ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களே நீங்களும் உலக அழகிதான்...

View previous topic View next topic Go down

பெண்களே நீங்களும் உலக அழகிதான்...

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 11:54 pm

அழகு என்பது முகத்தில் மட்டுமே இருப்பதாக கருதி அதை மெருகேற்ற பல்வேறு ஒப்பனை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். முக அழகு தேவைதான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகிவிடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக் கூடிய உள்அழகும் இருக்கிறது. உள் அழகுதான் நமக்குள்ளே நம்மை அழகுப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் நம்மை அழகாக்கி காட்டுகிறது. அவைகளைப் பற்றி பார்க்கலாம்.

புன்சிரிப்பு :

உங்கள் முகத்தில் எப்போதும் புன் சிரிப்பை தவழ விடுங்கள். அதை மிஞ்சிய அழகு `மேக்அப்' எதுவும் கிடையாது. பெண்களின் புன்சிரிப்பு, மலர்ந்திருக்கும் ரோஜா இதழ்களைப் போன்று மென்மையாக அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளாலோ, வேலைப்பளுவாலோ சிரிப்பை தொலைத்துவிடக்கூடாது. அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் புன்சிரிப்பை ஒரு பயிற்சியாக முகத்திற்கு தர வேண்டும். நாளடைவில் அது அப்படியே முகத்தில் ஒட்டிக்கொள்ளும். சிரிப்புள்ள முகம் எப்போதும் ஒளிவீசும். ``மேக்அப்'' போடாவிட்டாலும் அந்த முகம் அழகில் ஜொலிக்கும்.

இன்சொல் :

எல்லோருடைய இதயத்திற்கும் இதம் தருவது இன்சொல். இந்த குணம் உங்களிடம் இருந்தால் கோபம் உங்களிடம் வந்து குவியாது. கடுஞ்சொல் உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திவிடும். இன்சொல் உங்களை மேலும் அழகாக்கிவிடும். பொறுமையான பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். கடுமையான சொற்களை பேசும்போது சற்று கண்ணாடியை பாருங்கள். உங்கள் முகம் உங்களுக்கே பிடிக்காது. பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்? ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உங்களிடம் இருந்தால் சோகம் அண்டாது. அழுகையும் தோன்றாது. அடிக்கடி அழுவது, கண்களில் எப்போதும் நீரை தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது உங்களை அழகாகக்காட்டாது. அலங்கோலமாக காட்டி விடும்.

பாசிடிவ் திங்கிங் :

வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால், எண்ணங்களில் நம்பிக்கை வரும். நம்பிக்கையான எண்ணங்கள்தான் `பாசிடிவ் திங்கிங்'. நம்பிக்கையான எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, முகத்திற்கு அழகைத்தரும். முகமே மெருகுபெறும். நம்பிக்கையற்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களை சோர்வடையச் செய்து வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.

உடை நேர்த்தி :

சரியான உடைகளை தேர்ந்தெடுத்து, அவைகளை நேர்த்தியாக அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது உங்களை மேலும் அழகாக்கும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான உடைகளை அணிய தெரிந்துகொள்ளுங்கள். நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.

தன்னம்பிக்கை :

தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம். தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள். மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum