ஈகரை தேடுபொறி
Latest topics
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by balakarthik Today at 4:40 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Today at 4:40 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Today at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Today at 4:06 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by maniajith007 Today at 3:48 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Today at 3:47 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by ராஜு சரவணன் Today at 3:43 pm

» சிக்கன் பூனா
by பூவன் Today at 3:36 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by பாலாஜி Today at 3:35 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Today at 3:28 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Today at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 2:59 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:53 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Today at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Today at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Today at 2:26 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Today at 2:14 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Muthumohamed Today at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm

» அளவற்ற அருளாளன்….
by Muthumohamed Today at 1:13 pm

» மகனாக வந்தவன்!
by Muthumohamed Today at 1:06 pm

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by Muthumohamed Today at 1:05 pm

» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
by Muthumohamed Today at 12:51 pm

» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 12:39 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by பூவன் Today at 11:25 am

» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by ஆரூரன் Today at 10:24 am

» மணிமேகலையில் நிலையாமை
by ஆரூரன் Today at 10:05 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சதாசிவம் Today at 10:04 am

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ரிபாஸ் Today at 9:59 am

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 9:15 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























வரலாற்றில் இன்று ! 5 5 30

வரலாற்றில் இன்று !

Page 23 of 32 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 27 ... 32  Next

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று !

Post by ரேவதி on Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952

View user profile

Back to top Go down


Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Sat Jun 23, 2012 9:34 am

ஜூன் 21.

1945: ஜப்பானின் ஒகினவா தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.
1982: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் பிறந்தார்.

1898: குவாம் தீவை ஸ்பெய்னிடமிருந்து அமெரிக்கா கைப்பற்றியது.

1982: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனை சுட்ட ஜோன் ஹிங்க்லே சித்தசுவாதீனமற்றவர் என்பதால் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

2004: ஸ்பேஸ்வன்சிப் எனும் விண்கலம் தனியாரின் நிதியளிப்பின் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் விண்கலமாகியது.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Sat Jun 23, 2012 9:37 am

ஜூன் 22.

1893: பிரித்தானிய கடற்படை யுத்தக் கப்பலொன்று தற்செயலாக பிரித்தானிய வர்த்தக கப்பலொன்றுடன் மோதியதால் 359 பேர் பலி.

1911: பிரித்தானிய மன்னராக 5 ஆம் ஜோர்ஜ் பதவியேற்றார்.



1918: அமெரிக்காவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 118 பேர் பலி.

1940: பிரான்ஸில் ஜேர்மனியின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியமொன்றை ஸ்தாபிக்க இணங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரான்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது.

1941: சோவியத் யூனியன் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1962: மேற்கிந்தியத் தீவுகளில் பிரெஞ்சு விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 113 பேர் பலி.

1978: புளூட்டோ கிரகத்தின் சந்திரனான சாரோன் கண்டுபிடிக்கப்பட்டது.

2002: ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால 261 பேர் பலியாகினர்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Mon Jun 25, 2012 9:02 am

ஜூன் 23.

1757: இந்தியாவின் பிளாசிப் போரில் 50,000 பேர் கொண்ட சிராஜ உத் தலாவின் படைகளை பிரித்தானிய ரொபர்ட் கிளைவின் 3000 பேர் கொண்ட படை தோற்கடித்தது.

1894: சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1968: ஆர்ஜென்டீனாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 74 பேர் பலியாகினர்.

1985: கனடாவிலிருந்து புறப்பட்ட எயார் இன்டியா விமானமொன்று அயர்லாந்துக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது சீக்கிய தீவிரவாதிகளால் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 329 பேரும் பலியாகினர்.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Mon Jun 25, 2012 9:16 am

ஜூன் 24

1509: இங்கிலாந்து மன்னராக 8 ஆம் ஹென்ரி முடிசூடினார்.
1918: கனடாவில் முதலாவது வான்வழி தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1975: நியூயோர்க்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 113 பேர் பலி.
2002: தான்ஸானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில 281 பேர்பலி. ஆபரிக்க கண்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Tue Jun 26, 2012 9:00 am

ஜூன் 25.
1950: தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்ததால் கொரிய யுத்தம் ஆரம்பமாகியது.
1967: செய்மதி மூலமானமுதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெற்றது.

1975: இந்தியாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

1975: மொஸாம்பிக் சுதந்திரம் பெற்றது.

1990: நியூயோரக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலியாகினர்.

1991: யூகோஸ்லாவியாவிலிருந்து குரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பிரிந்தன.

1993: கனடாவின் முதலாவது பெண் பிரதமராக கிம் கெம்பல் பதவியேற்றார்.

2005: ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் வெற்றி பெற்றார்.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Tue Jun 26, 2012 9:01 am

ஜூன் 26.
1363: ரோம சக்கவர்த்தி ஜூலியன் கொல்லப்பட்டார்.
1870: அமெரிக்காவில் நத்தார் தினம் சமஷ்டி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டனுடன் இணைந்து போரிடுவதற்காக முதலாவது அமெரிக்க படை பிரான்ஸை வந்தடைந்தது.

1945: ஐ.நா. சாசனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கையெழுத்திடப்பட்டது.

1948: மேற்கு பேர்லினுக்கான தரைவிநியோகப் பாதையை சோவியத் யூனியன் துண்டித்ததால் விமானம் மூலமான விநியோகங்களை மேற்கு நாடுகள் ஆரம்பித்தன.

1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம்பெற்றது.

1995: கட்டார் அமீரான, கலீபா பின் ஹமட் அல் தானியை அவரின் மகன் ஹமட் பின் கலீபா அல் தானி இரத்தமில்லா புரட்சிமூலம் நீக்கிவிட்டு தான் அமீரானார்.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Thu Jun 28, 2012 9:09 am

ஜூன் 27
1806: ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ்அயர்ஸ் நகரை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.

1941: ருமேனிய அரசாங்கம், யூதர்களுக்கு எதிரான பாரிய வன்முறை நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இதனால் 13266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950: கொரிய யுத்தத்திற்கு துருப்புகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்தது.

1954: உலகின் முதலாவது அணுமின் நிலையம் சோவியத் யூனியனில் திறக்கப்பட்டது.

1967; உலகின் முதலாவது தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ஏ.ரி.எம்.) பிரிட்டனின் என்பீல்ட் நகரில் நிறுவப்பட்டது.

1976: பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானமொன்று பலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் கடத்தப்பட்டு உகண்டாவில் தரையிறக்கப்பட்டது.

1986: நிக்கரகுவா கொண்ட்ரா கிளர்ச்pயாளர்களுக்கு உதவியளித்ததன் மூலம் சர்வதேச சட்டத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1991: ஸ்லோவேனியா மாநிலம் சுதந்திரப் பிரகடனம் செய்ததால் அதன்மீது யூகோஸ்லாவியா படையெடுத்தது.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Thu Jun 28, 2012 9:10 am

ஜூன் 28.

1883: ஐரோப்பாவின் முதலாவது மத்திய மின்வலு நிலையம் இத்தாலியின் மிலான் நகரில் திறக்கப்பட்டது.
1894: தொழிலாளர் தினத்தை உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அமெரிக்கா அறிவித்தது.

1950: தென்கொரியாவின் தலைநகர் சியோலை வடகொரியா கைப்பற்றியது.

1967: கிழக்கு ஜெருஸலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1981: ஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இஸ்லாமிய குடியரசுக் கட்சி அங்கத்தவர்கள் 73 பேர் பலியாகினர்.

1997: அமெரிக்க குத்துச்சண்டை வீரர்களான மைக் டைஸனுக்கும் இவாண்டர் ஹொலிபீல்டுக்கும் இடையிலான அதிபார குத்துச்சண்டைப் போட்டியின் 3 ஆவது சுற்றில் ஹொலிபீல்டின் காதை டைஸன் கடித்து துண்டாக்கியதால் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம்செய்யப்பட்டார்.

2001: முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்காக நாடுகடத்தப்பட்டார்.

2004: ஈராக்கின் இறையாண்மை அமெரிக்காவினால் மீண்டும் ஈராக்கியர்களிடம் கையளிக்கப்பட்டது.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by ஹர்ஷித் on Thu Jun 28, 2012 9:17 am

அருமையிருக்கு

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Sun Jul 01, 2012 9:22 am

ஜூன் 29.
1864: கனடாவில் இடம்பெற்ற ரயில் விபத்தழில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

1950: உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து அமெரிக்கா அதிர்ச்சியளித்தது.

1976: பிரிட்டனிடமிருந்து சீஷெல்ஸ் சுதந்திரம்பெற்றது.

1995: ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்கலம் இணைந்தது.

1995: தென்கொரியாவின் சியோல் நகரில் வர்த்தகநிலைய கட்டிடமொன்று இடிந்துவீழ்ந்ததால் 501 பேர் பலி, 937 பேர் காயம்.

2002: வடகொரிய கடற்படையினருனான மோதலில் தென்கொரிய கப்பலொன்று மூழ்கியதால் 6 கடற்படை வீரர்கள் பலியாகினர்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Sun Jul 01, 2012 9:23 am

ஜூன் 30.

1882: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை கொலை செய்த குற்றச்சாட்டில் சார்ள்ஸ் ஜே. கெய்டியூ வாஷிங்டன் டி.சி.யில் தூக்கிலிடப்பட்டார்.
1960: பெல்ஜியத்திடமிருந்து கொங்கோ சுதந்திரம் பெற்றது.

1969: பிரிவிணை கோரிய பயாபரா பிராந்தியத்திற்கு செஞ்சிலுவைச் சங்க உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதற்கு நைஜீரியா அனுமதியளிக்க மறுத்தது.

1971: சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் விண்வெளியிலிருந்து திரும்பி வந்த வீரர் ஒருவர் விண்கலத்திலிருந்து ஒட்சிசன் வாயு வெளியேறியதால் உயரிழந்தார்.

1985: லெபனானில் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு 3 வாரங்களாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1990: கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் தமது பொருளாதாரங்களை ஒன்றிணைத்தன.

2009: இந்து சமுத்திரத்தில் யேமன் விமானமொன்று விழுந்ததால் விமானத்திலிருந்த 153 பேரும் உயிரிழந்தனர்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Sun Jul 01, 2012 9:24 am

ஜூலை 01.

1881: முதலாவது சர்வதேச தொலைபேசி அழைப்பு அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.

1908: எஸ்.ஓ.எஸ். (SOS ) என்பது சர்வதேச அவசரநிலை சமிக்ஞையாக அங்கீகரிக்கப்பட்டது.
1921: சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது.

1949: இந்தியாவில் 1000 வருடங்களாக கொச்சி அரச குடும்பத்தினால் ஆளப்பட்டு வந்த கொச்சின், திருவாங்கூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது.

1960, சோமாலியா சுதந்திரம் பெற்றது.

1960: கானா குடியரசாகியது.

1962: ருவாண்டா, புரூண்டி சுதந்திரம் பெற்றன.

1968: அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தல் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.

1979: வாக்மேன் கருவியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1991: வார்ஸோ ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக ரத்துச் செய்யப்பட்டது.

1997: ஹொங்கொங்கின் இறையாண்மையை மீண்டும் சீனாவிடம் பிரிட்டன் கையளித்தது.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Tue Jul 03, 2012 8:52 am

ஜூலை 2.
1823: பிரேஸில் போர்த்துகேய ஆட்சி முடிவுக்கு வந்தது.

1897: வானொலிக்கு மார்கோனி காப்புரிமை பெற்றார்.
1940: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோஸ், கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.

1964: அமெரிக்காவில் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை அளிக்கும் சிவில் உரிமை சட்டத்தில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் கையெழுத்திட்டார்.

2000: ஐரோப்பாவில் மிக நீளமான நெடுஞ்சாலை, ரயில்பாதை கொண்ட பாலமான டென்மார்க்கிற்கும் சுவீடனுக்கும் இடையிலான ஓர்சன்ட் பாலம் திறக்கப்பட்டது.

2002: ஸ்டீவ் பொரெஸ்ட் என்பவர் முதல் தடவையாக எங்கும் தரிக்காமல் உலகை சுற்றிவந்த நபரானார்.

2010: கொங்கோவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 230 பேர் உயிரிழந்தனர்.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் on Tue Jul 03, 2012 8:54 am

ஜூலை 3.

1778: அமெரிக்க சுதந்திர போரின்போது, பிரித்தானிய படைகளால் வொயோமிங் நகரில் 360 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1970: பிரித்தானிய விமானமொன்று ஸ்பெய்னில் விபத்துக்குள்ளானதால் 113 பேர்பலி.

1979: ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு ஆதரவான அரசாங்கத்தை எதிர்க்கும் போராளிகளுக்கு உதவியளிப்பதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்டார்.

1988: ஈரான் - ஈராக் யுத்தத்தின்போது ஈரானிய பயணிகள் விமானமொன்று அமெரிக்க கடற்படை கப்பலொன்லிருந்து ஏவப்பட்ட ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 290 பேர் பலியாகினர். யுத்த விமானம் எனக் கருதி அவ்விமானத்தை வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்தது.

2001: ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலியாகினர்.

2006: மெக்ஸிகோவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 43 பேர் பலியாகினர்.


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Page 23 of 32 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 27 ... 32  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum