ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by சாமி on Wed Jan 18, 2012 1:14 pm

First topic message reminder :

இந்த கட்டுரை "தெய்வ முரசு" ஆன்மீக மாத இதழில் வெளியானது.

தொலைக் காட்சியில் செய்திகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென உற்சாகத்தோடு துள்ளிக் குதிக்கும் படி ஒரு செய்தி படிக்கப்பட்டது. அது இது தான்:

இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு!

காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.

ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகிறேன்.

விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.

ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.

இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.

ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?

ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?

சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:

கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்

என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.

சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.

இதை உணர்ந்து தான் ஏற்கெனவே தெய்வமுரசு இந்த ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றின் பெயர்களை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டிய நெறி முறையின் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களாக மாற்றிப் பட்டியலிட்டுக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவை தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொண்டு வரப்படுகின்றன.

இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை எப்படி அமைப்பது?

போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.

இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.

இதில் முதலாவது ஏற்கெனவே தமிழக அரசின் நாட்காட்டிகளில் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்து அதை ஒட்டிய தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு எனக் கடைப்பிடிப்பது. இதோ, இன்னும் சில நாளில் அரசு முத்திரை அதற்குக் கிடைத்துவிடும் என்பது இனிப்பான செய்தி.

அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே! இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே! இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.

விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!

தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே! அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.

சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல். நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல். எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார். ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.

சாமி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 171
வசிப்பிடம்: சொந்த ஊர்: மதுரை, வசிப்பது: சென்னை.
சேர்ந்தது: 08/08/2011
மதிப்பீடு: 166

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by Bobshan returns on Thu Jan 19, 2012 3:37 pm

என் கேள்விக்கு உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா?

முடியாது இல்லையா பிறகு ஏன் வீண் விவாதம்..

Bobshan returns
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 88
வசிப்பிடம்: kailayam
சேர்ந்தது: 22/09/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by ஆரூரன் on Fri Apr 13, 2012 1:30 pm

சித்திரை மாதமா ?
தை மாதமா?

எது தமிழ் புத்தாண்டு ?

ஆரூரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 72
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 02/03/2012
மதிப்பீடு: 27

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by ஜேன் செல்வகுமார் on Fri Apr 13, 2012 2:58 pm

சாமி அண்ணா,கட்டுரையை பகிர்ந்ததற்க்கு நன்றி...
உங்களின் கட்டுரை தவறுதலாக உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உள்ளது.
இங்கே பதியவும்.
http://www.eegarai.net/f17-forum

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by கே. பாலா on Fri Apr 13, 2012 3:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:சாமி அண்ணா,கட்டுரையை பகிர்ந்ததற்க்கு நன்றி...
உங்களின் கட்டுரை தவறுதலாக உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உள்ளது.
இங்கே பதியவும்.
http://www.eegarai.net/f17-forum
கட்டுரை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ... சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4706
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by பது on Fri Apr 13, 2012 3:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:சாமி அண்ணா,கட்டுரையை பகிர்ந்ததற்க்கு நன்றி...
உங்களின் கட்டுரை தவறுதலாக உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உள்ளது.
இங்கே பதியவும்.
http://www.eegarai.net/f17-forum
அண்ணா அவர் பதிஞ்சு 4மாசம் ஆயிட்டு

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by T.N.Balasubramanian on Sat Apr 14, 2012 7:36 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினம். இதில் ஐயம் ஏதும் இல்லை. வடமொழி அடிவருடிகள் வைத்ததுதான் சித்திரை. இதை உண்மையான தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சோகம் சோகம்


தை முதல் நாளோ , சித்திரை முதல் நாளோ தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும். ஈகரை நட்புகள் இடையே நட்பு பேதம் வேண்டாம். இருப்பினும் Dr . சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களிடம் இருந்து வந்த " வடமொழி xxxxxxxxx "----------வார்த்தைகள் ஜீரணிக்க முடியவில்லை. நாள்பட்ட செய்தி என்றாலும் நான் பார்த்தது இன்றே.

உலக தமிழர் உறவு பாலம் என்றும் . ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் நாம் தினம் தினம் மனம் விட்டு உறவாடும் இங்கேயும் , உறுப்பினர்கள் பிறந்த தின வாழ்த்துக்களை ஆங்கில தினங்களில் வாழ்த்துக்கிறோம் . நாட்களும் தினங்களும் மனித உறவை /நேயத்தை மேன்பட வைக்கும் உத்திகளே என கருதுகிறேன். எந்தன் இக்கூற்றில் நண்பர்கள் மனது சங்கடப்பட்டால் மன்னிக்கவும்.
ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by சாமி on Sat Apr 14, 2012 9:52 am

T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினம். இதில் ஐயம் ஏதும் இல்லை. வடமொழி அடிவருடிகள் வைத்ததுதான் சித்திரை. இதை உண்மையான தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சோகம் சோகம்

தை முதல் நாளோ , சித்திரை முதல் நாளோ தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும். ஈகரை நட்புகள் இடையே நட்பு பேதம் வேண்டாம். இருப்பினும் Dr . சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களிடம் இருந்து வந்த " வடமொழி xxxxxxxxx "----------வார்த்தைகள் ஜீரணிக்க முடியவில்லை.


வடமொழி அடிவருடிகள் என சுந்தர ராஜ் ஐயா குறிப்பிடுவது ஆதிக்க உணர்வுகளைத்தானே ஒழிய தனிப்பட்ட மனிதர்களைக் கிடையாது என்பது என் எண்ணம்.

ஆதிக்க உணர்வுகள் உடையோர் காலம் காலமாக நம் மொழியை , கலாசாரத்தை அழிப்பது வருத்தப்பட வேண்டிய செயல் அல்லவா? அதன் கோபம் தான் ஐயாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.


சாமி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 171
வசிப்பிடம்: சொந்த ஊர்: மதுரை, வசிப்பது: சென்னை.
சேர்ந்தது: 08/08/2011
மதிப்பீடு: 166

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by balakarthik on Sat Apr 14, 2012 9:54 am

ஆமாமாம் தை முதல் நாளே புத்துத்தாண்டு தினம் ஆனால் நாங்கள் நேற்று டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் - இவன் களைஜர் தொலைக்காட்சியை தவிர மட்ர்ர அனைத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 744

http://www.eegarai.net

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 9:55 am

balakarthik wrote:ஆமாமாம் தை முதல் நாளே புத்துத்தாண்டு தினம் ஆனால் நாங்கள் நேற்று டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் - இவன் களைஜர் தொலைக்காட்சியை தவிர மட்ர்ர அனைத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் சங்கம் ஓமன் கிளை
இன்று தான் அம்பேத்க்கார் பிறந்த நாள்.

மணப்பாறை கிளை.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by balakarthik on Sat Apr 14, 2012 10:05 am

மகா பிரபு wrote:
balakarthik wrote:ஆமாமாம் தை முதல் நாளே புத்துத்தாண்டு தினம் ஆனால் நாங்கள் நேற்று டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் - இவன் களைஜர் தொலைக்காட்சியை தவிர மட்ர்ர அனைத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் சங்கம் ஓமன் கிளை
இன்று தான் அம்பேத்க்கார் பிறந்த நாள்.

மணப்பாறை கிளை.


பாஸ் நாங்கலாம் நெத்தைக்கே அதை கொண்டாடிவிட்டோம் இன்று விடுமுறை கொண்டாட்டத்தை சேலெப்ரெட் பன்னபோகிறோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 744

http://www.eegarai.net

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by மகா பிரபு on Sat Apr 14, 2012 10:08 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:ஆமாமாம் தை முதல் நாளே புத்துத்தாண்டு தினம் ஆனால் நாங்கள் நேற்று டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் - இவன் களைஜர் தொலைக்காட்சியை தவிர மட்ர்ர அனைத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் சங்கம் ஓமன் கிளை
இன்று தான் அம்பேத்க்கார் பிறந்த நாள்.

மணப்பாறை கிளை.


பாஸ் நாங்கலாம் நெத்தைக்கே அதை கொண்டாடிவிட்டோம் இன்று விடுமுறை கொண்டாட்டத்தை சேலெப்ரெட் பன்னபோகிறோம்
இது தான் அட்வான்ஸ் பிறந்த நாளா?

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by balakarthik on Sat Apr 14, 2012 10:15 am

மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:ஆமாமாம் தை முதல் நாளே புத்துத்தாண்டு தினம் ஆனால் நாங்கள் நேற்று டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினோம் - இவன் களைஜர் தொலைக்காட்சியை தவிர மட்ர்ர அனைத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் சங்கம் ஓமன் கிளை
இன்று தான் அம்பேத்க்கார் பிறந்த நாள்.

மணப்பாறை கிளை.


பாஸ் நாங்கலாம் நெத்தைக்கே அதை கொண்டாடிவிட்டோம் இன்று விடுமுறை கொண்டாட்டத்தை சேலெப்ரெட் பன்னபோகிறோம்
இது தான் அட்வான்ஸ் பிறந்த நாளா?


அதெல்லாம் நமக்கு தெரியாது எங்கள் பகுத்தறிவு தந்தை தாத்தா பாட்டனார் எல்லாம் அப்படித்தான் சொல்லிதந்துள்ளார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 744

http://www.eegarai.net

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by ஜேன் செல்வகுமார் on Sat Apr 14, 2012 10:20 am

கே. பாலா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சாமி அண்ணா,கட்டுரையை பகிர்ந்ததற்க்கு நன்றி...
உங்களின் கட்டுரை தவறுதலாக உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உள்ளது.
இங்கே பதியவும்.
http://www.eegarai.net/f17-forum
கட்டுரை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ... சிரி

நன்றி

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by T.N.Balasubramanian on Sun Apr 15, 2012 5:26 pm

சாமி wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினம். இதில் ஐயம் ஏதும் இல்லை. வடமொழி அடிவருடிகள் வைத்ததுதான் சித்திரை. இதை உண்மையான தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சோகம் சோகம்

தை முதல் நாளோ , சித்திரை முதல் நாளோ தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும். ஈகரை நட்புகள் இடையே நட்பு பேதம் வேண்டாம். இருப்பினும் Dr . சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களிடம் இருந்து வந்த " வடமொழி xxxxxxxxx "----------வார்த்தைகள் ஜீரணிக்க முடியவில்லை.


வடமொழி அடிவருடிகள் என சுந்தர ராஜ் ஐயா குறிப்பிடுவது ஆதிக்க உணர்வுகளைத்தானே ஒழிய தனிப்பட்ட மனிதர்களைக் கிடையாது என்பது என் எண்ணம்.

ஆதிக்க உணர்வுகள் உடையோர் காலம் காலமாக நம் மொழியை , கலாசாரத்தை அழிப்பது வருத்தப்பட வேண்டிய செயல் அல்லவா? அதன் கோபம் தான் ஐயாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.


மக்கள் சபை ,மாநில சபை போன்ற மன்றங்களில் சில வார்த்தைகள் சபை நாகரீகம் கருதி தவிர்க்கப் படுகின்றன. என்னைப் பொறுத்த வரையில் ஈகரையும் அது போன்றதே. இங்கும் உறுப்பினர்கள் அவரவர் கருத்தை மற்றவர் மனம் நோகாமல் கூறலாம். நாம் கூறியும் வருகிறோம் .சில வார்த்தைகள் பூடகமாக உபயோகத்தில் உள்ளன. அரசியலில் இது சகஜம் எனக் கூறி தப்பிக்கும் சிலரும் உண்டு. இங்கும் பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். உபயோகிக்கும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் வேறுண்டு .

வீரமா முனிவர் , தமிழ் ஆர்வம் காரணமாக ,தன்னுடைய ஜோசப் பெஸ்கி என்ற தன் பெயரை மாற்றிக் கொண்டார். சூர்ய நாராயண சாஸ்த்ரிகள் என்பவர் தமிழ் ஆர்வம் காரணமாக தன் பெயரை பரிதிமார் கலைஞர் என்று மாற்றிக் கொண்டு, தமிழுக்கு தொண்டு செய்தார்கள். தமிழ் அரசியலில் பெயர் மாற்றம் செய்துகொண்டவர்கள் உண்டு. நெடுஞ்செழியன், மதி அழகன் போன்றோர் உதாரணம். பிராமணியத்தை வெறுத்த பெரியார் அவர்களும் பிராமணனை வெறுக்கவில்லை. தள்ளாத வயதிலும் தன் நண்பர் ராஜாஜி மறைவுக்கு ,தள்ளு சக்கர வண்டியில் மயான பூமி சென்றவர். ஆனால் அவர் பெயரை கூறிக்கொண்டு பிழைப்பவரும் இன்றும் உண்டு.
தமிழ் தமிழ் என்று கூறி, வட மொழி பெயருடன் உலா வரும் பலரும் உண்டு.

உங்கள் பகிர்வுக்கு நன்றி.
ரமணியன்.


T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Post by யினியவன் on Sun Apr 15, 2012 5:42 pm

இந்த பிரச்சினை தீர ஒரே வழி ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தாண்டு கொண்டாடிட வேண்டியது தான்.
சித்திரை புத்தாண்டு , வைகாசி புத்தாண்டு , ஆனி புத்தாண்டு..... இப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum