புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
69 Posts - 58%
heezulia
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
111 Posts - 59%
heezulia
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_m10எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 11:17 pm

நம் மனதிலுள்ள தீமை என்னும் நரகாசுரனை ஒழித்து, "கிருஷ்ணன்' என்னும் தீபச்சுடர் ஒளியை ஏற்றும் நன்னாளே தீபாவளி திருநாள். இந்த நன்னாளுக்கு காரணமான கிருஷ்ண பகவானை இந்த நன்னாளில் துதித்து அருள் பெறுவோம்.
* ஆயர்பாடிக்கு அலங்காரமாகத் திகழ்பவனே! பாவங்களில் இருந்து காப்பவனே! பக்தர்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! மன்மதனைப் போல கோபியரிடம் விளையாடியவனே! மதுரா நகர் பெற்ற பாக்கியசாலியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.
* மன்மதனின் கர்வத்தைப் போக்கும் அழகுள்ளவனே! ஆயர்களின் துன்பத்தைத் துடைத்தவனே! செந்தாமரை மலர் போல் சிவந்ததும், நீண்டதுமான அழகிய கண்களைக் கொண்டவனே! தாமரைக் கைகளால் புன்முறுவலுடன் கோவர்த்தனகிரியைத் தூக்கி இந்திரனின் கர்வத்தைப் போக்கியவனே! கிருஷ்ணனே! உன்னை போற்றுகிறேன்.
* கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகத்தை தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.
* என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால், கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்.
* பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருவதில் வல்லவனே! சாதுக்களின் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! நந்தகோபனின் செல்வமே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.
* நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுராநகரவாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
* இடைக்குலத்தின் திலகமாகத் திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் தூண்டுபவனே! சூரியனைப் போல பிரகாசத்துடன் திகழ்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள்பவனே! கிருஷ்ணனே! எங்கள் வாழ்வில் ஒளிவீச நீ வந்தருள வேண்டும்.

02. தினந்தோறும் தீபாவளியாகட்டும்: வாழ்த்துகிறார் சாய்பாபா

தீபாவளி பண்டிகை நாளில் நாம் அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்கிறோம். குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து புத்தாடை உடுத்தியும், பலகாரங்களைச் சாப்பிட்டும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், தீபாவளி போன்ற பண்டிகைகள் இதற்காக மட்டுமா ஏற்படுத்தப்பட்டன!

பண்டிகைகள் நம் கலாசார பண்பாட்டோடு பின்னிப்பிணைந்தவை. தூய்மையான நல்ல எண்ணங்களை, குறிக்கோள்களை நம் மனதில் ஏற்படுத்துவதே கொண்டாட்டத்தின் நோக்கமாகும். நமது உடம்பு இறைவன் குடியிருக்கும் கோயிலாக இருக்கவேண்டும். அக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வழிபட தூய்மையான பூஜாதிரவியங்கள் தேவை.

நம் உடலாகிய கோயிலில் ஐம்புலன்களும் (கண், காது, மூக்கு, செவி, உடல்)பூஜாதிரவியங்களாக உள்ளன. அவை எப்போதும் தூய்மையானதாக இருக்கவேண்டும். மனதில் சமநிலையை ஒருபோதும் இழக்காமல், அமைதி தரும் உயர்ந்த நல்ல பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். யாரேனும் நம்மை பழித்தாலும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். நம் மனம் எந்த அளவுக்கு அமைதியை பின்பற்றுகிறதோ, அந்த அளவுக்கு வாழ்வில் வெற்றி அடைவது உறுதி. கடவுளை முழுமையாக சரணடைந்து விட்டால், மனம் குழந்தையாக மாறிவிடும். நமக்கு எதுதேவை என்பதை அவர் நன்கு அறிவார். அவரவருக்குரிய கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் போதும். மற்றவை தானாக நம்மை வந்து சேரும். தீபாவளி நாளில் மட்டுமல்லாமல் எல்லாநாளிலும் அதிகாலைப் பொழுது இறை சிந்தனையோடு தொடங்கட்டும். அனாவசியமான வெறுப்பு, கோபம் போன்ற குணங்களை எல்லாம் மறந்து எங்கும் உயர்ந்த தூய எண்ணங்கள் மலரட்டும். தினம்தோறும் தீபாவளியாக உள்ளத்தில் நல்லெண்ணெம் என்னும் ஒளி வீசட்டும்.

03. உள்ளத்தில் ஞானதீபம் ஏற்றுவோம்: சிருங்கேரி பாரதி தீர்த்தசுவாமிகள் அருளுரை

இன்று தீபத்திருநாள். இந்த இனிய நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி ஒன்று உள்ளது. ஒருவரது வாழ்வில்
எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்ற வேண்டும். ஏதாவது ஒன்று பிசகினாலும் வாழ்வில் திருப்தி உண்டாகாது. இவை இயைந்து வரவேண்டுமானால் தியாக உணர்வு அவசியம். நாம் வாழும் பாரதம் தியாக பூமியாகும். இங்கு தான் சத்தியபாமா என்னும் தியாகத்தாய் உலகின் நன்மைக்காக தன் பிள்ளையையும் கொல்லத் துணிந்ததோடு, அந்நாளை தீபாவளி திருநாளாக எல்லோரும் கொண்டாடி மகிழவேண்டும் என்று பகவானிடம் வேண்டிக் கொண்டாள். இன்றைய நிலையில், மத சம்பந்தமான அனுஷ்டானங்களை உணர்ந்து மக்கள் விழாக்களைக் கொண்டாடுவதில்லை. ஆன்மிக விழிப்புணர்வுக்காக தியானம், பூஜை ஆகியவற்றைச் செய்ய விரும்புவதில்லை. வெறும் கொண்டாட்டமாக மட்டும் தீபாவளியை எடுத்துக் கொள்ளாமல் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வது அவசியம்.

ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பயன்படுத்தும் வாய்ப்பு மனிதர்களாகிய நமக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டால் வாழ்வு உயர்வு பெற்று விடும். அஞ்ஞான இருளாகிய நரகாசுரன் என்னும் அசுரன் இருட்டாக நம்மை மூடியிருக்கிறான். அந்த இருட்டை விரட்டி, அவ்விடத்தில் ஞானம் என்னும் ஒளிவிளக்கை ஏற்றும் நாளே தீபாவளி. இதைவிடச் சிறந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அந்த அருமையை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஞான தீபம் ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்.


04. சுமங்கலி தீபாவளி

இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக, நேற்றிரவே கறிக்கடைகளுக்கு முன் தவம் இருந்து, வேண்டிய "அயிட்டங்களை' வாங்கி மட்டன் சுக்கா, வறுவல் என விதவிதமாக சமைத்து மூன்று வேளையும் சாப்பிட தயாராக வைத்திருப்பீர்கள். சுவாமி கும்பிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால் ஊரே தீபாவளியை பட்டாசு வெடித்தும், ”வீட் கொடுத்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், மகேந்திர மேதர நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் மட்டும் சைவ உணவை உட்கொண்டு பாரம்பரிய விரதம் இருந்து வருகிறார்கள். இவர்களை போல் சில சமூகத்தினரும் தீபாவளியன்று பாரம்பரியத்தை விடாமல் காத்து வருகிறார்கள்.

மதுரை செல்லூரில் வசிக்கும் நாயுடு சமூகத்தினர் இதற்காகவே மூங்கில் தட்டை தயார் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் திலகவதி. ஒருவேளை உணவு ரகசியத்தை கேட்டோம். ""இதனை கவுரி விரதம் என்பார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு முதல் விரதம் இருப்போம். தீபாவளியன்று காலையில் மட்டும் அசைவம் இல்லாத உணவை சாப்பிடுவோம். பிறகு வீட்டில் அல்லது உறவுமுறை களில் உள்ள வயதான பெண்களிடம், ஆசி பெறுவோம். அவர்கள் மூங்கில் தட்டில் ஜாக்கெட் துணி, வளையல், 21 அதிரசம், 21 முறுக்கு, 21 மஞ்சள்கிழங்கு, 21 வெத்தலை பாக்குகளை வைத்து கொடுப்பார்கள். இதையும், சிறிய கலசம், தேங்காயை வைத்து அதை உருவம் இல்லாத கவுரி அம்மனாக பாவித்து வழிபடுவோம். இந்த விரதத்தை ஆணும், குழந்தைகள்கூட மேற்கொள்வார்கள். சுமங்கலிக்குரிய மூங்கில் தட்டை, நாத்தனார் குடும்பத்தினருக்கு கொடுக்க மாட்டோம். இந்த விரதத்திற்காக கையில் 21 நூல்களை கொண்ட காப்பு கட்டிக் கொள்வோம்'' என்று "மூச்' விடாமல் சொல்லி முடித்தார் திலகவதி. "அப்போ எப்பதான் தீபாவளி அயிட்டமான அசைவத்தை சாப்பிடுவீங்க' என்று இரக்கப்பட்டு நாம் கேட்க, "தீபாவளி கழிஞ்சு வர்ற விடுமுறை நாளில்தான் தடபுடல் விருந்து' என்ற திலகவதி சொன்ன கொசுறு மெசேஜ் என்ன தெரியுமா? "எல்லாரும் தீபாவளியை என்ஜாய் பண்ணுங்க'
-ஆர்.கே.,

05. மத்தாப்பை சுட்டு சுட்டு போடட்டுமா!

குட்டீஸ்களை ஒருங்கிணைப்பது மாதிரி கஷ்டமான வேலை, வேறெதுவும் இல்லை. இரண்டு பேரை பிடித்து வைப்பதற்குள், ஒருவர் ஓடிவிடுவார். ஒருவழியாக ஆறுபேர், பட்டாசு வெடிக்கும் "போட்டோ செஷனுக்கு' பிகு பண்ணியவாறே சம்மதித்தனர். சிறுமிகள் பட்டுப் பாவாடையிலும், சிறுவர்கள் கோட், சூட்டிலும் வந்திருந்தனர். அதிலும் ப்ரீதிகா, பட்டுப்பாவாடைக்கு மேட்சாய் நீலநிற வளையலும் அணிந்திருந்தார். சாதாரணமா வந்திருக்கலாமே... என்றதும், "போட்டோ எடுப்பீங்கல்ல... நல்லா வரணும்ல... அதுக்கு தான்...' என நீளமாய் இழுத்தார் அபிஷேக். அம்மாடி... ஆரம்பமே சூடா இருக்கே. இவர்களிடம் பட்டாசு என்ன பாடு படப் போகிறதோ... என மனசுக்குள் நினைத்துக் கொண்டே, பட்டாசு கொளுத்துவோமா.. என்றோம். "நீங்க தான் பேசிட்டே இருக்கீங்க. பட்டாசை கையில் தரமாட்றீங்க...' முறைத்துக் கொண்டே பேசினார், சுட்டிப் பையன் ஸ்ரீவத்சன். நீளமான கம்பி மத்தாப்பை கையில் கொடுத்ததும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி, ஆரத்தி போல சுற்றிக் கொண்டே இருந்தனர். "சாமிகளா... படமெடுக்கற வரைக்கும், கையில் வச்சு ஒண்ணா போஸ் கொடுங்களேன்' என கெஞ்சினோம். "சரி... சரி... மத்தாப்பூ அணைவதற்குள், படமெடுங்கள்' என "இன்ஸ்டன்ட்' டாய் சிரித்தனர். பேச்சு தான் அதிகம்... ஆனால் செல்லங்களின் சிரிப்பு... பார்க்க அழகாக இருந்தது.
-எம்.எம்.ஜெ.,

06. மனசுக்குள் மத்தாப்பு விழிகளுக்குள் தீபஒளி!

மகிழ்ச்சியில் உள்ளமும், ஆனந்த வெள்ளமும் கலந்த தீபத்திருநாளில், தித்திப்பும், மத்தாப்பும் பிரிக்க முடியாத பந்தங்கள். இறைவனின் படைப்பில், குறையேதும் இல்லாத நாம், அந்த பந்தத்தை நமக்கே சொந்தமாக்கியுள்ளோம். மனிதனின் மறுபக்கமாய் வாழ்ந்து வரும் பார்வையற்றோருக்கு தித்திக்கும் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா? நம்முடன் ஒப்பிட்டால், அத்தனையும் நேர் எதிர்.

தீபஒளி வெளிச்சத்தில் இரவை ரசிப்பது நாம். எத்தனை தீபம் ஏற்றினாலும், அவர்கள் பார்வைக்கு பிரகாசமாய் தெரிவது இருள் மட்டுமே. 10 கடை ஏறி, எதிலும் இல்லாத புதுமையாய் புத்தாடை வாங்கி அணிவதில்லை. மணம் கண்டு, புத்தாடையை இனம் காண்பது அவர்களின் வழக்கம். "லட்டு, ஜிலேபி, அல்வா, முறுக்கு, மிக்சர்,' என, பல "மெனு" இருந்தாலும், அவர்கள் "பார்வையில்' ஒன்று காரம், மற்றொன்று இனிப்பு மட்டுமே. "டிவி'யின் கதகதப்பில் தீபாவளியை கழிப்பதில்லை. புதுப்படங்களுக்கு "டிக்கெட்' வாங்கி புத்தாடையை அழுக்காக்குவதில்லை. "மட்டை' ஆக மதுக்கடைக்கு செல்வதில்லை. தலையில் எண்ணெய் வைத்தால் காலை, புஸ்வாணம் சத்தம் கேட்டால் இரவு என்பது தான் இவர்களுக்கு தெரிந்த தீபாவளி.

விருந்துக்கு இறைச்சி தந்த கோழி, ஆடு கூட, இவர்களுக்கு கற்பனை கதாபாத்திரங்கள் தான். பார்வையற்றோருக்கு மனசுக்குள் தான் மத்தாப்பு. மறைந்து கிடக்கும் மனிதத்தின் மறுபக்கத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர, மதுரை அருகேயுள்ள சுந்தராஜ புரம், "இந்தியா பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி'க்கு சென்றோம். தன் தீபாவளி அனுபவம் குறித்து விழி திறக்கும் மத்தாப்பு பொறிகள் இதோ:

கல்யாண்(உசிலம்பட்டி): புத்தாடை வாங்கியுள்ளதாக பெற்றோர் தகவல் அனுப்பி உள்ளனர். என் வருகைக்கு நண்பர்கள் காத்திருக்கின்றனர். காட்சிகளை மொழிபெயர்க்கும் நண்பர்கள் கிடைத்ததால், தீபாவளியை நானும் ரசிப்பேன், மனக்கண்ணில்.

புஷ்பம்(திருநெல்வேலி): பட்டாசு சத்தம் கேட்கும் போது, அதை வெடித்து பார்க்க ஆசை வரும். அதே நேரத்தில் பலரின் பார்வையை பறித்த பட்டாசு நமக்கு தேவையா என சில சமயம் தோன்றும். இழப்புகள் எங்களுக்கு புதிதல்ல என்பதால், தீபாவளி பெரிய இழப்பாக தெரியவில்லை.

கலைச்செல்வி(முத்துப்பட்டி): "செமஸ்டர்' இருப்பதால், இம்முறை தீபாவளிக்கு செல்ல முடியாது. இங்கு நண்பர்களுடன் இனிப்புகள் உண்டு பண்டிகையை கொண்டாடுவோம். அதிகபட்சமாக பாடல்கள் கேட்டு ரசிப்போம்.

சங்கிலி(ராமநாதபுரம்): வீட்டில் நான் மட்டும் பார்வையிழந்தவன். அந்த வேறுபாடு தெரியாமல் என் வீட்டில் என்னை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் மனதில் ஓடும், என்றார்.
-நவநீ தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கள் வாழ்வில் ஒளிவீச இறைவா நீ எழுந்தருவாய்   Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக