ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

View previous topic View next topic Go down

இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by சிவா on Wed Sep 30, 2009 12:50 pm
* தலைகுனிந்தபடி செல்லும் பெண்களிடம் கூட எங்கே `விலகி' இருக்கிறது என்று நோட்டமிடும் கழுகுக் கண்கள்

* அரக்கப்பரக்க ஓடிச்சென்று பஸ் ஏறி, உட்கார இடமின்றி தடுமாறும் பெண்களிடம் எப்போது... எப்படி... `உரசலாம்' என்று அலையும் மனித உடல்கள்

*
பணிபுரியும் அலுவலகத்தில் கூட எப்போது கையைத் தொடலாம், அப்புறம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் சில அல்பங்கள்

* வீட்டில் இருந்தாலும் கூட, `வாய்ப்பு' கிடைத்து விடாதா என்கிற கீழ்த்தரமான ஏக்கத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு `பிராக்கெட்' போடும் சபலங்கள்


- இப்படி, பெண்ணாக பிறந்த ஒரே குற்றத்திற்காக அவள் அனுபவிக்கும் துன்பங்கள், கொடுமைகள் ஏராளம், ஏராளம்!

காஞ்சனாவும் வேலைக்குச் செல்லும் இளம்பெண்தான். அன்று அலுவலகம் வந்த அவளை, வழக்கமாக அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்க்கும் பார்வைக்கும், அன்று அவளை அவர்கள் பார்த்த பார்வைக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.

இதற்கு காரணம், அவளுக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் திருமணமானது என்கிற விஷயம் தான். இப்போது, மேரேஜ் லீவு முடிந்து அலுவலக பணிக்கு திரும்பி இருக்கிறாள்.

கழுத்தில் கிடந்த ஈரம் காயாத மஞ்சள் கயிறு, வழக்கத்திற்கு மாறாக நெற்றி வகிட்டிலும், கழுத்துக் குழியிலும் புதிதாக அவதாரம் எடுத்திருந்த குங்குமம், நாகரீக வளர்ச்சியில் வெட்கத்தால் கோலம் போட மறந்த அவளது இரண்டு கால் பெரு விரல்களுக்கும் அடுத்த விரலில் இடம்பிடித்த மெட்டி ஆகியவற்றுடன் காட்சி தந்தாள். வழக்கமாக அவளிடம் காணப்படும் லோ-ஹிப், இறுக்கமான ஆடை, அலுவலகத்தில் பேன் ஓடாவிட்டாலும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் கூந்தல், மார்பிள் தரையில் கொட்டிய சில்லரைகளாய் சிதறும் சிரிப்பு ஆகிய அவளுக்கே உரிய சிறப்பு அம்சங்கள் `மிஸ்' ஆகியிருந்தன.

`காஞ்சனா எப்படி இருக்கே?' `மேரேஜ் லைப் எப்படி போய்க்கிட்டு இருக்கு?' என்று சக பெண் ஊழியர்கள் நலம் விசாரிக்க, சில ஆண் ஊழியர்களோ ஏக்கப் பெருமூச்சுடன் அவள் பார்க்காத நேரத்தில் அவளை ஏற இறங்க பார்த்து மூச்சு முட்டினர்.

மேலும், ஒட்டுமொத்த குடும்பப் பெண்ணின் அடையாளமாக ஆளே மாறிப்போய் இருந்த காஞ்சனாவை முதன் முதலில் பார்த்த மூத்த ஊழியை ஒருவர், திருஷ்டி கழிப்பதற்காக அவளது முகத்தை கைகளால் சுற்றி தனது தலையில் குட்டிக் கொண்டார்.

சக ஊழியர்களின் இந்த அன்புக்குரிய நல விசாரிப்புகளுக்கு மத்தியில், முன்பு தன்னை திருட்டுத்தனமாக நோட்டமிட்ட சில கழுகுக் கண்கள் எந்த பார்வை பார்க்கின்றன என்பதை அறிய, தனது பார்வையை அவர்கள் பக்கம் திருப்பினாள். வழக்கம்போலவே அவர்களது பார்வைகள் அவளது மேனியில் அங்கும் இங்குமாகத்தான் அலைந்து கொண்டிருந்தன.

முன்பெல்லாம், `பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமே' என்று இலவச காட்சியாக அந்த கழுகுப் பார்வைகளை அனுமதித்தவளுக்கு இப்போது என்னவோ போல் இருந்தது. கண்களில் லேசாக கோபத்தை வரவழைத்து, அந்த பார்வையாலேயே அவர்களை ஒரு பார்வை பார்த்தாள். அடுத்த நொடியே, இணைப்பு இல்லாத அந்த கரெண்ட் ஷாக்கிற்கு ஆளாகிப் போனார்கள் அந்த சபலங்கள்.

இந்த `ஷாக்', காஞ்சனாவுக்கு தந்த பலன் நிறையவே இருந்தது. அதுவரை எக்குத்தப்பாக பார்த்த பார்வைகள் தற்காலிகமாக திருந்தி இருந்தன. மற்றவர்களுக்கு, அவள் மீதான மேலான நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருந்தது.

காஞ்சனா மட்டுமல்ல; அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். பெண் கொஞ்சம் அழகாக இருந்துவிட்டால், அவளிடம் காதல் என்ற பெயரில் `தூது' விடுபவர்களும், காமம் என்ற பெயரில் கேவலமான காரியங்களுக்கு அழைத்து `சிக்னல்' கொடுப்பவர்களும் கொடுக்கும் டார்ச்சர் இன்னும் அதிகம்.

திருமணம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாய் ஆன பெண்களும் இந்த டார்ச்சர்களுக்கு ஆளாவது கொடுமையின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்களும் அலுவலகம் செல்லும் பெண்ணா? பாலியல் ரீதியான தொந்தரவுகளை நீங்களும் அனுபவிக்கிறீர்களா?

உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சட்டம் பல வழிகளில் சொன்னாலும், திட்டம் போட்டோ, போடாமலோ அதை செய்பவர்கள் திருந்தினால்தான் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லையென்றால், அது ஒரு தொடர்கதை தான்...

`அழகு என்றும் ஆபத்து' என்று அறிந்திருந்தால் மட்டும் போதாது. அந்த அழகை, மனம் திறந்து காண்பிக்க வேண்டிய கணவனுக்காக, நடத்தைகள் மூலம் பாதுகாப்பாக வைத்திருந்தால்தான் இப்படிப்பட்டவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by சிவா on Wed Sep 30, 2009 12:51 pm

அதற்கு என்ன செய்யலாம்?

* வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் எந்த நேரத்திலும், எப்போது வேண்டுமானாலும், யார் மூலமாகவும் ஏற்படலாம். அதை தடுப்பதுபோல், நடை, உடை, பாவனை போன்ற விஷயங்களில் அடக்கத்தோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்வது வெள்ளம் வரும் முன்னே அணை கட்டுவது போன்ற நல்ல பலனைத் தரும்.

* ஆடை விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். செய்கின்ற பணி, நீங்கள் பணிக்காக பயணம் செய்கிற தூரத்தின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்வதில் தவறில்லைதான். அவ்வாறு, உங்களுக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்யும் நீங்கள், அதில் கவர்ச்சி கலக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

* ஆடை விஷயத்தில் அழகு என்பதும், ஆபாசம் என்பதும் வேறு வேறு. நேர்த்தியான ஆடை அணிந்து, அந்த ஆடை மிகவும் அழகாக இருந்தால் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும். அதுதான் அழகு. கவர்ச்சி எல்லை மீறும்போது ஆபாசமாகிறது. நேர்த்தியான ஆடையில் கூட ஆபாசத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

உதாரணம் : உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஆடை அணிவது, தொப்புள் தெரியும் அளவுக்கு சேலையை இறக்கிக் கட்டுவது, உடல் அங்கங்கள் - அவற்றின் அளவுகள்கூட துல்லியமாக தெரியும் அளவுக்கு மிகவும் டைட்டாக ஆடை அணிவது.

* பரபரப்பாக வேலைக்கு கிளம்பும்போது, அலுவலக ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்வதில் காட்டும் முக்கியத்துவத்தை ஆடையிலும் காட்டுங்கள். உள்ளாடை அணியும்போது, குறிப்பாக பிரா அணியும்போது நிதானமாக அணிந்து கொள்ளுங்கள். போகிற போக்கில் அதை அணிந்தால், பயண நேரத்தில் அது ஆடையை விட்டு வெளியே வந்து அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம், சபல மனிதர்கள் உங்கள் மீதான பார்வையை இன்னும் அதிகரிக்கவே செய்வார்கள். சிலர், சில்மிஷங்களுக்கு கூட முயற்சிக்கலாம்.

* வேலைக்கு செல்லும்போது அணியும் ஆடைகளை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்துங்கள். மிகவும் லைட் கலர் ஆடைகளை தேர்வு செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அந்த வகை ஆடைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், உங்கள் கணவருடன் தனியாக உள்ள நேரங்களில் மாத்திரம் அதை தாராளமாக அணிந்து கொண்டு அழகு பாருங்கள்.

* அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் அளந்து பேசுங்கள். அவர்களிடம் சிரித்துப்பேசி பழகினால் அவர்களில் சிலர் உங்களை அவர்களுக்கே பிடித்த வேறு `லிஸ்ட்'டில் சேர்த்து விடக்
கூடும்.

* உங்கள் செல்போன் நம்பரை உங்கள் பிரியமான தோழியரைத் தவிர வேறு எந்த ஆண்களுக்கும் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் ஓப்பன் டாக் பேர்வழியாகவோ, அலட்டல் பார்ட்டியாகவோ இருந்தால் உங்கள் தனிமையான நேரங்களில் அவர்கள் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து, உங்கள் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பிவிடலாம்.

* ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தால் உடனடியாக அவர் மீது போலீசில் புகார் செய்து விடுங்கள். இந்த விஷயத்தில் அமைதியாகப் போவது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதற்கு சமமாகும்.

* உங்களது அந்தரங்கமான விஷயங்களை நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதையும் மீறி பகிர்ந்து கொண்டால், என்றாவது ஒரு நாள் அந்த தோழியே உங்களுக்கு வில்லியாக மாறலாம்.

குடும்ப மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by தாமு on Wed Sep 30, 2009 12:55 pmசிவா அண்ணா அருமை அருமை நல்ல தகவல்.. .. வாழ்த்துக்கள்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by கோவைசிவா on Wed Sep 30, 2009 1:07 pm

avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by மீனு on Wed Sep 30, 2009 1:12 pm

பெண்களை புரிந்து கொண்டு எழுதப் பட்ட கட்டுரை..இங்கே சொல்லப் பட்டு இருப்பவை அனேகமாக ஆசியா நாட்டில் என்றுதான் எனக்கு தெரிகிறது , இப்படிப் பட்ட பெண்கள் மனசாலே ரொம்ப கஷ்டப் படுவாங்க.. சில சமயம் பெண்களிலும் தப்பு இருக்கு ..அரை குறை டிரஸ் போடுவது தப்பை அதிகரிக்க செய்யும்.. அனேகமாக ஆண்களின் கழுகுப் பார்வையே போதும் பெண்களில் உடைக்குள்லாலே.. பார்வை சென்று பெண்களை கஷ்டப் படுத்தும்..
நல்ல தகவல்.. நன்றிகள் ஷிவா அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by தாமு on Wed Sep 30, 2009 2:38 pm

சில சமயம் பெண்களிலும் தப்பு இருக்கு ..அரை குறை டிரஸ் போடுவது தப்பை அதிகரிக்க செய்யும்..

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by யமுனாஸ் on Wed Oct 07, 2009 2:26 pm

ஆம் தாமு சொல்லுவது சரிதான் எங்கள் ஆபீஸில் குட இந்த மாதிரி பெண்கள் உள்ளார்கள்

யமுனா
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by ரூபன் on Wed Oct 07, 2009 2:33 pm

எங்கே இருக்கு அந்த ஆப்பீஸ் யமுனா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by சிவா on Wed Oct 07, 2009 2:36 pm

@ரூபன் wrote:எங்கே இருக்கு அந்த ஆப்பீஸ் யமுனா

சியர்ஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by VIJAY on Wed Oct 07, 2009 2:38 pm

@சிவா wrote:
@ரூபன் wrote:எங்கே இருக்கு அந்த ஆப்பீஸ் யமுனா


avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by யமுனாஸ் on Wed Oct 07, 2009 3:32 pm

கோயம்புத்தூர் இருக்கு தாமு அண்ணன

யமுனா
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum