புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
45 Posts - 58%
heezulia
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
87 Posts - 60%
heezulia
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_m10108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:17 pm

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 27, நவம்பர் 2011 (9:56 IST)


108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள்



சேலம் மாவட்ட தமிழ்ச்சுடர் நாளிதழின், புகைப்படக்கரராக பணியாற்றியவர் நாகராஜன் (வயது 43). சேலம் சூரமங்கலத்தில் உள்ள இவரது வீட்டிலிருந்து நேற்று காலையில் நடைப்பயிற்சிக்கு கிளம்பி, இரும்பாலைக்கு செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்தவர் நாகராஜன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நாகராஜனின் வலது கால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு கீழே விழுந்ததில் பின் தலையில் பலமான அடிபட்டு மயங்கி விழுந்து விடுகிறார்.

பக்கத்தில் சென்று கொண்டிருந்த சிலர், நாகராஜனின் வீட்டுக்கும், 108 அவசர சேவைக்கும் தகவல் சொல்லியுள்ளார்கள், 108 வாகனத்தில் வந்த மருத்துவ உதவியாளரிடமும், ஓட்டுனரிடமும் நாங்கள் வழக்கமாக கமலா மருத்துவமனைக்குத்தான் போவோம். அங்குள்ள மருத்துவர்கள் என் கணவருக்கு தெரிந்தவர்கள் எனவே ஆம்புலன்சை கமலா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார் நாகராஜனின் மனைவி கவிதா.

ஆனால், 108 மருத்துவ வாகனத்தில் இருந்தவர்கள் நாங்கள் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள குறுஞ்சி மருத்துவ மனைக்குத்தான் செல்வோம் என்று அங்கே கொண்டுபோய் நாகராஜனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள்.

முதலில் ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் கட்டுங்கள், பிறகுதான் சிகிச்சை செய்ய முடியும் என்று நிர்வாகம் கறாராக சொல்லிவிட, அவரது மனைவி கவிதா வீட்டுக்கு ஓடிப்போய் பணம் கொண்டுவந்து கட்டிய பிறகே சிகிச்சையை தொடங்கியுள்ளார்கள்.

உள்ளூர் செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்து அவர்கள் எல்லாம் காலை 11.00 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற போது இங்கு மூளை நரம்பியல் மருத்துவர்கள் இல்லை, எனவே நீங்கள் வேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்வது நலம், என்று மருத்துவ மனை நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

அதற்கு பிறகு மூளை நரம்பியல் நிபுனரை தேடி ஓடிய பத்திரிக்கையாளர்கள், நாகராஜனை குறிஞ்சி மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்து வந்து இரண்டாம் கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், மூளையில் ஏற்பட ரத்த கசிவினால் பல்வேறு இடங்களில் இரத்தம் கட்டியாகி விட்டது இனி காப்பாற்றுவது கடினம், நாகராஜனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டாட்கள்.

மதியம், இரண்டு மணியளவில், நாகராஜன் கொஞ்சம் கொஞ்சமாக சாகத் துவங்கிவிட்டார். அவரது கண்களை யாருக்காவது தானம் கொடுக்கலாம் என்று விரும்பிய அவரது மனைவி கவிதா, தனது விருப்பத்தை மற்ற பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு நாகராஜானின் உடலை எடுத்து சென்ற சேலம் பத்திரிக்கையாளர்கள், அங்கு சென்ற பின்னர் தான் நாகராஜன் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக யாரும் இதுவரை காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்று தெரிந்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த நாகராஜனை அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கின் முன்பு வைத்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் குறுஞ்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சாரி..., இன்னும் ஒருமணி நேரத்தில் நாங்க லட்டர் தயார் செய்து கொடுக்கிறோம், என்று சொன்ன நிர்வாகம் மாலை நான்கு மணிவரை அதற்கான எந்தவேலையும் செய்யவில்லை.



பொறுத்து பொறுத்து பார்த்த செய்தியாளர்கள், மாநாகர காவல் உதவி ஆணையாளர் கோபி அவர்களுக்கு தகவல் சொல்ல சூரமங்கலம் ஆய்வாளர், மற்றும் உதவி ஆணையாளர் அணைவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

மக்கள் தொடர்பு அலுவலரை நம்பி பயன் இல்லை என்று, குறிஞ்சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயராமன் அவர்களை சந்தித்த நிருபர்கள் என்ன சார் தலையில் அடிபட்ட ஒருவருக்கு சிகிச்சை கொடுக்க உங்களிடம் எந்தவிதமான மருத்துவ வசதியும் இல்லாத நிலையில் நீங்கள் அவரை இங்கு சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டதே தவறு, அதுமட்டுமல்ல... காலை 6.30 மணிக்கு சிகிச்சைக்கு சேர்ந்தவரை மதியம் 12.00 மணிவரை சிகிச்சை கொடுத்துவிட்டு முறையாக போலிசுக்கு தகவலும் சொல்லாமல் இருக்கிறீர்கள்... என்று சூடாக கேட்டுள்ளனர்.

நாங்கள் அவருக்கு முதல் உதவி மட்டுமே செய்தோம், வேறு எந்தவிதமான சிகிச்சையும் செய்யவில்ல என்று மலுப்பியுள்ளார் ஜெயராமன். யாருகிட்ட கதை விடுகிறீர்கள் என்று நிருபர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட 18 ஆயிரம் ரூபாய்க்கான செலவு கணக்கை காட்டிய பிறகு, நாங்கள் அந்த நபருக்கு அட்மிசன் போடவில்லை அட்மிசன் போட்டால் மட்டுமே போலிசுக்கு தகவல் சொல்லுவோம், அதனால் தான் தகவல் சொல்லவில்லை என்று மீண்டும் ஜகா வாங்கினார் ஜெயராமன்.

இங்க பாருங்க சார் என்று நாகராஜனுக்கு போடப்பட்ட அட்மிசன் கார்டை காட்டிய பின்னர், உணர்ச்சி வசப்பபட்ட மருத்துவர், இப்போதும் கூட நான் போலிசுக்கு தகவல் சொல்லமாட்டேன், நீங்கள் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள், நான் யாருக்கும் பயப்படமாட்டேன் எல்லா பத்திரிக்கைக்கும் விளம்பரம கொடுக்கிறேன். நீங்க வேண்டுமானால் விளம்பரம் கேளுங்கள் கொடுக்கிறேன், இப்படியெல்லாம் கும்பல் கூட்டிகொண்டு கலாட்ட செய்யக்கொடது என்று சம்பதம் இல்லாமல் பேச, உங்களை விடவும் பொறுப்பான பத்திரிக்கையாளர்கள், நாங்கள் கலாட்டா செய்யவில்லை, நீங்கள் ஏன் முறையாக செய்யவில்ல என்றுதான் கேட்கிறோம் என்று கொஞ்சம் வேகமாக சத்தம் போட்டுள்ளனர்.

அப்போது பக்கத்தில் இருந்த உதவி காவல் ஆணையாளர் கோபி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தியதுடன், நீங்கள் யார் அடிபட்டு வந்தாலும், அல்லது காயம் ஏற்பட்ட விதத்தில் உங்களுக்கு சந்தேகமாக இருந்தாலும் முறையாக பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவேண்டும். பத்திரிக்கையாளர்கள் கேட்பது மிகவும் சரியான கேள்வி... அதற்கு நீங்கள் பதில் சொல்லியாகவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

வசமாக மாட்டிக்கொண்ட ஜெயராமன், போலிசுக்கு தகவல் கொடுக்கும் விண்ணப்பத்தில் பணியில் இருந்த மருத்துவரின் கவனக்குறைவால் தாமதமாக் தகவல் சொல்லப்படுவதாக எழுதி கையொப்பமிட்டு மருத்துவமனையின் முத்திரையும் வைத்து கொடுத்துள்ளார்.

கடிதத்தை வாங்கிய காவல்துறையினர், துரிதமாக செயல்பட்டு நாகராஜனின் இரண்டு கண்களையும் எடுத்து கண்தானம் கொடுத்த பின்னர். உடற்கூறு ஆய்வுகளை முடிந்து நாகராஜனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர்கள் குறிஞ்சி மருத்துவமனையில் இருந்து வெளியில் வருவதற்கு முன்னரே, ஒவ்வவொரு நிறுவனத்துக்கும் தாங்கள் மருத்துவமனையில் உங்கள் நிருபர் உட்பட 30 குண்டர்கள் வந்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள், இதை நான் ஒரு புகாராக சொல்லவில்லை, உங்கள் நிர்வாகத்தின் மீது உள்ள நல்ல மதிப்பினால் நான் இந்த தகவலை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளேன் என்று அனைத்து பத்திரிகை அலுவலங்களுக்கும் மின் அஞ்சலில் செய்தி அனுப்பிவிட்டார் மருத்துவர் ஜெயராமன்.

செய்தியை விடவும், விளம்பரத்தை மட்டுமே முக்கியமாக கருதும் தமிழ் செய்தி நிறுவனங்கள் எல்லாம் அப்போது தங்களின் நிருபர்களை கூப்பிட்டு, நீ அங்கே எதுக்கு போன...? உனக்கு அங்கே போக “அசைன்மென்ட் யார் கொடுத்தா....? போனாலும் செய்தி எடுப்பது தான் உன்வேலை, அதைவிட்டு விட்டு தேவையில்லாமல் எதுக்கு டாக்டர் கிட்டபோய் கேள்வியெல்லாம் கேட்டாய்...? என்று நிருபர்களை கேள்வி கேட்டுக்கொண்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு நன்கு பழக்கமுள்ள அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் சொன்ன தகவல் இன்னும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, அதாவது நாகராஜனுக்கு தலையில் அடிபட்டு மண்டை உடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது, ஆனால் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை கொடுக்காமல், காலுக்கு மட்டுமே கட்டு போட்டுள்ளார்கள், மயங்கிய நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஊசி மூலம் மட்டுமே மருந்து செலுத்தவேண்டும், ஆனால் நாகராஜனுக்கு வாயின் வழியாக மாத்திரை கொடுத்துள்ளார்கள். தங்களிடம் இந்த வசதியில்லை என்று வேறு மருத்துவமனைக்கு அனுப்ப விருப்பமில்லாமல், பணத்தை பிடுங்க செய்யப்படும் கொடுமையான வேலைகள் இது என்று சொன்னார்கள்.

தலையில் அடிபட்டு நினைவிழந்த ஒருவரை எங்கு சிகிச்சைக்கு கொண்டு போகவேண்டும் என்று 108 ஆம்புலென்ஸ்சில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு நன்றாக தெரியும், நாகராஜன் அடிபட்ட இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் கோகுலம் மருத்துவமணை அல்லது அரசு மருத்துவமானைக்குதான் கூட்டி வந்திருக்க வேண்டும், பெரும்பாலான 108 ஆம்புலேன்சில் உள்ள ஊழியர்கள் ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள் காரணம், சேலத்தில் உள்ள சில டம்மி மருத்துவமனைகள் 108 ஆம்புலென்ஸ் ஒட்டுனருக்கும், மருத்துவ உதவியாளருக்கும் சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு கேசை தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தால், ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கமிஷன் கொடுக்கிறார்கள். இந்த கமிசனுக்க ஆசைப்படும் 108, ஊழியர்கள் அடிபட்டு கிடக்கும் அப்பாவிகளை கொண்டுபோய் இப்படி கொலைகார மருத்துவரிடம் சேர்த்து விடுகிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது....
திருடர்கள் கூட திருந்தலாம், ஆனால் மருத்துவர்கள் திருந்துவார்களா...?


பெ.சிவசுப்ரமணியம், சேலம் நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 1:29 pm

சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு கேசை 108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் 44296

மனிதாபிமானம் மருத்துவத்துறையிலும் இறந்துவிட்டது...
அடிபட்ட பத்திரிக்கையாளருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமை???? என்ன?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு கேசை 108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் 44296

மனிதாபிமானம் மருத்துவத்துறையிலும் இறந்துவிட்டது...
அடிபட்ட பத்திரிக்கையாளருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமை???? என்ன?

காசு இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் கடினம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 2:51 pm

படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது , மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா நம் தமிழ்நாட்டில் 108 ஆம்புலென்ஸ் ஊழியர்களால் சாகடிக்கப்டும் உயிர்கள் 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக