|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அவமானங்கள கண்டு துவளாதீங்க.
Page 1 of 1 • Share •
அவமானங்கள கண்டு துவளாதீங்க.
'ஒரு படி மட்டன் பிரியாணி 1,100 ரூபாய்... கோழி
பிரியாணி 1,000 ரூபாய்..! எலும்பு, கத்தரிக்காய், பருப்பு போட்ட தாழ்ச்சா, ரெய்தா
இலவச இணைப்பு!'
- அமர்க்களமாக
அசத்திக்கொண்டுஇருக்கிறது, மதுரை கே.கே.நகரிலிருக்கும் ரைஹானாவின் 'எம்.எஸ்.ஆர்.
கேட்டரிங் சர்வீஸ்'! 'அதென்ன வித்தியாசமா படி கணக்கு..?' என்று ஆர்ச்சர் யத்துடனேயே
ஆரம்பித்தோம் ரைஹானாவிடம்.
"சிறியவர், பெரியவர், முதியவர்னு கலந்துக்கற
விசேஷங்கள்ல தலை கணக்கோ, இலை கணக்கோ, பிளேட் கணக்கோ சார்ஜ் செஞ்சா
வீட்டுக்காரருக்கு நஷ்டம்தான் வரும். படி கணக்குங்கறது, நியாயமான விலையில நிக்கும்.
அதாவது, ஒரு படி பிரியாணி அரிசி, ஒண்ணரை கிலோ எடையிருக்கும். அதுக்கு ஒண்ணரை கிலோ
தனிக்கறி, அதோட தரமான வீட்டு நெய், அவ்வப்போது தயார் செய்ற மசாலா... இத்தனையும்
சேர்ந்ததுதான் ஒரு படி பிரியாணி.
வெறும் பிரியாணி மட்டும்னா ஒரு படி
பிரியாணியை பதினஞ்சு பேர் வரை சாப்பிடலாம். நிறைய சைட் டிஷ், ரசம் சாதம், தயிர்
சாதம்னு இருந்தா, இருபத்தி அஞ்சு பேர் வரை சாப்பிடலாம்!" என்று கணக்கு சொல்லும்
ரைஹானா, கொடைக்கானலில் விவசாயத்துறையில் தொடர்ந்து 13 முறை விருதுகள் வாங்கிய
'கரிக்கல் எஸ்டேட்' உரிமையாளர் முகமது சுலைமான் ராவுத்தரின் மூத்த
மகள்.
மூன்று சகோதரிகளுடன் பிறந்த ரைஹானாவுக்கு, சமையல் விருப்பமான ஒன்று!
சிறு வயதிலேயே அவர் செய்யும் பிரியாணி, தாழ்ச்சா, ரெய்தா காம்பினேஷனுக்கு
உறவினர்கள், நண்பர்களின் நாக்கு அடிமை! ஆனால், அவருடைய சமையல் சுவைத்த அளவுக்கு,
வாழ்க்கை சுவையாக அமையவில்லை! குடும்பநல கோர்ட் படியேற
வைத்துவிட்டது.
"ஒன்பதாம் வகுப்பு முடிச்ச அடுத்த ஆறே மாசத்துல எனக்குக்
கல்யாணம். அடுத்த ஆண்டே முதல் பையன்... தொடர்ந்து ரெண்டு பையன்கள்! முப்பத்தேழு
வயசுல என்னோட வாழ்க்கையை நானே, நான் மட்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல
சிக்கிட்டேன். அதுவரை எனக்கு பாதுகாப்பா இருந்த அப்பாவும் இறந்துபோக... சொத்து
சம்பந்தமான வழக்குகளை சந்திக்கவேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைகளோட
படிப்பும், அவங்க வளர வளர சேர்ந்து வளர்ந்த செலவுகளும் என்னை சுழற்றியடிக்க...
ஏற்கெனவே கைவசம் இருந்த 'ஆப்டிக்கல்' கடை மூலமா வந்த வருமானம் அதுக்கு ஈடுகொடுக்க
முடியாம திணற... ஒருவழியும் தெரியாம தவிச்சேன். எந்த ஓடத்தப் பிடிச்சு கரையேறலாம்னு
யோசிச்சப்போ, 'சமையலைத் தவிர ஒண்ணும் தெரியாத நம்மளால, என்ன பண்ணிடமுடியும்'னு மனசு
சோர்வாச்சு. ஆனா, 'அந்த சமையலையே தொழிலா செஞ்சா என்ன?'னு சடார்னு மனசுக்குள்ள
வெளிச்சம் வர, தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்துக்கு சமைச்சுக் கொடுக்கறதுனு முடிவு
பண்ணி, கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சேன்.
"ஒரு நாள் சித்திரை திருவிழாவப்போ
ஃப்ரெண்ட் ஒருத்தவங்ககிட்ட இருந்து போன். 'திருவிழாவுக்கு திடீர்னு வீட்டுக்கு
விருந்தாளிங்க வந்துட்டாங்க... சைவ சாப்பாடு சமைச்சுக் கொடு'னு சொல்ல, அதுதான்
ஆரம்பம். பிறகு... கற்கண்டு சாதம், வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ்னு சைவம்;
பிரியாணி, சிக்கன் மசாலா, சுக்கா, மட்டன் மசாலா, மதுரை ஸ்பெஷல் தலைக்கறி இறால்னு
அசைவம்... இது ரெண்டுலயும் ஏகப்பட்ட மெனுக்களோட வளர்ந்து நிக்குது இந்தத் தொழில்''
என்று ரைஹானா சுருக்கமாக சொன்னாலும், அவரின் ஆழ்மன நெருப்புக்கும்... அடுப்போடு
சேர்ந்து கொழுந்துவிட்ட அவரின் வைராக்கியத்துக்கும் கிடைத்த பெருவெற்றி இது என்பது
நமக்கு நன்றாகவே புரிந்தது!
'டச்சிங் த ஹார்ட் த்ரூ த ஸ்டொமக் (Touching
the heart through the stomach) என்பதுதான் ரைஹைனாவின் பிஸினஸ் மந்திரம். தரமாக,
சுத்தமாக, சுவையாக, வீட்டு முறையில் சமைத்ததால் விரிந்திருக்கும் அவரின்
வாடிக்கையாளர் வட்டத்துக்கு, ரைஹானாவின் சமையல் போலவே விலையும் சுவையாகத்தான்
இருக்கிறது. பிரியாணிகள் படி கணக்கு. சைடு டிஷ்கள், கிரேவிகள் கிலோ கணக்கு. ஒரு
கிலோ ஆட்டுக்கறியில் எந்த உணவு தயார் செய்தாலும் விலை ரூ.350. கோழிக் கறி என்றால்
ரூ.250. ஒரு கிலோவுக்கு விலை.
அலுவலகப் பெண்களின் அவசர சமையலுக்கான வத்தல்,
வடகம், ஊறுகாய் வகைகளுடன் புளியோதரை சாதம், தக்காளி சாதம், பூண்டு சாதம், வத்தக்
குழம்பு, மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், வெங்காய சாதம், உடனடி
முட்டை மசால், ரசம் ஆகியவை பேஸ்ட் வடிவத்திலும், உடனடி பிரியாணி, சில்லி சிக்கன்
மசாலா, கிரேவி போன்ற இன்ஸ்டன்ட் வகைகளையும் தயாரித்து விற்கிறார். இருந்தாலும்,
அவரின் கேட்டரிங் அயிட்டங்களுக்கு, இந்த இன்ஸ்டன்ட்களை அனுமதிப்பது
இல்லை!
"இன்ஸ்டன்ட் என்பது இயலாதவங்களுக்குத்தான். நாக்குக்கு ருசியா
சாப்பாடு வேணும்னா அப்பப்போ வறுத்து, அரைச்சுதான் சமைக்கணும்!" என்று சிரிக்கும்
ரைஹானா, நிறைவாகச் சொன்னது.
'' 'அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான்
உங்களை உயர்த்தற படிக்கட்டுகள். நம்மள அவமானப்படுத்தினவங்க முன்னால நாம வாழ்ந்து
காட்டணும்ங் கற வேகம், உறுதி, பிடிவாதம் பெண்களுக்கு கண்டிப்பாக தேவை'னு ஒரு
கூட்டத்துல கேட்ட வாசகங்கள்தான்... இன்னிக்கு வரை என்னை தெம்போட வலம் வர
வெச்சுக்கிட்டிருக்கு!''
மெயிலில் வந்தவை

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: அவமானங்கள கண்டு துவளாதீங்க.
முஹைதீன் wrote:
ரைஹானா, நிறைவாகச் சொன்னது.
'' 'அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான்
உங்களை உயர்த்தற படிக்கட்டுகள். நம்மள அவமானப்படுத்தினவங்க முன்னால நாம வாழ்ந்து
காட்டணும்ங் கற வேகம், உறுதி, பிடிவாதம் பெண்களுக்கு கண்டிப்பாக தேவை'னு ஒரு
கூட்டத்துல கேட்ட வாசகங்கள்தான்... இன்னிக்கு வரை என்னை தெம்போட வலம் வர
வெச்சுக்கிட்டிருக்கு!''
மெயிலில் வந்தவை
[/font][/color][/font]
இதுதான் எல்லா பெண்களுக்கும் இருக்கும் தன்னம்பிக்கை.அது வெளிப்படும் நிலை சூழ்நிலைய பொறுத்தது

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அவமானங்கள கண்டு துவளாதீங்க.
வாழ்த்துக்கள் சகோதரி , உங்கள் தன்னம்பிக்கை உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நல்லபடியாக வைக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













