ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பூப்பு....பூப்பு ..., 2

View previous topic View next topic Go down

பூப்பு....பூப்பு ..., 2

Post by Aathira on Sat Oct 08, 2011 4:15 pm

பூப்பு....பூப்பு ..., 2


சென்ற பதிவில் பூப்பு காலங்களில் பெண்கள் பிறர் காண முடியாதவாறு இல்லத்துள் இருத்தி வைக்கப்பட்டனர் என்று அறிந்தோம். இதனை விளக்குவது போல அமைந்த மற்றொரு பாடல் இது.. இரவில் உறக்கத்தில் பூப்பு எய்திவிட்டாள் குறுந்தொகைத் தலைவி. வைகறையில் கோழி கூவும்போது அதைக் காண்கிறாள்.அவளுக்கு திக்கென்றதாம் நெஞ்சம். எதனால்? பூப்பு எய்தியதை எண்ணி அல்ல. தலைவனைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியதால். எது போல? இரவு நேரத்தில் ஒருவரும் அறியாமல் சந்திக்கும் காதலர்களை வைகறை வந்து பிரித்து விடுவது போல இந்த வைகறைப் பொழுதில் பூப்பு வந்துள்ளதாம். தலைவனுடன் நான் கூட முடியாமல் பிரித்துவிடுமே என்று அஞ்சியதால், குக்கூ என்று கோழி கூவியதும் அவள் மனம் திக்கென விக்கித்ததாம். நீங்களும் பாடலைப் பாருங்களேன்.

‘குக்கூ’ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால்”


இப்பாடல் வாயிலாகவும் பூப்பு காலங்களில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. “இந்த எண்ணத்தைத் தான் மாத்தனும்” என்று கூறும் விளம்பரங்களும் பாதுகாப்பான வசதிகளும் அக்காலத்தில் இல்லாது போனதும் ஒரு குறையே.

மரங்களின் அல்லது செடிகளின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தம் தோன்றுவது பூக்களில்தான். இதனைக் கருத்தில் கொண்டே மங்கையரிலும் இனப்பெருக்கத்திற்கு அதாவது கருவுறுவதற்கு உடல் பக்குவப்படும் முதல் மாதவிடாய்ப் பருவத்தை அல்லது முதல் மாதவிடாயைப் பூப்பு என்றனர் போலும். இதனை கிராமப்புறங்களில் சமைதல் (சமஞ்சிட்டா) என்று கூறுவர்.

தமிழர்களின் மொழியறிவு இங்கு பளிச்சென மின்னுவதைக் காணமுடிகிறது. ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுவே” என்பது எவ்வளவு உண்மை என்பதை இது போன்ற் சொல்லாட்சிகள் உறுதி படுத்துகின்றன. அரிசி, பச்சைக் காய்கறிகள், பலசரக்குப் பொருள்கள் எல்லாவற்றையும் கழுவி சுத்தப்படுத்தி உண்பதற்கேற்ற உணவாகப் பக்குவ படுத்துதலைச் சமைத்தல் என்பது போல, தாயாவதற்குப் பக்குவப்பட்ட பெண்ணின் உடலின் இந்த குறிப்பை அல்லது அறிகுறியைச் சமைதல் என்றனர் போலும்.

. பூப்பு, சமைதல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த இனிய பருவம் பிற்காலத்தில் விலக்கி வைக்கும் நிலையில் ‘வீட்டு விலக்கு’ என்ற புதுப்பெயரையும் தாங்கிக்கொண்டது. ஓய்வுக்காக வீட்டில் வைத்த பண்டைய நிலை பிற்காலத்தில் தூய்மையைக் காரணமாக்கி வீட்டிலிருந்து விலக்கியது. மாதவிடாய்க் காலங்களில் பெண்களை ஒன்றுக்கும் உதவாதார் போல தீண்டத்தகாதாவர்களாக்கி வெளியில் விலக்கியது. பூப்பு காலங்களில் பெண்கள் பூச்சூடக்கூடாது. மங்களப் பொருள்களான மஞ்சள் குங்கும் அணியக்கூடாது. உயர்ந்த பஞ்சணையில் படுக்க்கூடாது. இவையெல்லாம் இன்றும் பின்பற்றப்படுகிறது துறவிகளுக்குப் பிச்சை இடுவது இல்லையாம். இடைக்கால சித்தர் வள்ளலார் பாடலிலும் இக்குறிப்புக் காணப்படுகின்றது. பசித்து வந்தவர்க்கு உணவிடாமல் தோழியை ஏவிவிட்டு நீ கீழ்பள்ளி கொண்டாய் என்று பிச்சை பெற தலைவன் கூறுவதாக ஒரு பாடலை அமைத்துள்ளார் புறட்சித் துறவி வள்ளலார்.. (1817) (இது நம்ம ர்ஞ்சிதா நித்யாவுக்குகேல்லாம் பொருந்தாதோ!!)

பூப்பு என்றால் முதல் முறை மாதவிடாய் தோன்றுவது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க தொல்காப்பியம், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் தொடர்ந்து வருகின்ற மாதவிடாய்களைப் பூப்பு என்று கூறுகிறது. ஆசாரக்கோவை பூப்பின் குறிப்பைச் சொல்லும் போது பூப்பு காலத்தில் ஆண்பெண் கூடல் தகாது என்றும், மகப்பேறுக்காக பூப்பு முடிந்த பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தும். தொல்காப்பியமும் பூப்பு தோன்றிய பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரிந்து இருத்தல் கூடாது என்று கற்பியலில் புணரும் காலம் குறித்துக் கூறும்போது குறிப்பிடும்.

“பூப்பின் புறப்பாடு ஈறாறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான”


இவையெல்லாம் முதல் பூப்பு பற்றி பேசுவது இல்லை. திருமணம் கழிந்தபின்பு வரும் தொடர் பூப்பு பற்றி பேசுகின்றன.

உடலில் ஏற்படும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படும் சோர்வுகள், தீண்ட த்தகாதவர்களாக்கித் திண்ணையில் உட்கார்த்திவைக்கும சமூகச் சவுக்கடிகள், இவையெல்லாம் போதாதென்று மாதவிடாய்க் காலங்களில் உடல் நோய்களான ஊறல், அறிப்பு, செம்மேகம், கருமேகம், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களும், மங்கையரின் மனத்தை இன்னும் வாட்டமுறச்செய்கின்றன. இத்துடன் மாதவிடாயை மையமாகக் கொண்டு சூறாவளியாய்ச் சுழன்று அடித்து இளமை மனதைப் பாதிக்கும் முகப்பருக்கள், கண்ணின் கருவளையங்கள் போன்றவையும், மணமான பெண்களைப் பாதிக்கும் உடலுறவுப்பிரச்சனைகள், அதனால் உண்டாகும் ஆறாத பரிதவிப்பு, மன உளைச்சல் போன்றவையும், மாதவிடாய் பெண்களுக்கென்று அள்ளிக்குவிக்கும் விஷேஷப் பரிசுகள். இது குறித்தும் இன்னும் ஆராய்வோம்.

முந்தைய காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்தமைக்கும் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் இந்த பூப்பு தந்த அச்சமே காரணமாக இருந்திருக்கிறது. பெண்ணிடம் ஏதோ அதிசய சக்தி உள்ளது என்று பூப்பு, பிள்ளைப்பேறு இரண்டையும் கண்டு அஞ்சிய ஆண்மகன் அவளை முதன்மைப் படுத்தி வாழ்ந்தான். இன்று இந்த பூப்பே அன்பு தெய்வமான அவளுக்குப் பல விதங்களில் இன்னல் கொடுத்தாலும் பெண் அதில் இன்றும் பெருமை கொள்பவளாகவே இருந்து வருகிறாள்.


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்


Last edited by Aathira on Sat Oct 08, 2011 4:29 pm; edited 3 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by உமா on Sat Oct 08, 2011 4:20 pm

பெண்களின் பெருமையே அதில் தானே அக்கா உள்ளது...அதன் மூலமே குழந்தைகள் எல்லாம்....மிகச்சிறந்த மகளிற்க்கன கட்டுரை...
தொடர்ந்து பதியுங்கள் அக்கா....மிக்க நன்றி....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by ayyamperumal on Sat Oct 08, 2011 7:29 pm


பெண்களை வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று
கூறியிருக்கிறார்கள். அதே போல அந்த காலங்களில் பெண்களின் முகத்தில் விழிப்பதையே பாவமாக கருதியிருக்கிறார்கள். ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் ஒருவரின் வீட்டிற்க்கு விருந்துண்ண சென்றிருந்தாராம். அங்கே அதுபோன்று ஒரு பெண்ணை அடைத்து வைத்திருந்தார்கலாம், இதை அறிந்த ராமகிருஷ்ணர் அந்த பெண் தான் கையால் பரிமாறினால்தான் நான் அடைத்து சாப்பிடுவேன். என்று கூறி அவர் கையாலேயே சாப்பிடவும் செய்திருக்கிறார். எல்லாம் அறிந்தவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள் அக்கா ! மனிதன் மனதில் உடலில் தீட்டு என்பது ஆணவம், கர்வம் , அகந்தை இவைகள் தான் என்பதை எல்லோரும் உணர்ந்துவிட்டால் நல்லது..

( மார்கழி மாதம் எனக்கு விரத காலம். அந்த மாதம்
முழுவதும் விரதம் இருப்பேன் .2 வருடங்களுக்கு முன்பு என் சகோதரிக்கு திருமணம் முடியாத காலத்தில் ,, இது போன்ற நாட்களில் அவருக்கு சித்ரவதைதான் என் அம்மா தான் அப்படி செய்யும். ஆனால் நான் வீம்புக்கென்றே அவர் அருகில் தான் அமர்வேன். என் அம்மா திட்டும் . நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்பேன். இதனால் என்னுடைய பாதயாத்திரை பயணத்திலும் இடர்ப்பாடு வந்ததில்லை. ( எல்லாம் ராமகிருஷ்ணர் கொடுத்த தைரியம் தான் ) இப்போது என் அம்மாவே அதுபற்றி கண்டு கொள்ள மாட்டார்.

கோவில் கோபுரங்களில் சிருங்கார ரசத்திற்க்கு முக்கியத்துவம்
கொடுத்து சிற்பம் செய்திருக்கிறார்கள். இதற்க்கு மட்டும் என்னவாம் ? ...

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by Aathira on Sat Oct 08, 2011 9:16 pm

உமா wrote:பெண்களின் பெருமையே அதில் தானே அக்கா உள்ளது...அதன் மூலமே குழந்தைகள் எல்லாம்....மிகச்சிறந்த மகளிற்க்கன கட்டுரை...
தொடர்ந்து பதியுங்கள் அக்கா....மிக்க நன்றி....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

படித்துக் கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி உமா. அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by poongulazhi on Sat Oct 08, 2011 9:31 pm

உமா wrote:பெண்களின் பெருமையே அதில் தானே அக்கா உள்ளது...அதன் மூலமே குழந்தைகள் எல்லாம்....மிகச்சிறந்த மகளிற்க்கன கட்டுரை...
தொடர்ந்து பதியுங்கள் அக்கா....மிக்க நன்றி....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அக்காலத்தில் பெண்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே மாதவிடாய் சமயத்தில் பெண்கள் தனியே இருத்திவைக்கபட்டார்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்தார்கள் ஏனெனில் மாதவிடாய் காலங்களில் பெண்ணின் உடல்நிலை வலிமை இழந்து இருக்கும் நோய் தேற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு ஆனால் இக்காலத்தில் அந்த சமயத்திலும் பெண்களுக்கு வேலை பளு அதிகமே அதனால் தானோ என்னவோ நிறைய பெண்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் இதற்க்கு தகுந்த விழிப்புணர்வு அவசியம்

poongulazhi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by ayyamperumal on Thu Nov 10, 2011 2:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

கோவில் கோபுரங்களில் சிருங்கார ரசத்திற்க்கு முக்கியத்துவம்

கொடுத்து சிற்பம் செய்திருக்கிறார்கள். இதற்க்கு மட்டும் என்னவாம் ? ...

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: பூப்பு....பூப்பு ..., 2

Post by ayyamperumal on Thu Nov 10, 2011 2:43 pm

இதில் பின்னூட்டங்களை திருத்துவதற்கான வாய்ப்பு இல்லையே . .

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum