|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!
Page 1 of 1 • Share •
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!
இப்பொழுதெல்லாம், பருவ வயதுப் பெண்கள் `பாய்ஃபிரண்ட்’ உடன் சுற்றித்
திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த
அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் ஃபிரண்ட் இல்லையென்று
வருத்தப்படும் பெண்களும் உண்டு. பாய்ஃபிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற
நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது.இளம்பெண்கள் இப்படி நினைத்துக்
கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல்
இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து
வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. அது உன்மையும் கூட.
உண்மையில் பாய்ஃபிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா?பள்ளி –
கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப்
பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும்
சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி
இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய
சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ்
பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது
பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும்
வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும்
விடுகிறார்கள்.குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள்
கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.
கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும்
அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.கல்லூரிக்குள் நுழையும்போது
சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி
வெளியூர்களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது.
இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று
தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு
இன்னும் சாதகமாகி விடுகிறது.
வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே
பழகுகிறார்கள்.நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து
அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது
மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி
செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும்
பழக்கம் ஏற்படுகிறது.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும்
வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு
கிடைக்கிறது.
சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன்
தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக`
மாறி விடுகிறான்.`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை
நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல
நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச்
சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி
ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.கல்லூரி வட்டத்தை
தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை
சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது.
அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும்
நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும்
ஏமாந்து விடுகிறார்கள்.நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில்,
பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம்
போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு
பழக்கம் முன்னேறுகிறது.
இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும்
தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப்
பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்ஃபிரண்ட்’ வேறு
கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்’ என்ற
எண்ணமே பெண்களுக்கு வருகிறது. இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல்
சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால்
என்னாகும்?
அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும்
தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.எவ்விதமான
பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்ஃபிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு
பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே
திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள்,
திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக
பேசி தெரிந்து கொள்கிறார்கள்.
பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி
இயல்பாகவே தன் பாய்ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன்
பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம்
வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது
பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்ஃபிரண்ட் பற்றிய
பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம்
கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன்.
இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட
சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான்
ஏராளம்.குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப்
புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய்ஃபிரண்டுகளும் இருக்கவே
செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும்
பெருகி வருகிறார்கள்.
வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன்
இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான்.எனவே ஆண்-பெண் நட்பு என்பது
நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த
எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும்
சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
http://www.enayamthahir.com/2011/11/boy-friend.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!
எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல கெட்ட பிறகு தான் அழுது புலம்புகிறார்கள்.
Re: பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!
ராஜா wrote:எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல கெட்ட பிறகு தான் அழுது புலம்புகிறார்கள்.

செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்

- பதிவுகள்: 141
வசிப்பிடம்: கன்யாகுமாரி
சேர்ந்தது: 24/10/2011
மதிப்பீடு: 23
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










