புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !  Poll_c10அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !  Poll_m10அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !  Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
jairam

2 Posts - 1%
Jenila

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ( அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் பென்னி குயிக் எழுதுவது !

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 5:22 pm

அன்புள்ள (அறிவுகெட்ட ) மலையாள மனோரமா இதழுக்கு கர்னல் ஜான் பென்னிகுயிக் எழுதுவது !

வணக்கம் !

ஒரு தேசத்தின் பாராளுமன்றம் , நிர்வாகம் , நீதி இவைகளுக்கு அடுத்து நான்காவது தூணாக கருதுவது பத்திரிக்கைகளைதான். ஆனால் இன்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசத்தின் தூணாக இருப்பதற்கு மாறாக வீணாக பிரச்சனைகளை எழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.அந்தவகையில் இன்றைய தமிழக கேரள மக்கள் மனதில் எழுந்திருக்கின்ற பகை உணர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது நீதான் மலையாள மனோரமா .

1979 இல் முல்லை பெரியாறு அணை உடைய போகிறது என்று நீ வெளியிட்ட செய்திதான் இன்று முழு உருவம் பெற்று நிற்கிறது. நான் கட்டிய அணியை பற்றி உனக்கு என்ன தெரியும் . ஏதோ ஒரு அறிவுகெட்ட கேரள அரசியல் வாதி தன்னுடைய சுய லாபத்திற்காக செய்தி வெளியிட உன்னை தூண்டியிருக்கலாம் அல்லது உனக்கு கேரள மக்கள் மீது அக்கரை இருப்பதாய் கட்டி கொள்வதற்காக நீயே வெளியிட்ட செய்தியை இருக்கலாம். எது எப்படியோ நீ விதைத்த வினையை கேரள மக்கள் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது போல.

முதலில் அணையை பற்றி அறிந்துகொள் மனோரமா !
1798 இல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி , முல்லை ஆற்றினையும் பெரியற்றினையும் இணைத்து அணைகட்டி தேனி ,மதுரை வழியாக ராமநாதபுரம் கொண்டுவர திட்டமிட்டார். முத்திருள...... என்பவர் தலைமையில் 12 நபர்கள் கொண்ட குழுவினை அனுப்பி ஆராய்ந்தார். அப்போது போதுமான நிதியில்லாததால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

பின்னர் 1807 இல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜார்ஜ் பேரிஸ் , ராமநாதபுரம் சேதுபதி தீட்டிய அணி பற்றிய திட்டம் பற்றி ஆய்வு செய்ய ,மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கால்டுவேல்சிற்கு உத்தரவிட்டார். பின் 1808 இல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என ஜேம்ஸ் கூறினார். அதனால் அப்போது அத்திட்டம் கைவிடபட்டது.

1837 இல் கர்னல் பேபர், சின்ன முல்லையாறு நதியில் மணல் மூலம் அணை கட்டி தண்ணீரை கிழக்கே திருப்பும் முயர்ச்சியும் வீணானது. பின்னர் 1867 இல் மேஜர் ரைல்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கியம் என்று கூறி 17 .50 லட்சம் மதிப்பிலான திட்டத்தை தீட்டினர். இதற்கு தலைமை பொறியாளர் வாக்கர் எதிர்ப்பு தெரிவித்தார் உடனே திட்டம் கைவிடப்பட்டது.
1876 இல் சென்னை மகானத்தில் கடும்பஞ்சம்.

. அதன் பின்பு தான், ராணுவத்தில் பொறியாளராக பணிபுரிந்த நான் 1882 இல் ஒரு அணை கட்டும்திட்டத்தை தீட்டினேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தோன்றி வீணாக அரபி கடலில் கலக்கும் பெரியாறு நதியினை அணை கட்டி கிழக்கே திருப்பி வைரவன் ஆற்றுடன் இணைத்து பின்பு சுருளி நதியுடன் இணைத்து பின்பு வகை நதியுடன் இணைத்துவிட்டால் ( ராமநாதபுரம் மதுரை திருச்சி திண்டுக்கல் தேனி ) வறண்ட நிலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என்று கூறினேன். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தலைமையில் 1895 இல் ராணுவ பொறியாளர்கள் 75 லட்சம் திட்ட மதிப்பிலான , இந்த அணையை காட்டும் பணியினை தொடங்கினர். பின்னர் எத்ரிபாராத வெள்ளத்தினால் அணைபாதி கட்டிய நிலையில் அடித்து செல்லப்பட்டது. மீண்டும் நிதி ஒதுக்க அரசாங்கம் மறுத்து விட்டது.

நான் நேசிக்கும் தென்னக மக்கள் வறட்சியில் வாட கூடாது என்றும். என் கனவு திட்டம் கைவிட்டு போக கூடாது என்றும் நினைத்து , என்னுடைய சொந்த சொத்துக்களை விற்று அந்த அணையினை கட்டி முடித்தேன். நான் கட்டிய அணை என்றும் உடையாது.

அது கடல் மட்டத்திலிருந்து மிக குறைந்த உயரத்தில் இருக்கிறது. அந்த அணை உடைந்தாலும் அணையினை சுற்றி வாழும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்க படமாட்டார்கள். ஏனென்றால் அணியினை சுற்றி வாழும் மக்கள் கடல் மட்டத்திலிருந்து சற்றேரத்தாள 2000 ம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் வாழ்கிறார்கள் .

கேரள அரசுக்கு மின்சார தேவை உள்ளது. அதை நிறைவேற்றத்தான் இடுக்கி அணையினை கட்டினீர்கள். இதன் கொள்ளளவு மிக அதிகம். அதில் நீர் இதுவரை நிரமியதே இல்லை. மின்சார தேவைக்காக கட்டிய அணையில் மின்சாரம் எடுக்க முடியவில்லை. இடுக்கி அணியில் நீர் நிரப்புவதற்காக முல்லை பெரியாறு அணியினை உடைக்க வேண்டும். ஆக நான் கட்டிய அணை உங்களின் தேவைக்கு குறுக்கே நிற்கிறது. 5 மாவட்ட மக்களின் விவசாயத் தேவையை விட , 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை விட உங்கள் இடுக்கிஅணையில் மின்சாரம் உற்பத்தி செய்வது முக்கியமாக போய்விட்டது.

இறுதியாய் ஒன்றை கூறுகிறேன் . அதை பிரசுரத்தின் மூலம் நீயே கேரள மக்களுக்கு கூறிவிடு மனோரமா ! . மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீர் தருவது வகை நதிமட்டும் தான் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் போல. வைகை நதியின் பகுதி பங்கு நீர் முல்லை பெரியாரின் நீர்தான். இந்த உண்மை தெரிந்தால் அவர்களும் என்னை மதிக்க ஆரமித்துவிடுவார்கள். தேனி மாவட்ட மக்கள் என்னை கடவுளாக கருதுகிறார்கள். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் மக்கள் எனக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். தப்பித்தவறி முல்லை பெரியாறு அணையை இடிக்க திட்டம் தீட்டினால் இந்தியாவில் கேரளா என்கிற மாநிலம் இருந்தது என்றுதான் படிப்பார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது அணையின் சட்டர் கம்பிகளை சேதப்படுத்தியதற்கே , காய்கறி , பால், மாடு , அரிசி , போன்ற பொருட்கள் நிறுத்த பட்டுவிட்டது என்பதை உன் கேரள அரசியல் வாதிகளின் மனதில் நிலை நிறுத்த செய். இல்லையென்றால் இன்று (07 -12 -11 ) தேனி பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டி கூறிய வாசகம் தான் உனக்கு பொருத்தமானதாக இருக்கும்
தமிழர்களின் காணிக்கையில் வாழ்கிற கேரள அரசே "அணியினை தொட்ட நீ கெட்ட "

என்ன செய்வார்கள் என்று கருதுகிறாயா ?
தமிழக எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ( தேக்கடி பகுதி )
தோன்றி கிட்டத்தட்ட 15 கல் தொலைவு வரை தமிழக எல்லையில் ஒடி பின்புதான் கேரள மாநில எல்லைக்குள் நுழைகிறது. ஆக கேரள எல்லைக்குள் நுழையவிடாமல் அணைகட்ட தமிழகத்தால் முடியும். என்பதை மறந்துவிடாதே !

இப்படிக்கு
கர்னால் ஜான்பென்னிகுயிக்

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 5:32 pm

நான் முதலில் இவர்களை பற்றி எல்லாம் அறிந்து கொண்டு உங்கள் மடலை படிக்கிறேன் நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 5:37 pm

ரேவதி wrote:நான் முதலில் இவர்களை பற்றி எல்லாம் அறிந்து கொண்டு உங்கள் மடலை படிக்கிறேன் நன்றி நன்றி

தாங்கள் கூறிவது polave அவர்களை அறிந்துகொண்டு பிறகு படியுங்கள் நன்றி.

மேலும் ,,,, நான் புரட்சி , ஆளுங்க இவர்களை போன்ற இன்னும் சில நண்பர்களை இங்கு எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இந்த பிரச்சனியை பற்றி மேலும் பல வரலாற்று தகவல்களை அவர்கள் தருவதோடு எனது குறையினையும் சுட்டிக்காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

[You must be registered and logged in to see this image.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Dec 07, 2011 6:13 pm

இந்த காணொளிகளை பார்க்கவும் :

[youtube][/youtube]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 6:18 pm

நன்றி அனந்தம் ஜீவ்னி அவர்களே !

தயவு செய்து ,தாங்கள் கூறவிரும்பும் கருத்தினை இங்கே . நன்றி !

[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 6:26 pm

தேவையான பதிவு அய்யா .. உங்கள் பதிவில் குறை இல்லை மேலும்

மதுரை மாவட்டத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சங்களின் பாதிப்பால் மக்கள் மடிந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் சேதுபதி மன்னர் வைகையாற்றில் வருகின்ற வெள்ளத்தை தடுத்து நீர்ப்பாசன திட்டங்களை நிறுவிட திவான் முத்து இருளப்ப பிள்ளையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் நிதி வசதியில்லாமல் திட்டம் நிறைவேறவில்லை.

Periyar dam
1808 ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் கால்டுவெல் இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்து தண்ணீரை திரும்ப வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார், அதுவும் நடைபெறவில்லை. 1850 ஆம் ஆண்டு சின்ன முல்லை ஆற்றில் அணைகட்டும் பணிகள் துவக்கப்பட்டன. கொடிய நோய் பரவியதால் அப்பணியில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேஜர் ரைவீஸ், மேஜர் பெயின் இப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர். 1867ல் 162அடி உயரத்திற்கு பெரியாற்றில் ரைவிஸ் முயற்சியால் காடு மலைகளை வெட்டி மண் அணை கட்டப்பட்டது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.17.49 லட்சம் ஆகும். அதன் பின்பு லெப்டினட் பென்னிகுயிக் பொறுப்பேற்றார். பென்னிகுயிக் தன்னுடைய சொந்த செலவில் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயன்படும் முறையில் அணைகட்ட உத்தேசித்தார். சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் அணை பணிகள் கற்களாலும், செங்கற் கொடியாலும் உருவாக்கப்பட்ட இந்த அணையை பாராட்டி அவர் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்தது அப்போதைய ஆங்கில அரசாங்கம்.

கிட்டதட்ட நூறாண்டுக்கும் மேலாக பெரியாறு திட்டம் எவ்வித பிரச்சனையில்லாமல் இருந்த போது 1963ல் இந்த அணை பலவீனமாக உள்ளது என்று “மலையாள மனோரமா” பத்திரிகை எழுத கேரள அரசு இதனை பிரச்சனையாக்கியது. மத்திய அரசு குழு பார்வையிட்டு, தமிழக - கேரள அதிகாரிகள் பேசி அணை வலுவாக உள்ளது என அறிவித்தது.

1978ஆம் ஆண்டு திரும்பவும் கேரள அரசாங்கம் முரண்டு பிடித்தது. 152 அடியிலிருந்து 145 அடி வரை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரளம் உத்தரவு கேட்டதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. 1979ஆம் ஆண்டு மத்திய நீர்வள கவுன்சில் தலைவர் டாக்டர் கே.சி.தாமஸ் அணை நல்ல முறையில் இருப்பதாக அறிவித்தார். மேலும் அவர் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தல், அணையின் எடையை அதிகரிக்க மற்றும் அதற்கான மேற்புறத்தில் வலு சேர்க்கவும், அணையின் பின் பகுதியில் காங்கிரிட் தடுப்பை அமைத்தலும் என்ற யோசனையை தெரிவித்தார். தமிழக அரசும் தனது செலவிலேயே இந்த யோசனைகளை ஏற்றுக் கொண்டு கட்டுமான பணிகளை செய்தது. கேரளாவின் பல தடங்கல்களையும் தாண்டி பணிகள் நடைபெற்றன. அணையில் 152 அடி அளவுக்கு நீர் தேக்க அணை பலப்படுத்தப்பட்டது. 9அடி அணை சுவரை உயர்த்தி நீர் தேக்க அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது.

அணையில் இயற்கை சேதாரங்கள் பூகம்பம், நில அதிர்வு குறிதது அறிய வேண்டிய வசதிகளும் செய்யப்பட்டன. ரூ 12.5 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு செலவு செய்து அணையை நல்ல நிலையில் மராமத்து செய்தும் கேரள அரசு இறங்கிவரவில்லை. பெரியாறு அணையால் கேரளாவில் ஐந்துச் மாவட்டங்களுக்கு பாதிப்புள்ளது என்ற தேவையற்ற குற்றச்சாட்டு எழுப்பி, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை 27-2-006 அன்று வழங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 6 அடி உயர்த்தினால், கூடுதலாகக் கிடைக்கும் தண்ணீர் 1.55 டி.எம்.சி., 100 ஆண்டு காலமாக அணையில் சேர்ந்த சகதியும் வண்டலும் 15 அடி படிமானம் உள்ளது. அது 0.86 டிஎம்சி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. நீர் மட்டத்தை 6 அடியாகக் கூட்டுவதால் கிடைக்கும் 1.55 டிஎம்சி நீரில் சகதியையும் வண்டலையும் கழித்தால் 0.69 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். இந்த அளவு தண்ணீரைக்கூட தர கேரள அரசுக்கு மனமில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல் செய்யாமல் இருப்பதற்காக, சட்டபேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006 என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது கேரள அரசு. இதன்மூலம் மாநில அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை அதிகரிக்க இயலாது.

தனக்கு சாதகமாக இல்லை என்பதால் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி கேரள அரசு செயல்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவது இந்த நடவடிக்கை. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசிய பின்பு அளித்த செய்தியாளர் பேட்டியில் முல்லை பெரியாறு பிரச்சனையில் இரு மாநில அமைச்சர்கள், மட்டத்திலான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

இங்கு அச்சுதானந்தனைப் பற்றிய செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. முல்லை பெரியாறு மற்றும் தமிழக நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு எதிரான மிகவும் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருபவர் அச்சுதானந்தன் ஆவார். இதே அச்சுதானந்தன் முன்பு கம்பி, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் முல்லை பெரியாறு அணையைத் தாக்கச் சென்றவர் ஆவார்.

மேற்கண்ட அச்சுதானந்தன் இன்று கேரள மாநில முதல்வராக இருக்கிறார். ஆகவே இந்தப் பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஏற்கெனவே பலமுறை பேச்சு வார்த்தை பல மட்டங்களில் நடத்தியும் தோல்வி கண்டு தான் பிரச்சனை நீதிமன்றம் சென்று ஓரளவு நியாயம் கிட்டியுள்ளது. ஆகவே மீண்டும் பேச்சுவார்த்தை என்று கூறுவது முல்லை பெரியாறு பாசன விவசாயிகளுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்

ஆகவே தமிழக அரசு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப் படுத்த மத்திய அரசினை வலியுறுத்தி தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்.

தமிழகக் கிராமங்களில் தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருட்கள் தான் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியார் அணையிலிருந்து தண்ணீர்விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட தமிழக விவசாயிக்குக் கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன். பெறுவதை எல்லாம் மட்டும் பெற்றுக் கொண்டு கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று அங்கங்கே அணைகள் கேரள அரசியல்வாதிகள் கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுகள். இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியார் அணை, பவானி என்று சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தான் தமிழனின் குணம். பாவம் தமிழன்.

08-07-1980 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் திரு.பழ நெடுமாறன் அவர்கள் இந்தப் பிரச்சனையை முதன்முதலாக எழுப்பினார். நீர்மட்டம் 136 அடியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 13.5 டிஎம்சி தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன் 80,000 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை என்பதையும் விளக்கினார். அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.

கேரள அமைச்சரான பாலகிருஷ்ணபிள்ளை மாதந்தோறும் அணைக்கு வந்து பணிகளில் குறை சொல்லிவிட்டு இடையூறும் செய்வார். வருகைக் குறிப்பேட்டிலும் எழுதுவார். ஆனால் தமிழக அமைச்சரோ வருவதேயில்லை. பாலகிருஷ்ணபிள்ளை செய்வதைச் சொல்லி தமிழக அலுவலர்கள் அமைச்சரை அணைக்கு அழைத்துக் சென்றனர். அமைச்சரோ கீழ்க்கண்டவாறு எழுதினார். “பெரியாறு அணையைப் பார்த்தேன் அதன் இயற்கை எழிலில் மயங்கினேன்” இதற்குப் பின்னால் அமைச்சர்களை அழைக்கும் எண்ணத்தையே அனைவரும் கைவிட்டனர். பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பாலகிருஷ்ணபிள்ளை பதவி விலகிச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.

தீர்ப்பும் விளைவுகளும்

உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை நீதிபதிகள் சபர்வால் தக்கர் மற்றும் பாலசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் 27-02-2006 தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பிலிருந்து சில பகுதிகள்:

நில நடுக்கம் உட்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.

மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்ய கேரள அரசு சம்மதிக்கவில்லை.

“அணையின் எல்லாப்பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அணையின் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.”

“மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனைகளின்படி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பைத்தரும் என்று நம்புகிறோம்.”

ஆனால் கேரள அரசு சட்டமன்றத்தில் இதனைத் தடுக்க அவசரச் சட்டம் போடப்போவதாகக் கூறியுள்ளது. 1886 மற்றும் 1970 ஒப்பந்தங்களின்படி அணையும் அதனைச் சார்ந்த இடங்களும் தமிழ்நாடு குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த 8100 ஏக்கர் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் தமிழகத்திற்குச் சொந்தம். கேரள சட்டமன்றம் இதனைத் தடுக்க முடியாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அணையின் கதவுகளை (Shutters) இறக்கிவிடுவதும் அணைப்பகுதிக்கு யார்வந்தாலும் அனுமதிக்கக்கூடாது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணைக்கு அரசு அலுவலர்கள் உட்பட யாரும் நுழைய வேண்டுமென்றால் அவர்களது பெயர் அணைக்குச் செல்வதற்குக் காரணம் என்பதை பல நாட்களுக்கு முன்னால் கொடுக்க வேண்டும். கேரள அரசு அனுமதி அளித்தால்தான் போகலாம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 6:34 pm

இங்கு அச்சுதானந்தனைப் பற்றிய செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. முல்லை பெரியாறு மற்றும் தமிழக நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு எதிரான மிகவும் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருபவர் அச்சுதானந்தன் ஆவார். இதே அச்சுதானந்தன் முன்பு கம்பி, கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் முல்லை பெரியாறு அணையைத் தாக்கச் சென்றவர் ஆவார்.........................

ஆனால் கேரள அரசு சட்டமன்றத்தில் இதனைத் தடுக்க அவசரச் சட்டம் போடப்போவதாகக் கூறியுள்ளது. 1886 மற்றும் 1970 ஒப்பந்தங்களின்படி அணையும் அதனைச் சார்ந்த இடங்களும் தமிழ்நாடு குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த 8100 ஏக்கர் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் தமிழகத்திற்குச் சொந்தம். கேரள சட்டமன்றம் இதனைத் தடுக்க முடியாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அணையின் கதவுகளை (Shutters) இறக்கிவிடுவதும் அணைப்பகுதிக்கு யார்வந்தாலும் அனுமதிக்கக்கூடாது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணைக்கு அரசு அலுவலர்கள் உட்பட யாரும் நுழைய வேண்டுமென்றால் அவர்களது பெயர் அணைக்குச் செல்வதற்குக் காரணம் என்பதை பல நாட்களுக்கு முன்னால் கொடுக்க வேண்டும். கேரள அரசு அனுமதி அளித்தால்தான் போகலாம்.

நன்றி புரட்சி !

அச்சுதந்தான் மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழக வலதுசாரிகள் முறைவிடவில்லையா ?

தமிழக அமைச்சர்கள் என் இப்படி இருக்கிறார்கள் ?

அணை இன்றும் நாம் பராமரிப்பில் தானே இருக்கிறது. அளவிற்கு அதிகமான காவல் துறையினரை அணையில் நிறுத்திவைத்து போராட்ட காரர்களை சுட்டுதல்ல உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தமிழகத்திற்கு இருக்கிறதா ? தெரியபடுத்துங்கள் நன்றி புரட்சி ! பல அறிய தகவல்கள் !

[You must be registered and logged in to see this image.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Dec 07, 2011 6:38 pm

ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சுயலாபம் கருதி தூண்டிவிடும் போக்கால் தான் இவ்வளவு பிரச்சனையும் .இருதரப்பிலுமே அப்பாவி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் தூண்டலால் சுற்று வட்டார பகுதி மக்கள் உண்மையிலே அணை உடைந்து விடுமோ என்ற பீதிக்குள்ளாகி விட்டனர் .
இது பற்றி வினவு இணையதளத்தில் வெளியாகி இருக்கும் கட்டுரையோடு நான் பெருமளவு உடன்படுகிறேன் .அதிலிருந்து சி ல பகுதிகளை தருகிறேன் .சமகால் பிரச்சனை தொடர்பாக ,வித்தியாசமான வெளிப்பாட்டில் ,எளிமையாக புரியும்படி .பதிவிட்ட அய்யம் பெருமாள் பாராட்டுக்குரியவர்

.

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.

இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும். ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?

அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன

சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.

கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.

இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.

ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?

உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.

கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.

சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 6:50 pm

அனந்தம் ஜீவ்னி wrote:

பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.

கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.

உண்மைதான் அனந்தம் ஜீவ்னி அவர்களே ! தேசிய கட்சிகளின் இரட்டை நிலைதான் இவ்வ்லவு பெரிய பிரச்சனைக்கும் காரணம்.
மிகப்பெரிய கட்டுரைக்கும் ,, பாராட்டுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !

[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 8:03 pm

திரு அய்யம் பெருமாள் அவர்களுக்கு முதற்க்கண் என் நன்றி. அவருக்குத் துணையாக கருத்துக்களை பதித்த அனந்தம் மற்றும் புரட்சி அவர்களுக்கும் நன்றி. உங்கள் மூவருக்கும் விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக