ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது. 5 5 26

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Go down

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

அன்புடன்......

Last edited by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:49 am; edited 4 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Fri Jan 27, 2012 8:45 pm

பிஜிராமன் wrote:
உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்

மிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,

நான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

ஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி

நன்றி ராமன்,

91 ஆம் பாடலில் வேறு ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை ராமன். இணையதளத்தில் தேடியும் இதற்கு இங்கு பதிந்த தகவலைத் தாண்டிய விவரங்கள் எனக்கு கிட்டவில்லை.

இந்த பாடலில் உள்ள வார்த்தைகளை வைத்து பதவுரையை மட்டும் பார்க்கும் போது வரும் பொருள்

காட்டில் உள்ள மரங்களில் நம்மை காட்டிலும் மூத்தவர் இருப்பதால் அங்கு உடலில் போர்வை போர்த்தி இருப்பதும், கழுத்தை தூக்கி கர்வத்துடன் இருப்பதும், இருகரங்களையும் சேர்த்து இருப்பதும் தீராத பழியாகும்.

இந்த வரிகளில் நான் புரிந்து கொண்ட பொருள்

நாம் சமுதாயத்தில் அனைவரின் முன்னிலையில் நல்லவனாக இருக்க விரும்புகிறோம். இதன் பொருட்டு நாம் சாஸ்திரம், ஆசாரம், ஒழுக்கம் என்று பலதும் செய்கிறோம், சரி என்று கூறுகிறோம். ஆனால் யாரும் இல்லாத, நம்மை யாரும் கண்டு கொள்ளாத போது ஒரு சில தவறுகளை / ஒழுக்கக் கேடுகளை செய்யத் துணிகிறோம். இப்படி செய்வதும் தவறு என்று இந்த பாடல் கூறுகிறது என்று நினைக்கிறேன்.

யாரும் இல்லாத காட்டிலும் நம்மை விட மூத்தவர் மரமாக , (இந்து மதக் கருத்துகளில் மக்களுக்கு நல்லது நினைக்கும், சாகாவரம் பெற்ற யோகிகள் மூலிகை மரங்களிலும், நன் மரங்களிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.) இருப்பதால் அங்கும் அலட்சியமாக மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்று பொருள் கொள்கிறேன்.

இது சரியா என்று அறுதியிட்டு கூற போதிய ஆதாரம் இல்லை.

யாருக்கேனும் இந்தப் பாடலில் வேறு பொருள் இருப்பதாக உணர்ந்தால் பதிவிடவும்.

பாடலை உணர்ந்து படிக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்,

நன்றி.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 9:08 pm

சதாசிவம் wrote:

மிக்க நன்றிகள் ஐயா...........எனக்கு இப்பொழுதே புரிந்து விட்டது ஐயா....தங்களின் சிரத்தைக்கு தலைவணங்குகிறேன்.........

யாரும் இல்லாத காட்டிலும், சுய கட்டுப்பாடோடும், திமிறின்றி அடக்கத்துடன் நடந்து கொள்வது, என்றும் நீங்கா புகழை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஐயா......

மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 9:42 am

பாடல் 95 பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)

தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.

பொருள் விளக்கம்

நம்முடைய உடம்பு, கட்டிய மனைவி, நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் அடைக்கலமாக கொடுத்த பொருள், ஆபத்து காலத்தில் நம் உயிரை காக்க உதவும் என்று வைத்த பொருள் ஆகிய நான்கினையும் பொன் போல் பாவித்து காக்க வேண்டும். காக்கவில்லையெனில் நீங்காத துன்பத்தை தரும்.

பாடல் 96 எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)

நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்

பொருள் விளக்கம்

மழைக்காலத்திருக்கு தேவையான உணவை கோடை காலத்தில் சோர்வில்லாமல் சேர்த்து வைக்கும் எறும்பு, குளிர் ,வெயில், மழையில் தங்கள் குஞ்சுகளைக் காக்க தேவைக்கு தகுந்து கூடு கட்டி வாழும் தூக்கனாங்குருவி, ஒரு உணவு கிடைத்தாலும் அதை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் காக்கை ஆகியவைப் போல் சோர்வில்லாமல், தேவையை நிறைவு செய்து, உற்றாருடன் உறவாடி தன் கடமை உணர்ந்து இல்வாழ்க்கை நடத்துபரின் வாழ்க்கை எல்லா வழியிலும் சிறப்புறும்.

பாடல் 97 சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை

பொருள் விளக்கம்

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய பெரியவர் முன் ஒரு விஷயத்தை கூறும் போது அவரை வணங்கி, துடுக்கான வார்த்தை பேசாமல் வாய் பொத்தி பேச வேண்டும் , அப்படி கூறும் வார்த்தையில் தவறு நேரா வண்ணம் பார்த்து பார்த்து பேச வேண்டும்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by வாத்தியார் on Sat Jan 28, 2012 9:55 am

பாடல் 95:
உண்மையிலேயே இப்படி ஒரு நேர்மையை காண்பது இந்த காலத்தில் மிக அரிது. அருமையான விளக்கம் அண்ணா!

பாடல் 96:
இதுவும் நன்று! நமக்கு மிஞ்சியதையாவது தானதர்மம் செய்து வாழலாம். புண்ணியமாவது கிடைக்கும்.

பாடல் 97:
,இந்த காலத்துல இது தான் குறைவு. எல்லாரும் தம்மை கதாநாயகன் என நினைத்துக்கொண்டு வாழ்வது கற்றவர்க்கும் மற்றவர்கும் மரியாதை தர மறுப்பது தா னே இன்றைய நிலை.

இன்று தான் நான் இந்த திரியை காண்கிறேன் சதாசிவம் மிகவும் அருமையான விளக்கம். பாராட்டுகள்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Sat Jan 28, 2012 9:58 am

மிக்க நன்றிகள் ஐயா...........இன்னும்.....மூன்றே மூன்று தான்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:34 am

பாடல் 98 புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

சூதர் கழகம், அரவர் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும்

பொருள் விளக்கம்

சூதாடுவதற்கு கூடும் சங்கம், இறைத்தன்மை உள்ளோர் செல்லக்கூடாது என்று நினைக்கும் பாம்புகள் போல் நஞ்சுடன் நம்மை கட்டித் தழுவும் பெண்கள் உள்ள இடம், பேதைகள் அல்லாதவர்கள் அதாவது அறிவாளிகள் புகக்கூடாது என்று நினைக்கும் மூடர்கள் கூடும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடாது. செல்ல நினைத்தால் தீராத துன்பம் விளையும்

பாடல் 99 அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -
நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்

பொருள் விளக்கம்

ஒருவர் பெண்ணுடன் மகிழுற்று, ஆனந்தமாக சத்தம் போடும் இருக்கும் இடத்தையும், உணவு தயாராகும் இடத்தையும், பெண்களின் அந்தரங்க அறைகளையும் பார்க்கக்கூடாது, பார்க்க நேர்ந்தால் பார்த்தவைகளை வெளியில் சொல்லக்கூடாது, அந்த இடங்களுக்கு உள்ளே செல்லக்கூடாது. இவையே குற்றம் இல்லாமல் கற்று உணர்ந்தவர் செய்யும் செயலாகும்.

பாடல் 100 ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)

அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார்.

பொருள் விளக்கம்

ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் அடுத்த நாட்டின் இருந்து வந்தவர்கள், மிகவும் வறுமை நிலை எய்தி உணவுக்கு கஷ்டபடுபவன், நன்கு வயது முதிர்ந்த தள்ளாத நிலையில் இருக்கும் பெரியவர், குழந்தைகள், உயிரை இழந்தவன், உயிர் அச்சத்தில் இருப்பவன், உணவு உண்பவன், அரசாங்க வேளையில் தலையில் சுமந்து இருப்பவர்கள் (தூதுவர்கள், ஒற்றர்கள் ), திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் ஆகிய ஒன்பது பேருக்கு மேற் கூறிய அனைத்து ஆசாரங்களும் பொருந்தாது. இவர்கள் ஆசாரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.

பி.கு
ஒரு நாட்டின் விவரம் தெரியாதவர் ஒரு சில தவறு செய்யினும் அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் வறுமை நிலையில் உள்ளவன் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது. ஆதலால் அவனுக்கு விலக்கு, அவனால் இயன்றவற்றை செய்ய வேண்டும். உயிரை இழந்து பிணமாக கிடப்பவன் ஒரு ஆசாரத்தையும் செய்ய முடியாது. ஒருவனால் அச்சப்படுத்தப்பட்டு உயிர் பயத்துடன் இருக்கும் ஒருவனால் ஆசாரம் செய்ய இயலாது. விவரம் அறியாத சிறுவர்கள், தள்ளாத வயதில் இருக்கும் முதியோர் ஆகியவர்களால் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது, உணவு உண்ணுபவன் அரசனே வந்தாலும் எழுந்து இருக்க வேண்டிய அவசியமில்லை, உணவே முதல் மரியாதைக்குரியது. தூது செல்பவர்கள், ரகசியங்களை உளவு பார்ப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைப் பொருத்தும், இடத்துக்கு தகுந்தது போல் நடக்க வேண்டும், சில நேரங்களில் போகாத இடங்களிலும் புக வேண்டும். மணமக்கள் கோலத்தில் இருப்பவர்கள் அரசனே வந்தாலும் அவர் முன் அமர்ந்து இருக்கலாம். இப்படி அவர் அவர் தன்னைக்கு தகுந்து ஆசாரங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

மற்றவர்கள் இயன்ற ஆசாரங்களை கடைபிடித்து வாழ வேண்டும்.

ஆசாரக் கோவை இனிதே நிறைவுற்றது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:37 am

நன்றி அசுரன்
நன்றி ராமன்
நன்றி

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Sat Jan 28, 2012 10:44 am

மிகவும் அற்புதமாக நிறைவு செய்துவிட்டீர்கள் ஐயா...

ஆசாரக்கோவையை எங்களுக்கு அறிமுகப் படுத்தி அதன் நூறு செய்யுள்களையும், சிறந்த முறையில் விளக்கம் அளித்து, எழுந்த சந்தேகங்களுக்கு, சிரத்தை எடுத்து, பதில் கூறி தெளிவு படுத்தி, தாங்கள் ஆற்றிய சேவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதும், பாராட்டுதற்குரியதாகவும் உள்ளது ஐயா.

மிக்க நன்றிகள்......விரைவில்.........அடுத்த நல்ல தமிழ் நூலிற்கான விளக்கத்துடன் தங்களை எதிர்பார்க்கிறேன் ஐயா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:48 am

மூதூரை, நல்வழியைத் தொடர்ந்து அழகு ஆசாரங்களை எடுத்து உரைக்கும் இந்த அறிய ஆசாரக் கோவையை உங்களுடன் பகிர்ந்ததில் இன்புறுகிறேன்.

பிழை பொறுத்து, ஊக்கம் அளித்த அனைத்து ஈகரை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி ,

இந்த திரியில் சிறப்பு கவனம் செலுத்தி பின்னூட்டம் இட்டு எனக்கு உற்சாகம் அளித்த ராமன், தயாளன் ஐயா, ஆதிரா, பாலா சார், மாணிக்கம் நடேசன் கேசவன், பிரபு, கிட்சா , சாந்தி, ரமேஷ், செல்ல கணேஷ் நேரு ஆகியோருக்கும் என் நன்றி.

:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum