புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_m10ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உளறல் பதிவு !!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 6:50 pm

First topic message reminder :

நேற்று படுக்கையிலிருந்து எழுந்திரிக்கும் போது, ‘காலை உதயத்தில் எழுவோமா’ என்று எஸ்.பி.பி குரலில் ஒரு வரி மட்டும் மனசுக்குள் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்டு ஏறக்குறைய பல வருஷம் இருக்கும். பாட்டின் இதர வரிகளோ, பல்லவியோ சுத்தமாக நினைவு வராவிட்டால் பரவாயில்லை. தும்மல் வரும் போல இருந்து தலையை அண்ணாந்து ஹாங் என்று இழுப்போம் ஆனால் தும்மல் வராதே அந்த மாதிரி ஒரு அவஸ்தை இது. வேக்காக கொஞ்சம் நினைவு வருவது போல இருக்கும், கொஞ்சம் ஆழ்ந்து தேடினால் எல்லாம் பிளாங்க் ஆகிவிடும்.

மூக்கை விடைத்துக் கொண்டு, அரைக் கண் மூடி, தலையைச் சாய்த்து அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடியபடி கேட்டுக்கும் போர்டிகோவுக்குமாக நடந்தேன். பக்கத்து பிளாட் நண்பர்,

“என்ன சார், கருக்கல்லயே எளுந்துட்டீங்க?” என்றார்.

“ஆக்சுவலா ராத்திரியே எழுந்துட்டேன். ஞாபகம் வந்துதுன்னா காலைல தூங்கலாம்ன்னு இருக்கேன்” என்றேன் பாட்டை முணுமுணுத்தபடி.

ராபிஸ் வந்த நாயைப் பார்ப்பது போல என்னைப் பார்த்து விட்டு கேட்டைத் திறக்காமலே ஏறிக் குதித்து ஓடினார்.

மணி காலை நாலரை என்பதால் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தது தப்பு. விடிந்த பிறகு பக்கத்து வீட்டு ஆசாமி என் ரூம்மெட்டிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவர் அக்கா பையனுக்கு இதை விட முற்றின ஸ்டேஜாக இருந்து சரியாகி விட்டதாம். நாகர்கோயில் பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்தலத்தை சிபாரிசு செய்தார். ”சோட்டானிக்கரை எல்லாம் வேண்டாம். உக்கிரம் ஜாஸ்தி. மரத்தில நெத்தியாலயே ஆணி அடிக்கிற அளவுக்குப் போய்டும்” என்று பிரிகாஷணும் கொடுத்தார்.

என் கவனத்துக்கு இதெல்லாம் போகவில்லை. மாடிப்படியில் தடுக்கி விழுந்து முட்டிக்கால் சிராய்த்த போதும் என் தேடல் தொடர்ந்தது. மெய் வருத்தம் பாரார், காப்பி குடியார், பம்ப் போடார், செடிக்கு தண்ணீர் ஊற்றார் கருமமே கண்ணாயினார் (இவர் யார் புது நாயனார்?) என்று டூண்ட்தே ரெஹெ ஜாயேகி!

“விட்டுத் தொலை மச்சி. ஏன் இப்படி பைல்ஸ் வந்த மாதிரி முழிக்கிறே?” என்று என் நண்பன் கைவிடச் சொல்லி சிபாரிசு செய்த போதும் நிறுத்தவில்லை.

“அதான் உங்க அக்கா பையன் இருக்கானே உங்க குடும்பத்து அப்துல் ஹமீத், அவனைக் கேட்கிறதுதானே?”

“ம்ம்ஹூம், நானேதான் கண்டுபிடிப்பேன்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

“அப்ப கிழியாதது ஹோசூரா?”

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எனக்கு ஆஃபீசுக்கு நேரமாச்சு. டிஃபன் சாபிடபோறியா, இல்லை இதே பைல்ஸ் முழியோட மாடிலயே இருக்கப் போறியா?”

“………………………………………………………………………..”

“வாயை மூடிகிட்டு யோசி, பல்லி கில்லி விழுந்துடப் போகுது”

இதற்கெல்லாம் நான் அசரவில்லை.

சுமார் பதினோரு மணிக்கு ‘குங்குமச் சாந்துக்கு மேலே’ என்று இன்னொரு வரி ஃப்ளாஷ் அடித்தது. போகப் போக கே.வி.மஹாதேவனின் டண்டர டண்டர.. டிங்.. டிங் ம்யூசிக் எல்லாம் கூட நினைவு வந்தது. அப்படியே தூங்கிப் போய் விட்டேன். கனவில் ஜெய் ஷங்கரும் லட்சுமியும் ஆடியோவை ம்யூட் செய்துவிட்டு வீடியோவில் மட்டும் தெரிந்தார்கள். நெற்றி நிறைய விபூதியுடன் கே.பி.சுந்தராம்பாள் “மகனே இன்னுமா ஞாபகம் வரவில்லை?” என்று கேட்டார். அவர் தோளில் மாட்டியிருந்த டிரான்ஸிஸ்டரில், பாட்டின் பல்லவியைக் கேட்டுவிட்டு,

“வந்திருச்சு.. வந்திருச்சு” என்றேன்.

“அடக் கடவுளே, இன்னும் டாய்லெட் கூடப் போகல்லியா?”

கே.பி.சுந்தராம்பாளுக்கு என் நண்பன் டப் செய்திருப்பதை வியந்த போது முழிப்பு வந்து ஒரே இருட்டு. ஆஃபீசிலிருந்து திரும்பி வந்த என் நண்பன்,

“வீட்டைத் திறந்து போட்டுட்டு இப்படி குடிகாரன் போலத் தூங்கறீயே, ஹால்ல நாய் வந்து படுத்திருக்கு” என்றதும் சுயநினைவு வந்து,

“கண்டு பிடிச்சிட்டேன்” என்றேன்.

“என்ன, மாணிக்கப் பதுமைக்கு காணிக்கையாக என் மனதைத் தரலாமாதானே?”

“உனக்கெப்படித் தெரியும்?”

“நேத்து ராத்திரி தூக்கத்துல உளறும் போது பல்லவியைத்தான் உளறிகிட்டு இருந்த, எழுந்ததும் மறந்து போச்சு உனக்கு”

“அடக் கடவுளே, இதைக் காலைலயே சொல்லக் கூடாதா?”

“எவ்வளவோ உளர்ர, அதைப் பாட்டுன்னு நான் என்ன கண்டேன், ஆஃபீஸ்ல கேட்டப்புறம்தான் அது பாட்டுன்னு தெரிஞ்சது”

“எவ்வளவோன்னா? வேறென்ன உளறினேன்?”

“அதெல்லாம் ஞாபகமில்லை. தூக்கத்தைவிட முழிச்சப்புறம்தான் ஜாஸ்தி உளர்ர மச்சி ”

எப்படியோ அந்த பாட்டு நியாபகம் வந்ததுல ரொம்ப மகிழ்ச்சித்தான் இதோ அந்த பாடல் வரிகள்

"திரைப் படம்: நீதி தேவன் 1971

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்: SPB, PS"

[b]மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா... நான் மடியில் வரலாமா...

காணிக்கையானபின் ஆனிபொன் ஊஞ்ஜலில் கவிதைகள் பெறலாமா...அதிலே கனவுகள் வரலாமா...

குங்கும சாந்துக்கு மேலே... இளம் கூந்தலின் சாலைக்கு கீழே... மங்களமாய் ஒரு முத்தம் கொடுத்திட மாப்பிள்ளை வரலாமா..அதில் மனவினை பெறலாமா...

செங்கனி இதழ்களின் மேலே...அது தேன் மொழி பேசிடும் போதே...பங்குக்கு நாலெனெ பழங்கல் பறித்து பந்தியில் இடலாமா.. அதை நான் பசியுடன் பெறலாமா...

மாணிக்க பதுமைக்கு காணிக்கையாக என் மனதை தரலாமா...

நான் மடியில் வரலாமா...

மேடிட்ட மணலினில் படுத்து.. சிறு கோடிட்ட புன்னகை விரித்து..தேனிட்ட முகத்துக்கு நான் இட்ட நகைகளை சோதனை இடலாமா..இன்ப வேதனை படலாமா...

பொங்கிடும் ஆற்றினில் குளித்து...வரும் போதையிலெ மனம் நனைத்து... சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா...அதிலும் சமரசம் அறிவொமா...

முப்பால் முழுவதும் படித்து.. படித்து அதற்கப்பாலும் நடை எடுத்து..

எப்போதும் இது தப்பாதென்பதை இதயத்தில் அறிவோமா...

காலை உதயத்தில் எழுவோமா....


முடிஞ்சா தரவிறக்கி கேட்டுபாருங்கள்

http://www.divshare.com/i/11709224-317

நன்றி:- பாடல் வரிகள் மற்றும் தரவிறக்க சுட்டி http://asokarajanandaraj.blogspot.com



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 31, 2012 10:49 am

சிவாஜி நடித்த தவப்புதல்வன் படத்தையும் ரசித்துப் பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தின் பாடல்களும் என் அபிமானப் பாடல்களாகவே இருக்கின்றன.

ஆனால், அந்தப் படத்தில் வரும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலையும் அந்தக் காட்சியையும் இன்று பார்த்தால் வேறு மாதிரி சிந்தனைகள் வருகின்றன.

அந்தக் காட்சியில் வரும் முதியவர் அக்பர் என்கிற கண்ணோட்டத்துடன் சின்ன வயதில் பார்த்தேன். அவர் ஒரு வைத்தியர் என்று இப்போது புரிகிறது. தான்சென், வைத்தியர், ஒரு இளம்(?)பெண். அந்தப் பெண் அக்பர் மகள் மெஹருன்னிஸாவாக இருக்கலாம். அவள் தான்செனுக்கு ரூட் விட்டதால்தான் அவர் இஸ்லாமியராக மதம் மாறி அவளை மணந்து கொண்டார் என்கிறது சரித்திரம். ஆகவே அது மெஹருன்னிஸா என்பது தொண்ணூறு சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

காட்சி அமைப்பைப் பார்த்தால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதும், பாட்டைக் கேட்டதும் குணமாகி எழுந்திருப்பதும் புரிகிறது. தான்சென் பாடியது குணமாகவா? தீபத்துக்காகவா அல்லது இரண்டுக்குமா?

சீக்காளிக்குப் பாடியதாக சரித்திரத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. தீபத்துக்காகப் பாடியதாகவும் இல்லை. அவருடைய இசை தீபங்களை ஒளிபெறச் செய்யுமளவு சக்தி வாய்ந்தது என்று சரித்திரம் சொல்கிறது. சரி, அது ஒரு கனவுக் காட்சி; கனவுகள் சரித்திர வரையரைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், ஒளி பெருங்கள் தீபங்களே, இன்னும் ஒளி வரவில்லையே பாவியா நான், ஒளி வேண்டும் என்று கெஞ்சுகிறேன் என்கிற அர்த்தத்திலெல்லாம் அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ஏதோ தான்சென் கெஞ்சிக் கூத்தாடி ஒளி வரவழைத்தது போல இருக்கிறது இது. சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு இசை வித்தகனை இது இழிவு படுத்துவது போலில்லை?

இந்தக் காம்ப்ரமஸுக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். சிவாஜி படங்களுக்கென்று சில ஸ்டாண்டர்ட் காட்சிகள் அவசியம் என்று அன்றைக்கு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், ஏன்… சிவாஜியும் கூட நினைத்தார்கள். தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசைக் கலைஞர். தத்தித் தகஜுண தகதிமி தகஜுண என்று குதித்து வீரு கொண்டு எழுகின்ற பாடல்களை ஹிந்துஸ்தானியில் பார்க்க சாரி கேட்க முடியாது. அதே படத்தில் வரும் போட்டிப் பாடலில் கூட ஹிந்துஸ்தானி கலைஞருக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதிகள் ரொம்பக் குழைவாகத்தான் இருக்கும்.

நடிப்பது சிவாஜி என்பதால் தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கலைஞர் என்பதை சௌகர்யமாக மறந்து விட்டு எம்.கே.டி. பாணி பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை அங்கும் இங்கும் சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி பாடி நடித்திருக்கிறார் சிவாஜி. இது காலத்தின் கட்டாயம். அவர் ரசிகர்கள் இதை எதிர்பார்த்தார்கள், ரசிக்கவும் செய்தார்கள்.அது சரி நமக்கு எதுக்கு இந்த வீண் வம்பு அப்புறம் சிவாஜி ரசிகர்கள் ஆட்டோவ அனுப்பிடபோறாங்க அய்யோ, நான் இல்லை

நாம பாடலை கேட்போம் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 09, 2012 7:38 pm

இது எனக்கு மிகவும் பிடித்த பாட்டு காரணம் அதன் வரிகள் மற்றும் புரட்சித்தலைவரின் நடனம்

காதலி காதலனின் இதழில் ஒரு கவிதை எழுதுகிறாள். அதன் பாதிப்பு என்னவென்று அவன் விழியில் படிக்கிறாள், அத்தனை நெருக்கத்தில் விழிகள்தானே தெரியும்! இந்தக் கவிதையை எழுதிய அவளே ஒரு கவிதை என்கிறான் காதலன்.

இதழில் எழுதி
விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ….


இதற்கப்புறம் வரும் வரிகள் இன்னமும் பொருட்செறிவு நிறைந்தவை.

சின்ன விஷயங்கள் பெரிய அனுபவங்களைத் தருவது நம் எல்லோருக்குமே இருக்கும் அனுபவம். ஒரு உடனடி உதாரணம் திருக்குறள்.இங்கே காதலன் சொல்கிற சின்ன விஷயம் எது தெரியுமா?

சிறு இடையில் உலகின்
சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ….


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இந்தப் பாட்டை எழுதியவர் புலமைப் பித்தன் என்று நினைவு.

இந்தப் பாட்டின் இன்னொரு சிறப்பு த்வஜாவந்தி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரே சினிமாப் பாட்டு இதுதான்.(கேள்விபட்டது மத்தபடி நமக்கும் ராகங்களுக்கும் பத்தாம்பொருத்தம்)

பரிமேலழகருக்குப் பிறகு நல்ல உரையாசிரியர்கள் இல்லை என்று வருத்தப் பட்டவர்கள் இந்த நரி மேல்(male) அழகரைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

பாடல் வரிகள்
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ (2)

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ (2)

ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன (2)
நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன

எதுகை அது உனது இருக்கை
அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
வைகை என்னை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்தி கரை காணவே
பாடல் :புலமைபித்தன்

இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள் :வாணி ஜெயராம் ,ஜெயச்சந்திரன்





ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு உளறல் பதிவு !!!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக