ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாலி - பாட்டும் பாராட்டும்!

View previous topic View next topic Go down

வாலி - பாட்டும் பாராட்டும்!

Post by பிரசன்னா on Wed Jan 11, 2012 12:42 pm

வாலி - பாட்டும் பாராட்டும்!

‘பாட்டு எழுதிகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையொன்றுமில்லை, கோவிந்தா!”


- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.‘பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’-என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால்,

என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?

உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.

நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.

இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!

என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடி வைக்கும் பெருத்த அவமானமாகும்.

சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால்-

எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -

ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -

என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.

‘வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமா சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது!இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’ - என்னைப் பற்றிய இத்தகு கமெண்ட்ஸ் தான், என் தொழிலை கெளரவப்படுத்துகின்றன.

ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!

ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாத்தாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!

கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!

சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்த உடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.

‘எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப் படுத்தக் கூடாதா?’

இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவது போல!

கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!

இறையருலால்- விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!

படவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!

திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில், ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா - 1963-ல் திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.

சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -

வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!

அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -

கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த அற்புதம் -

அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!

கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -

அண்ணன் விசுவநாதன் அவர்கள் பி.சுசிலாவைக் கொண்டு பாடவைத்தார்கள்.

அந்தப் பாடல் -

அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் - ‘கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -

‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்; பார்வையிலே படம் பிடிச்சான்; பார்வையிலே படம் பிடிச்சு - பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்!’ - இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.

’மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’

- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் ‘ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -

‘வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -

அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கி கை கூப்பினேன்.

எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?

இந்த விழாவில்தான் -

என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -

விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -

சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!

எத்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -

ரசிகமணி டி.கே.சி. போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -

இராம நாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!

பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு ‘ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.

இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!

’மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால் -
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
பெரியார் சொன்னாரு!’

இன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.

அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.

‘உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருந்ததே -

அது அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும்!’

- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -

என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.

அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - எஸ்.ஜெ. சூர்யா அவர்கள்!

- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum