ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெகம் புகழும் புண்ணிய கதை...

View previous topic View next topic Go down

ஜெகம் புகழும் புண்ணிய கதை...

Post by கேசவன் on Fri Dec 30, 2011 8:52 pm


அந்த புஷ்பக விமானம் மட்டும் இல்லா திருக்கும்பட்சத்தில் இராவணனால் சீதையைக் கடத்தி வந்திருக்க முடியுமா என்பது ஒரு பெரும் கேள்வியாகும். சீதாதேவியைப் பொறுத்தவரையில் அவளது விருப்பத்துக்கு மாறாக எவர் ஒருவரின் கரம் அவள்மேல் பட்டாலும், தீண்டுபவர் சிரம் சுக்குநூறாகும் என்றொரு வரசித்தி அவளுக்கிருந்தது. சீதை தன் சக்தியை உணர்ந்து பிரயோகம் செய்ய வேண்டியது முக்கியம்.

அதனாலேயே மாறுவேடத்தில் வந்து புஷ்பக விமானத்தில் ஏற்றும் வரை சீதை இராவணனை தவறாக உணராததால் இராவணன் தப்பித்தான்.

விதி எப்பொழுதுமே தன் செயல்களை ஈடேற்றிக் கொள்ள எதை எப்படிச் செய்ய வேண்டுமோ அதை அழகாகச் செய்துகொள்ளும். ஒரு விபத்து நிகழ்கிறது என்றால் நிகழ்த்துபவர், நிகழ்வுக்கு ஆளாகின்றவர், அதை வேடிக்கை பார்ப்பவர் அல்லது அதற்குத் துணை நிற்பவர் என்று பலர் தேவைப்படும் நிலையில், அவர்களை எல்லாம் நூலிழைப் பிறழ்வுமின்றி அது ஆட்டுவிக்கும்.

இங்கேயும் சீதையை இராவணன் கடத்தும் விதிப்பாட்டிற்கென்றே விஸ்வகர்மாவும் இந்த புஷ்பக விமானத்தைச் செய்யும்படி ஆகிவிட்டது.

எப்படியோ... ஒரு அற்புதத்தின்மேலும் பெரும்கறை படிந்துவிட்டது. அந்த விமானத்தைப் பார்த்த அனுமனுக்குள் இதெல்லாம் மனதுக்குள் ஓடியது. கூடவே விமானத்தைப் பார்த்து விட்டதால் அருகில்தான் அன்னை சீதையும் இருக்க வேண்டும் என்றும் அனுமானித்துக் கொண்டான்.

அந்த விமானம் ஒரு வகையில் சோர்ந்து விட்ட அவனைத் தூண்டிவிட்டதுபோல் ஆயிற்று. உற்சாகமாக அங்கிருந்து விலகி தன் தேடுதலையும் வேகமாய்த் தொடர்ந்தான்.

அவன் முன்னே இப்போது ஒளிப்புனலாய் ஜெகஜ்ஜோதியான ஒரு அரண்மனை! அந்த அரண்மனைக்குள் ஒவ்வொரு தூண்களும் தங்கத்தால் வேயப்பட்டு ஜொலித்தபடி இருந்தன. எங்கு பார்த்தாலும் பட்டுத் திரைச்சீலை! ஆங்காங்கே ஒயிலான சிற்பங்கள், வண்ண வண்ண ஓவியங்கள்... ஊடாக அகிற்புகை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் பேழைகள் இருந்தன; அவை திறந்தும் கிடந்தன. அதனுள் தங்க- வைர- ரத்னங் களாலான ஆபரணங்கள். ஓரிடத்தில் ஒரு மேடைமேல் வெள்ளிச்சாடி இருந்தது. அதனுள் பழரசங்களும், மதுரச வகைகளும் காணப்பட்டன.

இவற்றுக்கிடையே தளர்வாகக் கச்சை யுடுத்திய அழகிய பெண்கள் அநேகம் பேர் இருந்தனர். இவர்கள் இராவணேஸ்வரனின் அந்தப்புரத்து சம்போகினிகள். இராவணனை உல்லாசத்தோடு வைத்திருப்பது இவர்கள் செயல். ஒருத்தி ஆடுவாள், ஒருத்தி பாடுவாள், ஒருத்தி பழரசம் தருவாள், ஒருத்தி மேல் விழுந்து புரள்வாள். இவர்களே இராவணனுக்கு தைல ஸ்நானமெல்லாம் புரிவிப்பவர்கள். மானசீகமாய் இராவணனை தங்கள் ஆசைநாயகனாய் வரித்துக்கொண்ட வர்கள்.

அனுமன் அவர்கள் கண்களில் புலப் படாதபடி தன் உருவை சிறிதாக்கிக் கொண்டான். அவர்களைப் பார்த்தபோது அவனுக்குள் கோபாக்னி கூடுதலாகவே கொழுந்துவிடத் தொடங்கியது. இந்த இராவணன்தான் எத்தனை பெரிய சம்போகி... இவனுக்கு பட்டமகிஷி என்று ஒருத்தி இருக்க, அதுபோதாதென்று இத்தனை பெண்கள். இவர்களையும் விடுத்து அவன் சீதாதேவியை கடல் கடந்து வந்து கடத்திச் சென்றிருக்கிறான் என்றால் அவனது காமத்துக்கு அளவு மில்லை; அதற்கு அறிவுமில்லை என்று எண்ணுவதா? அல்லது இவர்கள் எவரிடமும் காணப்படாத பேரெழிலை அவன் அன்னையிடம் கண்டான் என்பதா?

எப்படி இருந்தபோதிலும் இராவணன் நசுக்கப்பட வேண்டி யவன்... இவன் ராஜ்ஜியத்தில் எங்கு பார்த்தாலும் ஆடம்பரம்- ஆரவாரம்- பெண்மைக்கும் பெரும் இழிவு. இவனை அழித்தால் மட்டுமே இந்த இழிவு தடுக்கப்படும் என்று எண்ணியபடியே எங்கே அந்த இராவணன் என்று தேடினான். ஒரு பஞ்சணைமேல் சில பெண்கள் கவரி கொண்டும் மயிற்பீலி கொண்டும் விசிறியபடி இருக்க, ஆனந்த நித்திரையில் இருந்தான் இராவணன்.

போகம் முடிந்த களைப்பு அவனை ஆட்கொண்டிருப்பது பார்த்த மாத்திரத்திலே தெரிந்தது. மலைகளையொத்த புஜங்கள், மைதானம்போல் மார்பு, தேக்கு கடைசலாய் கைகள், முகத்திலும் ராஜப்பிரகாசம், அடர் வான- அழுத்தமான தலைமுடி என்று அவனி டம் புற லட்சணங்கள் பொலிவாய் இருந்த போதும், அவன் மனதால் அரக்கத்தன்மையோடு இருப்பதால் இவை அவ்வளவும் ஒரு குருடனுக் குக் கிடைத்த ஓவியம்போல ஆகிவிட்டிருந்தன.

அனுமன் இராவணனைப் பார்த்துப் பெருமூச்செரிந்து விட்டு அடுத்து சென்றது, இராவணனின் பட்டமகிஷியான மண்டோதரி யின் சயன கூடத்திற்குத்தான். ஒரு வினாடி சற்று முகம் மூடிய நிலையில் படுத்திருக்கும் மண்டோதரியைப் பார்த்தபோது அனுமனுக்கு சுருக்கென்றும் இருந்தது. ஏனென்றால் மண்டோதரியின் சயனக்கூடம் எளிமையாக- சேடியர் கூட்டம் பெரிதாக இல்லாமல் காட்சி யளித்தது. உள்ளே நிலவிய சுகந்த வாசமும் மனதுக்கு இதமானது. அறையில் தென்பட்ட ஓவியங்களிலும் நல்ல இயற்கை காட்சிகள்.

அந்த எளிய இனிய சூழலில் ஒரு பெண் கிடக்கிறாள். அவள் தன்னடக்கமாகவும் தெரிகி றாள் எனும்போது, ஒருவேளை இந்த மாதரசி தான் சீதாதேவியாக இருக்குமோ என்கிற பயத்தில்தான் அந்த சுருக்கென்ற உணர்ச்சி மேலிட்டது. பின்னர் மண்டோதரி புரண்டு படுக்க, கழுத்தில் தெரிந்த மங்கல நாணிலிருந்து காலில் காணப்பட்ட மெட்டிவரை அவள் ராஜ பத்தினி மண்டோதரி என்பதை அவனுக்கு உணர்த்தி விட்டது.

அப்பாடா என்கிற பெருமூச்சு டனும், இந்த போக ராஜ்ஜியத் தில்கூட விதிவிலக்காக ஒருத்தி இருக்கிறாளே என்கிற ஒரு சிறு ஆறுதலோடும் அங்கிருந்து விலகிய அனுமனுக்குள், திரும்பிச் சென்று உறங்கிக் கொண்டிருக்கும் இராவணனை எழுப்பி அங் கேயே யுத்தம் செய்து அவனைக் கொன்றுவிடலாமா என்றுகூட தோன்றியது. தோன்றிய வேகத் தில் அதை அடக்கிக் கொண்ட அனுமன், "இராவணன் வரையில் அவனுக்கான முடிவினை அண்ணல் ராமன் எழுதுவதே சரியாகும். இந்த மோக பூமியில் அண்ணலின் பிரவேசம் நிகழ்ந்து அவரின் பாதம்பட்டாலன்றி இது மாறாது போய்விடும்' என்றும் புத்திபூர்வமாக எண்ணிக் கொண்டான். அடுத்தடுத்து எங்கே அண்ணலின் தேவியார் என்று வேகமெடுத்துத் தேடியும் ஏமாற்றமே அவனை ஆட்கொண்டது.

இலங்கை நகர் மொத்தத்தையும் வலம் வந்து, அரசன் முதல் பிரஜைகள் வரை அவ்வளவு பேரையும் பார்த்து விட்டதுபோலகூட தோன்றி யது. ஆனாலும் யாரைத் தேடி வந்தோமோ- யாரைக் கட்டாயம் கண்டறிந்ததாக வேண்டுமோ அந்த தேவியார் கண்ணில் படவே இல்லையே.

ஒருவேளை தேவியார் இந்த இலங்கை நகருக் குள்ளேயே இல்லையோ... இந்த பாவி தேவி யாருக்கென்றே ஒரு தனி இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஒளித்து வைத்திருக்கிறானோ? இல்லாத ஒன்றை எவ்வளவு தேடினாலும் அது கிடைக்காது என்பதுதானே பிரம்மாண்டமான உண்மை!

"தொலைத்த இடத்தில் தேடு' என்பது ஒரு மதிப்பான பழமொழி. அதனுள் ஆழ்ந்த பொருள் உண்டு. இடம் மாறித் தேடுவதில் எதைத் தொலைத்தோமோ அதைத் தவிர எல்லாமும் கிடைக்கும். ஆனால் அது கிடைக்கவே கிடைக் காது. எவ்வளவு கிடைத்திருந்தும் தொலைத்ததை அடைய முடியாததால் கிடைத்தவற்றைக் கொண்டு மகிழவும் முடியாது.

அனுமனை இப்படிப்பட்ட சிந்தனைகளும் குழப்பங்களும் மெல்ல சூழத் தொடங்கியது. தன்னை வெகுவாய் உற்சாகப்படுத்தி விஸ்வரூபம் எடுக்க வைத்த ஜாம்பவானில் இருந்து சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் அவ்வளவு பேரையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தான்.

ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்று, "இலங்கை நகரில் எங்குமே அன்னை சீதை இல்லை' என்று சொன்னால், "இதைச் சொல் லவா உன்மேல் நாங்கள் அத்தனை நம்பிக்கை வைத் தோம்' என்று அவர்கள் சிரிக்க மாட்டார்களா?

நினைக்கும்போதே வலித்தது.

ஒருவேளை மகேந்திர மலை முகட்டிலிருந்து புறப்பட்ட வேளையே சரியில்லையோ?

ஒளிக்கடவுளான சூரியனை வணங்கியது போலவே அண்ணலையும் வணங்காமல் புறப் பட்டதன் எதிரொலியோ...?

அல்லது இராவணன் போன்ற அரக்க மாயங்களை சாதாரண வானரங்களால் உணர முடியாதோ?
அனுமனுக்குள் இப்படியாக பலவிதமான கேள்விகள். அவ்வளவுமே அசூயை என்றால் மிகையும் கிடையாது. இந்த மனமே எப்பொழு தும் இப்படித்தான். இது எப்பொழுதுமே சூழலின் கைதி. புறம் இதை எளிதாய் கையில் எடுத்துக்கொள்ளும். புறத்தில் இருப்பவை இனிதானதாக இருந்தால் மனதிலும் இனிய உணர்வுகளே நிலவும். மாறாக இருந்தால் அதற் கேற்பவே அல்லல்படும். மனித மனங்களுக்கே உரித்தான இயல்பு இது.

பள்ளம் கண்ட இடம் நோக்கி வெள்ளம் பாய்வதுபோல இது ஒரு பௌதிக காரணம். மனித குலத்துக்கே உரித்தான இந்த தாக்கம் வானர இனத்துக்கு மட்டும் இல்லாது போகுமா? அதிலும் வானரம் தாவும் தன்மையை தன் உள்ளுணர்வாகக் கொண்டது. அதன் வழிவந்த அனுமனும் ஏமாற்றமுறும்போது கலங்கிப் போவதும் குழம்பி நிற்பதும் சகஜம்தானே.

ஆனாலும் அனுமன் இதனூடே சில உத்தம மான எண்ணங்களையும் தன்னுள் புரட்டிப் போட்டான். அண்ணல் ராமனை முதன்முதலாக வனத்தின்மிசை சந்தித்தபோது தன்னுள் நிலவிய ஒருவித அமைதியை எண்ணிப் பார்த்தான். ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் மனம் அடங்கு கிறது. பொங்கி வழியும் பாலாழியானது மீண்டும் தன் கறந்த நிலைப்பாட்டுக்குத் திரும்பி உறைந்தே போவதுபோல அன்று மனம் அடங் கியது ராமனால்... ஆனால் இன்றோ ஆர்ப்பரிக் கிறது; அமைதியிழந்து தவிக்கத் தொடங்கிவிட் டது. இதை கட்டிப்போட ஒரே வழி, அன்றைய சந்திப்பை அப்படியே திரும்ப எண்ணுவது.

அதாவது, அண்ணலின் தோற்றத்தை மனதில் மூட்டி நிமிர்த்துவது... வேறு வழியில்லை!

இல்லாவிட்டால் இந்த மனம் குட்டைபோல் கலங்கி, சேறுபோல் குழம்பி இராவணனின் ராஜ்ஜியத்தில் தன்னிலை மறந்து கிடக்கும் பலரோடு சேர்த்துவிடும்.

"அண்ணலே, என்னுள் வருக.. அன்று தந்த அதே அமைதியைத் தருக... அத்துடன் தங்களை தியானிக்காது புறப்பட்டதற்கான மன்னிப்பை நல்கி, தங்கள் காரியமான என் காரியம் வெற்றி பெற்றிட அருளிடுக' என்று வேண்டியபடி ஒரு மதில்மேல் அமர்ந்து கொண்டான்.

சிரசுக்கு மேலே இருண்ட வானம்- அதில் மின்னித் தெறிக்கும் நட்சத்திரக் கூட்டம்.

அவையும் அனுமனின் ராம தியானத்தைக் கண்ணுற்றன.

"ராம் ராம் ராம் ராம் ராம்...
ராம் ராம் ராம் ராம் ராம்...
ராம் ராம் ராம் ராம் ராம்...
ராம் ராம் ராம் ராம் ராம்...'

அனுமனிடம் ராமநாமம் முதன்முதலாய்த் தொடங்கியது இங்கேதான்... ராமநாமத்தின் ஆதிதொடக்கம் இங்கேதான் என்றும் கூறலாம். இதுவே முதல் ராம ஸ்மரனை... இதுவே முதல் ராம தியானம். உடனேயே அற்புதமும் தொடங்கி விட்டது. அனுமன் கைகூப்பியபடியே வானைப் பார்த்த வேளை கண்ணுற்ற நட்சத்திரங்களில் ஒன்று உதிர்ந்து இலங்கை நகரின் ஒரு வனப் பரப்பின்மேல் விழலாயிற்று. அது வழிகாட்டுவது போல இருந்தது.

அது ஒரு பெரும் வனம். ஆச்சா, இலுப்பை, கடம்பு, தேக்கு, செண்பகம், புங்கை, பொன்னி, செம்மரம் என்று எல்லா வகை விருட்சங்களும் மாநாடு கண்டதுபோல ஒன்றாகி வளர்ந்திருந்தன.

அந்த வனம் கண்ணில் பட்டநொடி அனுமனுக் குள்ளும் ஒரு சிலிர்ப்பு... நகரையே சுற்றி வந்த நாம் இந்த வனத்தை விட்டுவிட்டோமே என்று...

அடுத்த நொடியே வானில் தாவி வனத்தை யும் அடைந்து அங்கிருந்த ஒரு மரத்தின் மேலும் போய் அமர்ந்துவிட்டான் அனுமன்.

உள்மனதில் மட்டும் ராம தியானம் நிற்கவே இல்லை. அப்படியே பார்வையில் சுழற்சி... இருண்ட வனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் தீப்பந்தங்களால் உண்டான வெளிச்சம்!

அப்படியே மரத்துக்கு மரம் தாவி அந்த பாகத்துக்குச் சென்று மேலிருந்தபடியே கீழே பார்த்த அனுமனின் கண்கள் ஆச்சரியத்தோடு அகன்று விரியத் தொடங்கின...

அதோ, கீழே சீதை!

(தொடரும்)

நன்றி :http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8624
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum