ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

View previous topic View next topic Go down

இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ரேவதி on Wed Nov 16, 2011 12:51 pm

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை
விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய
உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.
இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.
காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது
ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும். பொதுவாக 2
நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம்.
தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில் திருமுக்கூடல்
ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

63 கோடி தீர்த்தம் : இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி
தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில்
காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது. துலா ஸ்நானத்திற்கு மிகவும்
முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும், விஷ்ணுவாலய
சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு அல்லது
முடவன் முழுக்கு என்று பெயர். பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட
தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும், மயிலாடுதுறை என்று தமிழிலும்
வழங்கப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில்
உள்ளது. திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார்.
அப்போது எமன் (தர்மதேவன்) மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும்
அந்த பதவியை பெற்றான். எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இடபத்தின் செருக்கு : ஒரு சமயம் சிவன் தன் வாகனமான
இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து
சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க
சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு
இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே
இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு
மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின்
வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான்
என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர்
தன் பாடலில் தெரிவிக்கிறார். காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள்
ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள்
தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது. ஆயிரமானாலும்
மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன
புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில்
ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.


தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ஹர்ஷித் on Wed Nov 16, 2011 12:59 pm

சூப்பர் மேட்டரு தாங்க்ஸ்! ஜாலி ஜாலி ஜாலி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ராஜா on Wed Nov 16, 2011 1:00 pm

@ரேவதி wrote:ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.தினமலர்
பகிர்வுக்கு நன்றி ரேவதி.பல வருடங்களாகிவிட்டது , கடைமுழுக்கு பார்த்து. , ஒருகாலத்தில் தினமும் காவிரி தாயின் மடியில் விளையாடுவோம். மலரும் நினைவுகள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by பாலாஜி on Wed Nov 16, 2011 1:03 pm

@ராஜா wrote:
@ரேவதி wrote:ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.தினமலர்
பகிர்வுக்கு நன்றி ரேவதி.பல வருடங்களாகிவிட்டது , கடைமுழுக்கு பார்த்து. , ஒருகாலத்தில் தினமும் காவிரி தாயின் மடியில் விளையாடுவோம். மலரும் நினைவுகள்.

அங்க நீங்க என்ன செஞ்சீங்க என்று எனக்குதானே தெரியும் ... புன்னகை புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by கேசவன் on Wed Nov 16, 2011 4:07 pm

பகிர்விக்கு நன்றி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

மாயூரம் காவிரியில் கடைமுழுக்கு– நாகை மாவட்டத்தில் விடுமுறை

Post by பாலாஜி on Wed Nov 16, 2011 4:32 pm

மயிலாடுதுறை: ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான இன்று மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்த விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்தனர். கடைமுக தீர்த்தவாரியை ஒட்டி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்வதாக துலா புராணம் தெரிவிக்கின்றது. ஐப்பசி மாதக் கடைசி நாளில், காவிரியில் நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடுகின்றனர்.

கங்கை பூமிக்கு வந்தாள்

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன். “எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள், எனவே நான் வரமாட்டேன்” என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், “பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…” என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். வடக்கில் வசிக்கும் கங்கா தேவி, தென்னக மக்களும் பயன் பெறும் வகையில் வகையில், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள் என்கிறது துலா புராணக் கதை. எனவேதான் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராட அறிவுறுத்துகின்றனர் முன்னோர். பிறநாட்களை விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது சிறப்பு.

முடவன் முழுக்கு

பக்கத்து ஊர்க்காரர் ஒருவர், கால் ஊனமுற்றவர். அவருக்கு கடை முழுக்கு நாளன்று காவிரியில் நீராட ஆவல். எனவே மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார். ஆனால் கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்த கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) ‘முடவன் முழுக்கு’ என்கின்றனர் முன்னோர்கள். எனவே கடை முழுக்கன்று மயிலாடுதுறை செல்ல இயலாதவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி சென்று நீராடலாம். அன்றைய தினமும் மக்களுக்காக கங்கை காத்திருப்பாள் என்கின்றன புராணங்கள்.

உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை கடைமுக தீர்த்த விழாவையொட்டி, நாகை மாவட்டத்துக்கு 16-ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் சார்பில், 16-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படும் கடைமுக தீர்த்த விழாவை ஒட்டி , நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நவ. 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தட்ஸ்தமிழ்http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ராஜா on Wed Nov 16, 2011 6:34 pm

வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி ரேவதி.பல வருடங்களாகிவிட்டது , கடைமுழுக்கு பார்த்து. , ஒருகாலத்தில் தினமும் காவிரி தாயின் மடியில் விளையாடுவோம். மலரும் நினைவுகள்.
அங்க நீங்க என்ன செஞ்சீங்க என்று எனக்குதானே தெரியும் ... புன்னகை புன்னகை
ஸ்‌ஸ்எஸ்...... பப்ளிக்.. பப்ளிக். என்னோட இமேஜ்ஜ டேமேஜ் பண்ணுறதே இவருக்கு வேலையா போச்சுப்பா...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by உதயசுதா on Wed Nov 16, 2011 6:35 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி ரேவதி.பல வருடங்களாகிவிட்டது , கடைமுழுக்கு பார்த்து. , ஒருகாலத்தில் தினமும் காவிரி தாயின் மடியில் விளையாடுவோம். மலரும் நினைவுகள்.
அங்க நீங்க என்ன செஞ்சீங்க என்று எனக்குதானே தெரியும் ... புன்னகை புன்னகை
ஸ்‌ஸ்எஸ்...... பப்ளிக்.. பப்ளிக். என்னோட இமேஜ்ஜ டேமேஜ் பண்ணுறதே இவருக்கு வேலையா போச்சுப்பா...
நீங்க(பாலாஜி & ராஜா) enna செய்வீங்கண்ணுதான் எல்லாருக்கும் தெரியுமே.அப்புறம் என்ன பப்ளிக்,பப்ளிக்.

-------------------------------
இத நான் எடிட் பண்ணலிங்கோ -ராஜா


Last edited by ராஜா on Wed Nov 16, 2011 7:00 pm; edited 1 time in total (Reason for editing : .)
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by இளமாறன் on Wed Nov 16, 2011 11:18 pm

1 நாள் குளிச்சா போதுமா அதிர்ச்சி கூட முழுக்கு காலையில் குளித்து விட்டு 1 மணி நேரமாவது மந்திரங்கள் படிக்க வேண்டும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by அன்பு தளபதி on Fri Nov 25, 2011 2:31 pm

ஊரே ஊரே என்னை பெத்த ஊரே உசுருல ரத்தத்துல கலந்துட்ட ஊரே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ரேவதி on Fri Nov 25, 2011 2:41 pm

maniajith007 wrote:ஊரே ஊரே என்னை பெத்த ஊரே உசுருல ரத்தத்துல கலந்துட்ட ஊரே
ரொம்ப லேட்.. சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Nov 25, 2011 4:06 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by சிவா on Sat Oct 18, 2014 12:34 am

இன்று துலா ஸ்நானம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by ராஜா on Sat Oct 18, 2014 11:00 am

@சிவா wrote:இன்று துலா ஸ்நானம்!
நினைவு படுத்தியமைக்கு நன்றி தல

ரொம்ப மிஸ் பண்ணுறோம் சோகம் எங்க ஊரை (மயிலாடுதுறை)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by T.N.Balasubramanian on Sat Oct 18, 2014 2:06 pm

திருச்சியில் இருந்து இருந்தால் (காவிரியில் ) முங்கின ஸ்நானம்
சென்னையில் மழையால் முங்கின ஸ்நானம் , இன்று .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by krishnaamma on Sat Oct 18, 2014 2:15 pm

குளிக்கும்போது " கங்கை காவிரி கிருஷ்ணா " சொல்லி தலை இல் தண்ணீர் கொட்டிக்கொண்டாச்சு ஐயா ! ......என்னால் முடிந்தது அவ்வளவு தான் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by யினியவன் on Sat Oct 18, 2014 2:31 pm

@சிவா wrote:இன்று துலா ஸ்நானம்!
மேற்கோள் செய்த பதிவு: 1097194
போன வருஷம் குளிக்க சொன்னா, தூங்கிட்டு இப்ப துலாம் ன்னு துலாவினது நீங்கதானா இன்னிக்குavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by யினியவன் on Sat Oct 18, 2014 2:43 pm

சரி வாழறதே அதிகபட்சம் 100 ஆண்டுகள் - 1000 ஆண்டுகள் பலன்?

(இன்னிக்கு குளிச்சா அப்புறம் குளிக்கவே வேணாம் போல)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum