|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ராஜா Today at 3:17 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேரை மறந்த விழுதுகள்
Page 1 of 1 • Share •
வேரை மறந்த விழுதுகள்
ஓங்கி வழர்ந்த ஓர் ஒற்றைப் பனையடி.
ஊர்ந்து திரியும் பல எறும்புகளிற்கான
சந்துகளால் பிரிக்கப்பட்ட சரித்திர ஒழுங்கை.
பாரத்து வரவே நானும் போனேன்.
ஒற்றைப் பனையடி கட்டைக் கிழவன்
ஒய்யாரமாக உறங்கினான்,
பனை மட்டைப் பஞ்சணையில்.
கிட்டப்போக எனக்குச் சற்று ஐயம்!
எட்டிப் போனேன் சற்றுத்
தட்டிப் பார்த்தேன்-திடுக்கிட்ட கிழவன்
திக்கென்றெழுந்து பக்கென்று சொன்னான்,
வா மகனே! வா. என்று-பாசத்தின்
இதிகாசம் பரிந்துரைத்தான்.
ஏனையா? இப்படிப் படுக்கை....!
வினா ஒன்று கொடுத்தேன்.
இதை மட்டும் கேளாய்!
பதின்மூன்று வயதில் என் மூத்தவன்
படுத்துறங்கிய பஞ்சணையிதடா-இப்போ
(பாரிஸ்) நாட்டில் பணக்காரனானான்.
என் இளையவள் இதிகாசக் காதலால்
என் இருப்பிடமற்றாள்.
என் கடையவன் கனடா போய்
கதை மறந்தான்.-என்னவள்
இறைபதம் சென்றெட்டுமாதம்.
வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.
இது உனக்கெதற்கு-பாவம் நீ
பாதை வழியே பார்த்துப் போடாம்பி...
பெயர்-மனோகரதாஸ் நவசுதன்

படைப்பு-சுதன்
பெயர்-மனோகரதாஸ் நவசுதன்

Manoharathas Navasuthan- புதியவர்

- பதிவுகள்: 10
வசிப்பிடம்: Chavakachcheri
சேர்ந்தது: 29/12/2011
மதிப்பீடு: 13
Re: வேரை மறந்த விழுதுகள்
கவிதை அருமை நண்பரே.
பெற்றவரை தவிக்க விடுதல் மிகப்பெரிய தவறு. இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
பொருளாதார தேவையில் பிறந்த பச்சிளங் குழந்தையையும் பீடிங்க் பாட்டீல் கையில் கொடுத்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த குழந்தை எதிர்பார்ப்பது தாயின் அருகாமையையும், அரவணைப்பையையும் தான். ஆனால் நாம் ஆஸ்தியையும், ஆடம்பரத்தையும் தான் கொடுக்கிறோம். இதை இன்றைய சமுதாயம் சரி என்று ஏற்றுக்கொண்டுள்ளது. இது நியாயம் என்று பேசும் சமூகம், பெற்றவரை தவிக்க விடுவதை மட்டும் அநியாயம் என்று ஏன் கூறுகிறது.
அது போல் முதிர்யோருக்கு பணம், வசதி செய்து கொடுத்தல் போதுமே, எதற்கு அவர்கள் அருகில் இருக்க வேண்டும். இந்த புலம்பல் பல முதியோர்களின் வார்த்தை. ஆனால் புலம்பத்தெரியாத குழந்தையின் வார்த்தையை, தேவையை எவர் பதிவு செய்வது.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: வேரை மறந்த விழுதுகள்
அருமயான கவிதை மனோஹர்
சதாசிவம் அண்ணா வணக்கம்..
உங்களின் கூற்று சில இடங்களில் ஏற்று கொள்ள முடியாததாக இருக்கிறது ...
இன்றைக்கு இருக்கும் கால கட்டத்தில் தாய் தந்தை இருவரும் வேலை செய்தல் மட்டுமே குடும்பத்தை சமாளிக்க முடியும்.. விலை வாசி பற்றி உங்களுக்கு தெரியுமில்ல? இதோடு இன்றய குழந்தைகளின் எதிர்பார்ப்பு நம்ம காலத்தை விட அதிகமாகிற்று.. என் 3 வயது பாப்பா என்னை வேலைக்கு பொங்கம்மா என்று சொல்கிறாள்.. வேண்டாமே என்றால், அப்போ எனக்கு teddy bear வாங்க காசு போராதே என்பாள்.
ஆனால் போதிய பணம் செல்வாக்கு இருந்தும் குழந்தைகளை கவனிக்காத தாயை மன்னிக்கவே முடியாது,,,

சின்றெல்லா- பண்பாளர்

- பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26
Re: வேரை மறந்த விழுதுகள்
உங்கள் பின்னூட்டத்திர்க்கு நன்றி.
உங்களின் கூற்றை நான் ஏற்கிறேன்.
எல்லாரும் சரி என்று சொல்வதை சரி என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னிடம் இல்லை. என் சொந்தக் கருத்துகளை கூடப் பேசாமல், எல்லாரும் தவறு என்று கூறும் ஒரு கூற்றின் தரப்பு நியாயங்களை தான் நான் வாதிட விரும்புகிறேன் ஏன் என்றால் இந்த தரப்பு நியாயங்களை பேச யாரும் முன் வருவதில்லை . ஒரு ஆதாரமும், ஆதரவும் இல்லாத குற்றவாளி கூண்டில் இருக்கும் நிரபராதியா, குற்றவாளியா என்று தெரியாத ஒருவருக்கு வாதிடுவதைப் போல்.
சமுதாயத்தில் சரி, தவறு என்பது காலத்துக்கு தகுந்தது போல் மாறுகிறது. 500 ரூபாய் சம்பளம் தரும் போது அடுத்த தெருவுக்கு பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பத் தயங்கிய நம் சமூகம், இன்று 20000 ரூபாய் வரும் போது அர்த்த ராத்திரியிலும் வேலைக்கு அனுப்பத் தயாராகி உள்ளது. ஒரு சிலர் செய்யத் தொடங்கி, பின்பு பலர் செய்து, அதன் பிறகு தவறு என்று கருதிய விஷயம் சரி என்று எண்ணப்பட்டு, சரி என்று ஆகிவிடுகிறது. இது உலகில் நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும் பொருந்தும். இது போன்ற கால மாற்றத்தில் முதியோர் இல்லம் வரும் போது, அதை மட்டும் நம் சமூகம் கொல்லைபுரத்தில் வரவேற்று, தலைவாசலில் தடை செய்கிறது. ஏன் என்றால் அனைவரின் பார்வையும் தலைவாசலில் தான் இருக்கும்.
நீங்கள் கூறுவது உண்மை தான். இரண்டு பேரும் வேலை செய்ய வேண்டும் , அல்லது ஆண் மகன் இரண்டு பேர் சம்பாதிக்கும் சம்பாதித்தையை சம்பாதிக்க வேண்டும். அப்போது தான் குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கித் தர முடியும். இப்படி வேலைக்கு செல்லும் பெற்றோரை நாளை குழந்தை அவர்களின் வசதிக்காக கார், பங்களா, தங்க பிரேம் போட்ட கண்ணாடி வாங்கி கொடுத்து கனடாவில் செட்டில் ஆகி விட்டு பணம் மட்டும் அனுப்பினால் சரியா ? சரியென்றால் நீங்கள் கூறுவது சரி. குழந்தை பிறந்து அது விவரம் அறியும் வரை குறைந்தது 3 வயது வரை தாயின் அருகாமை மிக அவசியம் என்பது என் கருத்து. இதை எந்த டெட்டி பியரும் ஈடு செய்ய முடியாது.
3 மாதம் லீவு முடிந்து ஆபீஸ் செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக, குழந்தைக்கு தாய்ப்பால் பழக்கம் ஆக கூடாது என்று, பிறந்த ஒரு சில நாட்களில் புட்டிப் பால் ஊற்றுவதை என்னால் ஏற்க இயலவில்லை. நாம் சரி என்பதை தான் குழந்தை திணிக்கிறோம். நாளை குழந்தை அமரிக்காவில் படிக்கப் போயி அங்கே செட்டில் ஆவது சரி என்று அதன் கருத்தை திணிக்கப் பார்த்தால் அது மட்டும் தப்பு என்று கூறுகிறோம்.
குழந்தை டெட்டி பியர் கேட்பது ஆசையினால் அல்ல. அது மட்டுமே குழந்தை விரும்பும்போதெல்லாம் கூட இருக்கும். இன்றைய அம்மாக்கள் அப்படி இல்லை. இதை உணர்ந்து தான் குழந்தைகள் டெட்டி பியர் கேட்கிறது. அந்த காலத்தில் மரப்பாவை பொம்மையை தவிர வேறு பொம்மை பிரபலம் இல்லை அது கூட குழந்தை அழும் போது மட்டுமே காட்டப்படும், எப்போதோ ஒரு முறை குழந்தை எடுத்து விளையாடும் . குழந்தையை விளையாட்டு காட்ட வீட்டில் பெரிய கூட்டம் இருந்தது. இன்றைய சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலையில் உள்ள குழந்தைக்கு டெட்டி பியரும், வீடியோ கேம், டிவி தான் அவர்களுக்கு தாத்தா, பாட்டி, மாமா எல்லாம், சில நேரங்களில் தாய் உட்பட.
இதை எந்த தாயும் மறுக்க முடியாது. ஆனால் இதை நம்மால் ஒத்துக் கொள்ள முடியாது. இது மட்டுமல்ல இது போல் ஆயிரம் விஷயம் இருக்கிறது.
இருந்தாலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற சொல்லை விட உலகத்தோடு ஒத்து வாழ்வது அறிவு என்று வள்ளுவன் சொன்ன சொல்லை கடைப் பிடிப்போம், அவர் சொல்படி நடப்போம். அப்போது தான் உலகம் நம்மை ஏற்கும்.

குழந்தையானாலும் சாி, முதியோரானுலும் சாி.
இருதிறத்தாருக்கும், அந்தந்த பருவத்திற்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் நிச்சயம் தேவை. தாய் இல்லாவிட்டால் குழந்தை தவிக்கும். பிள்ளைகள் இல்லாவிட்டால் வயது சென்ற பெற்றோா்க்கு தவிப்பு. இன்றைய உலகில் பணம் ஒன்றே பிரதானமாகி உறவுகள் சீரழிந்து வருவது மிகவும் வருந்ததக்கதே.
அக்கால கிராம பெண்களின் குழந்தை வளா்ப்பு மிகவும் பாராட்டபடக் கூடியது. இக்கால பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலேயே அவா்கள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து அவா்களை ஒரு ஆடம்பர சூழலுக்கு ஆளாக்குவதை கண்கூடாக நாம் பாா்த்து வருகிறோம். இது தவிா்க்கபட வேண்டும்.
எனது தனிப்பட்ட கருத்து:
1. வெளிநாடு பொருளீட்ட செல்லும் குடும்பஸ்தா்கள் விரைவில் தனது மனைவி மக்களை அவாிருக்கும் இடத்திற்கே அழைத்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
2. முதிய பெற்றோா்கள் இருப்பின் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கொருமுறையாவது வந்து செல்ல வேண்டும்.
அல்லது ஓரளவு சம்பாத்தியம் செய்தவுடன் திரும்பி வந்து சில காலம் (........) பெற்றோருடன் இருக்க வேண்டும்.
3. திருமணமாகாதவா்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவா்கள் சுதந்திரப் பறவைகள்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: வேரை மறந்த விழுதுகள்
சார்லஸ் mc wrote:குழந்தையானாலும் சாி, முதியோரானுலும் சாி.
இருதிறத்தாருக்கும், அந்தந்த பருவத்திற்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் நிச்சயம் தேவை. தாய் இல்லாவிட்டால் குழந்தை தவிக்கும். பிள்ளைகள் இல்லாவிட்டால் வயது சென்ற பெற்றோா்க்கு தவிப்பு. இன்றைய உலகில் பணம் ஒன்றே பிரதானமாகி உறவுகள் சீரழிந்து வருவது மிகவும் வருந்ததக்கதே.
அக்கால கிராம பெண்களின் குழந்தை வளா்ப்பு மிகவும் பாராட்டபடக் கூடியது. இக்கால பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலேயே அவா்கள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து அவா்களை ஒரு ஆடம்பர சூழலுக்கு ஆளாக்குவதை கண்கூடாக நாம் பாா்த்து வருகிறோம். இது தவிா்க்கபட வேண்டும்.
எனது தனிப்பட்ட கருத்து:
1. வெளிநாடு பொருளீட்ட செல்லும் குடும்பஸ்தா்கள் விரைவில் தனது மனைவி மக்களை அவாிருக்கும் இடத்திற்கே அழைத்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
2. முதிய பெற்றோா்கள் இருப்பின் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கொருமுறையாவது வந்து செல்ல வேண்டும்.
அல்லது ஓரளவு சம்பாத்தியம் செய்தவுடன் திரும்பி வந்து சில காலம் (........) பெற்றோருடன் இருக்க வேண்டும்.
3. திருமணமாகாதவா்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவா்கள் சுதந்திரப் பறவைகள்.
அருமையான கருத்துகள்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: வேரை மறந்த விழுதுகள்
@சார்லஸ் அண்ணா , சதாசிவம் அண்ணா.. வணக்கம்...
உங்கள் இருவர் கூற்றயும் ஏற்கிறேன்...
ஆடம்பரதிர்க்காகவும் பொழுதுபோக்கிர்க்காகவும் குழந்தைகள கவனிக்காத எந்த ஒரு தாயயும் மன்னிக்க முடியாது...
ஆனால், என்றாவது ஒரு நாள் விடிவு பிறக்காத? நம் குழந்தைக்கு பொற்காலம் அமையாதா? என்று இரு தலை கொல்லி எறும்பாய் தினம் தினம் போர்க்களம் போல் வேலைக்கு செல்லும் தாயின் நிலையயும் போற்ற மறக்கலாகாது..
நீங்கள் சொன்னது போல "உலகத்தோடு ஒத்து வாழ்வது அறிவு என்று வள்ளுவன் சொன்ன சொல்லை கடைப் பிடிப்போம்"...
உங்கள் இருவர் கூற்றயும் ஏற்கிறேன்...
ஆடம்பரதிர்க்காகவும் பொழுதுபோக்கிர்க்காகவும் குழந்தைகள கவனிக்காத எந்த ஒரு தாயயும் மன்னிக்க முடியாது...
ஆனால், என்றாவது ஒரு நாள் விடிவு பிறக்காத? நம் குழந்தைக்கு பொற்காலம் அமையாதா? என்று இரு தலை கொல்லி எறும்பாய் தினம் தினம் போர்க்களம் போல் வேலைக்கு செல்லும் தாயின் நிலையயும் போற்ற மறக்கலாகாது..
நீங்கள் சொன்னது போல "உலகத்தோடு ஒத்து வாழ்வது அறிவு என்று வள்ளுவன் சொன்ன சொல்லை கடைப் பிடிப்போம்"...

சின்றெல்லா- பண்பாளர்

- பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26
Re: வேரை மறந்த விழுதுகள்
அருமையான கவிதை......
உடன் நடந்த சதா சிவம் ஐயா, சின்றெல்லா மற்றும் சார்லஸ் அவர்களின் கருத்துப் பரிமாற்றமும் மிக அருமை.........
குழந்தைக்கு பாசம்னா என்னணு பெற்றோர் காட்ட மறந்துருராங்க.......பாசம்னா கேக்குற பொருள வாங்கி கொடுக்குறது பாசம் கிடையாது....அது வேறு.......அப்படி கேக்குற பொருள மட்டும் வாங்கி கொடுதுட்டு பெற்றோர் போயிட்டா...பின்னால குழந்தையும் ஓ இது தானா பாசம்.....அப்படினு தப்பா புரிஞ்சு பாசம்னா எண்ணனே தெரியாம போயிருறுது.........
பாசம் னா பொம்மை வாங்கி தரதோட......கொஞ்சம் நேரம் அந்த பொம்மையா வச்சு குழந்தை கூட விளையாடி.....மகிழ்ச்சி தருவது...இன்னும் இது போன்று நிறைய வழிகள் உள்ளன பாசத்தைக் காட்ட . அதை விடுத்து கேட்பதையெல்லாம் வாங்கி கொடுதுக் கொண்டிருந்தாள். பிரதோறு நாளில் நீங்கள் எதையாவது வாங்கி தர முடியாது என்று அன்பாக மறுத்தாலும் அது மிக பெரிய விபரீதமாக போயி முடிந்து விடும்.
நன்றிகள்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum