ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

View previous topic View next topic Go down

நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by பிரசன்னா on Wed Jan 25, 2012 4:31 pm

நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

விருகம்பாக் கம், வளசரவாக் கம், கொட்டிவாக் கம்... கொஞ்சம் கூர்ந்து கவினிச்சிட்டீங்களா? இந்த ‘கம்’ எல்லாம் எந்த கம் னு நெனைக்கிறீங்க? அவசரப்பட்டு தப்பா யோசிச்சிராதீங்க. இது வேற கம். “படப்பிடிப்புக்கு பங்களா இருக்கு. வர்றீங்களா”ன்னு அழைக்கிற வணக் கம்.!
முன்னொரு காலத்திலே ‘மேய்ச்சல்’ நிலமா இருந்த இடத்தையெல்லாம் வளைச்சு போட்டு, நீச்சல் குளத்தோட வீட்டை கட்டியிருக்காய்ங்க பல பேரு. அதிலே பல பங்களாக்களில் நடக்கிற இரண்டாவது விஷயம் ஷூட்டிங். (முதல் விஷயம் என்னாங்கறது நமக்கெதுக்கு?) அப்படி ஒரு பங்களாவை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிற ஒரு நடிகையை பற்றிய விஷயம்தான் நான் சொல்லப் போறது.

டிவிலே பேசுற பல பேரோட தமிழைக் கேட்டா அது உச்சரிப்பா, நச்சரிப்பான்னே தெரியாதளவுக்கு நசுக்கிப் போவுது லாங்குவேஜ். அப்படிப்பட்ட ‘வரட்டு வால்’ தொகுப்பாளினிகளுக்கு நடுவே, நம்ம நடிகை பேசுற தமிழ் இருக்கே... அது தித்திப்பான திரட்டுப்பால்! இப்பவும் தொலைக்காட்சியிலே அவங்க வந்தா, காதிலே ஒரு டிசம்பர் கச்சேரியே நடக்கும்.

போன வாரம் கூட ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். மைக்குக்கு வலிக்காம, மனசுக்கு சுளுக்காம, குளுக்கோச காதிலே கொட்டின மாதிரி அப்படி ஒரு அழகான தொகுப்புரை. மொத்த சனமும் குத்த வச்சு உட்கார்ந்து குளுகுளுன்னு ரசிச்சிட்டுப் போச்சு. இவ்வளவு ரசனையான அந்த நடிகை வேற யாருமில்லே. நம்ம ஃபாத்திமா பாபு.

இப்போ வேணும்னா இவங்க அம்மா கேரக்டரா இருக்கலாம். ஒரு காலத்திலே கம்மாக்கரையே நிறைஞ்சு ஓடுற அளவுக்கு ஜொள்ளாபிஷேகம் நடத்தினாய்ங்க இவங்களைப் பார்த்து. அப்படி ஒரு ‘அம்மாடியோவ்...’ அழகு!

தேவாரத்தையும் திருக்குறளையும் சொல்ற விபூதி வாத்தியாரு, சமயத்திலே பிரம்பெடுத்து பின்னுற மாதிரி, இவங்களுக்குளேயும் ஒரு காட்ஸில்லா வந்து கர்புர்னுச்சு. சும்மாவா பின்னே? வயித்தைக் கட்டி, வாயக் கட்டி (?) சேர்த்து வச்ச காசிலே ஒரு வூட்டைக் கட்டினா, ஓசியிலே உப்புமா கிண்டுறேன். கொஞ்சம் சட்டி தர்றீங்களான்னு கேட்டா சாமி வந்து ஆடாது?

ஆடுச்சுய்யா ஒரு நாளு...
ஒரு சீரியலுக்காக தனது பங்களா வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாங்க

ஃபாத்திமா. சீரியல் தயாரிப்பு நிறுவனமும் பெரிசுதான். புரடக்‌ஷன் மேனேஜரு வீட்ட சுத்தி சுத்தி வந்தாரு.

‘இங்கே இது இருந்திருக்கணும். அங்கே அது இருந்திருக்கணும். ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ரேட் எவ்வளவு?’ன்னாரு மொத்த வீட்டுக்கும். ஏதோ விலைக்கே வாங்குற மாதிரி கேட்டாலும், நாலே நாளு ஷுட்டிங்கிற்குதான் இத்தனை கேள்வி மற்றும் ஆலோசனைகள்!

ஒருவழியா நாலு நாளைக்கும் சேர்த்து இருபத்தஞ்சாயிரம் பேசி ஒரு சிறு தொகையை அட்வான்சா வாங்கிட்டு ஏதோ ஒரு சேனலுக்கு ‘நியூஸ் வாசிக்க’ போயிட்டாங்க ஃபாத்திமா. வீட்டுக்கு மேலேயே அவங்க குடியிருக்காங்க. கீழ் போர்ஷனைதான் வாடகைக்கு விட்டிருந்தாங்க.

கடைசி நாளு ஷுட்டிங் முடியுற நேரத்திலேயாவது பணம் வந்திரும்னு காத்திருந்தா, லைட்டு, செட் பிராப்பர்ட்டின்னு எல்லாத்தையும் எடுத்து வேன்லே ஏத்திட்டு இருக்காய்ங்க. போட்டிருந்த நைட்டியோடு கீழே வந்த ஃபாத்திமா “நம்ம பேமென்ட் வரலே. அதுக்குள்ளே எல்லாத்தையும் ஏத்துறீங்களே”ன்னாரு. “வரும், வந்திரும்”னு ரெண்டே வார்த்தை பேசிட்டு, ஏத்துறதிலேயே குறியா இருந்தாரு பு.மே!

சரி வந்திரும்னு பொறுமையா இருந்த ஃபாத்திமாவுக்கு அடுத்து நடந்ததுதான் சுர்ர்ர்ர்ர்... மெல்ல தனது காரிலே ஏறிக்கிட்ட புரடக்‌ஷன் மேனேஜரு, “நாளைக்கு யாருகிட்டேயாவது குடுத்தனுப்புறேன். இப்போ கையிலே பணம் இல்லே”ன்னுட்டு வேகமா வண்டியக் கிளப்பிட்டாரு.

தன்னோட பதிலைக் கூடக் கேட்காம இப்படி விருட்டுன்னு வண்டிய கிளப்பிட்டுப் போனதிலே பயங்கர அப்செட் ஆன ஃபாத்திமா, போட்டிருந்த நைட்டியோடு தனது காரை கிளப்பிக்கிட்டு புரடக்‌ஷன் மேனேஜரு வண்டிய விரட்ட, வளசரவாக்கத்திலே ஆரம்பிச்சிது அந்த சேசிங்!

பின்னாடி இவங்க விரட்டுறதைப் பார்த்திட்ட மேனேஜரு, மாட்னா நாம மேனேஜரு இல்லே, டேமேஜருதான்னு நினைச்சிட்டாரு. ஆக்சிலேட்டர அழுத்தி டிராபிக்கை கதி கலங்க அடிச்சாரு.

இவங்க மட்டும் லேசுபட்டவங்களா என்ன? சோழவரம் ரேசுல, மூணு தடவ கப்பு வாங்குன ரேஞ்சுக்கு வண்டிய விரட்ட, போற வர்றவன்லாம் பொம்பளையா இது?ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க ஃபார்த்தும்மான்னு சொன்னாலும் கேட்கிற நிலைமையிலா இருந்தாங்க ஃபாத்திமா?

சர்ருபுர்ருன்னு பறக்குது வண்டி.

ஒரு வழியா ராம் தியேட்டருகிட்டே மடக்கிட்டாங்க புரடக்‌ஷன் மேனேஜரு வண்டிய. முன்னாடி போயி சடர்ன் பிரேக் அடிச்சு குறுக்கால வண்டிய நிறுத்த, முகமெல்லாம் வேர்க்க விறுவிறுக்க இறங்கினாரு புரடக்‌ஷன் மேனேஜரு. அவரு சர்வீஸ்லே இப்படி ஒரு அவமானத்தை பார்த்தே இருக்க மாட்டாரு.

“ஏம்மா, நான்தான் தர்றேன்னு சொன்னேன்ல. இப்படி வண்டிய குறுக்கே விட்டுட்டீங்களே, மொதல்ல வண்டிய எடுங்க”ன்னாரு.

“ஓஹோ, தரமாட்டேன்னு வேற சொல்லுவியா”ன்னு கீழே இறங்கிய ஃபாத்திமாவப் பார்த்திட்டு ஒரே கூட்டம்.

அவ்வளவு கூட்டத்திலேயும் ஆட்டோகிராப் ப்ளீஸ்னு ஒரு அசமஞ்சம், தாளு ஒன்னை எடுத்து நீட்ட, “அட போய்யா அந்தப்பக்கம்”னு தள்ளிவிட்டாங்க ஃபாத்திமா. “பணத்தை எண்ணி வச்சுட்டு வண்டிய எடு”ன்னு ஒரே கெரகம். நைட்டியோட நின்ன இவங்களை பார்த்திட்டு ஷுட்டிங் போலிக்குன்னு இன்னும் கூட்டம் கூட, தன்னை ஜகதல பிரதாபன்னு நினைச்சு வண்டிய விரட்டிட்டு வந்தவரு தர்மசங்கடலிங்கமாயிட்டாரு.

அங்கிருந்தபடியே யார் யாருக்கோ போன் போட்டு பணத்தை வரவழைச்சாரு. நட்ட நடுரோட்டில் பட்டுவாடா ஆச்சு பணம். மறக்காம வவுச்சர்லே கையெழுத்தும் வாங்கினாரு ஸ்பாட்லேயே வச்சு!

அன்னைக்கு நைட் அவங்க சேனல்லே செய்தி வாசிக்கும் போது இந்த செய்தியும் சொல்லுவாங்களோங்கிற அச்சம் அந்த புரடக்‌ஷன் மேனேஜருக்கு இருந்திருக்குமோ என்னவோ?

நேர்லே பார்த்தா கேட்கணும்!

- ஆர்.எஸ்.அந்தணன் (பளபள உலகம் கலகல பார்வை)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by யினியவன் on Wed Jan 25, 2012 5:16 pm

சேசிங், ரேசிங், அமேசிங், மன்மோகன் சிங் -
சாரி ரைமிங்ள அவரும் வந்துட்டாரு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by பிரசன்னா on Wed Jan 25, 2012 5:20 pm

கொலவெறி wrote:சேசிங், ரேசிங், அமேசிங், மன்மோகன் சிங் -
சாரி ரைமிங்ள அவரும் வந்துட்டாரு.

ஒண்ணும் தப்பில்லை ... இந்த விஷயத்தை கட்டுரையா எழுதினவரு நிறயா ரைமிங் குடுத்து இருக்கிறார்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by ஜாஹீதாபானு on Wed Jan 25, 2012 5:37 pm

இப்படி விரட்டிப் பிடிக்கலனா வந்திருக்குமா அந்த பணம் ஜாலி ஜாலி

(முதல் விஷயம் என்னாங்கறது நமக்கெதுக்கு?) அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30021
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 25, 2012 8:13 pm

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum