ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

View previous topic View next topic Go down

குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by sundaram77 on Fri Jan 20, 2012 12:00 am

நண்பர்களே,

சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..

காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!

பாடல் இதோ நான்கே வரிகளில் :

உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.


பொருள் இதுதான் -

என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!

கடைசியில் போட்டாளே ஒரு போடு..!

சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.

இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!

அன்பன்,
சுந்தரம்

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு...  [You must be registered and logged in to see this link.]


Last edited by sundaram77 on Sun Sep 08, 2013 11:11 am; edited 17 times in total
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by சார்லஸ் mc on Fri Jan 20, 2012 12:04 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by sundaram77 on Fri Jan 20, 2012 12:27 am

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]

என் பதிவைப் பார்த்து எனக்கு அறிமுகம் பற்றி தெரியப்படுத்தினமைக்கு நன்றி ,சார்லஸ்..!
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 7:22 am

ஆரம்பமே அசத்தல் தான். நல்ல பதிவுகளை தொடருங்கள்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by சதாசிவம் on Fri Jan 20, 2012 10:09 am

அருமையான பதிவு, ஆழமான விளக்கம். குறுந்தொகை தமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று.

தொடருங்கள், உங்கள் பதிவுகளை.. சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by பாலாஜி on Thu May 16, 2013 1:35 pm

சிறப்பான பதிவு சூப்பருங்க

தொடருங்கள், உங்கள் பதிவுகளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum