ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

View previous topic View next topic Go down

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:20 pm

அசுவினி


மனோதைரியம் உண்டாகும். உற்சாகமாக இருப்பீர்கள். தொழில்வளம் சிறந்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு தேவையான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளின் கொட்டம் ஒடுங்கி சந்தோஷமான வாழ்க்கை அமையும். உடல்நிலை நன்றாக இருக்கும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.


பரணி

உங்கள் தொழில் வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி ஆதாய பணவரவைத்தரும். புத்திரர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக விளங்குவர். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிறந்த பணி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெண்கள் கணவருடன் இணக்கமாக நடந்து குடும்ப பெருமையை உயர்த்துவர்.


கார்த்திகை 1ம் பாதம் (மேஷம்)


அனைத்து செயல்பாடுகளும் வெற்றியடையும். தொழில் மற்றும் பணி சிறப்பாக நடந்து கூடுதல் அந்தஸ்தை பெற்றுத்தரும். பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் ஈடுபட விரும்பாத மனநிலை உண்டாகும். புத்திரர்கள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்ட வகையில் நிறைவேறும். பெண்களுக்கு குடும்ப செலவுக்கு தேவையான பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.


கார்த்திகை 2, 3, 4 பாதம் (ரிஷபம்)


பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். தொழில் மற்றும் பணியில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் குடும்ப ஒற்றுமை பலம் பெறும். வீடு, வாகன வகையில் வளர்ச்சியும் அதன்மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். புத்திரர்களின் சேர்க்கை சகவாசத்தை அறிந்து அவர்களை நல்வழி நடத்துவது நல்லது. பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.


ரோகிணி


எந்தச்செயலிலும் நிதானம் வேண்டும். தொழில், பணி சார்ந்த வகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலும் செலவுகளும் எல்லை மீறும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் ஒப்படைக்கக்கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு போதுமான அளவு பணவரவு இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:21 pm

மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் (ரிஷபம்)


மனநிலையில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் தியானம் முதலிய பயிற்சிகளை எடுத்து மன ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொண்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் வாசல் கதவைத்தட்டும். வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு, வாகன வகையில் யோகமான பலன்கள் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகளை நடத்த நல்லவர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் கணவருடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


மிருகசீரிஷம் 3, 4 பாதம் (மிதுனம்)


உங்கள் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்கள் உங்கள் வாழ்வு முன்னேற உதவி புரிவர். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சிறப்பாக படிப்பதன் மூலமும் நல்ல பணிக்கு செல்வதன் மூலமும் மனம் மகிழ்ச்சியடையும். தொழில் மற்றும் பணியில் எவ்வித இடையூறும் இருக்காது. குடும்ப ஒற்றுமை சிறந்து சந்தோஷம் தழைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.


திருவாதிரை


புதிய சிந்தனைகளை செயல்படுத்தி செயல்பாடுகளில் வெற்றி அடைவீர்கள். தொழில் மற்றும் பணியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டாலும் மனதிடத்துடன் வென்றுவிடுவீர்கள். பணவரவில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கடன்களை அடைக்கும் ஆர்வம் மேலோங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு சமுதாய பணியை செய்யும் எண்ணம் உருவாகும்.


புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் (மிதுனம்)


கடுமையான உழைப்பின் பேரிலேயே பணவரவை ஈட்ட முடியும். போட்டி மற்றும் பந்தயங்களில் ஈடுபட்டால் பணத்தை இழக்க நேரிடலாம். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைய வாய்ப்பு உண்டு. எதிரிகள் சார்ந்த தொல்லை குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். பெண்களுக்கு அன்றாட செலவுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடித்து சரிகட்டிவிடுவர்.


புனர்பூசம் 4ம் பாதம் (கடகம்)


அனைத்து செயல்களும் வெற்றிபெறும். பொன், பொருள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு தாராளமான சலுகைகள் உண்டு. புதிய பதவி பொறுப்பு சிலருக்கு கிடைக்கலாம். புத்திரர்களின் செயல்பாட்டின் வகையில் கவனம் செலுத்துவது நல்லது. கடன்களை அடைத்துவிடுவீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:22 pm

பூசம்


உற்சாகத்துடன் செயல்பட்டு அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். பணியாளர்களுக்கு ஆதாய பணவரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தவர் பாசத்துடன் நடந்துகொள்வர். பூர்வ சொத்து தொடர்பான மாற்றங்களை செய்ய நல்ல நேரம். புத்திரர்கள் மிகச்சிறப்பாக படிப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். அனைத்து வளங்களும் கிடைக்கும் நேரமாக இருக்கிறது. பெண்களுக்கு சிறப்பான பணவரவுடன் சுற்றுலா சென்றுவரவும் யோகம் உண்டு.


ஆயில்யம்


திட்டமிட்ட நடவடிக்கைகளால் பலவிதத்திலும் முன்னேற்றம் பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கூடும். சகோதரர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புத்திரர்கள் சற்று மந்தமாக செயல்படலாம். அவர்களை ஊக்கப்படுத்தி படிப்பில் முன்னேறச் செய்வீர்கள். வாழ்வுக்கு தேவையான அனைத்து சவுகரியங்களும் கிடைக்கும் நேரம். கடன்களை அடைத்துவிடுவீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.


மகம்


பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சிபெற வாய்ப்பு தேடிவரும். பணியாளர்களுக்கு ஓரளவு வருமானம் உண்டு. வீடு, வாகன வகையில் வசதி குறைவும் பராமரிப்பு செலவும் உண்டாகும். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து பெற்றோரை மகிழ்விப்பர். சில அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் நிலை வரலாம். மூத்த சகோதரரின் அறிவுரையை கேட்டு நடப்பதால் சில நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. பெண்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் சிரமமின்றி இருக்கலாம்.


பூரம்


யாருக்காவது வாக்குறுதி தந்து அதை காப்பாற்ற இயலாமல் போகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற பணவரவை பெறுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சில சிரமங்கள் வரலாம் என்றாலும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு சரிசெய்துவிடலாம். கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது துணைக்கு ஒருவரை வைத்துக்கொள்வது நல்லது. திருமணமாகாத பெண் குழந்தைகளுக்கு சிறந்த வரன் அமையும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றாலும் சிக்கனமாக இருந்து சமாளித்து விடலாம்.


உத்திரம் 1ம் பாதம் (சிம்மம்)


பணவரவில் உள்ள சுணக்கத்தை அகற்றி குடும்பத்தின் முக்கிய தேவைகளை பூர்த்திசெய்துவிடலாம். தொழிலில் இருந்த தடை விலகி மறுமலர்ச்சி தரும் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பழக்க வழக்கங்கள் உதவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களில் மிதவேகம் நல்லது. பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும்.


உத்திரம் 2, 3, 4 பாதம் (கன்னி)


செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே தொழில் மற்றும் பணியில் தற்போது இருக்கிற அனுகூலத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். பணவரவு ஓரளவு நன்றாகவே இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தந்தைவழி உறவினர்கள் தகுந்த உதவி புரிவர். பெண்களுக்கு குழந்தைகளால் பிரச்னை வர வாய்ப்புண்டு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:23 pm


அஸ்தம்மந்த நிலை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு வந்து விலகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். வழக்கு, விவகாரங்கள் அவ்வளவு சாதகமாக இராது. சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு கணவரால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.


சித்திரை 1, 2ம் பாதங்கள் (கன்னி)


அதிர்ஷ்டவசமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வசொத்தில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். புத்திரர்கள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். வீடு, வாகன வகையில் நல்ல நிலையே இருக்கிறது. பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


சித்திரை 3, 4ம் பாதங்கள் (துலாம்)


தொழில் சார்ந்த வகையில் பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இருப்பினும் தொழிலில் வளர்ச்சியே உருவாகும். வரவுக்கு அதிகமான செலவு ஏற்படும். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். தந்தை வழி உறவினர்களின் உதவி உண்டு. புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமை பெற்றுத்தரும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு தேவையான பணத்தை பெற்றாலும் ஆடம்பர எண்ணம் மேலோங்கும் என்பதால் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.


சுவாதி


பிறரது யோசனையை கேட்காமல் நீங்களாகவே முடிவெடுத்து எந்த செயல்பாட்டையும் செய்வது நல்லது. தொழிலில் முன்னேற்றம் பெற வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு குறைவாகவே இருக்கும். பணியாளர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, வாகன வக யில் தற்போது இருக்கும் நிலைமையை தக்கவைத்துக் கொண்டாலே போதுமானது. வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு குடும்ப செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள் (துலாம்)


உங்களின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகும். தொழிலில் நேரம் தவறாமையை பின்பற்றுவதால் மட்டுமே லாபத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். பணி யாளர்களுக்கு அதிக சலுகையை எதிர்பார்க்க இயலாது. உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் நற்பலன்கள் உண்டு. சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவாகும். பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே குடும்ப ஒற்றுமையை பாதுகாக்க முடியும்.


விசாகம் 4ம் பாதம் (விருச்சிகம்)


உங்கள் செயல்பாடுகளில் உற்சாகம் பிறக்கும். பொன், பொருள் சேரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு. புத்திரர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கிறது. பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by பிரகாஸ் on Tue Sep 22, 2009 10:24 pm

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:25 pm

அனுஷம்


உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழிலில் உயர்வும் தாராள பணவரவும் எளிதாக வந்துசேரும். உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள். புத்திரர்களின் மந்தநிலையை மாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வு வளம்பெற உதவி செய்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். புதிய சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழலாம்.


கேட்டை


திட்டமிட்ட செயல்பாடுகளால் வாழ்வில் பலவகையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு வாய்ப்புண்டு. இளைய சகோதரர்கள் பல வகையிலும் உதவி செய்வர். பூர்வ சொத்தில் கிடைக்கும் வருமானத்தை உரிய வகையில் முதலீடு செய்து நன்மை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடந்தேறும். பெண்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.


மூலம்


பலருடைய யோசனையையும் கேட்காமல் நீங்களே சுயமாக முடிவெடுத்து செயல்படுத்தும் செயல்கள் வெற்றியடையும். தொழில்ரீதியாக சில சிரமங்கள் ஏற்படும். பணவரவு சுமாராகவே இருக்கம். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு நடைமுறை அவசியம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செயல்படுங்கள். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவேறினாலும் அதிக பணம் செலவாகிவிடும். புத்திரர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.


பூராடம்


உங்கள் கருத்துகளை மதிக்காதவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் சார்ந்த வகையில் குறுக்கீடு உண்டாகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் தற்போது இருக்கிற நிலையை பாதுகாத்தாலே போதும். புத்திரர்கள் பெருமைப்படும்படியான செயல்களை செய்வார்கள். மற்றவர்கள் மீது இரக்கப்பட்டு உங்களுடைய பணம் கரைந்து போகலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெண்கள் கணவருடன் கருத்துவேறுபாடு கொள்வர்.


உத்திராடம் 1ம் பாதம் (தனுசு)


துணிவுடன் செயல்படுவதால் மட்டுமே செயல்பாடுகளில் வெற்றி பெற முடியும். வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலை தக்கவைத்துக் கொள்ள அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களுடன் இதமுடன் நடந்துகொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே கவுரவப் பிரச்னை காரணமாக கருத்துவேறுபாடு வரலாம். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருக்கும். பணவரவு சுமார்தான். பெண்களுக்கு ஆடம்பர எண்ணம் மேலோங்கும்.


உத்திராடம் 2, 3, 4ம் பாதம் (மகரம்)


உங்கள் வாழ்வில் ஏற்படும் வளர்ச்சி நிலை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் எதிர்பார்த்த அளவு இருக்கும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான பலன் உண்டு. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உடல்நலம் சுமாராக இருக்கும். அரசு சார்ந்த வகையில் ஆதாய பலன் கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by சிவா on Tue Sep 22, 2009 10:26 pm

திருவோணம்


தாமதமின்றி செய்யும் பணிகளால் பெரும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். புத்திரர்களின் செயல்பாடுகள் குடும்பத்திற்கு பெருமை தேடித்தரும். உடல்நலத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.


அவிட்டம் 1, 2ம் பாதங்கள் (மகரம்)


அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில்வளம் சிறப்பாக அமைந்து அபரிமிதமான லாபம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு தாராளமான சலுகைகள் கிடைக்கும். வீடு, வாகன வகையில் வளர்ச்சிநிலை இருக்கிறது. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலத்தில் அதிக அக்கறை வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் நிதானத்தை கடைபிடிக்கவும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.


அவிட்டம் 3, 4 பாதங்கள் (கும்பம்)


எந்தச் செயலையும் முன்யோசனையுடன் செய்வது நன்மை தரும். பணவரவு குறையும் என்பதால் அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். தொழிலில் பல குறுக்கீடுகள் வர வாய்ப்பு இருக்கிறது. பணியாளர்களுக்கு தடை, தாமதம் காரணமாக எரிச்சல் உணர்வு உண்டாகும். புத்திரர்களின் விருப்பத்தை அறிந்து உதவுவதால் அவர்களின் கல்வித்திறன் வளர்ச்சிபெறும். வீடு, வாகன வகையில் நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு இடம்தரக் கூடாது. கணவன் மனைவி ஒற்றுமை வளரும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாடும் நிலைமை வரும்.


சதயம்

உறவினரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் நற்பெயருக்கு சிலர் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பர். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் அதிக சலுகையை எதிர்பார்க்க இயலாது. புத்திரர்கள் படிப்பில் சுமாராக இருப்பர். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உண்டு.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் (கும்பம்)

யாருக்கு நல்லதை செய்தாலும் அவப்பெயரே வந்து சேரும். தொழிலில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் பணவரவு சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைமை உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடு மந்தமடையும். பணியாளர்களுக்கு தேவையற்ற இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிலைமை களை சந்திக்கும் நேரமாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவர். பெண்களுக்கு உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.


பூரட்டாதி 4ம் பாதம் (மீனம்)


மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். தொழிலில் தற்போது இருக்கிற அனுகூலத்தை பாதுகாத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீடு, வாகன பராமரிப்பு வகையில் கடன் ஏற்படும். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். வீடு, பணியிட மாற்றம் உண்டாகும். புத்திரர்கள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறுவர். பெண்கள் வீட்டுச்செலவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.


உத்திரட்டாதி


தேவையற்ற எண்ணங்கள் மனதில் உலா வரும். தியானம் முதலிய பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொழிலில் பணவரவு ஓரளவு இருக்கும். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டாருடன் பல பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உண்டு.


ரேவதி


தொழில் மற்றும் பணியில் வளர்ச்சிநிலை ஏற்படும். பணவரவு உங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் அளவில் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சச்சரவு உருவாகி பின்னர் சரியாகும். சுபநிகழ்ச்சிகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பெண்களுக்கு கடும் முயற்சியின் பேரிலேயே வீட்டு நிர்வாகத்தை நடத்த முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum