ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகான் கணக்கு - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 1:31 pm

நடிப்பு: ரமணா, ரீச்சா சின்ஹா, தேவதர்ஷினி, முத்துக்காளை

இசை: ஏகே ரிஷால் சாய்

தயாரிப்பு: ஜிபிஎஸ்

எழுத்து - இயக்கம்: சம்பத் ஆறுமுகம்

பிஆர்ஓ: நெல்லை அழகேஷ்

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி 'அடடே யார் இந்த புதிய இயக்குநர்?' என கேட்க வைத்த படம் மகான் கணக்கு.

திறமைசாலியாக இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடும் இளம் நடிகர்களில் ஒருவரான ரமணாவுக்கு, இந்தப் படம் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும் வாய்ப்பு உள்ளது.

கதை மிகவும் வித்தியாசமானது. இதுவரை எந்த இயக்குநருக்கும் வராத துணிச்சல். அதற்காக முதலில் அறிமுக இயக்குநர் சம்பத் ஆறுமுகத்தைப் பாராட்டுவோம்.

தனியார் வங்கிகளில் நுகர்வோர் கடன், வாகனக் கடன் பெற்று கட்ட முடியாமல் அவதிப்படுவோர், கடன் அட்டை வாங்கிவிட்டு அவமானப்பட்டு நிற்பவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இந்தப் படம் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.

ரூ 2 லட்சம் கடனுக்காக தனியார் வங்கியின் டார்ச்சரால் குடும்பத்தையே இழந்து தவிக்கும் ரமணா, ஓஸிஓஸி வங்கி என்ற நிறுவனத்திடம் ரூ 360 கோடி கடன் பெறுகிறார். ஆனால் தன் பெயரில் அல்ல, தெருவில் போகிற பிச்சைக்காரர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்களை போலி ஆவணங்கள் கொடுக்க வைத்து. அந்தப் பணத்தை அவர் என்ன செய்கிறார்? வங்கி அதிகாரிகளிடம் மாட்டினாரா? என்பதெல்லாம் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

இந்த மாதிரி கடன்களையும், அட்டைகளையும் தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏன் தருகின்றன, அப்படி தந்த பின் மக்கள் படும் பாடு என்ன, இதை எப்படித் தடுக்கலாம் என ஒவ்வொரு கேள்விக்கும் அழுத்தமான பதிலைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அவரது இந்த முயற்சிக்கு நூறு சதவீதம் சின்சியராக உழைத்திருக்கிறார் ஹீரோ ரமணா.

குறிப்பாக இடைவேளைக்குப் பின் மகான் கணக்கு, மகா விறுவிறுப்பு. க்ளைமாக்ஸில், நீதிமன்ற விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ரமணா சொல்லும் பதில்களையும், அவரது வழக்கறிஞராக வரும் பாஸ்கரன் எடுத்து வைக்கும் வாதங்களையும் இந்தியாவில் உள்ள அத்தனை தனியார் வங்கிகளும் நிச்சயம் கேட்டாக வேண்டும். வசனங்களில் அத்தனை புத்திசாலித்தனம், வேகம்.

பன்னாட்டு தனியார் வங்கிகள் இந்தியாவுக்குள் நுழைந்த விதம் பற்றிய விளக்கம் பலருக்கும் ஒரு eye opener என்றால் மிகையல்ல!

ரமணாவுக்கு இதை முதல் படம் என்று கூட சொல்லலாம். குடும்பத்தினரை இழந்து தவிப்பது, வங்கி அதிகாரிகளை ஏமாற்றி கடன் பெற அவர் கையாளும் உத்தி, வங்கி அதிகாரிகளை அவர் எதிர்நோக்கும் பாங்கு, க்ளைமாக்ஸில் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் விதம் என எல்லா காட்சியிலும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாத இயல்பான நடிப்பு. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. கீப் இட் அப்!

ஹீரோயினாக ரீச்சா சின்ஹா நடித்துள்ளார். அவருக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

வங்கி அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, ஷர்மிளா, சிஇஓவாக வரும் சுரேஷ் அர்ஸ் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்ற காட்சிகள் இயல்பாக இருந்தாலும், இவ்வளவு பெரிய மோசடியை ஒரு அமர்வு நீதிமன்றம் விசாரிப்பது போல காட்டியிருந்தால் நம்பகத்தன்மையோடு இருந்திருக்கும்.

இசை, பாடல்கள், ஒளிப்பதிவு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், படத்துக்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

சம்பத் ஆறுமுகத்தின் வசனங்கள் பெரும் பலம். அதேபோல, தனியார் வங்கி செயல்பாடுகள் குறித்து அவர் பெரிய ஆராய்ச்சியே செய்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.

சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்தாலும், ஒரு சரியான விழிப்புணர்வைத் தரும் முயற்சிகளில் ஒன்றாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவற்றைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. பாராட்டி வரவேற்கலாம்!

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by சிவா on Sun Jan 15, 2012 7:16 pm

விமர்சனம் படத்தைப் பார்க்க ஆவலை ஏற்படுத்தியுள்ளது. எங்கே அந்த திருட்டு விசிடி டாட்.காம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 7:18 pm

@சிவா wrote:விமர்சனம் படத்தைப் பார்க்க ஆவலை ஏற்படுத்தியுள்ளது. எங்கே அந்த திருட்டு விசிடி டாட்.காம்.
எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது
இது தான் யா ஓசி ல மாங்காதா ஆடுற கூட்டம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by ராஜா on Sun Jan 15, 2012 7:20 pm

@சிவா wrote:விமர்சனம் படத்தைப் பார்க்க ஆவலை ஏற்படுத்தியுள்ளது. எங்கே அந்த திருட்டு விசிடி டாட்.காம்.
அதானே , விளம்பரம் இல்லாததால் சில நல்ல படங்களும் இது போல யாருக்கும் தெரியாமலேயே பெட்டிக்குள் சென்று விடும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30895
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by சிவா on Sun Jan 15, 2012 7:21 pm

www.thiruttuvcd.com இங்கு நண்பன் திரைப்படம் மிகவும் தெளிவாக வெளியாகியுள்ளது. 420MB அளவுதான். இவர்களின் இந்தப் பணி தொடரட்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 7:22 pm

@சிவா wrote:www.thiruttuvcd.com இங்கு நண்பன் திரைப்படம் மிகவும் தெளிவாக வெளியாகியுள்ளது. 420MB அளவுதான். இவர்களின் இந்தப் பணி தொடரட்டும்.

காமிரா காப்பி தானே இருந்தது நேற்று சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by சிவா on Sun Jan 15, 2012 7:28 pm

@இளமாறன் wrote:
@சிவா wrote:www.thiruttuvcd.com இங்கு நண்பன் திரைப்படம் மிகவும் தெளிவாக வெளியாகியுள்ளது. 420MB அளவுதான். இவர்களின் இந்தப் பணி தொடரட்டும்.

காமிரா காப்பி தானே இருந்தது நேற்று சோகம்

தரவிறக்கம் லிங்க் இல்லை. ஒரே பதிவில் முழுநீளப் படமும் காணும் வசதி இருந்தது. அதைத் தரவிறக்கம் செய்தேன், நல்ல தெளிவாக இருந்தது. இப்பொழுது வேட்டை ஆரம்பமாகிவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 8:07 pm

@சிவா wrote:
@இளமாறன் wrote:
@சிவா wrote:www.thiruttuvcd.com இங்கு நண்பன் திரைப்படம் மிகவும் தெளிவாக வெளியாகியுள்ளது. 420MB அளவுதான். இவர்களின் இந்தப் பணி தொடரட்டும்.

காமிரா காப்பி தானே இருந்தது நேற்று சோகம்

தரவிறக்கம் லிங்க் இல்லை. ஒரே பதிவில் முழுநீளப் படமும் காணும் வசதி இருந்தது. அதைத் தரவிறக்கம் செய்தேன், நல்ல தெளிவாக இருந்தது. இப்பொழுது வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

முழு நீளமும் காண முடியாது 72 நிமிடங்கள் பிறகு 1 மணி நேரம் இடைவெளி இடவேண்டும் ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by கோவிந்தராஜ் on Sun Jan 15, 2012 8:25 pm

பார்க்க வேண்டி ஆவலை தூண்டுகிறது ...........நன்றிகள் அண்ணா !
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by 2009kr on Sun Jan 15, 2012 10:47 pm

நண்பன் முழு படமும் நேற்று டவுன்லோடு செய்து பார்த்தேன்.. 6 மணி நேரம் ஆகியது. படம் தெளிவாக இருக்கிறது....
avatar
2009kr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 229
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by suskumarsus on Mon Jan 16, 2012 1:54 am

@இளமாறன் wrote:
@சிவா wrote:
@இளமாறன் wrote:
@சிவா wrote:www.thiruttuvcd.com இங்கு நண்பன் திரைப்படம் மிகவும் தெளிவாக வெளியாகியுள்ளது. 420MB அளவுதான். இவர்களின் இந்தப் பணி தொடரட்டும்.

காமிரா காப்பி தானே இருந்தது நேற்று சோகம்

தரவிறக்கம் லிங்க் இல்லை. ஒரே பதிவில் முழுநீளப் படமும் காணும் வசதி இருந்தது. அதைத் தரவிறக்கம் செய்தேன், நல்ல தெளிவாக இருந்தது. இப்பொழுது வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

முழு நீளமும் காண முடியாது 72 நிமிடங்கள் பிறகு 1 மணி நேரம் இடைவெளி இடவேண்டும் ஒன்னும் புரியல

1 மணி நேரம் இடைவெளி தேவை இல்லை ..

suskumarsus
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 102
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: மகான் கணக்கு - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum