ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

View previous topic View next topic Go down

பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Post by யாழவன் on Thu Sep 24, 2009 5:49 pm

தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள்.

அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடப்படும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று விளக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும், பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரதமுனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தைத் தான் தமிழர்கள் இரவல் வாங்கினார்கள் என்று நினைத்துக் கொண்டு, தமிழரின் தமிழ் நாட்டிய விழாவுக்கு வந்து சமஸ்கிருதத்தின் புகழை எண்ணிக் கொண்டும் போகிறார்கள்.

பரதநாட்டியத்தின் உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்திருக்க நாமே பரதநாட்டியத்தை நாங்கள், தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவதன் அறியாமையை என்னவென்பது.

சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது.

உண்மையில் பரதநாட்டியம் என்பது 20ம் நூற்றாண்டில் தமிழரின் கலைவடிவமாகிய சதிருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுக்கப்பட்ட பின் இணைக்கப் பட்ட புதிய பெயர். தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவும் தொடர்பும் கிடையாது.

என்று தான், நாங்கள் தமிழர்கள் எங்கள் தலையில் நாங்களே மண்ணையள்ளிப் போடுவதை நிறுத்துவோம் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

தமிழரின் பரதநாட்டியம் அல்லது சதிராட்டம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. சோழர் காலத்தில் தேவ அடியார்கள் அல்லது தேவதாசிகள் எனப்படும் பெண்கள் சைவசமயத்துக்குத் தொணடு செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சைவ சமய நெறிகளிலும், ஆடல், பாடல், ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்ததோடு மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்களாக இருந்தார்கள். இவர்கள் இன்றைய கிறிஸ்தவ சகோதரிகள் போலவும், புத்தபிக்குணிகள் போலவும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தொண்டாற்றினார்கள்.

சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பிறமதத்தவர்களின் படையெடுப்பினால் ஆலயங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப் பட்டன. அவர்களும் துன்புறுத்தப்பட்டும், ஆதரவற்றும் அந்த தேவ அடியார்கள், 'தேவடியாள்' களாக்கப் பட்டார்கள். அவர்களால் சைவாலயங்களில் ஆடப் பெற்ற சதிராட்டமும் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்டது. ஒரு பழந்தமிழ்க்கலை வீழ்ச்சியுற்றது.
19ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சதிர் என்றாலே விபச்சாரிகளின் ஆட்டம் என்ற நிலையில் கருதப்பட்டது. இந்த நிலையில் தான் 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம்பிள்ளை, கிருஸ்ணையர், பாலசரஸ்வதி, ருக்குமணிதேவி அருண்டேல் போன்ற பலர் தமிழரின் சதிராட்டத்துக்குப் புது வடிவமும், புத்துயிரும் கொடுத்தார்கள். சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.

பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் திருமணி. ருக்மணிதேவி அருண்டேலினதும், கலாசேத்திரத்தினதும் பங்களிப்பு அளப்பிட முடியாதது. அதே வேளையில் பரதநாட்டியத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் பரதநாட்டியத்தைச் சமஸ்கிருதப்படுத்தினார்கள். அதனால் பரத நாட்டியத்தின் தமிழ் வேர்கள் மறைக்கப் பட்டன, நாங்களும் இழிச்ச வாய்த் தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டோம்.

பரத( சதிர்) நாட்டியத்தில் அவர்களால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களெல்லாம் நடை உடையலங்காரம், பல்வேறு விதமான பாடல்களில் மட்டும் தான். அடிப்படை நாட்டிய நுட்பத்தில் எந்த விதமாற்றமும் ஏற்படுத்தவில்லை.இதே பரதநாட்டியத்துக்கு சதிராட்டம் அல்லது தேவராட்டம் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பரதநாட்டியம் அல்லது சதிரின் வேர்கள் ஆழமாக தமிழரின் பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின்னிப் பிணைந்திருக்கும் போது, எப்படி இதன் தமிழ்த் தொடர்பு மறைக்கப் பட்டது?

முதலில் இந்தப் பழந்தமிழரின் நாட்டியக் கலைக்கு ஒரு புதுப் பெயர் கொடுக்கப்பட்டது (பரதநாட்டியம்),அதைத் தொடர்ந்து இந்தப் புதுப் பெயருக்கு ஒரு நவீன விளக்கம் (பவ, ராக, தாளம்) அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் புதிய பெயருக்கு ஒத்த பெயருள்ளவராகவிருந்த ஒரு பரதமுனி என்ற ஒருவரை, இந்த தமிழரின் நாட்டியதுக்குத் தொடர்பு படுத்தினார்கள்,

எல்லாவற்றையும் கலந்து ஒரு அழகான் இதிகாசக் கதையைக் கட்டி விட்டார்கள்.இதைத் தொடர்ந்து, மீண்டும், மீண்டும் ஒரே பொய்யை எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் கூறினார்கள், அதை உண்மையாக எங்களில் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டு விட்டது.

இந்தக் கட்டுக்கதையை, நம்பி அதை நாங்களே மீண்டும் ஒப்பிக்கும் முன்பு, நாம் தமிழர் இந்தக் கதையைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்ன நோக்கத்தில் தமிழரின் நாட்டியக் கலைக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இது தமிழருக்கே தமிழரின் பரத(சதிர்) நாட்டியத்தின் தமிழ்த் தொடர்பில் சந்தேகப்பட வைக்கிறது, பரத நாட்டியத்தின் வேர்கள் தமிழரின் கலாச்சாரத்திலும், வரலாற்றிலுமுள்ளதென்பதை மறுத்து, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் வாங்கியதாகக் காட்டுகிறது.

இனிமேலாவது, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல , உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் பரதநாட்டியத்தை மீண்டும், முழுவதும் தமிழாக்க முயற்சிக்க வேண்டும்.
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Post by Tamilzhan on Thu Sep 24, 2009 5:52 pm

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum