|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
துளிர்க்கும் நினைவுகள் ...
Page 1 of 1 • Share •
துளிர்க்கும் நினைவுகள் ...
பூப்பூவாய் மலர்ந்திருக்கும்
உன் நினைவுகளில்தான்
என் பொழுது புலர்கிறது!
சிறிது சிறிதாய் மரிக்கவைக்கும்
உன் செய்கையால்தான்
என் அழுகை மலர்கிறது!
என்னுள்
குவிந்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
சருகாய் இருந்தால்
தீ மூட்டிவிடுவேன்
அது சங்காய் அல்லவா ஜொலிக்கிறது?...
எத்தனை நாட்களை புரட்டினாலும்
உன் மனதின் பக்கங்கள்
ஒரே மாதிரியாய் இருக்கிறதே
அது ஏன்?
மௌனத்திரைக்குள்
வார்த்தைகள் ஒளிந்துக் கொள்ளலாம்
ஆனால்
மனத்திரையில் ஒளிரும் என் முகம்
உன்னை உறுத்தாதா?...
பார்வை விழுதுகளை
பரப்பி தேடுகிறேன்
நீயோ
பள்ளத்தாக்கில் அடைக்கலம் நாடுகிறாய்
தீபத்தின் திரியை தூண்டிவிட்டு
எரியும்போது
எங்கே போனாய்?
உன் மனம் நடத்தும்
மௌன நாடகத்திற்காக
விழிகள் கூடவா
வேடமிட வேண்டும்?
போலித்திரையில்
நீ
புதைந்துக் கொண்டபோது
என்னை
அணைத்துக் கொண்டது
அமாவாசை அல்லவா?
அழுதழுது சோர்ந்த
என் விழிகளுக்கு
ஆறுதல் அளிக்கத்தான்-உன்
ஆதரவை நாடினேன்
நீயோ
அதிகரித்து விட்டாயே...!
கண்ணீரை
துடைப்பாய் என்றுதான்
கைகுலுக்கினேன்
நீயோ
புன்னைகையை
துடைத்து விட்டாயே...!
மீளாதுக்கத்தில்
விரலிடுக்கில் நிமிர்ந்து நின்று
'நிக்கோடின்' மரங்கள்
நிமிடந்தோறும் தீக்குளிக்கின்றன
உதிரும் சாம்பல் பூக்கள்தான்
வெதும்பிய மனதின்
வேதனைச் சுவடுகள்...
என் துன்பம் உனக்கு
இன்பம் என்றால்
இதுவே தொடரட்டும்!
இருளின் சுடர்கள்
என்மேல் படரட்டும்!
உன் நினைவுகளில்தான்
என் பொழுது புலர்கிறது!
சிறிது சிறிதாய் மரிக்கவைக்கும்
உன் செய்கையால்தான்
என் அழுகை மலர்கிறது!
என்னுள்
குவிந்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
சருகாய் இருந்தால்
தீ மூட்டிவிடுவேன்
அது சங்காய் அல்லவா ஜொலிக்கிறது?...
எத்தனை நாட்களை புரட்டினாலும்
உன் மனதின் பக்கங்கள்
ஒரே மாதிரியாய் இருக்கிறதே
அது ஏன்?
மௌனத்திரைக்குள்
வார்த்தைகள் ஒளிந்துக் கொள்ளலாம்
ஆனால்
மனத்திரையில் ஒளிரும் என் முகம்
உன்னை உறுத்தாதா?...
பார்வை விழுதுகளை
பரப்பி தேடுகிறேன்
நீயோ
பள்ளத்தாக்கில் அடைக்கலம் நாடுகிறாய்
தீபத்தின் திரியை தூண்டிவிட்டு
எரியும்போது
எங்கே போனாய்?
உன் மனம் நடத்தும்
மௌன நாடகத்திற்காக
விழிகள் கூடவா
வேடமிட வேண்டும்?
போலித்திரையில்
நீ
புதைந்துக் கொண்டபோது
என்னை
அணைத்துக் கொண்டது
அமாவாசை அல்லவா?
அழுதழுது சோர்ந்த
என் விழிகளுக்கு
ஆறுதல் அளிக்கத்தான்-உன்
ஆதரவை நாடினேன்
நீயோ
அதிகரித்து விட்டாயே...!
கண்ணீரை
துடைப்பாய் என்றுதான்
கைகுலுக்கினேன்
நீயோ
புன்னைகையை
துடைத்து விட்டாயே...!
மீளாதுக்கத்தில்
விரலிடுக்கில் நிமிர்ந்து நின்று
'நிக்கோடின்' மரங்கள்
நிமிடந்தோறும் தீக்குளிக்கின்றன
உதிரும் சாம்பல் பூக்கள்தான்
வெதும்பிய மனதின்
வேதனைச் சுவடுகள்...
என் துன்பம் உனக்கு
இன்பம் என்றால்
இதுவே தொடரட்டும்!
இருளின் சுடர்கள்
என்மேல் படரட்டும்!
Last edited by anandham jiivni on Sun Nov 13, 2011 10:00 pm; edited 1 time in total

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Re: துளிர்க்கும் நினைவுகள் ...
[quote]மௌனத்திரைக்குள்
வார்த்தைகள் ஒளிந்துக் கொள்ளலாம்
ஆனால்
மனத்திரையில் ஒளிரும் என் முகம்
உன்னை உறுத்தாதா?...
உண்மையான அன்பை என்றும் மறக்க இயலாது
வாழ்த்துக்கள் 
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: துளிர்க்கும் நினைவுகள் ...
இளமாறன் wrote:மௌனத்திரைக்குள்
வார்த்தைகள் ஒளிந்துக் கொள்ளலாம்
ஆனால்
மனத்திரையில் ஒளிரும் என் முகம்
உன்னை உறுத்தாதா?...
உண்மையான அன்பை என்றும் மறக்க இயலாது
![]()
![]()
வாழ்த்துக்கள்
நன்றிகள் மிகவும்


அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










