ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கல்யாணசந்தை

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கல்யாணசந்தை

Post by சுந்தரபாண்டி on Wed Jan 25, 2012 4:42 pm

ஆத்தங்கரையெல்லாம்
பொடிநடையாய் அளந்துகாட்டி-நீ
ஆளான நாளன்று
தென்ன ஓல கட்டிவச்ச
ஐத்தமகன் பேசுறண்டி.

மாடுமேய்க்க போகையிலும்
மலருகுட்டி வாடின்னு
மார்மேல சொமந்துபோன
மாமன்மகன் கேக்குறண்டி.

நிலாவுக்கு போகனுன்னு
நீ நின்னு அடம்பிடிக்க
இன்னிக்கு நேரமாச்சு
நாளைக்கு விடிகால
நான்கூட்டி போறேன்னு
அன்னிக்கு நான்சொன்ன
ஆறுதலு நெனப்பிருக்கா?

பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.

இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?

ஆத்தங்கரையெல்லாம்
ஒன்ன தூக்கி சொமந்தேன்டி.
ஆத்தங்கரை மணலெல்லாம்
ஒம்மொகத்த வரைஞ்சேன்டி.
இப்ப அந்த கரையோரம்
எதையோ பேசி சிரிச்சிகிட்டு
இஞ்சினியர் மாப்பிள்ளையின்
இடுப்பசுத்தி கையபோட்டு
நீ நடந்து போகையிலே
சத்தியமா விம்மிவிம்மி
சாகத்தான் போறேன்டி-இல்ல
சாமியாரா ஆவேன்டி.

நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?

முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.



சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by மகா பிரபு on Wed Jan 25, 2012 4:58 pm

சுந்தரபாண்டி wrote:நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
சாட்டையடி வார்த்தை.. சிறப்பான கவிதை. சொந்த அனுபவமா?

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by யினியவன் on Wed Jan 25, 2012 5:32 pm

முதல் காதல் மறையாது
முதல் முத்தம் கரையாது
மாமனுக்கு கண்ணீர் பெருகுது
நெஞ்ஜென்னவோ உருகுது மருகுது
பாவி மகளுக்கு இது போனதேன் தெரியாது?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by பார்த்திபன் on Wed Jan 25, 2012 6:21 pm

மிகச் சிறந்த கவிதை. வெகுவாக ரசித்தேன்! பாராட்டுக்கள்! சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 25, 2012 7:33 pm

மிகவும் நன்று... அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by இளமாறன் on Thu Jan 26, 2012 12:16 am

கிராம ஒரு தலை காதல் நன்றாய் இருக்கிறது

வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by ரா.ரா3275 on Thu Jan 26, 2012 12:31 am

ஒரு பொம்பள அழுதா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்...
ஆனா ஒரு ஆம்பள அழுதா அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கும்...
அது பொம்பளையாதான் இருக்கும்...
சுந்தரபாண்டி கதறலிலும் பெண் சிரிப்பொலி கேட்கிறது...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by yarlpavanan on Thu Jan 26, 2012 7:46 am

"நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி? "
என்ற வரிகளில்
உணர்வைப் பார்க்க முடிகிறதே!
கவிதை உள்ளத்தைத் தொடுகிறதே!

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by சார்லஸ் mc on Thu Jan 26, 2012 9:10 am

முடிநரைச்சு போனாலும்
மூச்சு நின்னு போனாலும்
முதுமையிலே சிக்கிகிட்டு-நான்
மொடமாக ஆனாலும்
உன்னோடு நான் கொண்ட
முதல்காதல் மறையாது.
கண்ணத்தில் நீ பதிச்ச
முதல் முத்தம் கரையாது.


இதுதான் ஒரு ஆண்மகனின் ஆழமான காதல் என்பதோ?!

ஆக... காதலில் ஆண்களை ஏமாற்றுவதில் நகரத்து பெண்களுக்கு கிராமத்து பெண்களும் சற்றும் சளைத்தவா்களல்ல என்பது இக் கவிதையின் மூலம் நிரூபணமாகிறது.

கவிதை சூப்பருங்க அன்பு மலர்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by சுந்தரபாண்டி on Fri Jan 27, 2012 12:18 am

இளமாறன் wrote:கிராம ஒரு தலை காதல் நன்றாய் இருக்கிறது

வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க

நண்பரே அது ஒரு தலைக்காதல் இல்லை.
ஒரு காதல் துரோகம்.

வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 10:03 am

மிகவும் அருயமையான உணர்வு பகிர்வு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by சதாசிவம் on Fri Jan 27, 2012 10:40 am

அழகிய உணர்வுப் பதிவு.
தொடருங்கள்......

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by செல்ல கணேஷ் on Fri Jan 27, 2012 2:36 pm

தோழமைக்கு,
உங்களின் கிராமிய நடை கவிதை மிக அருமை தோழரே!

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by ஜாஹீதாபானு on Fri Jan 27, 2012 2:53 pm

பல்லக்கு தூக்கி உன்ன
பட்டியெல்லாம் சுத்திவந்தேன்-இப்ப
பட்டிக்காட்டு குப்பையின்னு
பாக்காம போறியேடி.

இஞ்சினியர் மாப்பிள்ளையின்
எமகாவில் சினிமாக்கு
எகத்தாளமா போயிவாற
ஏமாந்து போன-இந்த
இளிச்சவா மாமனுக்கு
என்ன பதில் சொல்லபோற?

சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: கல்யாணசந்தை

Post by சுந்தரபாண்டி on Fri Feb 03, 2012 8:01 pm

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:நம்ம ஊரு சந்தையில
காசுகாரன் கையிக்குத்தான்
காளமாடு போகுமடி-ஆனா
காசுபணம் கண்டதுமே
காதலுமா மாறுமடி?
சாட்டையடி வார்த்தை.. சிறப்பான கவிதை. சொந்த அனுபவமா?

என் சொந்த அனுபவம் இல்லை நண்பரே;நான் நொந்த அனுபவம்
வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum