ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

View previous topic View next topic Go down

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jan 17, 2012 12:09 am

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள்,பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்!

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை,எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிரோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)மோசே 4)இயேசு 5)முஹமது மட்டுமே!இவர்கள் அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!இவர்களளவு இறைவனை நெருங்கிய குருமார்கள்:புத்தர்,மஹாவீரர்,ஜொராஸ்டியர்,குருனானக்&வள்ளலார்!இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்!சித்தர்கள்,ஞானிகள் எல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்கள்!இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல வேண்டுவது நமது கடமை!கலப்படங்கள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 17 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்!ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் குருஸேத்திர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது!மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,தேவர்கள் என்கிற மனிதனை விட உயர்ந்த சக்திகள் உள்ளன!கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

Post by சதாசிவம் on Tue Jan 17, 2012 10:36 am

ஆழமான கருத்துகளை அழகாகச் சொன்னமைக்கு நன்றி.

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்

உண்மையான வார்த்தை, ஞானத்தின் முதல் படி இது.

பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது

ஆன்மிகம் மட்ட்மள்ள, பள்ளிக்கூடங்களில் நாம் படிக்கும் விசயங்களைல் கூட நமக்கு முழுத்தெளிவு இல்லை. சரி என்று நினைப்பதை வாதிட விரும்புகிறோம், மற்ற கருத்துகளை ஏற்க் மறுக்கிறோம். மதச் சண்டைக்கு முக்கிய காரணம் இந்த பக்குவமற்ற நிலை தான்.


ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்

நாம் இன்று கலப்படத்தை உண்மை என்று நினைக்கிறோம். சாரத்தை பிழியும் தெளிவு நிலை வர வேண்டும்.

தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

Post by கேசவன் on Tue Jan 17, 2012 11:44 am

நல்ல பதிவு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum