|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
முன்னுரை
உண்ணா விரதம் நடக்கிற இடங்களில் காந்தியம் பேசப்படுவது போல ,
தமிழகத்தில் மக்கள் செய்கிற போராட்டங்களில் ராஜீவ் காந்தி பேசபப்டுகிறார். அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ரஷ்ய அதிபர் mikhail gorbochov அவர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இந்த ஒப்பந்தம் தமிழகத்திர்க்கு ஒளிதரும் தீப்பந்தம் என்று மத்திய அரசியல் கூறுகிறது. இல்லை இல்லை ,, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என மூன்று மாவட்ட மக்களுக்கு கொள்ளிவைக்கிற தீப்பந்தம் என இம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை ? கூடங்குளம் அணுமின் நிலையம் :
நம் இந்தியா , சில வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் நாம் என்ன என்ன பெறுகிறோம் என்று கூறுகிறார்களே தவிர , அதற்காக நாம் எதை தருகிறோம் என்று நமக்கு தெரியப்படுத்துவதில்லை. இதே ஒப்பந்த கொள்கையின் அடிப்படையில் தான் 1985 ஆம் ஆண்டு திட்டமிடபப்ட்டு 1988 ஆம் ஆண்டில் போடப்பட்டது . 1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார். பின்பு சோவியத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தேவ கௌடா பிரதமராக இருந்த போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கபட்டது. அதன் பின்பு 1300 கோடிகளை சீரணித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. மின்சாரம் தரவா ? வேறு எதற்குமா என்று காலம் தான் கூறவேண்டும் . கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதம்
1996 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் செர்நோபில் அணு
உலைகள் விபத்திற்கு உள்ளானது. அதில் 3,50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.4000 மக்கள் உயிர் துறந்தனர். 60,000 மக்கள் புற்று நோயால் படிக்க பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பின்பு , ரஷ்யா தன்னிடம் உள்ள VVER வகையிலான அணு உலைகளை வெளியில் கடத்த முழுமூச்சாக செயல்பட்டது. தற்போது கூடங்குளத்தில் இயங்க காத்திருக்கிற அணு உலையும் இந்த செர்நோபிலில் இருந்தது போன்ற வகைதான். ஆகவே இதில் என்றும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் கல்பாக்கத்தில் கதிரியக்கத்தினால் கோலன் என்கிற ஒருவகையான புற்று நோயில் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் இன்னும் .....
ஆதரிப்பவர்களின் வாதம்
அமைதியான வாழ்க்கைக்கு கூட இன்று மின்சாரம் அத்தியா
அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 20 அணுமின் திட்டங்கள் இயக்கத்தில் இருக்கிறது. அதன் பாதுகாப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஆவாகியில் இருக்கிறது. தேவையற்ற பயம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள். வேற்று நாட்டு சக்திகள் இத்திட்டத்தை முடக்க தூண்டிவிடுவதாக திசை
திருப்பவும் செய்கிறார்கள். 1300 கோடி வீணாக வேண்டுமா ? இத்திட்டம் தொடர்ந்தால் தான் நல்லது என்பது பா.ஜ.க கருத்தும் கூட . இந்தியாவும் அணு உலை விபத்துகளும் ;
சில தமிழ் பத்திரிக்கைகளில் கதிர்வீச்சு , நெருப்பு பொறி
தோன்றுதல் , இன்னும் சில குறைகளைதான் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் INDIAN AGE என்கிற மேகசீனில் (magazine) ஒரு ஆர்டிகில் படித்தேன். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 2 கருத்துகளை அப்படியே தருகிறேன்.the recent nuclear radiation in kakrapar nuclear plant in gujarat is a such type of case four laborer were exposed to low levels of radiation at the end of may after ,an error in control room but it was reported in media on 2nd august 2011. the kakrapar authority tried to down play the incident
India currently has twenty nuclear reactors in operation and this safety record is very clear, ........... there maybe many other accidents that we do not know about இதுதான் உண்மை நிலையும் கூட ..
1000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமே !
சாதாரண நிகழ்வில் கூட ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்த அணு
உலைகளை சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்குவோம் என்கிறது மத்திய அரசு. இங்கே 1000 மெகாவாட் மின்சாரம் பிரதானமாக பேசபப்டுகிறது. 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ? யுரேனியம் புளுட்டோனியம்
சர்க்கரை ஆலையில் சர்க்கரை தான் உற்பத்திசெய்யபடுகிறது. ஆனால்
அதன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ப்ரிட் அங்கு கொள்ளை லாபம் தருகிறது. இது போன்று சில இடங்களில்தான் main product ஐ விட by product அதிக முக்கியத்துவம் பெரும். இதே போன்றுதான் அணு உலைகளிலும் மின்சாரம் என்கிற முக்கிய உற்பத்தி பொருளைவிட யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் கழிவுகளில் இருந்து தயரிக்கப்படும் அணு ஆயுத மூலக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அணு ஆயுத மூலகாரணிகளை இந்தியாவே வைத்துகொள்ளுமா? இல்லை ரஷ்யாவிற்கு விற்றுவிடுமா என்று மத்தியில் அரசாள்கிறவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.மாற்று வழி இல்லையா ?
உயிர்மை , சமநிலை சமுதாயம் போன்ற நல்ல ஊடகங்கள் கூட
கண்மூடித்தனமாக கருத்து சொல்லியிருக்கிறது. இங்கே புதிய தலைமுறையின் ஒரு பதிவு முக்கியமாக கருதத் தக்கது. யுரேனியம் , புளுட்டோனியம் பயன்படுத்தாமல் , தோரியம் மற்றும் நியுட்ரான் பயன் படுத்தி அணுஉலைகள் இயக்கலாம் என்று கூறியிருக்கிறது. அதை செய்து பார்க்கலாம். ஆபத்துகள் மிகவும் குறைவுதான். நாம் கட்டுப்பாட்டில் இயங்கும் உலைகள் நமக்கு கிடைக்கும். முடிவுரை
மின்சார தேவைக்காக தான் அணுஉலைகள் என்றால் தோரியம்
பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைகளை இயக்கட்டும். இல்லை யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் பயன்படுத்திதான் கூடங்குளம் அணு உலைகள் இயக்கப்படும் என்றால் .. தாராளமாக இயக்கட்டும் கூடங்குளத்தில் அல்ல .. டெல்லி பாராளுமன்றத்தில் .. பாதிப்பு இல்லாததுதானே .. அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
பாதிப்பு இல்லை என்றாள் டெல்லி பாராளுமன்றதின் அருகில் அணுஉலையை கட்டவேண்டியது தானே ,ஏன் நாட்டின் ஓரத்தில் உள்ள மக்களை பணயம் வைக்கிறார்கள் .

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
நம்மை பலிகடா ஆக்குவதுதான் மதிய அரசின் திட்டம் , அது மட்டும் இல்லை நமது தென் கடற்கரை பகுதியில் (ராமர் பாலம் பகுதில்) அள்வுக்கு அதிகமான யுரேனியம் கிடக்கின்ர்து அதனால் தான் அமெரிக்க முதலான நாடுகள் நமுடன் அணு ஒப்பந்தம் வைக்க அதிக மகா முயற்சி செய்கிந்த்ர்னர்
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
அருமையான அறிய வேண்டிய கட்டுரை அண்ணா....
அண்ணா ஒரு சந்தேகம்....
அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்க உபயோகிக்கும் காரணிகள் புளூட்டோணியமும், யுரேனியமும்...இந்த பொருட்கள் நாம் நாட்டில் இருந்தே எடுக்கப் படுகின்றனவா இல்லை ரசியாவிடம் இருந்து பெறப்படுகின்றனவா......காரணம் நம் நாடு யுரேனிய வளத்தில் சிறந்த நாடு என்று படிதிருக்கிறேன்....
இப்படி அணு ஆயுத மூலக் காரணிகளை ரசியாவிற்கு விற்க...அமெரிக்கா வுடன் செய்த ஒப்பந்தம் இடம் தருமா.......???
மிக்க நன்றிகள் அண்ணா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
KESAVAN wrote:பாதிப்பு இல்லை என்றாள் டெல்லி பாராளுமன்றதின் அருகில் அணுஉலையை கட்டவேண்டியது தானே ,ஏன் நாட்டின் ஓரத்தில் உள்ள மக்களை பணயம் வைக்கிறார்கள் .
ஆம் கேசவன். மோடி , மம்தா பானர்ஜி , ஆந்திரா , கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் நாட்டில் வர இருந்த அணு உலைகளை வேண்டாம் என மறுத்துவிட்டது.
தங்களின் 500 வது பதிவில் இந்த பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றிகள் கேசவன்
bagavathi wrote:நம்மை பலிகடா ஆக்குவதுதான் மதிய அரசின் திட்டம் , அது மட்டும் இல்லை நமது தென் கடற்கரை பகுதியில் (ராமர் பாலம் பகுதில்) அள்வுக்கு அதிகமான யுரேனியம் கிடக்கின்ர்து அதனால் தான் அமெரிக்க முதலான நாடுகள் நமுடன் அணு ஒப்பந்தம் வைக்க அதிக மகா முயற்சி செய்கிந்த்ர்னர்
UTI பாங்க் திவால் ஆனதுதான் மிச்சம். அது AXIS என பெயர் மாற்றிக்கொண்டது அதில் முதஈடு செய்தவர்களின் நிலை என்ன ? எல்லாம் இந்த ராமார்பலா இடிப்பு தான் காரணம் அந்த திட்டில் எத்தனையோ தனிமங்கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். நன்றி பகவதி
பிஜிராமன் wrote:
.காரணம் நம் நாடு யுரேனிய வளத்தில் சிறந்த நாடு என்று படிதிருக்கிறேன்....
இப்படி அணு ஆயுத மூலக் காரணிகளை ரசியாவிற்கு விற்க...அமெரிக்கா வுடன் செய்த ஒப்பந்தம் இடம் தருமா.......???
ரஷ்யா நமக்கு அணு உலைகளும் அதை கட்டமைக்கும் விஞானிகளைமட்டும் தான் தருவதாக கேள்விப்பட்டேன். கூடங்குளத்தில் கூட நிறைய பிரச்சனைகள் இருந்ததாக கட்டுரை படித்தேன். கூடாங்குல அணு உலை வடிவமைப்பின் தலைமை பொறியாளர் செர்கிரைசோவும் இன்னும் 3 பொறியாளர்களும் விமான விபத்தில் இறந்து விட்டார்களாம் . தனிமங்கள் பயன்படுத்துவது நமது பொறுப்பு
அமெரிக்க அந்த அளவிர்க்கு இந்தியாவில் அதிகாரம் செய்ய முடியாது.
நன்றிகள் தம்பி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
யோசிக்க வேண்டிய விஷயம்அய்யம் பெருமாள் .நா wrote: 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?

Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
அணு உலைகள் வாழ்வாதாரத்திர்க்கு உலை என்பது நாமனைவரும் அறிந்ததே.
தரத்தில் சிறந்த ஜப்பானியர்களுக்கே உலை வைத்தது அணு உலை.
எப்படிப் பார்த்தாலும் அவர்களை விட தரத்தில் நாம் சிறந்திருப்போம் என்று சொல்வதற்கில்லை.
மக்களின் வேண்டாம் எனும் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாகுமா ? பொறுத்திருந்து பார்போம்.
கேள்வி? -
தற்போதைய வெளிச்சம் முக்கியமெனில் பின்னில் தெரிவது கடும் இருட்டு மனித குலத்துக்கு...
மனித குல வெளிச்சம் முக்கியமெனில் முன்னில் தெரிவது இருட்டு - மின் பற்றாக்குறையினால்.
இரண்டாவதை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
ராஜா wrote:யோசிக்க வேண்டிய விஷயம்அய்யம் பெருமாள் .நா wrote: 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?
நன்றிகள் அய்யா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
[quote]
நன்றிகள் நட்புடன் !
எதற்கும் மாற்று உண்டு , இந்த மின்சாரத்திற்கும் மாற்று வரும் என்று நம்புவோம் !
நட்புடன் wrote:அணு உலைகள் வாழ்வாதாரத்திர்க்கு உலை என்பது நாமனைவரும் அறிந்ததே.தரத்தில் சிறந்த ஜப்பானியர்களுக்கே உலை வைத்தது அணு உலை.
எப்படிப் பார்த்தாலும் அவர்களை விட தரத்தில் நாம் சிறந்திருப்போம் என்று சொல்வதற்கில்லை.
நன்றிகள் நட்புடன் !
எதற்கும் மாற்று உண்டு , இந்த மின்சாரத்திற்கும் மாற்று வரும் என்று நம்புவோம் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
விளக்கதிற்கு நன்றிகள் அண்ணா....
நட்ஸ்......மறுபடியும் நீராவி இயந்திரத்தை தான் பயன் படுத்தும் நிலா வருமோ....இல்லை அகல் விளக்கு தானா.......
நான் ஒரு விளம்பரத்தில் பார்த்தேன்........நாம் ஈகரையிலா, இல்லை வேறெங்கு பார்த்தேன் என்று தெரியவில்லை.......மின்சாரம் கண்டறியப் படாமல் இருந்திருந்தால்........இப்பொழுது மின்சாரம் கொண்டு பயன் படுத்தும் பொருட்களை எப்படி பயன் படுதி இருப்போம் என்பது அதன் கரு.....
அதில் கம்ப்யூட்டர், பல் பிடிங்கும் கருவி, செவிங்க் செய்யும் கருவி, ஹேர் ட்ரை செய்யும் கருவி என பல கருவிகளை நீராவி கொண்டு இயக்கி இருப்பார்கள்.......ஒரு வேலை அது நிஜமாகி விடுமோ.....???
மனித குல வெளிச்சம் முக்கியமெனில் முன்னில் தெரிவது இருட்டு - மின் பற்றாக்குறையினால்.
இரண்டாவதை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
நட்ஸ்......மறுபடியும் நீராவி இயந்திரத்தை தான் பயன் படுத்தும் நிலா வருமோ....இல்லை அகல் விளக்கு தானா.......
நான் ஒரு விளம்பரத்தில் பார்த்தேன்........நாம் ஈகரையிலா, இல்லை வேறெங்கு பார்த்தேன் என்று தெரியவில்லை.......மின்சாரம் கண்டறியப் படாமல் இருந்திருந்தால்........இப்பொழுது மின்சாரம் கொண்டு பயன் படுத்தும் பொருட்களை எப்படி பயன் படுதி இருப்போம் என்பது அதன் கரு.....
அதில் கம்ப்யூட்டர், பல் பிடிங்கும் கருவி, செவிங்க் செய்யும் கருவி, ஹேர் ட்ரை செய்யும் கருவி என பல கருவிகளை நீராவி கொண்டு இயக்கி இருப்பார்கள்.......ஒரு வேலை அது நிஜமாகி விடுமோ.....???

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
தெளிவான கட்டுரை... இதை படிக்கும் போது தமிழகத்தின் மின்சார பிரச்சனை தற்போதைக்கு தீராது என்றே தோன்றுகிறது..

2009kr- பண்பாளர்

- பதிவுகள்: 176
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 29/05/2011
மதிப்பீடு: 51
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
ஒரு நல்ல கட்டுரை..... பதிவுக்கு நன்றி தம்பி... (சில எழுத்துபிழைகளை சரி செய்துள்ளேன் தம்பி)

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
உங்களுடன் கருத்தில் வேறுபடுவதற்கு வருந்துகிறேன்!!
* முதலில், செர்னோபில் விபத்து நடந்தது 1996 ஆம் ஆண்டு அல்ல... 1968 ஆம் ஆண்டு. சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்தே ஒப்பந்தம் போடப்பட்டது.
*செர்மோபில் அணுஉலை RBMK (reaktor bolshoy moshchnosti kanalniy) வகையைச் சார்ந்தது. கரிப்பொருள் (Graphite) கொண்டு இயங்ககூடியது...கூடன்குளத்தில் உள்ளதோ VVER, Vodo-Vodyanoi Energetichesky Reactor; Water-Water Energetic Reactor) வகை. தண்ணீரை அடிப்படையாக கொண்டது.
* திட்டம் கிடப்பில் போடப்பட காரணம் அமெரிக்காவின் நெருக்கடியே தவிர, எந்த போராட்டமும் இல்லை.
அன்று குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலைத்து விடப்பட்டனர்.
* அணுஉலைகளைப் பொறுத்தவரை, அவற்றில் இருந்து வரும் துணைப்பொருட்கள் (by products) மிகவும் குறைந்த நிலை தனிமங்களே (அணு அளவை வைத்து!!) - அதிகபட்சம் சீசியம் (Ceasium-137 அணு எடை ) தான் வரும். இவை கதிரியக்கத் தன்மையுடன் இருந்தாலும், இவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது. அணு ஆயுதம் தயாரிக்க குறைந்தபட்சம் 220 அணு எடை இருக்க வேண்டும்.
* தோரியம் பயன்படுத்துவதில் தவறில்லை... ஆனால், அதற்கு பன்மடங்கு முதலீடு தேவை. மேலும், நிர்ணயிக்கப்பட்ட மின்சாரத்தைப் பெற அதிக காலம் ஆகும்.
* எந்த அணுஉலையாக இருந்தாலும், செயல்பாட்டிற்கு நியூட்ரான் தேவை. நியூட்ரான் மட்டும் கொண்டு நிச்சயமாக அணு உலையை நடத்தலாம்... ஆனால், நியூட்ரான்களை உற்பத்தி செய்ய தனியே ஒரு அணு உலை வேண்டுமே? பரவாயில்லையா???
[b]//1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார்//
இது தவறான தகவல்.
அப்படியே இருந்தாலும், அதன் பின் 5 ஆண்டுகள் அவர் ஆட்சியின் கீழ்தானே[/b][b] பணிகள் நடைபெற்றன (அதுவும் மத்தியில் கூட்டணி)... தமிழினத்திற்கு இடையூறு என்றால் தடுத்திருக்கலாமே???
[/b]மேலே நான் கூறியுள்ளவை அனைத்தும் தவறான தகவல்களைப் பரவாமல் களையவே!!
இன்று கூடன்குளம் அருகில் நடக்கும் போராட்டத்தின் நோக்கமே வேறு. அது
அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது! அவற்றைத் தீர்க்காமல்,
அணுஉலை செயல்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை.
ஆனால், அதனை 'தமிழின எதிர்ப்பு' என்று சில தீய சக்திகள் தான் போராட்டத்தைத் திசை திருப்ப முயற்சி செய்கிறன.. அவற்றை நம்பாதீர்!!
அணு உலைகளே மனிதருக்கு எதிரானது என்பது என் கருத்து

அருமையான கட்டுரை அய்யம்.
அறிவியலின் வளர்ச்சியால் நாம் எந்த அளவிற்கு நன்மையை பெறுகிறோமோ அதைவிட அதிகமாக நாம் பாதிக்கம்படுகிறோம் என்பது மறுக்கமுடியா உண்மை.
"விஞ்ஞானம்" அது சொர்க்கத்தில் திறவுகோலாக இருக்கவேண்டும் ஆனால் அதுவே நரகத்தின் அளவுகோலாக ஆகிவிட கூடாது என்றார் அண்ணா. அதுபோல் விஞ்ஞானத்தை மனித அழிவிக்கோ அல்லது மனித இனத்தை அழிவுபாத்தைக்கு கொண்டு செல்லும் அறிவியல் நமக்கு தேவை இல்லை....

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதாரங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை(site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கை யும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடி யாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உப யோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வில்லை. i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங் களும் வசிக்கிறார்கள். ண்ண்) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள். ண்ண்ண்) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
ண்ஸ்) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று ஆஊதஇ சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப் பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலை கீழாகவும் வந்த உதிரி பாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடி வயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலிலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. (முதல்வர் ஜெயலலிதா அறிக்கை) 2003 பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலிலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன் குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர் களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நில நடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுஷிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகஸ்ட் 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ் பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக் களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழக மும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரஷ்யா கையை விரித்தது. 2008-ஆம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரஷ்யா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப் படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப் படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன் படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளி யிடும் இந்த கொடிய நச்சை 24, 000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக் குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாய கரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப் படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்து கதிர் வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படு வார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப் படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வரு கின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசிலியம் 134, 136, 137 ஐ சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடி தண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988-ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் துவக்க மதிப்பீடே 17, 000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006-ஆம் ஆண்டு இயங்கும் என்றும், 15, 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6, 755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத் தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலிலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத் திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக் கின்றன. புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டிலே கட்டப் பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்ட னர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்ஜி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப் படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன. கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன் வருவார்கள் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டு கின்றன. மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற் காக மக்களா? ரஷ்யா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா? சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum