக்கு நல்ல மகனா, அண்ணனுக்கு ஆதரவான தம்பியா, ஷாலினிக்கு பெர்ஃபெக்ட் கண வனா, அனோஷ்காவுக்குப் பாசமான அப்பாவா, மாமனார் பெருமைப்படக் கூடிய மருமகனா நடந்துக்கிறேன்னு நம்புறேன். அவங்ககிட்ட கேட்டா… உண்மை தெரியும்!”

”அஜீத் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும்; ஆனா, கலெக்ஷன் கல்லா கட்டாதுனு ஒரு பேச்சு இருக்கும். ‘மங்காத்தா’ அதை உடைச்சிடுச்சே…”

”இந்த இடத்துலதான் நான் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். ‘மங்காத்தா’ வெற்றி என் நீண்ட மௌனத்துக்குக் கிடைச்ச வெற்றி. சட்டமன்றத் தேர்தலப்போ வாய் திறந்து ஏதாவது பேசுவேன்னு நிறையப் பேர் எதிர்பார்த்தாங்க. அப்பவும் அதுக்கு அப்புறமும் நான் எந்தச் சத்தமும் போடலை.

இப்போ ‘மங்காத்தா’ பார்த்துட்டுப் பாராட்டுறாங்க. ஏத்துக்கறேன். அதேபோல, ‘என்னடா, படத்துல அஜீத் எப்பவும் தண்ணி, தம்முனு இருக்கான்’னு வர்ற விமர்சனங்களையும் தலை வணங்கி ஏத்துக்குறேன். அஜீத் படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்!”

”தத்துவ மழை பொழியுறீங்களே… உங்க தலைவர் ரஜினி பாணியில் ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சுடுவீங்களோ?”

”ஏற்கெனவே எனக்கு ஈடுபாடு உண்டே! தமிழ்நாட்டுல வேளாங்கண்ணி, நாகூர், நவக்கிரகக் கோயில்கள் ஒண்ணு விடாமப் போயிட்டு வந்திருக்கேன். கேரளாவில் குருவாயூர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன்; கர்நாடகாவுல சாமுண்டீஸ்வரி, மூகாம்பிகை கோயிலுக்கு எல்லாம் போயிருக்கேன். திருவான்மியூர்ல என்னோட வீட்ல இருந்து நாலு தடவை திருப்பதிக்கு நடந்தே போயிருக்கேன். என்னை யாரும் கண்டுபிடிச்சிடக் கூடாதுனு மாறுவேஷத்துல நண்பர்களோட ராத்திரியில் நடந்தேன். அஞ்சு நாள் நடந்தோம். ரஜினி சார் கொடுத்த இமயமலை பத்தின புத்தகம் படிச்சதுல இருந்து அங்கேயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கிரமாக் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்!”

” ‘விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுறாங்க’னு நீங்க பொது மேடையில் பேசிய பிறகு, கோபாலபுரத்துக்கு வரவழைத்து உங்கள் மேல் கோபம் காட்டினாராமே கருணாநிதி… உண்மையா?”

”ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!”

”முதல்வர் ஜெயலலிதான்னாலே எல்லாருக்கும் பயமும் பவ்யமும்தான். ஆனா, உங்க கல்யாணத்துக்கு வாழ்த்த வந்த ஜெயலலிதாவிடம் தைரியமாக் கை குலுக்கிப் பேசிட்டு இருந்தீங்க. உங்களை ‘ஜெ-வின் செல்லம்’னு சொல்றாங்களே?”

”அப்படியா என்ன? அம்மா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!”

”உங்களைப்பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?”

”என்னைத் திட்டுறது மூலமா சிலருக்குச் சந்தோஷம் கிடைக்குதுன்னா, அதுக்கு நான் எவ்வளவு கொடுத்துவெச்சிருக்கணும். அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். என் துயரம், சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் என் விதிதான்னு முழுசா நம்புறவன் நான். ஆனா, என்னைத் திட்டும் மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருது. ஏதோ 100 வருஷம் உயிரோட வாழப் போறோம்னு கற்பனை கோட்டை கட்டிக்கிட்டு வாழ்றாங்க. ராத்திரி தூங்கப் போனா காலையில உயிரோட எந்திரிப்போமானு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு இங்கே உயிருக்கு உத்தரவாதமே இல்லாமப்போச்சு. அதுக்குள்ள ஆயிரத் தெட்டு சண்டைகள், பிரச்னைகள்.

எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.
என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்டவங்க… என்னைத் திட்டுறது மூலமா சந்தோஷம் அடைஞ்சவங்க எல்லாரும்

‘அஜீத் நல்லவன்தான்டா. நாமதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்’னு ஒரு வார்த்தை சொல்வாங்க… சொல்லணும்! அப்பதான் என் ஆன்மா சாந்தி அடையும்!”

உற்சாகமாகத் தொடங்கி உருக்கமாக முடிக்கிறார் தல!

- எம்.குணா


avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ரேவதி on Wed Sep 28, 2011 2:10 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல எனிவே பகிர்தமைக்கு நன்றி பாட்டி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 28, 2011 2:15 pm


ரியலி கிரேட் தல... பானு அக்கா மகிழ்ச்சி ஜாலி நன்றிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 28, 2011 3:05 pm

@ரேவதி wrote: ஒன்னும் புரியல ஒன்னும் புரியல எனிவே பகிர்தமைக்கு நன்றி பாட்டி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியலavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ரேவதி on Wed Sep 28, 2011 3:07 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote: ஒன்னும் புரியல ஒன்னும் புரியல எனிவே பகிர்தமைக்கு நன்றி பாட்டி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அட நீங்க ஏன் முழிக்கிறீங்க.......
நான் கொடுத்த ரீயாக்ஷன் அஜீதுக்கு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 28, 2011 3:27 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote: ஒன்னும் புரியல ஒன்னும் புரியல எனிவே பகிர்தமைக்கு நன்றி பாட்டி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அட நீங்க ஏன் முழிக்கிறீங்க.......
நான் கொடுத்த ரீயாக்ஷன் அஜீதுக்கு
அப்படியா நன்றி ரே நன்றி அன்பு மலர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by ரபீக் on Wed Sep 28, 2011 4:20 pm

தல போல வருமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum