|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Page 2 of 17 • Share •
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய(
) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய(
) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
ரேவதி wrote:
சடாலென சிவாக்குள் ஒரு சாரல் அடித்தது காரணம், ??
அது மழைக்காலம்...
பெரும்(சிறு)கதை அருமை ரேவதி.. வாழ்த்துக்கள்..


நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
முகவரி படித்து பார்த்தான் !....7,ராஜபாதர் ஸ்ட்ரீட் .......சென்னை !அந்த தெருவில்தான் சிவாவின் நண்பன் ராம்கி வீடு இருப்பது ஞாபகம் வந்தது....அவனையும் பார்த்தது போல் ஆயிற்று ...இந்த அடையாள அட்டையையும் கொடுத்துவிடலாம் .....மனதில் எண்ணம் ஓடியது ....உதவிசெய்யும் குணம் சிவாவிற்கு பிறவியிலையே அமைந்துவிட்டது ! மற்றவர்களாக இருந்தால் நமக்கென்ன என்று தூக்கி வீசிவிடுவார்கள் . சிவாவால் அப்படி செய்யமுடியாதுவை.பாலாஜி wrote:நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
*************
வாடாமாப்ள ! ............ என்னடா இந்தப்பக்கம் ....
சும்மாதான் பாத்துட்டு போகலாம்னு ...சரி வா ...ஹோட்டல...சாப்பிட்டுட்டே பேசலாம் ...பில் உன்னது .ஓ.கே ...நண்பர்கள் சிரித்து பேசி பிரியும் வேளை வந்தபோதுதான்
சிவா சொன்னான் ..இந்த 7,ராஜபாதர் ஸ்ட்ரீட்...எங்கட மாப்ள இந்த ஐ டி கார்டு பீச்ல கிடந்துசு குடுத்துடலாம்நு ....
ராம்கி வாங்கி..புரட்டி பார்த்தான். நம்ம ஷாலினி கார்டு ....நேத்திக்கூட பாத்துபேசிக்கிட்டு இருந்தேன்பா !..பக்கத்து தெருதான்
சரி போ...நான் குடுத்தர்ரென் ....
ஓ.கே.டா. மாப்ள ..நா வர்றேன்
==================
ஆபீஸில் மறுநாள் பேப்பரை புரட்டியபோது அந்த விளம்பரம் எதேசையாக கண்ணில் பட்டது .ஐ டி யில் இருந்த அதே பெண்
காணவில்லை :
பெயர் :ஷாலினி
வயது :23
கல்லூரிக்கு சென்றவரை கடந்த 7 நாட்களாக காணவில்லை ....
================
ஹலோ ராம்கி நான் சிவா பேசுறேன் ....அந்த ஐ டி....குடுத்திட்டியா
ஓ.நானே சொல்லணும் நு நெனெச்சேன் ..நீயே போன்பண்ணிட்ட .......நேத்தைக்கு ஷாலினிகிட்ட கொடுத்தேன் ...உனக்கு தாங்க்ஸ் சொல்ல சொன்னாடா!
ஓ.கே. ட வச்சிரு....
========================
விளம்பரத்தை பார்த்து ..போலீஸ் தொலை பேசி எண்ணிற்கு டயல் செய்தான் .....கண்ட்ரோல் ரூமில் இருந்து பேசினார்கள்
சார் ...ஷாலினி னும் ஒரு பொண்ணு காணும்னு விளம்பரம் பார்த்தேன் கிடச்சிட்டாங்களா 1
இல்லையே சார் ! ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டேன்கிறது உங்களுக்கு ஏதாவது அவங்கள பத்தி தெரியுமா ?
தெரியுமே ...ராம்கி னும் அவங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல ஒருத்தன் இருக்கான் அவனை பிடித்து விசாரிங்க ...உண்மை தெரியும் !...நானே நேரில் வந்து சொல்றேன்
================
மறுநாள் பத்திரிக்கை செய்தி
இளம் பெண்ணை ஏமாற்றி கடலில் அமுக்கி கொலை செய்த வாலிபர் கைது ! துப்புக்கொடுத்த நண்பருக்கு போலீஸ் பாராட்டு
சென்னை : ராம்கி என்ற வாலிபர் ..........
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
நல்ல முயற்சி பாலாஜி , எழுதும் உறவுகளின் எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகும். திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நானும் இதில் பங்கு பெற முயல்கிறேன். ஒரு காற்புள்ளியாவது தரமாட்டீங்களா. நீங்க் பெரும்புள்ளிதானே.. நெசமாத்தான். ஐசெல்லாம் வைக்கல..
நானும் இதில் பங்கு பெற முயல்கிறேன். ஒரு காற்புள்ளியாவது தரமாட்டீங்களா. நீங்க் பெரும்புள்ளிதானே.. நெசமாத்தான். ஐசெல்லாம் வைக்கல..

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வை.பாலாஜி wrote:
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
அதை பார்த்த சிவா " யாரோ எவ்வளவு அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள் , இந்த பெண்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை " என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் திடீரென்று -----------------------------
ஒரு கை அவன் தோளை தொட்டது . சட்டென்று திரும்பினான் சிவா .
அங்கே ----
------------------------ நின்று கொண்டு இருந்தான் பாலாஜி .
பாலாஜியை பார்த்ததும் சிவாவுக்கு மகிழ்ச்சி
" என்னடா ! சக்ஸஸ் தானே போன வேலை ,
நான் கேட்ட கடன கொடுக்கிறதா அவர் ஒத்துகிட்டாரா ? " என்று கேட்டான்
" இம் -- ஒத்துகிட்டார் " என்றான் பாலாஜி குரலில் சுரத்தே இல்லாமல் .
"இதை ஏண்டா இவ்வளவு சோகமா சொல்ற ? ஏண்டா பணம் கிடைச்சு நான் பிசினஸ் ஆரம்பிக்கிறது உனக்கு பிடிக்கலையா ? " - இது சிவா
" அட , அது இல்ல டா நானே வேறு ஒரு டென்ஷன் ல இருக்கேன் " என்று சொன்ன பாலாஜியின் கண்ணில் அப்போதுதான் பட்டது சிவாவின் கையில் இருந்தது . உடனே அதை அவன் கையில் இருந்து பிடுங்கி பார்த்தான் பாலாஜி .
அதை கண்டவுடன் அவன் முகம் , அதிர்ச்சியும் , சந்தோஷமும் , சந்தேகமும் , கொஞ்சம் விரக்தியாகவும் எல்லாம் கலந்த கலவையாக தெரிந்தது சிவாவுக்கு
என்னடா ? என்று கேட்டு பாலாஜியை உலுக்கினான் சிவா அவனிடம் பதில் இல்லை அந்த கார்டையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான் பாலாஜி .
"டேய் அது இங்கே கீழே கிடந்தது , நான் அதை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன் " என்றான் சிவா .
அவன் இதை சொல்லி கொண்டு இருக்கும் போதே பாதியில் பாலாஜி
" சிவா , சீக்கிரமா வா , வந்து வண்டியில ஏறு " என்று சொன்னான்
சீறியது பைக் இருவரையும் சுமந்து கொண்டு . சிறிது நேரத்தில் ஒரு வீட்டின் வாசலில் நின்றது . இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர் .
சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை பேசாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டு பாலாஜியை பின் தொடர்ந்தான்.
பாதி இருள் சூழ்ந்த அறையினுள் இருவரும் நுழைந்தனர் .
அங்கே மேசை மீது தலை கவிழ்த்து அழுது கொண்டு இருந்தது ஒரு உருவம்
சற்று அருகில் சென்று பார்த்த போது தெரிந்தது நரை விழுந்த தலை .
ஆம் , அந்த உருவம் ஒரு முதியவர் . அவர் ஏன் அழுகிறார் ?
காரணம் புரியவில்லை சிவாவுக்கு . குழப்பத்துடன் பாலாஜியை பார்த்தான் .
முதியவரின் முதுகில் ஆதரவாய் கைவைத்து அவரை தட்டி எழுப்பினான் பாலாஜி .
முதியவர் தன் தலையை நிமிர்த்தி பார்த்தார் . பாலாஜியை கண்டவுடன் சிறு குழந்தை போல் அவனை கட்டிபிடித்துக்கொண்டு அழுதார் .
"என் தீபா எங்கோ போய்விட்டாள் ? என்னை வேண்டாம் என்று சொல்லி போய்விட்டாள் ? " என்று கூறிக்கொண்டே அழுதார் அந்த முதியவர் .
பாலாஜி சொன்னான்
" இல்லை , ஸார் அவள் எங்கும் போகவில்லை இதோ இங்கு இருக்கிறாள் "
என்று அந்த கார்டை அவரிடம் காட்டினான் .
அதை பார்த்த முதியவர் பாய்ந்து அதை பிடுங்கி தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டு "அம்மா வந்துவிட்டாயா ? எங்கே என்னை விட்டு போயி விட்டாயோ என்று நினைத்து துடிதுடித்துவிட்டேன் . நீ மட்டும் இப்போ வந்து இருக்காவிட்டால் நான் செத்து இருப்பேன் " என்று கூறி அந்த கார்டை கட்டி அனைத்து முத்தமழை பொழிந்தார் .
அவரை அப்படியே படுக்கையில் படுக்க வைத்தான் பாலாஜி . போர்வையை எடுத்து போர்த்திவிட்டு " அழாதீர்கள் " என்றான் . முதியவரும் சரி என்பது போல தலை அசைத்தார் நெஞ்சில் அந்த கார்டை அணைத்தபடி .
சிவாவும் , பாலாஜியும் வீட்டிற்க்கு வெளியே வந்தனர்
" டேய் என்னடா நடக்குது இங்கே ? ஒண்ணுமே புரியல எனக்கு "
சிவா குழப்பத்துடன் கேட்டான்
பாலாஜியிடம் ஒரு நீண்ட பெருமூச்சும் விரக்தியான சிரிப்பும் வெளிப்பட்டது
மெல்ல அவன் பேச தொடங்கினான்
" சிவா கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பஸ் ல போகும்போது
உன் சர்டிபிகேட்ஸ் ஐ நீ தவற விட்டுட்டே இல்ல ?
"ஆமா பாலாஜி , நான் தவியா தவிச்சுக்கிட்டு இருந்தப்போ யாரோ ஒரு நல்ல உள்ளம் என் தொலைந்த சர்டிபிகேட்ஸ் ஐ என் அட்ரஸ் க்கு அனுப்பி வச்சாங்க
அவங்க திருப்பி தந்தது என் சர்டிபிகேட்ஸ் ஐ இல்ல டா என் வாழ்க்கைய "
என்ற தழு தழுத்த குரலில் சொன்னான் சிவா .
"அந்த நல்ல உள்ளத்தை கண்டு பிடிச்சு மனதார நன்றி சொல்லனும்டா" என்றான்
அப்படியா ! இங்க வா , என்று அழைத்துக்கொண்டு அந்த வீட்டின் பூஜை அறைக்கு சென்றான் பாலாஜி . அங்கே -----------------------------
id கார்டில் இருந்த பெண்ணின் புகைப்படம் பெரிய அளவில் மாட்டப்பட்டு இருந்தது அந்த படத்துக்கு --- மாலை போடப்பட்டு இருந்தது . அதிர்ந்து போனான் சிவா
நன்றி சொல் தீபாவுக்கு - இது பாலாஜி
குழம்பி தவித்தான் சிவா
தொடர்ந்தான் பாலாஜி
"தீபா என் தோழி , அவள் பெற்றோருக்கு ஒரே மகள் . அப்பா செல்லம் .
அவள் கேட்டதை எதையும் மறுக்காமல் வாங்கி தருவார் அவள் அப்பா
அவள் கேட்டாள் , ஸ்கூட்டி வாங்கி தந்தார் .
அவள் கேட்டாள் , கார்த்திக் ஐ .
அவர் மறுக்கவில்லை .
"சரிமா உன் விருப்பமே என் விருப்பம்" என திருமணத்திற்க்கு சம்மதித்தார் .
திருமண நாள் நெருங்கியது .
" அம்மா , பியூட்டி பார்லர் வரைக்கும் போயிட்டு வரேன் " என்று வாசலில் இருந்து கத்திய படியே தன் ஸ்கூட்டி யில் சிட்டென பறந்தாள் .
"பாத்து மெதுவா போடி" என்று கத்தியபடியே அவள் அம்மா ஓடி வந்தார்
அதற்குள் தீபா தெருமுனையை கடந்து இருந்தாள் .
நேரம் ஆகிகொண்டே இருந்தது " டேய் பாலாஜி எனக்கென்னவோ பயமாயிருக்கு கொஞ்சம் பார்லர் வரை போயி பாருடா " என்று தீபா அம்மா சொன்னார்கள்
சரி என்று நான் என் பைக்கை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது . அதில் தீபா ரத்த கோலத்தில் . அம்மா அதை கண்டு மூர்ச்சை ஆனார் .
ஆம்புலன்சில் வந்தவர் சொன்னார்
"இந்த பொண்ணு ரோட் ஆக்சிடென்ட் ல செத்து போச்சுபா ,
பக்கத்தில இதோ இந்த id கார்ட் கிடந்தது அத பாத்து இங்கே கொண்டு வந்தோம் "
எனக்கு பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டது .
உடனே தீபாவின் அப்பா ஆபீசுக்கு ஃபோன் போட்டேன் .
மூர்ச்சை ஆகி இருந்த அம்மாவை தட்டி எழுப்ப முயன்றேன்
நீண்ட நேர முயற்சிக்கு பின்னரே தெரிந்தது
போனது தீபா மட்டும் அல்ல அவள் அம்மாவும் தான் என்று
தீபாவின் அப்பா வந்தார் . ஒன்றும் பேசவில்லை. எல்லாவற்றையும் பார்த்தார் . இனி ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் கவனிங்கப்பா என தன் வேலைக்காரர்களிடம் சொன்னார் . அறையின் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தார்
கட கடவென எல்லா காரியமும் நடக்க ,
உலகத்தை விட்டு சென்ற தீப்பாவும் அவள் அம்மாவும்
வீட்டை விட்டு சென்று விட்டனர் .
கார்த்திக் கதறி துடித்தான்
இனி தனக்கு வாழ்வே இல்லை என்றான் .
தானும் இறக்கபோவதாக கூறினான் .
அவனது பெற்றோர் அவனை சமாதானம் செய்ய
வெளி நாட்டிர்க்கு அழைத்து சென்றுவிட்டனர் .
தீபாவின் அப்பா அன்று முதல் குழந்தை போல் ஆகிவிட்டார் .
கையில் தீபாவின் அந்த id கார்டை வைத்துக்கொண்டு வீதியில் போவோர் வருவோரிடம் எல்லாம் என் மகள் இந்த காலேஜில்தான் படிக்கிறாள்
இன்னும் காலேஜில் இருந்து வரவில்லை . நீங்கள் பார்த்தீர்களா ?
என கேட்டக துவங்கினார்
அன்று முதல் இன்று வரை இந்த செயலை அவர் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார் . அப்படிதான் அவர் பீச் பக்கம் போயி கேட்டு கொண்டு இருந்து இருப்பார்
அப்புறம் எப்படியோ அதை தவற விட்டு விட்டார் . தேடி பார்த்தும் பிரியோஜனம் இல்லை என்று தெரிந்தவுடன் அவர் கால் போன போக்கில் போயி கொண்டு இருந்தார் .
ரோட்டில் அவரை கண்ட நான் அவரை கொண்டுவந்து வீட்டில் சேர்த்தேன் . விஷயத்தை தெரிந்து கொண்டேன் . எப்படியாவது அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்து சரி , முதலில் உன் விஷயத்தை உன்னிடம் சொல்லிவிட்டு பின் தேடுவது பற்றி யோசிப்போம் என்று நினைத்தே உன்னிடம் வந்தேன் "
சொல்லி முடித்தான் பாலாஜி
சிவாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . ஸ்தம்பித்து நின்றான்
"தீபாவை நீ எனக்கு அறிமுகம் செய்து இருந்தால்
அவளை நேரில் பார்த்து நன்றி சொல்லி இருப்பேன் டா "
என்று ஒரு ஆழ்ந்த பெரு மூச்சுக்கிடையில் சொன்னான் சிவா .
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான் சிவா
போகும் சிவாவை பார்துக்கொண்டு இருந்த பாலாஜியின்
கண்களில் கண்ணீர் வெள்ளமாய் வழிந்தோடியாது .
அவன் மனம் பேசியது
ஆம் , சிவா நான் அவளை உனக்கு அறிமுகம்
செய்ய நினைத்தேன் என் மனைவியாக .
பாலாஜியின் உள்ளம் எரிமலையாக குமுறியது .
தீபா அன்று என்னிடம் சொன்னாள் ,
"யாரோ பாவம் அவங்க சர்டிபிகேட்ஸ் ஐ தவற விட்டுட்டாங்க
நல்ல வேளை அவர் அட்ரஸ் இருக்கு அவருக்கு அனுப்பீரலாம்"
அட்ரெஸ்சை பார்த்தால் , அட ! இது நம்ம சிவா ,
சரி தீபா அவள் இஷ்ட்டபடியே செய்யட்டும்
சிவாகிட்ட இது பத்தி சொல்ல வேண்டாம் .
ஒரு நாள் சிவா முன்னாடி தீபாவை கொண்டு போயி நிறுத்தி
" பாருடா இவதான் என் வருங்கால மனைவி
உன் சர்டிபிகேட்ஸ் ஐ அனுப்பி வைத்தவள்"
என்று பெருமை பொங்க கூறவேண்டும் என்று நினைத்தேனடா நண்பா
ஆனால் என் உள்ளம் சுக்கு நூறாய் உடைந்தது
அவள் கார்த்திக்கை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் .
எனக்கு உலகமே இருண்டு போனது .
அவளுடன் வாழத்தான் எனக்கு கொடுப்பினை இல்லை என்றால் வாய் விட்டு கதறி ஆழ கூட அருகதை இல்லாமல் போய்விட்டது நண்பா எனக்கு
தீபாவின் அப்பா மகளை இன்னமும் நம்பிக்கையுடன்
தேடிக்கொண்டு இருக்கிறார் நிம்மதியாக
உறுதியாக அவள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன்
அவரால் அவ்வாறு சுதந்திரமாக புத்தி சுவாதீனமாக நடந்துகொள்ள முடிகிறது
கார்திக்கால் வாய் விட்டு அழமுடிகிறது
என் காதலி போயி விட்டாளே என்று
அனைவரிடம் கூறி புலம்ப முடிகிறது சுதந்திரமாக
ஆனால் நான் !!????????
என்னால் வாய் விட்டு கதறி ஆழ முடியாது .
அவளை நான் காதலித்தேன் ஆனால் அவள் சென்று விட்டாளே
என்று சுதந்திரமாக சொல்லி புலம்ப முடியாது
எத்தகைய கொடிய பாவி நான் ???????????
மனதினுள் பூட்டியும் வைக்க இயலாமல் ,
வெளியே மற்றவரிடம் சொல்லி அழுது புலம்பவும் முடியாமல்
நான் படும் பாடு , அய்யோ !!? என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே!! .
இந்த கொடுமையை அனுபவிப்பதற்க்கு பதில்
ஒரெடியாக செத்து போய்விடலாமே
அது எவ்வளவோ மேல் என்று எண்ணி எண்ணி உருகி
அழுத படியே மனம் நெந்து வெந்தபடியே
என் இரவுகளை கொன்று ,
காலத்தை வென்று என் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
என்று எண்ணியபடியே சிலையாக ,
பித்து பித்தவன் போல் நின்று இருந்தான் பாலாஜி
காலம் அவன் காயங்களை ஆற்றுமா ? ??????

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
ரேவதி அழகிய நீரோடமான கதை.
உமா மேடுகள் பள்ளங்கள் என்று எதிர்ப்பாராத திருப்பங்கள் நிறைந்து விறு விறு கதை.
பாலா.. ஈகரையின் ராஜேஷ்குமார் என்று சொல்லலாம்.
அழகான கதையைக் கற்பனைனைக் குழைத்துக் கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள்.
ஃ ன்னா மாதிரி வித்தியாசமா யோசிக்கிற இந்த மூன்று பேருக்கு நடுவல நமக்கு எங்கே இடம்.
உமா மேடுகள் பள்ளங்கள் என்று எதிர்ப்பாராத திருப்பங்கள் நிறைந்து விறு விறு கதை.
பாலா.. ஈகரையின் ராஜேஷ்குமார் என்று சொல்லலாம்.
அழகான கதையைக் கற்பனைனைக் குழைத்துக் கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள்.
ஃ ன்னா மாதிரி வித்தியாசமா யோசிக்கிற இந்த மூன்று பேருக்கு நடுவல நமக்கு எங்கே இடம்.

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வை.பாலாஜி wrote:இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..[justify]"நாளைக்கு ஈவினிங் 3 மணி! நான் கரைக்ட்டா வந்துடுவேன். எங்கயும் போகாம இங்கயே இருங்க!"அந்த அடையாள அட்டையில் இருந்தப் பெண்ணைப் பார்த்ததும் சிவாவுக்கு இது தான் நினைவுக்கு வந்தது!அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது...[justify]"நாளைக்கு ஈவினிங் 3 மணி! நான் கரைக்ட்டா வந்துடுவேன். எங்கயும் போகாம இங்கயே இருங்க!"
[/justify]இப்படித்தான் நேற்று சொல்லிவிட்டு சென்றாள் சிவாவின் காதலி சந்தியா!!=============================================="என்ன சிவா... இப்பதான் வறீங்களா? நான் உனக்காக எவ்வளவு நேரம் தனியா இங்க காத்துக் கிட்டு இருக்குறது?""எல்லாரும் என்னை ஒரு மாதரியா பார்த்துட்டு போனாங்க தெரியுமா?""எங்க எரியாவுள இருக்குற யாராவது என்னைப் பார்த்து தொலைச்சிட்டா என்ன பண்ணுறது?""ப்ளீஸ் சிவா, இனிமேல் சொன்ன நேரத்துக்கு கரைக்டா வந்துடுங்க.""அதுக்காக நீங்க முன்னாடி வந்துட்டு என்னை திட்டக் கூடாது. 3 மணின்னா, சரியா 3 மணிக்கு வரணும்.என்றெல்லாம் கொஞ்சிப் பேசிய அவனது காதலி சந்தியாவை அவனால் மறக்க முடியவில்லை!ஆனாலும் தன்னை நினைத்து பார்க்கும் போது வெறுப்பாக இருந்தது!"சந்தியாவின் சிரிப்பிலும், அழகிலும் மயங்கிய சிவா அவளைக் காதலிக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது.! அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டதில் சிவாவுக்கு அதிக சந்தோஷம்,"கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு, இன்னமும் யாரையும் காதலிக்காமல் இருக்கிறாயே" என்று கேட்கும் நண்பர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல, சந்தியாவை அழைத்துக் கொண்டு அவன் ஆபீசுக்கே ஒருநாள் சென்று வந்தான்...."கொடுத்து வச்சவண்டா நீ" என்று நண்பர்கள் பாராட்டும் போது மிகவும் பூரித்துப் போனான்.சந்தியாவும் கால் சென்டரில் தான் வேலை பார்ப்பதாக கூறினாள்.இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பதால் பிரச்சினை ஒன்றும் வாராது என்றெல்லாம் கணக்குப் போட்டு வைத்திருந்தான்.ஒரு நாள் சந்தியா மிகவும் வருத்தத்துடன் கூறினாள்...."சாரி சிவா, இனிமேல் நாம மகாபலிபுரம் போக வேண்டாம். ஏன்னா?.. எங்க அம்மா, பக்கத்து தெருவுள இருந்து என்கூட வேலை பாக்க வர ஒரு பொண்ணுகிட்ட, என்னோட சம்பளம் எவ்வளவு-னு தெறிஞ்சிக்கிட்டு, ஏண்டி சம்பளம் குறையுதுன்னு என்னை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க... நான் பாட்டுல உங்கக்கூட சேர்ந்து 10 நாள் லீவு போட்டுட்டேன்... இப்போ 10 நாள் சம்பளம் எங்கடின்னு எங்க அம்மா எல்லை தொல்லை பண்ணுறாங்க. நான் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கறதுக் குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி.""சரி... வேலைப் பாக்குற பொன்னாச்சே, ஏதாவது வாங்கிக்கட்டும்-னு ஒரு 100 ரூபா கூட குடுக்க மாட்டாங்க. கேட்டா.. எல்லாம் உன் கல்யாணத்துக்கு தான் சேர்த்து வைக்கிறேன்... அப்படின்னு சொல்லுறாங்க..!"[justify]"என்னா சிவா... கோவமா?... எனக்கும் உன்கூட மகாபலிபுரம் வாரதுக்கு ஆசையாதான் இருக்கு. ஆனா என்னா பண்ணுறது...? எங்க அம்மாதான் எல்லாத்துக்கும் காரணம். சரியான பணப் பிசாசு!""சாரி சிவா டார்லிங்..! நீ என்னை தப்பா நினைக்கலயே...? ஐ லைக் யு சிவா...! "என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய சந்தியாவின் நினைவுகளை அவன் அசை போடத் துவங்கினான்....மகாபலிபுரம் போகவேண்டாம் என்று சந்தியா சொன்ன போது,.."இப்ப உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சினை ? சம்பளம் குறையக் கூடாது அவ்வளவுதானே...? அதுக்கு ஏன் கவலைப் படுறே.. சம்பளத்தை நான் தரேன் நீ ஒண்ணும் பீல் பண்ணாதே...""வேண்டாம் சிவா, உனக்கு ஏன் சிரமம்?""உங்க அம்மா உன்னோட கல்யாணத்துக்குதானே சேத்து வைக்கிறாங்க. அப்ப கவலையை விடு, எப்படியும் அது உனக்கு தானே வரப் போகுது.""அதானே.. நீ கூட மஹாபலிபுரம் போகாம இருப்பியா...? அதுக்காக எவ்வளவு கோடி வேணும்னாலும் நீ செலவு பண்ணுவீயே... நீ ஒரு சரியான......" என்று செல்லமாக சிவாவைக் கிள்ளினாள்...."சரி சிவா, நேரம் ஆகிடுச்சி! அம்மா தேடுவாங்க நான் வரட்டுமா? சோ... ஸ்வீட்! நாளைக்கு ஈவினிங் சரியா 3 மணி. இதே இடத்துல! முன்னாடியும் வரக் கூடாது, பின்னாடியும் வரக் கூடாது!" -என்று கூறி ஒரு அட்வான்ஸ் முத்தத்துடன் சென்ற சந்தியா இன்னும் வரவில்லையே...என்ற காரணத்தை உணர்ந்த சிவா, அந்த அடையாள அட்டையை தனது பார்சில் வைத்துக் கொண்டு சந்தியாவுக்கு போன் செய்தான்....அதுவரை அனைத்து வைக்கப் பட்டிருந்த அவளது மொபைல் இப்போது மணியடித்தது!"ஹலோ டார்லிங்!... அதுக்குள்ள வந்துட்டீங்களா, ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங் டியர்.! இதோ 10 நிமிசத்துல வந்துடுறேன் எங்கயும் போகாதீங்க அங்கயே இருங்க..." என்று பரபரப்புடன் கூறிவிட்டு போனைத் துண்டித்துக் கொண்டாள்!சிவா தனது நிலைமையை நினைத்து சோர்ந்து போனான்...அங்கிருந்து பக்கத்திலிருக்கும் ஒரு கடைக்கு சென்று கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டான்...பணம் எடுத்துக்கொடுக்கும் போது "அந்த அடையாள அட்டை" கீழே விழுந்தது! எடுத்துப் பார்த்தான்!சந்தியா! அதே புன்னகையுடன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்!!சலிப்படைந்தவன் மீண்டும் அதை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரும்பினான்...."மறந்திடாதீங்க, நாளைக்கு ஈவினிங்க 5 மணி! முன்னாடியும் வரக் கூடாது, பின்னாடியும் வரக் கூடாது...எங்கயும் போகாம இங்கயே இருங்க!!" -என்று யாரோ ஒருவனுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள் சிவா வைத்திருந்த அடையாள அட்டையில் இருந்த அதே சிவாவின்... அதே சந்தியா!!"எங்கயும் போயிடாதீங்க இங்கயே இருங்க!!"
[/justify]
[/justify]

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
யப்பா....!!!
பஞ்ச் திரிக்கு இருந்த வரவேற்பைவிட இந்தத் திரிக்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!
அனைவருமே வெளுத்துக் கட்டுகிறீர்கள். இன்னும் மிதுனாவின் கதை மட்டும் படிக்கவில்லை!
உமா, ரேவதி மற்றும் பாலாவின் கதை செம்மையாக உள்ளது! நல்ல கற்பனை வளம்!
அந்தப் பார்வையின் கதையையும் படித்து விட்டு வருகிறேன்!
பஞ்ச் திரிக்கு இருந்த வரவேற்பைவிட இந்தத் திரிக்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!
அனைவருமே வெளுத்துக் கட்டுகிறீர்கள். இன்னும் மிதுனாவின் கதை மட்டும் படிக்கவில்லை!
உமா, ரேவதி மற்றும் பாலாவின் கதை செம்மையாக உள்ளது! நல்ல கற்பனை வளம்!
அந்தப் பார்வையின் கதையையும் படித்து விட்டு வருகிறேன்!

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
சிவா wrote:
இன்னும் மிதுனாவின் கதை மட்டும் படிக்கவில்லை!

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.
ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ?

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள்.
நன்றி ஆதிரா அக்கா
என் பெயர் மதினா இல்ல மிதுனா
நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?
( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?
Last edited by மிதுனா on Wed Nov 30, 2011 10:03 am; edited 1 time in total

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
மிதுனா அக்கா ,
நல்ல செண்டிமெண்டான கதை!
வாழ்த்துக்கள்!!
நல்ல செண்டிமெண்டான கதை!
வாழ்த்துக்கள்!!


ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 
Page 2 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










