ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பரிபாடல் பாடல்

View previous topic View next topic Go down

பரிபாடல் பாடல்

Post by prlakshmi on Sun Nov 20, 2011 7:26 am

பரிபாடல் பாடல் -1


இது கடவுள் வாழ்த்து.


எழுதிய புலவர்
பெயர் தெரியவில்லை.

திருமால்


[You must be registered and logged in to see this image.]ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு
முடிமிசை அணவர
,
மாயுடை மலர்
மார்பின்
, மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை
எழில் வேழம் ஏந்திய
,
வாய் வாங்கும் வளை
நாஞ்சில்
, ஒரு குழை ஒருவனை; 5


(இது தரவு )


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும்
மேனியை
; மேனித்
திரு ஞெமிர்ந்து
அமர்ந்த மார்பினை
; மார்பில்
தெரிமணி பிறங்கும்
பூணினை
; மால் வரை
எரி திரிந்தன்ன
பொன் புனை உடுக்கையை-
10

சேவல் அம்
கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை
கூறும்
,
நா வல் அந்தணர்
அரு மறைப் பொருளே.( இது கொச்சகம் )


அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி
பணி எரி புரை

விடர் இடு சுடர்
படர் பொலம் புனை வினைமலர்
15

நெரி திரடெரி புரை
தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து
யாத்த நேரணி

நெறி செறி வெறி
உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி
வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி
படை எருத்து மலை இவர் நவையினிற்
20றுணி படல் இன மணி
வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல
முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின்
ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு
உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை
இதழ் அணி வயிறிரிய அமரரைப்
25போரெழுந்து உடன்று
இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல்
பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு
அலம் தொடா அமர் வென்ற கணை.(இவை நான்கும் அராகம்)


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்


பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:


(இது ஆசிரியம்)அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


(இது பேரெண்)
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.


(இது ஆசிரியம்)
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், வனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.(
இவை ஆறும் பேரெண்)அதனால்,(
இது தனிச் சொல் )இன்னோர் அனையை; இனையையால்என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!


(இது சுரிதகம்)நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,


( இவை சிற்றெண்னும்
பேரெண்னும்
இடைஎண்ணும்)ஆங்கு,


( இது தனிச் சொல் )காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68


(இது சுரிதகம்)*******************************
Meaning
எவ்வுயிருக்கும் அச்சத்தைத்
தரக்கூடிய இயல்பை
உடைய , சினத்
தீயை உமிழுகின்ற
படம் விரிந்த
ஆயிரம் தலைகளை
உடைய ஆதிசேஷன்
உன் தலை
மீது நிழலாக
இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும்
மலர் மார்பினை
உடையவன் நீ.
குற்றமில்லா வெண்மையான
சங்கினைப் போன்ற
நிறத்தையும், மிக
உயர்ந்த மூங்கில்
கம்பின் உச்சியில்
கட்டப்பட்ட யானைக்
கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும்
இருக்கும் கலப்பையினை
உடையவனும், ஒற்றைக்
குழையை அணிநதவனுமாகிய
பலதேவனாகவும் நீ
விளங்குகின்றாய்.


கருடச் சேவல் கொடியைக்
கொண்டவனே! தாமரை போன்ற அழகிய
கண்களை உடையவன் நீ .
[You must be registered and logged in to see this image.]காயாம் பூவினது
நிறத்தை உடையது உன்
மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம் கௌஸ்துப மாலையை உடையவன் நீ.
கரிய மலையைச்
சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி
உளாய்.
நாவன்மை உடைய
அந்தணர் உணர்தற்குரிய அரு
மறைப் பொருளே !
நினது அருளாலே உனது
வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள்
, உன்னுடைய அருள் தழுவுதலாலே நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற
வல்லவர்கள்
ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).


தம் அறியாமையினாலே
உன்னோடு போர்
செய்வோம் என்று
வந்த அவுணர்களுடைய
வலிமை கெடும்
வண்ணம், போரின்
கண் வென்ற
குற்றமற்ற தலைமை
உடைய அண்ணலே !


காமன், சாமன்
என்னும் இருவருடைய
தந்தையே !
விளங்குகின்ற ஆபரணங்களை
அணிந்தவனே !
உன் வரவினை, (அவதாரத்தை அல்லது
வரலாற்றை ) விளக்கமாக
அறிந்து கொள்ளுதல்
என்பது, மயக்கம்
தீர்ந்த தேர்ச்சி
பெற்ற முனிவருக்கும்
அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை
உடையவனே !முனிவர்களுக்கே அப்படி
என்றால், நீ
எப்படிபட்டவன் என்று
உரைப்பது எங்களுக்கு
மட்டும் எப்படி
எளிதாகும் ?


அழகிய தாமரை
மலரின் கண் வீற்றிருக்கும்
திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே! அறிவதற்கு இயலாதது
உன் வரலாறு என்று
நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் , உன் மேல்
எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும்
பெருமையுடையது என்பதால், நாங்கள்
கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி
எங்களை வெறுத்து விடாமல்
அருள வேண்டும்.


வெற்றி மிகுந்த
பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்
, நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;


நன்னெறியில்
செல்லும் திறனில்லாதவரை
, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும்
நீயே
; அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;
[You must be registered and logged in to see this image.]அழகும், எழுச்சியும் உடைய
வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ
;

சுடுகின்ற சுடரை
உடைய சூரியனும் நீயே.


ஐந்து தலைகளைத்
தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்
, கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;

அவனால்
செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே
;

நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;

பூவின் மேல் இருக்கும்
பிரம்மனும் நீ
;

அவன் செய்யும்
நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே
;
வானின் கண் உயரும்
மேகமும் நீ
;


மாகம் என்னும்
வானமும் நீ
;


இந்தப் பூமியும்
நீ
;


நீண்டு
நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
நீ இவரைப்
போன்றவன்
, இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு
காணப்படாமையால்
, பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும்
ஆள்வதற்கு அடையாளமாக நின் வலப் பக்கத்தே ஏந்தி
, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!


உன் புகழ்தான்
உனக்கு ஒப்புமையானது
.புள் என்னும்
கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.

முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும் மாறுபாட்டினை உடைய
சக்கரப்படையை உடையவன் நீ.

கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை
உடைய திருமேனியை உடையவன் நீ.

அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு
ஒன்று கூடி
, உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக, பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.

வாய்மொழிப்
புலவனே!


வாய்மொழியாகச்
சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் . [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
prlakshmi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 203
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: பரிபாடல் பாடல்

Post by சதாசிவம் on Sun Nov 20, 2011 8:04 am

பயனுள்ள பதிவு.
திவ்விய பிரபந்தம் போல் பெருமாளின் பெருமைகளை பேசும் நூல் பரிபாடல். மக்களிடையே பிரபலம் ஆகாத நூல். அறியச்செய்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum