|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
பொதுவாகவே எதையும்
கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்
பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும்
ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து
விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள
இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க
முயற்சிக்கிறது. நாற்காலியைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்போனைப்
பார்த்தால் பேச முயற்சிக் கிறது. புத்தகதை கையில் எடுத்தால் கிழிக்க்
முயர்ச்சிக்கிறது ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை
செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே
என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.
குழந்தைகளுக்கு
ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும்
என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை
வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.வீட்டில் குழந்தையை
கவனித்துப் பார்த்தால், எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும்
மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க
ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும்
கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால்
விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது.
‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும்
கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி
வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’
என்கிறது.முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த
பிறகு ‘முடியாது’ என்று மாறியது எப்படி ? இதற்கு காரணம் நாம் செய்கிற
ஆசிரியர் வேலைதானே. அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான்
அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.
எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.மேலும்
படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற
தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை
சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம்
ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.என்ன
படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற
வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து
வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள். எப்போது
பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக
கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல
பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி
எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு குட்டிக்கதை
பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக்
கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல
வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா
சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ
சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள
குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று
துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை
எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது
நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த,
வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி
அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்..
“ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா
புரிஞ்சுக்கிறதுல்ல..”
இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக்
கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே
தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக்
கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து
தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து
சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.
நீங்களும், உங்கள்
குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும்
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே
இருக்காது.
http://www.tamilparents.com/2011/11/dont-treat-like-as-teacher.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று இது.. மிக்க நன்றி.. அனைவருக்கும் சிந்திக்கும்படியடியான பயனுள்ள பதிவு..



நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
மிகச்சிறந்த பதிவு...எல்லோரும் படிக்கவேண்டியது. முஹைதீன் அவர்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன்.
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
நல்ல பதிப்பு. கற்றுக் கொண்டேன்... நன்றி

சிவசங்கர்- பண்பாளர்

- பதிவுகள்: 163
வசிப்பிடம்: ரவாங், மலேசியா
சேர்ந்தது: 12/01/2010
மதிப்பீடு: 35
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி



ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை.......உண்மை...நன்றி

உங்களின் குட்டி கதையும் அருமை!!!
இருக்கிறது என்பதை.......உண்மை...நன்றி

உங்களின் குட்டி கதையும் அருமை!!!

வேண்டாம இந்த ஆசிரியர் பணி
நன்று.. அனைவருக்கு்ம் ஏறற பாடம்.......

rvvn77- புதியவர்

- பதிவுகள்: 13
வசிப்பிடம்: attur
சேர்ந்தது: 30/12/2010
மதிப்பீடு: 0
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
இந்த உலகத்திற்கு வரும் போது
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.
அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.
பெற்றோா்ளுக்கு இதமான வாா்த்தைகளினால் தரப்பட்ட நல்லாலோசனை.
பாராட்டுக்கள்.
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.
அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.
பெற்றோா்ளுக்கு இதமான வாா்த்தைகளினால் தரப்பட்ட நல்லாலோசனை.
பாராட்டுக்கள்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை
வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.
நல்ல பயனுள்ள பதிவு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
தற்போதைய சூழல்நிலையில் ஒரு சில பேற்றோர்கள் ஆசிரியர்களை மதிப்பது இல்லை..பிள்ளைகளுக்கு மரியாதை என்பது என்னவென்று சொல்லித் தருவதும் இல்லை...பிள்ளைகளிடம் ஏன் பாடம் செய்யவில்லை என்று குரலை உயர்த்தி கேட்டலே வழக்கு போடுகின்றனர்...மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் மலேசியாவில் இது சர்வசாதாரனமாக நடக்கிறது...
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
amloo wrote:.பிள்ளைகளிடம் ஏன் பாடம் செய்யவில்லை என்று குரலை உயர்த்தி கேட்டலே வழக்கு போடுகின்றனர்...மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் மலேசியாவில் இது சர்வசாதாரனமாக நடக்கிறது...
இதுக்கெல்லாம் வழக்கா
ஹோம் வொர்க் கொடுக்கமாட்டாங்களா 
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
well....இப்போலாம் வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கக்கூடது என்றூ கூட கம்பலேன் வந்துருசு...ஏன்னு கேட்ட ' என் பிள்ளை டூஷன் போகுது அதனால ஸ்கூல் வீட்டுப்பாடதை கொஞ்சம் கொரசிகொங்க.டயிம் இல்லை.அதுக்கு தான் சொன்னேன்' இப்படி பதில் சொல்றவங்க இருகாங்க...அதுத்ததா ' என் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யலேனா பரவாலே டீச்சர்.தேர்வுலே எப்படியும் பாஸ் ஆகிறுவான்..' இப்படியும் பதில் வரும்.....
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
amloo wrote:well....இப்போலாம் வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கக்கூடது என்றூ கூட கம்பலேன் வந்துருசு...ஏன்னு கேட்ட ' என் பிள்ளை டூஷன் போகுது அதனால ஸ்கூல் வீட்டுப்பாடதை கொஞ்சம் கொரசிகொங்க.டயிம் இல்லை.அதுக்கு தான் சொன்னேன்' இப்படி பதில் சொல்றவங்க இருகாங்க...அதுத்ததா ' என் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யலேனா பரவாலே டீச்சர்.தேர்வுலே எப்படியும் பாஸ் ஆகிறுவான்..' இப்படியும் பதில் வரும்.....![]()
விட்டா எப்பவாவது பள்ளிக்கூடம் வருவோம் கேட்க கூடாதுணு சொல்வாங்க போல இருக்கே

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வேண்டாம் இந்த ஆசிரியர் பணி
ஹஹஹ..அப்படி கேப்பாங்கனு இல்லை இளமாறன்..எப்பொவோ கேட்டி பழைய க்அதை ஆகியிற்று....நடக்காமல் இருப்பது ஒன்று தான்...'என் பையன் தேர்வுக்கு பள்ளிக்கு வர மாட்டான்..முடிந்தால் தேர்வு தாளை வீட்டுக்கு அனுபுங்க..செய்து முடித்ததும் வந்து எடுத்துக்கோங்க' னு மட்டும் தாம் இன்னும் சொல்லல..இனி நடக்க வாய்ப்பு இருக்கு...
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












