ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பிளாஸ்டிக் இராணிகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பிளாஸ்டிக் இராணிகள்

Post by Aathira on Tue Nov 15, 2011 11:20 pm

First topic message reminder :


நினைத்தவுடன் கைகளை வீசிக்கொண்டு கடைக்குப் போவது
வேண்டிய பொருள்களை வாங்குவது வாங்கி, கலர் கலர் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது இதெல்லாம் இனிமேல் நடக்காது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஒன்று பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஆணை பிறப்பித்துள்ளது.என்ன காரணம் என்று கேட்டால் அப்போதுதான் அடுத்த முறை வீட்டில் இருந்து வரும்போதே துணிப்பையோ கூடையோ ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். பிளாஸ்டிக் பை அரசிகளின் ஆட்சி குறையும் என்ற நோக்கத்தில் என்பதாம். இந்த நடவடிக்கைக்கு அம்மாவுக்கு பெரிய ஜே.

இப்படி ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மறுபுறமோ பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சக்கைப் போடு போட்டுக்கொண்டு
உள்ளது இவர்களால என்றால் மிகையில்லை.

பிரேஸில் நாடுதான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நம்பர் ஒன். அதிக எண்ணிக்கையில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பிரேஸில்தான் முதலிடம். பிரேசிலில் பிப்ரவரி முதல் வாரம் நடக்கும் ஒரு திருவிழா, உலக பிரசித்தம். அரை குறை ஆடையுடன் கவர்ச்சிப் பெண்கள்சம்பா என்னும் அந்நாட்டு நடனம் ஆடி வருவதை பார்க்க கூட்டம் குவியும். இந்நடனம் ஆடுவதற்காக பிரேசில் மாடல் அழகி ஏஞ்சலா பிஸ்மார்சி தனது 21 ஆம் வயதில் தொடங்கி 42 ஆம் வயது வரை, நாற்பத்து இரண்டு (42) முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக இவர் தன் முதல்
கணவரை விவாகரத்து செய்து விட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். இத்துடன் தீர்ந்ததா இவர் பிளாஸ்டிக் மோகம். அதன்மீது உள்ள மோகத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு அவரைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதே போல இந்நாட்டு இன்னொரு மாடல் ஷைலா ஹெர்ஷே தன் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள முப்பது முறை பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது
என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்குச் சென்று இந்த ஆப்பரேஷனைச் செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

தான் மணக்க இருக்கும் கேனி என்னும் ஒரு பெண்ணுக்கு எட்டு முறை பிளாஸ்டிக்கினால் அறுவை சிகிச்சை என்னும் சில டச்சப்புகளைச் செய்து பின்னர் மணந்து கொண்டுள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரெசா வோசவ் என்னும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர். முப்பத்து மூன்று வயதான கேனி ஹோட்டலில் பணி புரிந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றி, கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தி,. நெற்றியை சமப்படுத்தி அவரை அழகு ராணியாக்க ரெசா வோசவுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

பிளாஸ்டிக் இராணிகள் மட்டுமல்ல. பிளாஸ்டிக் இராசாக்களும்
இருக்கிறார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாப் இசையால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வரும் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் மன்னன். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் இவர்.

இப்படிப்பட்ட எண்ணற்ற தகவல்கள் பிளாஸ்டிக் என்னும்
நவயுக அழகின் பிரம்மாவைப் பற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் உதவியால் அதிரடிக்கின்ற பிரபங்களைப் பாருங்கள். இவர்கள் புண்ணியத்தால் இப்போது எல்லா தரப்பு மக்களும் பிளாஸ்டிக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக் பிரதர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி






இலண்டன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ பேமஸ் ஷில்பா ஷெட்டி இரு முறை தன் மூக்கை வடிவமைத்துக்கொண்டவர். இவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
ஊரறிந்த.. இல்லை உலகம் அறிந்த விஷயம். இவரே பாலிவுட் நடிகைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி அழகி என்பது மட்டுமல்ல. இவர் அழகு நிலையத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம்
அறிந்து கொள்ள வேண்டியது. மும்பையில் உள்ள இவரது அழகு நிலையத்தின் பெயர் அயோசிஸ்




பிக் பாஸ் புகழ் ராக்கி சவந்த் Rokhi savanth

பிக் பாஸ் புகழ் இவரின் மூக்கும் உதடுகளும் அழகானதில் அவரின் தந்தையரின் ஜீன்களை விட பிளாஸ்டிக் ஜீனின் பங்கே அதிகமானது. மூக்கு, உதடு மட்டுமல்ல உடல் அழகின் ரகசியமே பிளாஸ்டிக்கால்தான். இவர் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையால் இடுப்பைக் குறைத்தவர். வயிற்றுப்பகுதியைக் குறைத்தவர். அதே சமயம் மார்கங்களைச் சிலிக்கானால் கூட்டியவர். இந்த செயற்கை அழகிக்கு இன்னொரு புகழும் உண்டு. கலிகாலத்தில் ஒரு சுயம்வரம் நடத்தித் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்தவர். இதைவிட இன்னொரு சிறப்பு இந்த சுயம்வரத்திற்கு மனுசெய்தவர்கள் 12515. ராக்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 16 பேர். தலை சுத்துதா? ஆளை விடுங்க....

தமிழன் புகழ் பியங்கா சோப்ரா Priyanka chopra



மிஸ் இந்தியா பிரயங்கா சோப்ரா. இந்திய
அழகியாகத் தேர்வான இவர் காமினி, பேஷன், அட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததால் சிறந்த
நடிகையாகவும் தேர்வானவர். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என்பது பலர் அறியாதது. இன்று பாலிவுட்டின் மிகப்பிரபலமான நாயகி..
கேங்ஸ்டெர் புகழ் கங்கனா ரானத் Kangana Ranaut




கேங்க்ஸ்டெர், ஃபேஷன், சகலக பூம்பூம் புகழ் கங்கனா ராவத் பல மொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் ஃபேர் விருது, அப்சரா விருது என்று பல விருதுகளை அள்ளிக்குவித்தவர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சிலிக்கன் மார்பகங்களை பொருத்திக் கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.




அயன் ஹிந்தி புகழ் கொய்னா மித்ரா Koena Mitra


ரோடு, தூள், அயன், ஆசை போன்ற படங்களால் புகழ் பெற்றவர் இவர். இவர் மார்பகங்களைப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். இரு முறை மூக்கு அறுவை சிகிச்சை தவறான முடிவைத்தர தான் கட்டிய அழகுக்கோட்டை
இடிந்து இருளில் சிக்கி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டவர்.




கனிமொழி தமிழ் புகழ் சாஷன் பதம்சி Shazahn Padamsee


ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர் என்னும்
ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி தமிழிலும் கனிமொழி என்னும் திரைப்படத்தில் தன் அழகிய உதடுகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்தவர். இந்த அழகிய உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரி தந்த
கொடைதான். ப்ரீத்தி சிந்தா Preity Zinta



தில் சே, அர்மான், சோல்ஜர் புகழ் ப்ரீத்தி சிந்தாவைத்
தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே என்ற பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மூக்கு, புருவம் எல்லாம் அறுவை சிகிச்சையால் மேலும் அழகானவை.
மினிஷா லம்பா Minissha Lamba


யாஹன் முதல் கிட்னாப், அனாமிகா என்று பல ஹிந்தி
திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மார்பக அறுவை (Breast enhancement surgery) சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் இவர் செய்து கொண்ட மார்பக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவருக்கு அதிக அளவில் வசீகரத்தைத் தராததால் மீண்டும் சிலிக்கான் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். இந்த வரிசையில் ஜூஹி ஜாவ்லா இடம் பெறலாம் என்பது யூகம். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் நீங்களும் அப்படித்தான் கூறுவீர்கள்



ஒரே மாதிரி பாலிவுட் நடிகைகளைப் பற்றியே தெரிந்து கொண்டால் கோலிவுட் நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற குரல் கேட்கிறது.
நம்ம பதினாறு வயது ஸ்ரீதேவி.


இது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அவர் மூக்கை அழகு
செய்து கொண்டது ஹிந்தி திரையுலகிற்கு இலாபம். தமிழ் திரையுலகுக்கு நட்டம். அவருக்கு
எப்படியோ தெரியவில்லை. பாவம் தமிழர்கள்..... தமிழுக்கே உரிய அந்த முகம் மாறியதில் தமிழர்களுக்கு
வருத்தமே.
ஜீன்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராய்??.

அட உலக அழகி இவரும் மூக்கைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் ஐயம். அவரதுஇளம் வயது புகைப் படங்களையும் இப்போதைய புகைப்படங்களையும் பார்த்து நீங்களே இந்த யூகத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.





உலக நாயகனின் புதல்வி ஸ்ருதி ஹாசன்



அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு
விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க....... உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..




இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....

அடுத்த கட்டுரையில் ஆண் நடிகர்களின் அறுவையைப் பார்க்கலாம்.





நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.


Last edited by Aathira on Wed Nov 16, 2011 10:53 pm; edited 4 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down


Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by Aathira on Wed Nov 16, 2011 11:13 pm

krishnaamma wrote:
Aathira wrote:
கே. பாலா wrote: மூக்கை "அரிந்த"வர்களை பற்றி அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு ஆதிரா வுக்கு ஜே !

இந்த தமிழ் படித்த ஆங்கில ஆசிரியர்களே இப்படித்தான் இருப்பார்களோ? சிரி
ரைமிங்கா பாட்டுப் பாடி ஜே போட்டதற்கு நன்றி பாலா.


இவங்க எல்லாம் "சூர்ப்பனகை களா" ஆதிரா?

இல்லை கிருஷ்.. தன் மூக்கைத் தானே அரிந்து கொண்ட சூர்ப்பனகைகள் லக்‌ஷ்மனகைகள்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by krishnaamma on Fri Nov 18, 2011 6:35 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
கே. பாலா wrote: மூக்கை "அரிந்த"வர்களை பற்றி அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு ஆதிரா வுக்கு ஜே !

இந்த தமிழ் படித்த ஆங்கில ஆசிரியர்களே இப்படித்தான் இருப்பார்களோ? சிரி
ரைமிங்கா பாட்டுப் பாடி ஜே போட்டதற்கு நன்றி பாலா.


இவங்க எல்லாம் "சூர்ப்பனகை களா" ஆதிரா?

இல்லை கிருஷ்.. தன் மூக்கைத் தானே அரிந்து கொண்ட சூர்ப்பனகைகள் லக்‌ஷ்மனகைகள்


சிரி சிரி சிரி சிரி சிரி புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by ranhasan on Fri Nov 18, 2011 6:44 pm

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by krishnaamma on Fri Nov 18, 2011 6:50 pm

ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு


ஹை ! ஹாசன், எப்படி இருக்கீங்க? புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by ranhasan on Fri Nov 18, 2011 6:58 pm

krishnaamma wrote:
ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு


ஹை ! ஹாசன், எப்படி இருக்கீங்க? புன்னகை


ரொம்ப நல்லா இருக்கேன்மா... நீங்க எப்டி இருக்கீங்க..?

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by குரு on Fri Nov 18, 2011 11:15 pm

இன்னும் பல படங்கள் தெரியவில்லை ஆதிரா.. பதிவில் ஏதோ குறை இருந்துகொண்டே இருக்கிறது.. கவனிங்க..

குரு
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67
வசிப்பிடம்: காதலர் உள்ளம்
சேர்ந்தது: 14/11/2011
மதிப்பீடு: 27

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by சிவா on Sat Nov 19, 2011 8:08 am

இவ்வளவு விவரங்கள் அறிந்தவர் தாங்கள் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். கட்டுரைக்கு நன்றி ப.பா.




பதிவுகள்: 790527 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by ANTHAPPAARVAI on Sat Nov 19, 2011 8:50 am

Aathira wrote:

..................................

.........................

அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு
விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க....... உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..







இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....



எனக்கு... முன்னால் உள்ளது தான் பிடிச்சிருக்கு! அறுவை சிகிச்சைக்கு முன்னால் உள்ள முகம் தான்!

அது தான் நாயகன் கமல் மாதரியே இருக்கு. [b]எனக்கும் ஏழாம் அறிவு இருக்கு தானே...!?![/b]

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by Aathira on Mon Nov 28, 2011 2:11 pm

ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு

நன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி ஹாசன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by Aathira on Mon Nov 28, 2011 2:23 pm

குரு wrote:இன்னும் பல படங்கள் தெரியவில்லை ஆதிரா.. பதிவில் ஏதோ குறை இருந்துகொண்டே இருக்கிறது.. கவனிங்க..

என்ன என்று தெரியவில்லையே குரு. எனக்கு எல்லாம் நன்றாக தெரிகிறதே. வேறு யாராவது கூறுங்கள் உறவுகளே.. உங்களுக்கும் படம் காட்சியளிக்கவில்லையா?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: பிளாஸ்டிக் இராணிகள்

Post by ரேவதி on Mon Nov 28, 2011 2:31 pm

மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் ஸ்ரீதேவியை பற்றிதான் கேள்விப்பட்டு இருக்கேன்...இதில் இவளோ பேர் இருக்கங்களா
அறிய தந்தமைக்கு நன்றிகள் அக்கா
படங்கள் தெரிகிறதே அக்கா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum