ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by இரா.பகவதி Today at 3:01 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 2:59 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

யு.எஸ்.பி. போர்டில் சிக்கல்களா?

View previous topic View next topic Go down

யு.எஸ்.பி. போர்டில் சிக்கல்களா?

Post by ராஜ்அருண் on Mon Dec 26, 2011 5:39 pm

இன்று கம்ப்யூட்டர் சார்ந்து நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு துணை சாதனம் எது என்றால் அது பிளாஷ் டிரைவ், பென் டிரைவ் மற்றும் தம்ப் டிரைவ் என அழைக்கப்படும் போர்ட்டபிள் பிளாஷ் டிரைவ் தான். எனவே இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படத்தான் செய்திடும். அவற்றிற்கான சில தீர்வுகளை இங்கு காணலாம். முதலில் யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள இரண்டு வகைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.


USB 1.1: இவ்வகையே முதலில் வந்தவை. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருக்கும். பழைய மாடலில் உள்ள சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினுடன் தான் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன. மவுஸ் மற்றும் கீ போர்டுகள் இணைப்பதற்கே இவை பயன்பட்டு வந்தன. பெரிய அளவிலான டேட்டா பரிமாற்றத்தின் போது இவை திணறின. இதனால் இரண்டாவதாக USB 2.0 வெளிவந்தது. இது ஒரு நொடியில் 480 எம்பி அளவிலான தகவல்களை அனுப்பிப் பெற்றது. இதனால் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்த வகை யு.எஸ்.பி. போர்ட் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.


இந்த இரண்டில் எது தங்களிடம் உள்ளது என்று தெரிந்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படவும். Start> My Computer Properties சென்று Properties கிளிக் செய்திடவும். இதில் Hardware டேபில் கிளிக் செய்து பின் Device Manager கிளிக் செய்யவும். கிடைக்கும் பட்டியல் அடிப்பாகத்தில் Universal Serial ஆதண் controllers என்பதனை அடுத்து கூட்டல் (plus sign) அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் USB 1.1 இருந்தால் அங்கு Host Controller or Open Host Controller என்றபடி ஒன்று அல்லது இரண்டு சாதனங்கள் தெரியும். உங்களுடைய கம்ப்யூட்டரில் க்குஆ 2.0 இருந்தால் அங்கு Enhanced Host Controller or USB 2.0 Controller என்று காட்டப்படும். நீங்கள் எந்த யு.எஸ்.பி. சாதனம் வாங்கினாலும் அதில் வழக்கமான சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் கலந்த யு.எஸ்.பி. லோகோ இருக்கும்.

நீங்கள் அதிவேக யு.எஸ்.பி. சாதனத்தை குறைந்த வேகம் கொண்ட யு.எஸ்.பி. போர்ட்டில் செருகினால் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த சாதனம் கூடுதல் வேக போர்ட்டில் இணைக்கப்பட்டால் இன்னும் வேகமாக இயங்கும் என்ற செய்தியைத் தரும். ஆனால் பிரச்னை என்னவென்றால் தாங்கள் யு.எஸ்.பி. தம்ப் டிரைவைச் செருகினால் அதனை கம்ப்யூட்டர் அறிந்து கொள்வதே இல்லை என்பதே. பொதுவாக ஒரு யு.எஸ்.பி. தம்ப் டிரைவினை கம்ப்யூட்டரில் செருகியவுடனேயே அதனை விண்டோஸ் எக்ஸ்பி புரிந்து கொண்டு டாஸ்க் பாரில் புதிய பிரித்தெடுக்கக் கூடிய ஹார்ட் டிரைவ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும்.


அத்துடன் ஒரு கட்டத்தில் இதில் உள்ள போல்டரைத் திறந்து பைல்களைக் காட்டவா? ஆடியோ பைல்களை இயக்கவா? விடியோ பைல்களை இயக்கவா? என்ற செய்தி கேட்கப்படும். இந்த சாதனத்திற்கு டிரைவ் லெட்டர் ஒன்றை விண்டோஸ் ஒதுக்கும். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் வரவில்லை என்றால் நீங்கள் செருகியுள்ள சாதனத்திற்கும் விண்டோஸ் கொண்டுள்ள டிரைவருக்கும் ஏதோ பொருந்தவில்லை என்று பொருள். இதனைக் கீழ்க்கண்டவாறு சரி செய்திடலாம். Start/Control Panel சென்று அங்கு Administrative Tools. என்று இருக்கும் இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். சில வேளைகளில் ஸ்டார்ட் மெனுவிலேயே நேரடியாக Administrative Tools பெற முடியும். அதில் Computer Management என்ற இடத்தில் இரு முறை கிளிக் செய்திடவும். இந்தப் பிரிவின் இடது புறத்தில் Disk Management என்றிருப்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். வலது பக்கம் a removable drive என்றபடி ஒரு டிரைவ் காணப்படும். இது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டிரைவின் பெயர் எழுத்து கொண்டதாக இருக்கலாம். இந்த எழுத்தைக் கொண்டிருக்கும் வெள்ளை பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Change Drive Letter and Paths என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எந்த எழுத்து வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அதன்பின் Change என்பதில் கிளிக் செய்திடவும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்து ஏற்கனவே பயன்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். இனி முதலில் நீங்கள் ஓகே கிளிக் செய்தவுடன் பின் ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இதிலும் ஓகே கிளிக் செய்திடவும். இனி கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் கன்சோலை மூடவும். இப்போது மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து யு.எஸ்.பி. டிரைவிற்கான எழுத்தினைப் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து தெரியவரும்.


யு.எஸ்.பி. போர்ட்டுகளில் வேறு சில வகையான பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள சாதனம் ஒன்று செயல்படாமல் போகலாம். இதற்குக் காரணம் கம்ப்யூட்டரின் உள்ளாக ஏற்படும் பவர் ஷார்ட்டேஜ் பிரச்னை தான். இது பெரும்பாலும் யு.எஸ்.பி. 1.1. வகை போர்ட்டுகளில் தான் ஏற்படும். அதுவும் விண்டோஸ் 2000 இயக்கத்தொகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தொகுப்புகளைப் பயன்படுத்துகையில்தான். இவ்வாறு ஏற்படுகையில் யு.எஸ்.பி. போர்ட்டுகளில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு பின் ஒவ்வொன்றாக இணைக்கவும். இது ஓரளவிற்கு பிரசனையைத் தீர்த்து வைத்திடும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் நான்கு யு.எஸ்.பி. போர்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பின்னால் இரண்டும் முன்னால் இரண்டுமாக இவை அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி வகை இயக்கத் தொகுப்புகள் இவற்றைச் சீராக எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் இயக்கும்படியும் அமைக்கப்படுகின்றன.

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: யு.எஸ்.பி. போர்டில் சிக்கல்களா?

Post by ராஜா on Mon Dec 26, 2011 5:44 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி rajarun , ஆனால் இப்போது பெரும்பாலும் யு‌எஸ்‌பி2.0 & யு‌எஸ்‌பி 3.0 தான் உள்ளது அதனால் இந்த பிரச்சினைகள் பற்றி பலருக்கு தெரியாது

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15369
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: யு.எஸ்.பி. போர்டில் சிக்கல்களா?

Post by முகம்மது ஃபரீத் on Mon Dec 26, 2011 5:54 pm

அருமை நல்ல தகவல் சூப்பருங்க நன்றி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum