ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள்

Go down

டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள் Empty டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள்

Post by சிவா Wed Jan 18, 2012 5:47 am



போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

* சென்னை பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சுற்றுலா சென்றபோது இந்தப் பரிதாபம் நேர்ந்தது. (டிசம்பர் 25)

* தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் ரோசய்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். (டிசம்பர் 25)

* முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக வேறு அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மத்திய அரசின் உத்தேச உணவுப் பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். (டிசம்பர் 25)

* முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (டிசம்பர் 25)

* கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். (டிசம்பர் 26)

* சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள பெரியாறு அணை தொழில்நுட்பக் குழுவினர், மதுரையில் தமிழக- கேரள என்ஜினீயர்களுடன் ஆய்வு நடத்தினார்கள்.
(டிசம்பர் 26)

* முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சென்னையில் தன்னைச் சந்தித்து மனு கொடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். (டிசம்பர் 26)

* கர்நாடக முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பா மரணம் அடைந்தார். (டிசம்பர் 26)

* பாராளுமன்றத்தில் இரவு 11 மணி வரை நடந்த விவாதத்துக்குப் பிறகு லோக்பால் மசோதா ஓட்டெடுப்பில் நிறைவேறியது. (டிசம்பர் 27)

* மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழலை ஒழிக்க இறுதிக்கட்டப் போருக்குத் தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். (டிசம்பர் 27)

* தமிழக சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். (டிசம்பர் 27)

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேசிய பேரிடர் குழு அமைப்பதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. (டிசம்பர் 27)

* டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் யோஷிகிகோ நோடாவை பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றார். (டிசம்பர் 28)

* உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையில் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. (டிசம்பர் 28)

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை எதிரொலியாக சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. (டிசம்பர் 28)

* ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை அந்நாட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்புக்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்தது. (டிசம்பர் 28)

* லோக்பால் மசோதா மீது டெல்லி மேல்-சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. (டிசம்பர் 29)

* தமிழகத்தின் வடபகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. (டிசம்பர் 29)

* கடலூர், புதுச்சேரியைக் கடுமையாகப் பாதித்த `தானே' புயலுக்கு 33 பேர் பலியானார்கள். (டிசம்பர் 30)

* கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பேச்சைக் கேட்டுச் செயல்படுவோருக்கு மன்னிப்புக் கிடையாது என்று சென்னையில் அ.தி.மு.க. பொழுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். (டிசம்பர் 30)

* தானே புயலின் தாண்டவத்தால் கடலூர் நகரம் உள்ளிட்ட அந்த மாவட்டப் பகுதிகள் சூறையாடப்பட்டது போன்ற நிலையை அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. (டிசம்பர் 30)

* தானே புயலின் சீற்றத்தால் புதுச்சேரி சின்னாபின்னமானது. 15 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது. (டிசம்பர் 30)

* சென்னை புறநகரில் பலத்த மழை காரணமாக 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. (டிசம்பர் 30)

* தமிழ்நாட்டில் `தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மின்சாரம், குடிநீர் விநியோகத்தைச் சீர்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. (டிசம்பர் 31)

* தமிழ்நாட்டில் புயல், மழையால் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புயல், மழையால் தமிழ்நாட்டில் 35 பேர் பலியாகினர். (டிசம்பர் 31)

* முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கேரள மக்களிடம் கூற வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். (டிசம்பர் 31)

* இயற்பியல் துறையில் 2009-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இங்கிலாந்தின் உயரிய, `2012 புத்தாண்டு சாதனையாளர் விருது' வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. (டிசம்பர் 31)


டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum