|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தூர்: ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வீரேந்திர சேவாக்கின் சரித்திரச் சாதனையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருதினப் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் இமாய வெற்றி பெற்றது.
இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சேவாக்கில் தனிப்பட்ட சாதனையுடன், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்றுப் பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கியது இந்திய அணி.
துவக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கார்த்திகைத் தீபத் திருநாளில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரசிகர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினார், சேவாக்!
சச்சின் சாதனை முறியடிப்பு...
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்த பெருமையும் அவருக்கு கிடைத்தது.
இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
இந்தியா சாதனை ஸ்கோர்...
இந்தூர் ஒருநாள் போட்டியில், இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது. இதுவே ஒருநாள் போட்டியில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
சேவாக்கின் சாதனை ஆட்டத்துக்கு எதிர்முனையில் பக்கபலமாக இருந்த கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் சேர்த்தனர். ஜடெஜா 10 ரன்கள் எடுத்தார். ரோஹித் ஷர்மா 27 ரன்களையும், கோஹ்லி ஆட்டமிழக்காமல் 23 ரன்களையும் எடுத்தனர்.
ரம்தீன் போராட்டம்...
இப்போட்டியில் 419 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
எதிர்முனையில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க, ரம்தீன் தனியாக போராடி அதிகபட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். சிம்மன்ஸ் 36 ரன்களையும், சாமுவேல்ஸ் 33 ரன்களையும் எடுத்தனர். ரசல்ஸ் 29 ரன்கள் எடுத்தார். நரேன் 27 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ராஜேஷ் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரெய்னா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஒருபோதும் எதிர்பாக்கவில்லை: சந்தோஷ சேவாக்
இந்தூரில் 219 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுச் சாதனையை நிழ்த்திய சேவாக், "நான் இரட்டைச் சதம் அடிப்பேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை," என்றார்.
தமது சாதனை குறித்து அவர் கூறுகையில், "இரட்டைச் சதம் அடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஓபனிங் இறங்கியபோது, நிதானமாக விளையாடினால் கணிசமான ரன்களை குவிக்க முடியும் என்று கம்பீரிடம் சொன்னேன்.
பவர் ப்ளே தொடங்கிய பின்புதான் இரட்டை சதம் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனது கேட்சை சம்மி (170 ரன்கள் இருந்தபோது) தவறவிட்ட தருணத்தில்தான், கடவுள் என்னோடு இருக்கிறார் என்று உணர்ந்தேன்.
எனது குடும்பத்தினர், ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இரட்டைச் சதம் அடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தை அறிந்தேன். இன்று, சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று தோன்றும்போது அடித்தேன்," என்றார் சேவாக்.
நக்கீரன்

பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
எதிர்பார்க்காத ஒன்று 149 பந்துகளில் 219 ரன்கள்
வாழ்த்துக்கள் சேவாக் வரலாற்றில் இன்னொரு இந்தியன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
மனமார்ந்த வாழ்த்துக்கள்........
அண்ணா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆடிய போட்டியில், அவர்கள் 434 ரன்கள் எடுதார்களே, அப்ப அது தானே அதிக பச்ச ஸ்கோர்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
பிஜிராமன் wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள்........
அண்ணா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆடிய போட்டியில், அவர்கள் 434 ரன்கள் எடுதார்களே, அப்ப அது தானே அதிக பச்ச ஸ்கோர்........
அதைத்தான் நானும் நினைத்தேன். அதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் கூகிளில் உள்ளேன்!

பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
இன்று இந்தியா பதிவு செய்துள்ள ஸ்கோர் 4-வது அதிகபட்ச ஸ்கோர். நக்கீரனின் செய்தி தவறு.
http://en.wikipedia.org/wiki/List_of_One_Day_International_cricket_records
http://en.wikipedia.org/wiki/List_of_One_Day_International_cricket_records

பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
Batsman (Country) Score Balls 4s 6s Versus Venue Date
Virender Sehwag (India) 219 149 25 7 West Indies Indore 8 Dec 2011
Sachin Tendulkar (India) 200* 147 25 3 South Africa Gwalior 24 Feb 2010
Saeed Anwar (Pakistan) 194 146 22 5 India Chennai 21 May 1997
Charls Coventry (Zimbabwe) 194* 156 16 7 Bangladesh Bulawayo 16 Aug 2009
Vivian Richards (West Indies) 189* 170 21 5 England Old Trafford 31 May 1984
Sanath Jayasuriya (Sri Lanka) 189 170 21 5 India Sharjah 29 Oct 2000
Gary Kirsten (South Africa) 188* 159 23 4 UAE Rawalpindi 16 Feb 1996
Sachin Tendulkar (India) 186* 150 20 3 New Zealand Hyderabad 8 Nov 1999
Shane Watson (Australia) 185* 96 15 15 Bangladesh Mirpur 11 Apr 2011
MS Dhoni (India) 183* 145 15 10 Sri Lanka Jaipur 31 Oct 2005
Sourav Ganguly (India) 183 158 17 7 Sri Lanka Taunton 26 May 1999
Vivian Richards (West Indies) 181 125 16 7 Sri Lanka Karachi 13 Oct 1987
Mathew Hayden (Australia) 181* 166 11 10 New Zealand Hamilton 20 Feb 2007
Hamilton Masakadza (Zimbabwe) 178* 167 17 4 Kenya Harare 18 Oct 2009
Paul Stirling (Ireland) 177 134 21 5 Canada Toronto 7 Sep 2010
Kapil Dev (India) 175* 138 16 6 Zimbabwe Tunbridge 18 Jun 1983
Herschelle Gibbs (South Africa) 175 111 21 7 Australia Johannesburg 12 Mar 2006
Sachin Tendulkar (India) 175 141 19 4 Australia Hyderabad 5 Nov 2009
Virendra Sehwag (India) 175 140 14 5 Bangladesh Mirpur 19 Feb 2011
Mark Waugh (Australia) 173 148 16 3 West Indies Melbourne 9 Feb 2001
Craig Wishart (Zimbabwe) 172* 151 18 3 Namibia Harare 10 Feb 2003
Adam Gilchrist (Australia) 172 126 13 3 Zimbabwe Hobart 16 Jan 2004
Lou Vincent (New Zealand) 172 120 16 9 Zimbabwe Bulawayo 24 Aug 2005
Glenn Turner (New Zeland) 171* 201 16 2 East Africa Edgbaston 7 Jun 1975
Dave Callaghan (South Africa) 169* 143 19 4 New Zealand Centurion 11 Dec 1994
Brian Lara (West Indies) 169 129 15 4 Sri Lanka Sharjah 16 Oct 1995
Robin Smith (England) 167* 163 17 3 Australia Edgbaston 21 May 1993
Brendon McCullum (New Zealand) 166 135 12 10 Ireland Aberdeen 1 Jul 2008
Ricky Ponting (Australia) 164 105 13 9 South Africa Johannesburg 12 Mar 2006
Sachin Tendulkar (India) 163* 133 16 5 New Zealand Christchurch 8 Mar 2009
Shane Watson (Australia) 161* 150 12 4 England Melbourne 16 Jan 2011
Andrew Hudson (South Africa) 161 132 13 4 Netherlands Rawalpindi 5 Mar 1996
James Marshall (New Zealand) 161 141 11 4 Ireland Abderdeen 1 Jul 2008
Imran Nazir (Pakistan) 160 121 14 8 Zimbabwe Kingston 21 Mar 2007
Tillakaratne Dilshan (Sri Lanka) 160 124 20 3 India Rajkot 15 Dec 2009
Dinesh Mongia (India) 159 147 17 1 Zimbabwe Guwahati 19 Mar 2002

முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
வேண்டுமென்றால், நான்கு முறை 400 ரன்களை கடந்த அணி என்று வைத்துக் கொள்ளலாம் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
வாழ்த்துக்கள் சேவாக்

அப்துல்- இளையநிலா

- பதிவுகள்: 778
வசிப்பிடம்: முத்து நகரம் ,தமிழ்நாடு
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 81
Re: சேவாக்கின் சரித்திர சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சரித்திரத்தை இந்திய அதிரடி மன்னன் 33 வயதான வீரேந்தர் ஷேவாக் நேற்று படைத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 219 ரன்கள் குவித்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாலியரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் குவித்து (147 பந்து) கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற அரிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது வரிசையில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ள ஷேவாக், அவரது சாதனையையும் முந்தி விட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் ஷேவாக், நீண்ட நாளைக்கு பிறகு விசுவரூபத்தை காட்டினார். முந்தைய 3 ஆட்டங்களில் சரியாக விளையாடாத அவர், ஒட்டுமொத்த சுறுசுறுப்பையும் குத்தகைக்கு எடுத்து இந்தூர் மைதானத்தில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே படைத்தார்.
தொடக்கத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்த அவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை ஓட விட்டார். 69 பந்துகளில் தனது 15-வது சதத்தை கடந்த ஷேவாக், தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். அடுத்த 71 பந்துகளில் மேலும் 100 ரன்களை சேர்த்து, புதிய சாதனை மகுடத்தை சூடிக் கொண்டார்.
பவுண்டரி அடித்து இரட்டை சதத்தை கடந்த அவர் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒரு நாள்போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார். சாதனையை நேரில் கண்டு களித்த ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் ஸ்டேடியமே அதிர்ந்து போனது.
தெண்டுல்கர் தனது இரட்டை சதத்தை 50-வது ஓவரில் தான் படைத்தார். ஆனால் ஷேவாக்கோ 44-வது ஓவரிலேயே அதனை எட்டி விட்டார். அதாவது 140 பந்துகளில் இரட்டை சதம் விளாசி, குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் தனதாக்கி இருக்கிறார்.
மொத்தம் 219 ரன்கள் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்த அவர் 47-வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து லாங்-ஆப் திசையில் கேட்ச் ஆனார். தனது 240-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய ஷேவாக் நேற்று 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனை பட்டியலிலும் இணைந்தார். அவர் வெளியேறிய போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவர் இரட்டை செஞ்சுரியை கடந்த போது, கிரிக்கெட் சங்கம் சார்பில் மைதானத்திற்குள்ளேயே அவருக்கு பூங்கொத்து கொடுக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்ததும் அதனை பெற்றுக்கொள்வதாக கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
1984-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அது தனிநபரின் அதிகபட்ச ரன்னாக பதிவானது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் சேர்த்து, ரிச்சர்ட்சின் சகாப்தத்திற்கு முடிவு கட்டினார். இதன் பிறகு அன்வரின் சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது. அந்த சாதனையைத்தான் தெண்டுல்கர் கடந்த ஆண்டு முறியடித்தார்.
ஆனால் தெண்டுல்கரின் சாதனைக்கு ஆயுசு ரொம்ப குறைவு. 2 1/2 மாதங்களிலேயே அது முடிவுக்கு வந்து விட்டது. ஒரு நாள் போட்டிகளில் பெரும்பாலான சாதனைகள் தெண்டுல்கர் வசம் தான் உள்ளன. அவற்றில் மிகவும் அத்திப்பூத்தாற் போன்ற ஒரு அரிய சாதனையை மட்டும் ஷேவாக் தட்டிப்பறித்து உள்ளார்.
கடந்த ஆண்டு இரட்டை சதத்தை கடந்த தெண்டுல்கர், அப்போது கூறும் போது, ''சாதனைகள் என்பதே முறியடிக்கப் படக்கூடியது தான். இந்த சாதனையும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும். எனது சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்வேன்'' என்று கூறியிருந்தார். அவர் நினைத்தபடி, இப்போது அவரது சிஷ்யரே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் (2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்) என்ற சிறப்புக்குரிய ஷேவாக், ஒரு நாள் போட்டியிலும் அந்த பெருமையை தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார்.
1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டெல்லியை சேர்ந்த ஷேவாக், 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டை சதம் தன்னால் அடிக்க முடியும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு முறை கூட 50 ஓவர்கள் முழுமையாக நின்றது கிடையாது. அப்படி நிற்காவிட்டாலும் நேற்று அந்த அதிசயத்தை செய்து காட்டி விட்டார். ஒட்டுமொத்தத்தில் நேற்றைய தினம் அவருக்குரிய நாளாக அமைந்தது. இப்போது அவர் வாழ்த்து மழையில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.

வீரூ கலக்குங்ங்க.
வீரூ கலக்குங்ங்க.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum