ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

View previous topic View next topic Go down

நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by அன்பு தளபதி on Sun Nov 06, 2011 11:16 am

அரசியல்வாதிகளும், நாமும் காலம் காலமாக மாறாமல் இருக்கிறோம் என்பதற்கு
மிக அழகான சான்று இந்த கட்டுரை. ஆரம்ப கால திராவிட இயக்கங்களுடன் மிக
நெருங்கிய தொடர்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் எண்ணங்கள் 1000 நூலில் எழுதியது.

நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!

நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது
போல் எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்!

உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழ வைக்க வந்த
எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்!

நாங்கள் அரசியல்வாதிகள்.

நாங்கள் அன்று எப்படி இருந்தோம்; இன்று எப்படி இருக்கிறோம்
என்று நீங்கள் ஆராயக்கூடாது.

அன்று பட்டுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் போய்க் கொண்டு
இருந்தோம்; இன்று பாரிசுக்கும்,நியூயார்க்கும் போய்க் கொண்டு இருக்கிறோம்.

இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக்கூடாது.

நாங்கள் சிரிப்பதே உண்மையான சிரிப்பென்றும், அழுவதே
உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.

நன்றி!

அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர இடையில்
தளரக்கூடாது.

நாங்கள் மேடையில் பேசும்போது நீங்கள் ஆரவாரம்
செய்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீரகள் என்று நம்பித் தான்
நாங்கள் பேசுகிறோம்; உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு
நம்பிக்கை.

நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு. எப்பொழுது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும் !

எதிர்க்க முடியாத சூழ்நிலையில் தப்பித்தவறி பேசுகிற
அந்த உண்மையைப் போலத்தான் நாங்கள் பேசும் எல்லாப் பேச்சுக்களும் இருப்பதாக
நீங்கள் நம்ப வேண்டும்.

நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட,
எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.

அந்த துண்டு வெள்ளை வெள்ளேரென்றிருக்கிறது. அந்த
துண்டின் வெண்மையைப் போல் எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள்
எதிர்பார்ப்பது நியாயமே.

அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா!

எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக்கூடாது.

எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான் இந்த தொழிலுக்கு வந்தோம்.

நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால்
ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து
விட்டது.

நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.

‘மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணக்கூடாது.

நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக்கூடிய சக்தி எங்களுக்கு ஏது?

அவை எங்கள் மனைவிமார்களின் கார்கள்!

அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக்கூடாது.

குடும்பக்கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல!

சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த
தலைமுறையில் எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.

நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது.

ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை.

இந்த வகையில் நாங்கள் ஜவகர்லால் நேருவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

‘அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்’ என்று நீங்கள் ஆச்சரிய்ப்படக்கூடாது.

நதிமூலம்,ரிஷிமூலம்,அரசியல்வாதிமூலம் மூண்றும் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை!

பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ,அப்படியே பணம்
செர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.

ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது.

அந்தப் பணத்தையும் நாங்கள் பொது மக்களுக்குக்காகவே
சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல!

உங்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குவதற்காக நாங்கள் சில ரேட்டுகளை நிர்ணயித்திருக்கிறோம்.

உங்களது மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, மாதம் ஒரு
சர்க்கஸ் நடத்துகிறோம்.

உங்களை ‘சோஷலிஸ’ சொர்க்கத்துக்குக் கொண்டு
செல்வதற்காக யார் சோஷலிஸம் பேசினாலும் கூடச் சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறோம்.

நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும்
காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் எந்த விளக்கம்
சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை
நம்புவதே மடத்தனம்.

‘கடைசியாகப் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை’
என்று சொல்லிக் கொண்டே பணத்தை வசூல் செய்துவிட்டு, சண்டையைக் காட்டாமலேயே
மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.

நாங்கள் ‘வரும் வரும்’ என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.

அது வரும் போது எங்களால் தான் வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!

ஊழல் ஊழல் என்று மற்றவர்கள் கூறுவார்கள்;
நீங்கள் கவலைப் படக்கூடாது! எந்த நாட்டில் எந்த ஆண்டில் ஊழல் இல்லை?

பதினேழாம் நூற்றாண்டில் இல்லையா? பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லையா? பத்தொண்பதாம் நூற்றாண்டில் இல்லையா?

சீஸர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?

எங்களைக் கண்டால் மட்டுமே வயிறெரிகிற பாவிகள், பாரம்பரியமாக இருந்து வருகிற மரபைப் பற்றி எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.

ஏழை மக்களே! நம்பாதீர்கள்! இதயத்தில் கை வைத்துச் சொல்கிறோம்; நாங்கள் உங்கள் தொண்டர்கள்.

நீங்கள் தலையால் இடும் வேலையைக் காலால் உதைக்க -
மன்னிக்க வேண்டும் - நாக்குக் குழறி விட்டது! நீங்கள் காலாலிடும் வேலையைத் தலையால் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆகவே, எந்தத் தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,

மறவாதீர்கள், எங்கள் நரிக்குட்டிச் சின்னத்தை மறவாதீர்கள்!


நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி!வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!நன்றி மின்மலர் வலைப்பூ


avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by கேசவன் on Sun Nov 06, 2011 11:31 am

பகிர்விக்கு நன்றி ,அரசியல்வாதிகள் எப்பொழுதும் ஒரேமாதிரிதான் இருகிறார்கள்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by ப்ரியா on Sun Nov 06, 2011 7:50 pm

என்ன ஒரே சிரிப்பா தான் இருக்கு ..அரசியல் வாதிகள் உண்மையில் ஏழைகள் தான் மணி .

அப்போ நரிக் குட்டி சின்னத்துக்கு ஓட்டு போட்டுடலாம் மணி ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by இளமாறன் on Sun Nov 06, 2011 8:09 pm

முதல்ல ஓட்டுரிமை இருக்கா சரி செய்து கொள்ளுங்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by ப்ரியா on Sun Nov 06, 2011 8:25 pm

@இளமாறன் wrote:முதல்ல ஓட்டுரிமை இருக்கா சரி செய்து கொள்ளுங்கள் சிரி

என்ன கேள்வி இது அண்ணா ?நாங்க கள்ள ஓட்டு கூட போடுவோம் . எப்பிடி வசதி . ஜாலி ஜாலி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by இளமாறன் on Sun Nov 06, 2011 8:37 pm

@ப்ரியா wrote:
@இளமாறன் wrote:முதல்ல ஓட்டுரிமை இருக்கா சரி செய்து கொள்ளுங்கள் சிரி

என்ன கேள்வி இது அண்ணா ?நாங்க கள்ள ஓட்டு கூட போடுவோம் . எப்பிடி வசதி . ஜாலி ஜாலி

கள்ள ஒட்டா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை dangerous பார்ட்டி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by dsudhanandan on Mon Nov 07, 2011 12:22 pm

வாக்களிக்க்றேன் மணி சிரி சூப்பருங்க
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum