|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» aRimugam!...by Narmadha Today at 10:04 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
Page 1 of 1 • Share •
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
(வானொலி கவிதை நிகழ்வுக்கு எழுதியது\)
மடைதிறந்தவெள்ளமென மா நதியும் ஓடி வழி
மயங்கி நிலம் வீழ்ந்து சோரலாம்
நடைபழகும் பிள்ளையுமோர் நாலுஅடி வைத்த பின்னர்
நாணி நடை தயங்கி வீழலாம்
கொடைகொடுத்த வள்ளல் கரம் குறைவழியில்தயங்கி விட்டு
கொடுப்பதுவும் நின்று போகலாம்
படைநிறுத்தி நிலமுமாண்ட பலமெடுத்த தமிழினமோ
பாதியிலே மயங்கலாகுமோ
சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ
உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

Last edited by kirikasan on Sat Jan 28, 2012 2:19 pm; edited 3 times in total
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
உறங்குமா உண்மைகள்!
(இதுவும் ஒரு சஞ்சிகையின் கவிதைத் தலைப்பை வைத்து எழுதியது)
நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊர்நின்ற மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
கார்முகில் மழைசாட்சி கதிரவன் ஒளிசாட்சி
தேர் கோவில்மணி யோடு தினம்பூக்கும் மலர்சாட்சி
நேர்நின்ற கோபுரமும் நிமிர்தேவன் ஆலயமும்
சேர்ந்தாடும் மரக்கிளையும் சிறுமந்தி குருவிகளும்
ஊர்ந்தோடும் அலைபொழிலும் ஓய்யாரத் தாமரையும்
ஏர் உழுத மாடுகளும் எல்லாமும் சாட்சியென
வேரழிய வெட்டென்று விழிகாணக் கொன்றவன்
ஊரழியத் தீவைத்து உயிர்களும் வதைத்தவன்
வார்த்து நிலம் செந்நீரை வழிந்தோட விட்டவன்
சீர் செய்தன் என்றின்று சிரிக்கின்ற வேளையில்
தார்மீகம் தர்மமிவை தவறுவதும் ஏனடா
சார்பென்று உலகமும் சரிவதொரு பக்கமா?
நாராக உடல்சீவி நல்லுயிர்கள் கொன்றவனை
யார்தூக்கம் கொண்டாலும் பார்விழிகள் மூடினும்
சேர்ந்து சொலும் சாட்சிகள் தெய்வசபை முன்றலில்
ஓர்தினம் வந்தேறுமோ உண்மைதனைக் கூறுமோ!
நேர்மை விழி பூக்குமோ? நீதி வழி நல்குமோ?
பார்த்தவிழி இயற்கையெம் பாவம்தனைக் தீர்க்குமோ

Last edited by kirikasan on Sat Jan 28, 2012 5:33 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
bahavathi , இளமாறன், ஜாஹீதாபானு தங்கள் மூவருக்கும் நன்றிகள்
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........
இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்..........
இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
பிஜிராமன் wrote:மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........
இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்..........![]()
![]()
![]()
தங்கள் அனைவரதும் பாராட்டுக்கு நான் பெரிதும் கொடுத்துவைத்தவன். நன்றிகள் கோடி!!!
Re: மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)
சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ
ஓசைநயம் கூடிய வரிகள் துடிப்புடன் அணிவகுக்கின்றன

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum