ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 ayyasamy ram

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 ayyasamy ram

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 ayyasamy ram

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ayyasamy ram

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 ayyasamy ram

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 ayyasamy ram

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

View previous topic View next topic Go down

நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

Post by prlakshmi on Sat Oct 22, 2011 3:32 am

நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

விஞ்ஞானி. க. பொன்முடி-நன்றி-முத்துக்கமலம்உண்மையில் சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமி ஏற்பட்டதற்கு, இந்திய நிலத்தட்டு பர்மா நிலத்தட்டிற்கு கீழே உரசிச் சென்றதால்தான் அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது ,என்று நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, டாக்டர் பெஞ்சமின் பாங் சா மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர், 10.01,2005, அன்று நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருகிறார்கள்.

ஆனால் மூன்று மாதம் கழித்து 27.04.2005, அன்று அதே நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில்,இந்தோனேசியத் தீவுகள் அமைந்து இருக்கும் சுந்தா நிலத் தட்டிற்கு கீழே ஆஸ்திரேலிய நிலத் தட்டு உரசிச் சென்றதால்தான் நிலஅதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு நில அதிர்ச்சிக்கு எப்படி இரண்டு காரணம் இருக்க முடியும்?

குறிப்பாகக் கண்டங்களுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தப் பாறைத் தட்டுகளுக்கு மேலே இருக்கும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும், அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் நீளவாக்கில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் 1965- ஆம் ஆண்டு முதல் 1998 - ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் ஏற்ப்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்கவில்லை.

பார்க்க வரைபடம் 1

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/db/Quake_epicenters_1963-98.png

இதன் அடிப் படையில் நாசா அமைப்பு வெளியிட்ட கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் வரை படத்திலும் (வரை படம் 2,) கூட இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பார்க்க வரைபடம் 2

http://www.gisdevelopment.net/magazine/gisdev/2000/may/images/image002.gif

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் அமைந்து இருபதாகக் கூறுவதற்கும் அதே போன்று இந்திய நிலப்பகுதியும் ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் தனித்தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.

எனவே இந்திய நிலத்தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அதே போன்று ஆஸ்திரேலிய நிலத்தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.

சிமிழு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்ப்பட்டது.

குறிப்பாகக் கடந்த 26.12.2004, அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு, சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் சிமிழு தீவின் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.

பார்க்க படம் 3

http://www.gsi.go.jp/cais/topics-topic041226-simeulue-e.html

எனவே இந்திய நிலப் பகுதியும் நகரவில்லை. ஆஸ்திரேலிய நிலப்பகுதியும் நகர வில்லை. உண்மையில் சிமிழு தீவு கடல் தரையில் இருந்து நான்கு அடி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் அதனால் கடல் நீர் புறந்தள்ளப்பட்டு சுனாமியும் ஏற்பட்டது என்ற எனது கண்டுபிடிப்பு நிரூபணமாகிறது.

தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை

அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட புத்தகத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெய்ன் என்ற பேராசிரியர் கண்டங்களுக்கு நடுவில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு காரணம் தெரியவில்லை என்பதுடன்,இது போன்ற நில அதிர்ச்சிகளை “தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை” என்று குறிப்பிடுகிறார்.

நிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது. புகைப் பட ஆதாரம்.(படம்: இந்தப் புகைப் படம் , மத்திய அரசு உதவி பெறும் கேரளாவைச் சேர்ந்த "சென்ட் பார் எர்த் குக் சயன்ஸ் ஸ்டடீஸ்" (CESS) என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் குசல ராஜேந்திரன் அவர்களால் எடுக்கப் பட்டது)

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள், இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள லதூர் மாவட்டத்தில் உள்ள கிலாரி என்ற கிராமத்தில் எட்டாயிரம் பேர் உயிரைப் பறித்த நில அதிர்ச்சியின் பொழுது, கிலாரி கிராமத்தில் நிலம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று அடி உயர்ந்து இருந்தது.

மேலும் கிலாரியில் ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகு கர்நாடக,ஆந்திரா எல்லைப் பகுதியில் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து கொண்டிருந்தது.

முக்கியமாக நில நடுக்கத்திற்கு முன்பு கிலாரி கிராமத்தில் நிலத்தின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது லாண்ட்சாட்-5 செயற்கைக் கொள் மூலம் எடுத்த படங்கள் மெல்லாம் தெரியவந்திருக்கிறது.

ஆனால் நில நடுக்கதிற்குப் பிறகு நிலத்தின் வெப்ப நிலை பழைய நிலைக்கே திரும்பி இருந்தது.

நிலம் ஏன் உயர்ந்தது?

நிலத்தின் வெப்ப நிலை ஏன் அதிகமானது?

நிலத்திற்கு அடியில் இருந்து ஏன் வெண் புகை கசிந்தது?

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஆறிக் கொண்டிருக்கிறது.

பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீரும் வெளியேறி பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்படுவதால் அதில் பாறைத் தட்டுகள் உருவாகின்றன.

மேலும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பில் உருவாகும் பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருக்கிறது.

அடர்த்தி அதிகமாக இருக்கும் தண்ணீரில் உருவாகும் பனிக் கட்டிகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மிதக்கிறது.

அதே போல் அடர்த்தி அதிகமாக இருக்கும் பாறைக் குழம்பில் உருவான பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மேல் நோக்கி உயர்கின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, ஏற்கனவே உருவாகி மேற்பகுதிக்கு உயர்ந்த பழைய பாறைத் தட்டுகளை முட்டித் தள்ளுகிறது.

இதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் இருக்கும் நீர் மற்றும் வாயுக்களின் அழுத்தம் அதிகரித்து அவைகள் பாறைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மூலம் பூமியின் மேற்பகுதிக்கு வருகின்றன.

இதனால் நிலத்தின் வெப்ப நிலை உயர்கிறது.

மேலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயரும் பொழுது அவற்றின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

எனவே பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி உயர்ந்தால்தான் கிலாரி கிராமத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. நிலம் உயர்ந்தது. அத்துடன் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து, நிலத்தின் வெப்ப நிலையும் உயர்ந்தது.

இவ்வாறு பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.

உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் இருக்கும் பேசல் என்ற நகரில் 1356 ம் ஆண்டு ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது.2006 ம் ஆண்டு அந்நகரில், பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தைப் பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அப்பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்திற்குப் பூமியில் இரண்டு இடத்தில் துளைகளையிட்டது.

ஒரு துளையின் வழியாக நீரைச் செலுத்தி அந்த நீர் பூமிக்கு அடியில் இருக்கும் பாறையின் வெப்பத்தால் நீராவியாக மற்றொரு துளையின் வழியாக வெளிவரும் பொழுது அதனைக் கொண்டு டைனமோக்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிப்பதாகத் திட்டம்.

ஆனால் பூமிக்குள் நீரைச் செலுத்திய எட்டாவது நாளிலேயே அந்த இடத்தில் ரிக்டர் அளவு கோளில் 3.4 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

பூமிக்குள் நீரைச் செலுத்தியதும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட வேண்டும்?

நிச்சயம் பூமிக்குள் சென்ற நீரால் நிச்சயம் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகர சாத்தியம் இல்லை.

எனவே பூமிக்குள் சென்ற நீரால் அங்கிருந்த பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்பட்டு புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது?

வட அமெரிக்காவின் மதியப் பகுதியில் உள்ள நியூ மாட்ரிட் என்ற நகரில் 1811 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 1812 ஜனவரி மாதம் நிகழ்ந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்று இன்று வரை விளக்கப் படாமலேயே இருக்கிறது.


காரணம் கண்டங்கள் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் நியூ மாட்ரிட் நகரம் வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கிறது.குறிப்பாக நில அதிர்ச்சியின் பொழுது அப்பகுதியில் உள்ள டென்னசி என்ற நகரில் ஐம்பது கிலோ மீட்டர் நீளத்திற்கும் இருபத்தி மூன்று கிலோ மீட்டர் அகலத்துக்கும் நிலம் உயர்ந்து காணப்பட்டது.

குறிப்பாக மிசிசிப்பி ஆறு ஓடும் கெண்டகி என்ற நகரின் தென்மேற்குப் பகுதியிலும் மிசோரி நகரின் தென் மேற்கும் பகுதியிலும் டென்னசி நகரின் வட மேற்குப் பகுதியிலும் நிலப் பகுதிகள் முப்பது அடி வரை உயர்ந்ததால் மிசிசிப்பி ஆறு ஓடும் பாதை நிரந்தரமாக மாறிவிட்டது.

எனவே நிலப் பகுதிகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது எனபது கண்கூடாகவே நிரூபணமாகிறது.

தமிழகத்தில் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது?

* 1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
* 1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
* 1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
* 1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
* 1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
* 1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
* 1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி. (மூலம்: இணையம்.)

மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன,டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?


அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.

எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும்.

சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.

சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜின்போ மலையில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.(படம்: சீனாவில் உள்ள சிசுவான் பகுதியில் உள்ள சின்போ மலையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரம் அடி உயரத்தில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள்)

இதன் அடிப்படையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் கடலுக்கு அடியில் இருந்தது என்றும் கூறுகின்றனர்.(படம்: கடலுக்கு அடியில் இருந்த நிலம் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்த பொழுது ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட உயிரினங்களே இன்று ஜின்போ மலையின்மேல் புதை படிவங்களாக காணப்படுகின்றன)

எனவே மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், நில அதிர்ச்சிக்கும் நிலப் பகுதிகள் கடலின் அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருப்பதே காரணம். இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஜாவா தீவில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட்டது?

கடந்த 02.09.2009 அன்று இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும், இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால், பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் 02.09.2009 அன்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

ஏன் 02.09.2009 அன்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை?

இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் எப்படி செல்ல முடியும்?

இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே எப்படி செல்ல முடியும்?

உண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன?

இந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன.

இந்த எரிமலைகளுக்கு அடியில் உள்ள பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து நீரும் வெப்ப வாயுக்களும் வெளியேறுவதால், எரிமலைகளுக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைகள் உருவாகின்றன.

அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.

எனவே இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகளுக்கு அடியில் புதிதாக உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால், குறிப்பிட்ட ஒரு தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

*****

avatar
prlakshmi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 203
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

Post by dsudhanandan on Sat Oct 22, 2011 8:04 am

பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மி அவர்களே ....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

Post by கேசவன் on Sat Oct 22, 2011 8:33 am

பகிர்ததுக்கு நன்றி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நில அதிர்ச்சி சுனாமி கண்டு பிடிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum