ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Tue Oct 18, 2011 3:18 pm

@உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?

@Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.


என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Tue Oct 18, 2011 3:22 pm

கேள்வியை இரு பகுதிகளாக பிரிக்கிறேன்

முதல் பகுதி

பரிகாரம் செய்தால் தோஷம் போகுமா ?


நல்ல செயல்களை செய்தால் அதன் பெயர் நல்வினை -
இதன் பயனாய் நமக்கு நன்மை கிடைக்கும்

தீய செயல்களை செய்தால் அதன் பெயர் தீவினை -
இதன் பயனாய் நமக்கு தீமை ஏற்படும்

இவ்விரு வினை பயன்களின் தொகுப்பே " கர்மா " என்றழைக்கப்படும்


கர்மாவை மூன்று வகையாக பிரிக்கலாம்


சஞ்சித கர்மா :

 • பல பிறவிகளில் செய்த நல் தீவினை பயன்களின் தொகுப்பு . இதுவே புதிய பிறப்பில் மனிதனின் மனநிலை , குணங்களின் விருப்பு வெறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது . இக்கர்மாவின் ஒரு பகுதியினை மனிதனால் கட்டுபடுத்தமுடியும் . தியானத்தின் மூலமாக , நெறியான வாழ்கை மூலமாக , இறைவழிபாட்டின் மூலமாக , சாந்தி பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தனது நடத்தையை , குண நலத்தை சரி செய்துகொள்ளமுடியும்


பிராரத்த கர்மா :

 • நல்வினை , தீவினை தொகுப்பில் ஒரு பகுதி . இப்பிறப்பில் பலன் தரும் பகுதி . இதனை கட்டுபடுத்த இயலாது , இக்கர்ம வினையின்படியே ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறக்கிறான்


ஆகாமிய கர்மா :

 • இப்பிறப்பில் நாம் உண்டாக்குவது . இது ஓரளவு சஞ்சித கர்மாவினாலும் , பிராரத்த கர்மாவினாலும் நிர்ணயிக்கப்படுகிறது . கர்ம விதியைப் பற்றி தெரிந்த ஞானத்தால் எதிர்காலத்தில் தனது ஆன்மாவிற்கு ஒரு தெளிவான பாதையை அமைக்க உதவுகிறது . கர்மவிதியின் படியே மனித ஆன்மா மறுபிறப்பை மேற்கொள்கிறது


avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Tue Oct 18, 2011 3:28 pm

ஆக கர்ம வினைகளில் சில அனுபவித்தே தீர்க்கவேண்டியது . எந்த பரிகாரம் செய்தாலும் , எத்தனை பரிகாரம் செய்தாலும் வினை பயன்களிடமிருந்து தப்பிக்க இயலாது , அந்த பயன்களை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்


உதாரணம் : ஒரு மனிதனின் இறப்பு .

 • ஒரு மனிதன் இந்த காலகட்டத்தில் , இன்ன வியாதியால் அல்லது விபத்தால் இறக்கவேண்டும் என்று அவனுக்கு விதிக்கப்பட்டு இருந்தால் , அவன் அவ்வாறே இறந்துபோவான் , மஹா ஆயுஷ்ய ஹோமம் போன்ற பரிகாரங்களால் கூட அவனை காப்பாற்ற முடியாது


சில வினை பயன்களை நாம் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்
முறையான பரிகாரங்களால் .

பரிகாரங்களின் உதவியால்
வினை பயனின் தீவிரத்தை
குறைத்துகொள்ளலாம்


உதாரணம் :

 • ஒருவருக்கு ஆயும் தீர்க்கம் .
  ஆனால் அவர் ஜாதகப்படி அவருக்கு தற்போது நல்ல நேரம் இல்லை ,
  ஒரு உயிர் கண்டத்தை ஏற்படுத்தும்
  அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று அவருக்கு நடக்கவேண்டும்
  என்று விதிக்கப்பட்டு உள்ளது என்று வைத்துகொள்ளுங்கள்அவர் அதற்கு எந்த பரிகாரமும் செய்யவில்லை எனில் விபத்து நடக்கும் , விபத்தின் தீவிரம் மிக அதிகப்படியாக இருக்கும் பலத்த சேதாரம் அவரது உடலுக்கும் , உடமைகளுக்கும் ஏற்படும் , உதவுவதற்கென்று அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள் .

ஒரு வேளை அவர் பரிகாரம் செய்து இருந்தால் , அப்போதும் கூட விபத்து நடக்கும் ஆனால் விபத்தின் தீவிரம் குறைவாக இருக்கும் , சிறு சிராய்ப்புகளுடன் அவர் தப்பித்துகொள்வார் . விபத்து நடந்தவுடன் அவரை அதிலிருந்து மீட்க ஆட்கள் ஓடி வந்து உதவி செய்வர் , அவரது உடைமைகள் எவ்வித சேதாரமும் இன்றி இருக்கும்

இதுவே பரிகாரத்தினால் உண்டாகும் பயன்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

தோஷம் , பரிகாரம் என்றால் என்ன விளக்கம் - ஆத்மா

Post by aathma on Tue Oct 18, 2011 3:30 pm

சரி , இனி கேள்வியின் மற்றொரு பகுதிக்கு வருவோம்

பரிகாரம் செய்து தோஷம் போகும் என்றால்
இறைவன் வகுத்த பாதையை மாற்றுவது போல் ஆகாதா ?


இது ஆண்டவன் படைத்த உலகம் . இங்கு அவனன்றி அணுவும் அசையாது , ஆகையால் நம்மை பரிகாரம் செய்யவைப்பதே இறைவன்தான்

நாம் முற்பிறவிகளில் பாவம் செய்து இருந்தாலும் கூட
இப்பிறப்பில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் ,
பிறருக்கு நன்மை செய்து , மனசாட்சியுடன் ,
கருணை , இரக்கம் கொண்டு பிறருக்கு உதவி செய்தால்

நம் நல்நடத்தையின் காரணமாக இறைவன் நமக்கு பரிகாரத்தின் மூலம் நமது வினைபயன்களை முற்றிலும் நீக்கிக் கொள்ளவோ அல்லது வினைபயன்களின் தீவிரத்தை குறைத்துகொள்ளவோ ஏதுவான சந்தர்பத்தை ஏற்படுத்தி நம்மை பரிகாரம் செய்யவைத்து நமக்கு கருணை காட்டி நன்மை செய்கிறான்

இறைவனின் கருணை ஒருவருக்கு கிடைக்கும் சமயமே ,
அவருக்கு பரிகாரம் செய்யும் எண்ணம் அவர் மனதில் உருவாகும்

இறைவன் நமக்கு கருணை காட்டுவதும் ,
நம்மை கவனியாமல் அவன் விடுவதும்
நம் செயலின் , நம் உள்ளத்தின் அடிப்படையில் அமையும்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by ராஜா on Wed Oct 26, 2011 12:33 pm

அருமையான விளக்கம் சஞ்சீவினி.
ஜோதிடம் தவிர இது போன்ற ஆன்மீக விளக்கங்களையும் எங்களுக்கு தரலாமே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by கே. பாலா on Wed Oct 26, 2011 12:42 pm

பழைய வினை (சஞ்சித கர்மா ) புதுவினை (பிராரத்த கர்மா : ) புகு வினை *(ஆகாமிய கர்மா ) பற்றிய விளக்கங்கள் அருமை சஞ்சீவினி .....
தொடரட்டும் உங்கள் அருட் பணி . வாழ்க வளமுடன் அன்பு மலர்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by கேசவன் on Wed Oct 26, 2011 1:17 pm

அருமையான பகிர்வு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by பிளேடு பக்கிரி on Wed Oct 26, 2011 1:41 pm


அருமை அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அருமையிருக்குavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by பிஜிராமன் on Wed Oct 26, 2011 2:18 pm

அருமையான பதிவு ஆத்மா........மிக்க நன்றிகள்........... புன்னகை
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Wed Oct 26, 2011 3:55 pm

@ராஜா wrote:அருமையான விளக்கம் சஞ்சீவினி.
ஜோதிடம் தவிர இது போன்ற ஆன்மீக விளக்கங்களையும் எங்களுக்கு தரலாமே.நான் இந்த பதிவை எழுதியதைக் காட்டிலும் ,
நீங்கள் இந்த பதிவை சிறந்த இடத்தில் பதிவிட்டு
இந்த பதிவை அனைவரும் படிக்க வழி செய்தீர்கள் அண்ணா புன்னகை


மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர்

தொடர்ந்து என்னால் இயன்ற ஆன்மீக தகவல்களை தருகிறேன் அண்ணா புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Wed Oct 26, 2011 4:07 pm

@கே. பாலா wrote:பழைய வினை (சஞ்சித கர்மா ) புதுவினை (பிராரத்த கர்மா : ) புகு வினை *(ஆகாமிய கர்மா ) பற்றிய விளக்கங்கள் அருமை சஞ்சீவினி .....
தொடரட்டும் உங்கள் அருட் பணி . வாழ்க வளமுடன் அன்பு மலர்

மிக்க நன்றிகள் பாலா அண்ணா நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Wed Oct 26, 2011 4:08 pm

@KESAVAN wrote:அருமையான பகிர்வு

நன்றி நன்றி நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Wed Oct 26, 2011 4:08 pm

@பிளேடு பக்கிரி wrote:
அருமை அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அருமையிருக்கு

மிக்க நன்றிகள் பக்கிரி அண்ணே நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Wed Oct 26, 2011 4:09 pm

@பிஜிராமன் wrote:அருமையான பதிவு ஆத்மா........மிக்க நன்றிகள்........... புன்னகை

மிக்க நன்றிகள் ராமரே நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by சதாசிவம் on Wed Oct 26, 2011 4:40 pm

பல ஜோதிடர்களுக்கு கூட தெரியாத அருமையான தகவல், அனைத்து பாவங்களையும் பரிகாரங்களில் சரிபடுத்த முடியாது என்ற தகவல் அருமை. இதைச் சொன்னால் நமக்கு ஜோதிடம் தெரியாது என்று கூறுவார்கள்.

பதிந்தமைக்கு நன்றி. சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by இளமாறன் on Wed Oct 26, 2011 10:51 pm

ஆத்மாவின் ஆன்மீக பதில்கள் மிக அருமை உங்கள் சேவை அனைவருக்கும் தேவை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எனக்கு ஒரு சந்தேகம்

தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்

ஒரு சாதாரண மனிதன் கர்ம விதிப்படி தான் வாழ்க்கை அமைக்க முடியும் அமையும் ...
உதாரணமாக ஒரு திருடர்களின் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது .. அதே நேரத்தில் நல்ல பெற்றோர்களிடம் ஒரு குழந்தை பிறக்கிறது . இரண்டும் பிறந்தது ஒரே நேரம் .ஆனால் இருபது வருடம் கழித்து இரு குழந்தைகளின் நிலையும் இரு துருவங்களுக்கு தள்ள படுகின்றன .. இப்பொழுது நல்ல பெற்றோர்களிடம் பிறந்தது நல்ல வழிகளை பின் பற்றி நல்ல மனிதனாக வளர்கிறான் அதாவது அவனது கர்ம விதிப்படி ...

இப்பொழுது தீயவர்களின் நடுவில் பிறந்தவன் கர்ம விதிப்படி பிறந்தவன் திருந்த முடியாத சூழ்நிலை தள்ள படுகிறான்......

கீழுலக கோர்ட் தண்டனை தருகிறது என்று வைத்து கொண்டால் அவன் இறந்த பின் மேலுலகத்தில் தண்டனை கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா

இரண்டாவது கேள்வி தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே அறிந்து இருக்கும்
இப்பொழுது நல்ல பெண்கள் தீய குணம் கொண்ட அரக்கர்களிடம் தன் கற்பை இழக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் இதில் தவறு யாருடையது ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by உதயசுதா on Thu Oct 27, 2011 10:10 am

அருமையான விளக்கம் சஞ்சீவினி.உங்க பதிலை இப்பதான் படிக்க சந்தர்ப்பம் கிடத்தது..நான் இந்த கேள்விய ஒரு சில ஜோதிடர்கள் கிட்ட கேட்டப்ப எனக்கு சரியான பதில் கிடைக்கலை.நன்றி சஞ்சீவினி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by dsudhanandan on Thu Oct 27, 2011 11:36 am

இன்றுதான் படித்தேன் சஞ்சீவினி.... அருமையான விளக்கத்துக்கு நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Thu Oct 27, 2011 5:44 pm

@சதாசிவம் wrote:பல ஜோதிடர்களுக்கு கூட தெரியாத அருமையான தகவல், அனைத்து பாவங்களையும் பரிகாரங்களில் சரிபடுத்த முடியாது என்ற தகவல் அருமை. இதைச் சொன்னால் நமக்கு ஜோதிடம் தெரியாது என்று கூறுவார்கள்.

பதிந்தமைக்கு நன்றி. சூப்பருங்க

மிக்க நன்றிகள் நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Thu Oct 27, 2011 5:46 pm

@உதயசுதா wrote:அருமையான விளக்கம் சஞ்சீவினி.உங்க பதிலை இப்பதான் படிக்க சந்தர்ப்பம் கிடத்தது..நான் இந்த கேள்விய ஒரு சில ஜோதிடர்கள் கிட்ட கேட்டப்ப எனக்கு சரியான பதில் கிடைக்கலை.நன்றி சஞ்சீவினி

மிக்க நன்றிகள் சுதா நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Thu Oct 27, 2011 5:46 pm

@dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் சஞ்சீவினி.... அருமையான விளக்கத்துக்கு நன்றி

மிக்க நன்றிகள் சுதா அண்ணா நன்றி அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Thu Oct 27, 2011 6:43 pm

மிக்க நன்றிகள் மாறன் சார் , தங்களின் பாராட்டிற்கும் , கேள்விக்கும் நன்றி அன்பு மலர்


@இளமாறன் wrote:
உதாரணமாக ஒரு திருடர்களின் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது .. அதே நேரத்தில் நல்ல பெற்றோர்களிடம் ஒரு குழந்தை பிறக்கிறது . இரண்டும் பிறந்தது ஒரே நேரம் .ஆனால் இருபது வருடம் கழித்து இரு குழந்தைகளின் நிலையும் இரு துருவங்களுக்கு தள்ள படுகின்றன .. இப்பொழுது நல்ல பெற்றோர்களிடம் பிறந்தது நல்ல வழிகளை பின் பற்றி நல்ல மனிதனாக வளர்கிறான் அதாவது அவனது கர்ம விதிப்படி ... இப்பொழுது தீயவர்களின் நடுவில் பிறந்தவன் கர்ம விதிப்படி பிறந்தவன் திருந்த முடியாத சூழ்நிலை தள்ள படுகிறான்......
கீழுலக கோர்ட் தண்டனை தருகிறது என்று வைத்து கொண்டால் அவன் இறந்த பின் மேலுலகத்தில் தண்டனை கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா

நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல

தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .

எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது

தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்

ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்@இளமாறன் wrote:இரண்டாவது கேள்வி தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே அறிந்து இருக்கும் இப்பொழுது நல்ல பெண்கள் தீய குணம் கொண்ட அரக்கர்களிடம் தன் கற்பை இழக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் இதில் தவறு யாருடையது ...

தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்

அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்
நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்

ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது

அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்

ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்

அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது

ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 9:59 pm

சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்

அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை

இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது

நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by aathma on Thu Oct 27, 2011 10:16 pm

@இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


மிக்க நன்றிகள் மாறன் ஸார் நன்றி அன்பு மலர்


@இளமாறன் wrote:இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல
இதுல எங்க ஞானி ஆகுறது

நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ? புன்னகை

நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும் புன்னகை

avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 10:47 pm

@aathma wrote:
@இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க மிக அருமையான பதில்கள்


மிக்க நன்றிகள் மாறன் ஸார் நன்றி அன்பு மலர்


நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ? புன்னகை

நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும் புன்னகை


சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum