ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
சங்கீத காதலாய்...... 5 5 2

சங்கீத காதலாய்......

View previous topic View next topic Go down

சங்கீத காதலாய்......

Post by சதாசிவம் on Sat Jan 21, 2012 10:15 am

சரளியில் ஆரம்பித்தேன்
சரளமாக பேசவில்லை
ஜண்டையில் பேசினேன்
சண்டையில் முடிந்தது

அலங்காரத்தில் தொடர்ந்தேன்
அகங்காரத்துடன் சென்றுவிட்டாள்
ஸ்வரஜதியில் சொல்லிவிட்டேன்
கால்மிதியைக் காட்டிவிட்டாள்

நிரவலாய் நெருடிவிட்டேன்
நின்னுகோரியிலும் பதிலில்லை
கீர்த்தனை வந்தும் கிடந்துதவித்தேன்
போர்த்தணைக்க வாவென்று

மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........



சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 10:57 am

சதாசிவம் wrote:

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........




சூப்பர்... இசையோடு இயைந்த காதல்...காற்றோடு கலந்துவிட்டாலும்
கானக் காதல் கவிதைக் காதல்தான்...நன்று சதாசிவம் அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 11:04 am

மிகவும் அருமையான காதல் கவிதை ஐயா.........

இதில் சில வார்த்தைகளுக்கு அற்தம் தெரியவில்லை, அற்தம் கூறுங்கள் ஐயா....

சரளி
ஜண்டை
நின்னுக்கோரி
ஆரோகனம்
அவரோகனம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by அதி on Sat Jan 21, 2012 11:13 am

இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா அருமையிருக்கு

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 11:26 am

அதிபொண்ணு wrote:இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா அருமையிருக்கு


ஓ இவையெல்லாம் ரகங்களின் பெயரா.......அப்பா சரி.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by அதி on Sat Jan 21, 2012 11:28 am

ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 11:32 am

அதிபொண்ணு wrote:ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?


நான் அந்த வார்த்தையை படிதது, அந்த பாடலை முணுமுணுத்தேன்.......ஆனால் இவை ராகங்கள் என்பது எனக்கு தெரியாது........பார்போம் ஐயா என்ன கூறுகிறார்கள் என்று


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by சதாசிவம் on Sat Jan 21, 2012 12:14 pm

நன்றி ரா ரா, நன்றி ராமன், நன்றி அதிபொண்ணு நன்றி

சங்கீதம் கற்றுக் கொள்ளச் செல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் கவிதை இது.
சங்கீதம் கற்றுக் கொள்ள பல படி நிலைகள் இருக்கிறது. நாம் ஒன்றாவது, இரண்டாவது , மூன்று என்று படிக்கிறோமே, அது போல் தான். ஆரம்ப நிலையில் இருந்து கீர்த்தனை என்ற நிலை வர இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகலாம். படிக்கும் மாணவனையும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பொறுத்து இது சற்று மாறலாம்.


பொதுவாக சொல்லிக்கொடுக்கும் சங்கீத பாடங்களின் வரிசைகள்

1. சரளி வரிசை - இது தான் ஆரம்பம் நிலை
2. ஜண்டை வரிசை
3. மேல் ஸ்தாயி வரிசை
4. தாட்டு வரிசை
5. தாளங்கள்
6. சப்த தாள அலங்காரங்கள்
7. கீதம்
8. ஸ்வர ஜதி
9. வர்ணம் (இதில் மோகன ராகத்தில் வரும் நின்னுக்கோரி என்று ஆரம்பிக்கும் வர்ணம் பெரும்பாலான ஆசிரியர்களால் தொடங்கப்படுகிறது)
10. கீர்த்தனை (இது தான் நாம் கச்சேரிகளில் கேட்கும் பாடல்கள்)

ஆரோகணம் - - ஸ்வரங்களின் ஏறு வரிசை
அவரோகணம் - ஸ்வரங்களின் இறங்கு வரிசை
சாதகம் என்றால் பயிற்சி - ஒன்று வரவில்லை என்றால் அதைத் தொடர்ந்து முயற்சி செய்து திரும்ப திரும்ப அதை சரி செய்வது, சிறப்புடன் பாடவும், பாடுவதை சீர் செய்யவும் இது அவசியம்.

நிரவல் - ஒரு பாடலில் உள்ள வரிகளை திரும்பத் திரும்ப பாடுவது. இது ராகத்தின் பல கோணங்களையும், அழகுகளையும் வெளிப்படுத்தும். இது மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் கையாளப்படுகிறது. இது போல் திரும்பத் திரும்பக் காதலை சொல்வதாக பொருள் கொள்ள வேண்டும்.

நீலாம்பரி மட்டும் தான் ராகத்தின் பெயர், இந்த ராகம் மன அமைதியையும் தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கம் மறந்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாக கச்சேரி பாடும் போது கடைசியில் மத்திமாவதி ராகம் பாடி முடிப்பார்கள். இதை மங்களம் பாடி முடிப்பது என்று கூறுவது சங்கீத மரபு.

ஆரம்ப நிலையில் இருந்து பல வருடம் காதலித்தும் காதலி கணியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்த இந்த கவிதை.

சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது தான் இந்தக் கவிதை.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by இளமாறன் on Sat Jan 21, 2012 1:28 pm

மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்...

கவிதை அருமை
காதல் என்றுமே இப்படி தானே ஒரு வழி வழிபாதையாய் போய் முடிந்து விடுகிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by சதாசிவம் on Sat Jan 21, 2012 5:24 pm

நன்றி இளமாறன்...
:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: சங்கீத காதலாய்......

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 6:52 pm

மிகவும் அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum