ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வைரமுத்துவின் இளமை ரகசியம்

View previous topic View next topic Go down

வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by பிரசன்னா on Sat Jan 14, 2012 1:16 pm

வைரமுத்துவின் இளமை ரகசியம்

வார்த்தையில் மட்டும் அல்ல... வாழ்க்கையிலும் இளமை மாறாதவராகவே ஈர்க்கிறார் வைரமுத்து. கட்டுடல் ஆணைப்பற்றிப் பாடல் எழுதச் சொன்னால், தன்னைக் கண்ணாடியில் பார்த்தபடியே கவிஞர் தாராளமாகக் கவிதை புனையலாம். 58 வயதிலும் மார்ச் ஃபாஸ்ட் நடை, பெரும் வெடிச் சிரிப்பு, எதிலும் எப்போதும் நேர்த்தி, அணிகிற ஆடை துவங்கி உச்சரிக்கிற தமிழ் வரை அத்தனை சுத்தம். தமிழ்ப் பாட்டுலகின் மார்க்கண்டேயனாக வலம் வருகிறார் கவிப்பேரரசு.

கீழ்வானம் சிவக்கும் அதிகாலைப் பொழுதில், பெசன்ட் நகர் கடற்கரையில் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியில் இருந்த இந்த இயற்கை நேசனை சந்தித்தோம். அவரோடு நடைபோட்டபடி அளவளாவியதில் இருந்து...

''கால் நூற்றாண்டுக்கு முன்பு பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறீர்களே..?''

''செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும்தான் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். வெறும் வயிற்றில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் அதிவேகமாக நடைப் பயிற்சி செய்வது என் தினசரி வழக்கம். வியர்வை சொட்டும் நடைப் பயிற்சி முடிந்த பிறகு, என் வீட்டை ஒட்டி உள்ள பூங்காவுக்குள் சென்று, அங்கு இருக்கும் வள்ளுவர் சிலை முன்பாக நின்று நான் சுவாசிக்கும் காற்று நுரையீரலின் தரை தொடும்படி மூச்சுப் பயிற்சி செய்கிறேன். என் உடலும் உள்ளமும் இளமையாக இருக்க இதுவே காரணம்!''


''தனிமையை அதிகம் விரும்புகிறீர்களே... தனிமைக்கும் சிந்தனைக்கும் அப்படி என்ன தொடர்பு?''

''நான் நடைப் பயிற்சி செய்யும்போதுகூட நண்பர்களோடு செல்ல விரும்பாதவன்; அந்த அளவுக்குத் தனிமை விரும்பி. சென்னை மக்களில் 90 சதவிகிதப் பேருக்கு மன அழுத்தத்தால் தயாரிக்கப்பட்ட வாழ்க்கைதான் உள்ளது. வீட்டில் இரைச்சல், வெளியில் இரைச்சல், வாழ்வைக் குறைக்கும் வாகன இரைச்சல், ஊரைக் கிழிக்கும் ஊர்வல இரைச்சல், கண் - காது திருடும் கலாசார இரைச்சல்... இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் பூக்களோடு எப்படிக் கை குலுக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன்... விவாதிக்க விரும்புபவன் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும்; படைக்க விரும்புபவன்... தனிமையில்தான் இருக்க வேண்டும்!''

''கவிப்பேரரசு ரசித்து ருசிப்பது... சோளச் சோறு, கம்பங்களி, கேழ்வரகுக்கூழ் என கிராமத்துச் சமையலா... அல்லது இறக்குமதியாகி வரும் நகரத்து நவீன உணவு வகைகளா?''

''உணவு விஷயத்தில், நான் எப்பொழுதுமே வடுகபட்டி வாரிசு. என் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் சாமை, குதிரை வாலி, வரகு சமைத்து தயிர் கலந்து சாப்பிடுவது என்றால், எனக்கு உயிர். தொட்டுக்கொள்ள புளி சேர்த்து செய்த பாகற்காய் கூட்டு, வல்லாரைக் கீரை, கொள்ளு ரசம் இதுதான் என் தோட்டத்தில், என் தினசரி காலை உணவு. சென்னையில், அவித்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுவேன். வெளியூர் பயணம் செல்லும்போது, எந்த நாட்டுக்குச் செல்கிறேனோ... அந்த நாட்டு உணவையே சாப்பிடும் பழக்கமும் உண்டு. லண்டனில், ஆவி பறக்க இட்லி கேட்பதும், ஜப்பானில் ரசம் கேட்பதும் சரியல்ல. காரணம், அந்தந்த நாட்டின் உணவுகளே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு சரியாக நம் உடலைத் தயார்படுத்தும். இந்தக் காய்கறிகள்தான், இந்தப் பழங்கள்தான் சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை எதுவும் என்னிடம் கிடையாது. நாவல் பழம் கிடைக்கும்போது அதைச் சாப்பிடுவேன். கொய்யா விளையும்போது, அதைச் சாப்பிடுவேன். அந்தந்தப் பருவங்களில், இயற்கை எதை விளைவிக்கிறதோ, அதை அப்படியே கடைப்பிடித்தாலே... நம் ஆரோக்கியம் நம் கட்டுக்குள் இருக்கும்.''''கிராமத்து வாரிசான நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? நகரத்துவாசிகளான அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?''

''பல் துலக்கும் இலக்கணமே பல பேருக்குத் தெரிவது இல்லை. மேல் பற்களை மேலிருந்து கீழாகத் துலக்க வேண்டும். கீழ்ப் பற்களைக் கீழிருந்து மேலாகத் துலக்க வேண்டும். மிக முக்கியமானது... உட்பற்களைத் துலக்குவது. இதைப் பல பேர் மறந்துவிடுகிறார்கள். பாதங்களையும் பற்களையும் தூய்மையாக வைத்து இருந்தாலே, பல நோய்கள் நம்மை எட்டிப்பார்க்காது. இவை இரண்டையும் தூய்மை செய்யாமல், நான் படுக்கைக்குச் செல்வது இல்லை. என்னிடம் இருந்து என் மகன்கள் கற்றுக்கொண்ட முதல் ஆரோக்கியச் செய்தி இதுதான். எந்தச் சூழ்நிலையிலும் சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்; அதையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்; இது நான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. அவர்களிடம் இருந்து நான் தெரிந்துகொண்டது... தேநீரில் பால் கலக்காமல் அருந்துவது.''

''உங்கள் உடல் நலத்தில் உங்கள் மனைவியின் பங்கு?''

''என் உணவைச் சரிவிகித உணவாக்கியதில் என் மனைவியின் பங்கு அதிகம். இன்று சாப்பிட்ட உணவு அடுத்த நாளும் இடம் பிடித்து அலுப்பு தட்டாமல் பார்த்துக்கொள்வார். கண்ட, கண்ட மசாலாக்களைக் கலந்து சமைக்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. என் உடல் நலத்தில், நான் உறுதியாய் இருக்க... அவரே முதல் காரணம்.''

''இத்தனை நெறிமுறைகள் இருந்தும் சர்க்கரைக் குறைபாடு எப்படி எட்டிப் பார்த்தது?''

''பரபரப்பான என் வாழ்க்கை, மன அழுத்தங்களால் பின்னப்பட்டுவிட்டது. ஒரே நாளில் ஆறு தயாரிப்பாளர்கள், ஆறு இசையமைப்பாளர்களுக்குப் பதில் சொல்லும் வாழ்க்கையை 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இந்தத் தொழில் அழுத்தம் சர்க்கரையை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறது. இதனால், இன்னும் என் வாழ்க்கை ஒழுங்குமுறைக்கு வந்துவிட்டது. ஆகவே... சர்க்கரைக்கும் நன்றி!''

''இன்னமும் கணீரென்ற குரல்... எப்படி சாத்தியம்?''

''உடல் நலக் கொள்கை இரண்டு விதப்படும். ஒன்று மரபு வழியானது; மற்றொன்று நம்முடைய வாழ்க்கைமுறை. மரபு வழியாக வந்த நல்ல உடல் நலத்தை நமது பழக்கவழக்கங்களால் கெடுத்துக்கொள்ளவும் முடியும்; மரபு வழியாக வந்த கேடுகளைப் பழக்கவழக்கங்கள் மூலம் திருத்திக்கொள்ளவும் முடியும். குரல்... என் பரம்பரைச் சொத்து. பஞ்சாயத்துப் பேசுகிறவர் என் தாத்தா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே கிட்டத்தட்ட 400 பேரை குரலாலேயே ஆட்சி செய்திருக்கிறார். அந்த ஆளுமை அவர் பேரனுக்கும் வாய்த்திருக்கிறது. புகையிலையும் மதுவும் குரலை உடைக்கும். இந்தப் பழக்கங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. அதனால், இன்னமும் பராமரிக்க முடிகிறது!''

''சென்னை வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டது?'

''இங்கே நான் இழந்ததைவிட அடைந்தது அதிகம். சென்னை எனக்கு தந்த பொருளாதாரம்தான் என் சுகாதாரத்தையும் இளமையையும் தக்கவைத்துக்கொள்ள எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது பெரிய செலவே சுத்தத்துக்காக நான் செலவிடுவதுதான். முடிந்த வரை என்னை, என் வீட்டை, என் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறேன். எந்த ரசாயனக் கலவையும் சேர்க்காமல், வடிகட்டப்பட்ட தண்ணீர் கொண்டுதான் என் வீடு தினமும் துடைக்கப்படுகிறது. இயற்கையோடு இருக்க விரும்புபவன் நான். அதனால் எந்த செயற்கை வாசனைக்கும் என் வீட்டில் இடம் இல்லை. வாரம் ஒரு முறை சாம்பிராணி இடச் சொல்லுவேன். இதைவிட சிறந்த கிருமிநாசினி இருக்க முடியாது. இதுவரை நானும் எந்த வாசனைத் திரவியத்தையும் பூசிக்கொண்டது கிடையாது. தேனிக்குச் செல்லும்போது சிலுக்குவார் பட்டியில் விற்கப்படும் மல்லிகைப் பூவைப் பந்து, பந்தாக வாங்கி வந்து என் தலைமாட்டின் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அந்த மணத்தைத் தவிர வேறு எந்த செயற்கை மணத்திலும் எனக்கு மயக்கம் இல்லை.''

''எழுத்தாளர்களோடு மட்டும்தான் உரையாடுவீர்களா? மருத்துவர்களோடு கலந்து உரையாடும் பழக்கம் இருக்கிறதா?''

''ஏன் இல்லை..? என் மிகப் பெரும் பலமே மருத்துவர்களின் நட்புதான். இருதயத்துக்கு ராமச்சந்திரா தணிகாசலம்; கண்ணுக்கு பத்ரிநாத், சுரேந்திரன்; வயிற்றுக்கு ரங்கபாஷ்யம், பழனிச்சாமி; பல்லுக்கு பாலாஜி; காது, மூக்கு, தொண்டைக்கு மோகன் காமேஸ்வரன்; மூட்டுக்கு மோகன்தாஸ்; மயில்வாகனன் பொது மருத்துவத்துக்கு நடேசன்; சர்க்கரைக்கு ராமச்சந்திரன்; குடும்ப டாக்டர் அப்பல்லோ தேவராஜன். என் ஆரோக்கியத்தில் மட்டும் அல்ல... கவிதைகளில் வரும் மருத்துவம் சார்ந்த பல சந்தேகங்களுக்கும் பதில் கொடுப்பது இவர்கள்தான். அதனால்தான் 'மருத்துவ முறையை மாற்றுங்கள் டாக்டர்’ என்று என் கவிதை மூலம் ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் மருத்துவ அறிக்கைவிட முடிந்தது.''

''தேனி மாவட்டத்தில் இருந்து வந்த மூன்று பேருமே (பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து) சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே? இது என்ன 'தேனி’ மாவட்டத்தின் சிறப்பா?''

''(சிரித்துக்கொண்டே) உழைத்தால்தான் சோறு; உழைத்தால்தான் வாழ்க்கை என்று நம்புகிறவர்கள் நாங்கள். உழைப்பாளிகளின் கூட்டில் இருந்து வந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகத்தான் இருப்பார்கள்.'

அது சரி.... தேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாகத்தானே இருக்கும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by சார்லஸ் mc on Sat Jan 14, 2012 3:33 pm

நல்ல பேட்டி.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by உதயசுதா on Sat Jan 14, 2012 6:07 pm

நல்ல கட்டுரை பிரசன்னா. பகிர்வுக்கு நன்றி .அது சரி டாக்டர் விகடனுக்கு தான் லிங்க் கொடுத்து இருக்கீங்களே. அப்புறமும் எதுக்கு தனியா இந்த பதிவு
சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by puthuvaipraba on Sat Jan 14, 2012 7:09 pm

மகிழ்ச்சி நல்ல பதிவு .

puthuvaipraba
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 228
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by கே. பாலா on Sat Jan 14, 2012 7:36 pm

@உதயசுதா wrote:நல்ல கட்டுரை பிரசன்னா. பகிர்வுக்கு நன்றி .அது சரி டாக்டர் விகடனுக்கு தான் லிங்க் கொடுத்து இருக்கீங்களே. அப்புறமும் எதுக்கு தனியா இந்த பதிவு
சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்
எல்லோரும் டவுண்லோட் பண்ணி படிப்பதில்லையே ! அதனால் இருக்கும் ! புன்னகை


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 14, 2012 8:42 pm

அவரின் இளமை இரகசியம் 'கோத்ரேஜ்' என்று தெரிகிறது. என்னைப் பாருங்கள்...யாராவது என் வயதைச் சொல்லிவிட முடியுமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: வைரமுத்துவின் இளமை ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum