ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 6:51 pm

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
Last edited by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:20 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 7:05 pm

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.


பொருள் விளக்கம்

ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.

நூல் பயன்

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!

பொருள் விளக்கம்

வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்

வாழ்த்து

வாழிய நலனே; வாழிய நலனே!

பொருள் விளக்கம்.

எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்

தொடரும் ..........
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Sun Jan 29, 2012 7:14 pm

முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.

கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......

உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 8:18 pm

பிஜிராமன் wrote:முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.

கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......

உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ஊக்கம் அளித்தமைக்கு நன்றி ராமன்.
:நல்வரவு:

விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Sun Jan 29, 2012 9:09 pm

விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.


எதைத் தொடங்கினாலும், எனக்கு புதுமையான விருந்தாக தான் இருக்கப் போகிறது ஐயா.

தொடருங்கள்......நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by செல்ல கணேஷ் on Sun Jan 29, 2012 9:50 pm

தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Mon Jan 30, 2012 6:13 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!

உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கணேஷ்.
நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 6:15 pm

நான் தொடர்ந்து படிக்க விழைகிறேன்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Mon Jan 30, 2012 6:43 pm

நூல்

1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை


பொருள் விளக்கம்

1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.

2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.

3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.

4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.

5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.

6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.

7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.

8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.

9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.

10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்

11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)

12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.

13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.

14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.

15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.


தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 30, 2012 7:01 pm

நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:30 pm

பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.

மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா. நன்றி

விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.

மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா. புன்னகை
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by yarlpavanan on Mon Jan 30, 2012 10:52 pm

தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Jan 31, 2012 8:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Jan 31, 2012 8:02 pm

yarlpavanan wrote:தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!

நன்றி யாழ்பாவானன் அவர்களே
தொடருங்கள், :நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Jan 31, 2012 8:10 pm

பிஜிராமன் wrote:
பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.

மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா. நன்றி

விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.

மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா. புன்னகை

நன்றி ராமன்.

நான் முன்னுரையில் குறிப்பிட்டது போல் நறுந்தொகைப்பாடல்கள் தனிதனிச் செய்யுள்கள் மட்டுமல்லாது. தொடர் வாக்கியங்கள் உள்ள செய்யுளாகவும். முதல் செய்யுளையும் அடுத்த செய்யுளையும் இணைத்து பொருள் கொள்ளுமாறும் உள்ளது.

அடுத்த செய்யுளை கவனியுங்கள்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Jan 31, 2012 8:56 pm

16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே

17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.

19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.

20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.

21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.

22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.


பொருள் விளக்கம்


16. நீண்டு நெடிந்து உயர்ந்து இருக்கும் பனைமரத்தில் பழமும், அதில் இருந்து வரும் விதையும் கை கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். அது வானுற வளர்ந்து இருந்தாலும் அந்த மரத்தில் இருந்து வரும் நிழல் ஒருவருக்கும் நிழல் ஆகாது.

17. பசுமையான வளமான ஆலமரத்தின் சிறிய விதை, ஒரு சிறு ஓடையில் வாழும் சிறிய மீனின் முட்டையை விட சிறிதாக இருக்கும். ஆனால் அதில் இருந்து வரும் சிறிய செடி, பெரிதாக வளர்ந்து ஆயிரம் விழுதுகளுடன் பெருகி படர்திருக்கும் போது பெரிய மன்னனின் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவருக்கும் நிழல் தரும்.

18. உருவத்தால் பெரியவர் என்று நாம் நினைப்பவர் அனைவரும் பெரியவரும் இல்லை.

19. உருவத்தால் சிறியவர் என்று நினைக்கும் சிறியவர் எல்லாம் சிறியவர் அல்ல.

20. நமக்கு பிறந்த அனைவரும் பிள்ளைகளாக மாட்டார்கள். நல்ல குணத்தோடு, குலம் வளர இருக்கும் பிள்ளைகளே பிள்ளைகளாவர்.

21. உறவினர் என்று இருக்கும் அனைவரும் உறவினர் ஆகாது. இன்பத்தில் பங்கு கொள்ளவது மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உறவினர் ஆவார்கள்.

22. மனைவியாக கட்டிக்கொண்டவர் அனைவரும் மனைவி ஆக மாட்டார்கள். கொண்டவன் குறிப்பு அறிந்து, நல்ல குணத்துடன் நடப்பவளே சிறந்த மனைவி.

16 முதல் 22 வரை உள்ள பாடல்களை தனியாக படிக்கலாம். பொருள் வரும். ஒன்றாக வாசித்து படித்தால் தொடர்புடைய வார்த்தைகளால் அழகிய நீளமான பாடலும், ஆழமான பொருளும் வரும்.

இது நறுந்தொகையின் சிறப்பு.


பாடல் 19 உடன் தொடர்புடைய மூதுரை

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா -கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

பாடல் 21 உடன் தொடர்புடைய மூதுரை

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.


இங்கு உள்ள ஒரு பாடலுக்கு வேறு ஒரு பார்வையில் அமைந்த பொருளை இங்கே காணவும். மரபுப் பாடல்களின் சிறப்பு இதன் மூலம் அறியலாம்.

[You must be registered and logged in to see this link.]


தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by அசுரன் on Tue Jan 31, 2012 9:01 pm

உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை அன்பு மலர்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Wed Feb 01, 2012 2:58 pm

அசுரன் wrote:உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை அன்பு மலர்

நன்றி அசுரன்.
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 3:01 pm

மிக மிக அருமை ஐயா..........கூடுதலாய், நறுந்தொகையை ஒட்டி எழுதப்பட்ட பாடல்களையும் தருவது, மிகவும் சிறப்பு ஐயா.......மிக்க நன்றிகள் மகிழ்ச்சி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 03, 2012 6:30 pm

[color=green]23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது.
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் .
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.
பொருள் விளக்கம்


23. நன்றாக பலமுறை காய்சினாலும் பசுவின் பால் சுவை குறையாது

24. நன்றாக நெருப்பில் இட்டாலும் தங்கத்தின் ஒளி குறையாது.

அடுதல் என்றால், நேரடியாக நெருப்பில் இடாமல் சமைத்தல் என்று பொருள் வரும். அடுதல் என்றால் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பொருளின் இயற்கை தன்மையை அழித்து அதை வடிவம் மாறாமல் இருப்பதை அடுதல் என்று கூறலாம். அடுப்பு என்று சொல்லும் இதில் இருந்து பிறந்து இருக்கலாம். பொருளை வடிவம் மாறாமல் சமைக்கும் இடத்தை அடுமனை (பேக்கரி) என்று கூறுவதும் இப்படி ஒரு பொருளில் இருந்து வந்ததது தான்.

சுடுதல் என்றால் நேரடியாக நெருப்பில் இடுதல். நெருப்பில் இடும் போது பொருள் முற்றிலும் மாறி சாம்பல் ஆக மாறி விடும், ஒரு சில பொருள்கள் தவிர, உதாரணம் சங்கு, தங்கம். வைரம் கூட கரியாகிவிடும். தமிழில் புதைக்கும் இடத்தை இடுகாடு என்றும், சுடும் இடத்தை சுடுகாடு என்று அழைப்பதற்க்கு இது தான் காரணம்,

இதைத்தான் மூதுரையில் அட்டாலும் பால் சுவை மாறாது, சுட்டாலும் சங்கு வெண்மை தரும் என்று ஔவை கூறுகிறார். ஒரு கருத்து உதாரணம் சொல்லும் போது கூட எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

25. சந்தனம் தேய்த்து தேய்த்து சிறிய துண்டாக மாறினாலும் தன் மணம் குன்றாது.

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது - மூதுரை

26. புகையை கொடுத்தாலும் அகில் கட்டை மணம் வீசும் (அறியாதவர்கள் சாம்பிரானியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.)

27. எத்தனை கப்பல் போல் கலக்கினும், எத்தனை நதி போல் இணைந்தாலும் கடல் சேறாகாது.

28. நன்றாக சுவையான பாலை ஊற்றி சமைத்தாலும் பேய் சுரைக்காயின் கசப்பு மாறாது.

29. பல வாசனை பொருளுடன் கலந்து ஊட்டினும் பல துண்டுகளை உடைய பூண்டு மணக்காது.

30. மேல சொன்ன பொருள்கள் எப்படி அதன் இயற்க்கை குணத்தில் இருந்து மாறாமல் இருக்கிறதோ, அது போல் தான் நமது வாழ்க்கையும், நாம் செய்யும் பாவம் புண்ணியம் என்ற செயல்களுக்கு ஏற்ப அமையும். இல்லாத ஒன்று வராது, இருக்கின்ற ஒன்று போகாது. இதன் படி ஒருவருக்கும் வரும் பெருமையும் சிறுமையும் அவர் அவர் செயல்கள் பொறுத்தே அமையும். பெருமை வேண்டின் நல்ல செயல் செய்ய வேண்டும்.

Last edited by சதாசிவம் on Fri Feb 03, 2012 6:47 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Fri Feb 03, 2012 6:44 pm

இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 03, 2012 6:47 pm

31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே
32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
[/color]

பொருள் விளக்கம்

31.சிறிய புத்தி உடையவர்கள் செய்யும் சிறிய தவறுகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை.

32. சிறிய புத்தி உடையவர்கள் அடுத்தவருக்கு துன்பம் வரும் வகையில் பெரிய குற்றம் செய்தால் அதை பெரியவர்கள் பொறுத்து மன்னித்து விடுதல் மிகவும் அரிதானது. அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

33. நூறு வருடம் இணைந்து பழகினாலும் சிறிய புத்தி உடையவருடன் இருக்கும் நட்பு நீருக்குள் இருக்கும் பாசி போல் வேர் கொள்ளாமல் விலகி விடும். இருக்கும் நீர் இருக்கும் வரை வளரும், வளர்ந்து நீரின் தூய்மையை கெடுத்து விடும். நீரில் மாசு உண்டாக்கி அந்த நீரில் துர்நாற்றம் வீசச் செய்யும். சின்ன குணம் உடையவர்களில் நட்பு இது போல் தான்.

34. நல்ல குணம் உடையவரின் நட்பு ஒரு நாள் பழகினாலும் ஆழமான நிலத்தை வெடித்து பிளந்து செல்லும் வேர் போல் உறுதியாக இருக்கும். நிலத்தை வெடித்து பிளந்து சென்றாலும் வேர் மண்ணின் ஈரத்தை தக்க வைத்து கொள்ளும். நிலம் வளம் பெற்ற மரம் தந்து மழை தந்து நாட்டுக்கு பயன்படும். பெரியவர்கள் நட்பு இது போல் தான்.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 03, 2012 7:41 pm

பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி
பிஜிராமன் wrote:இத்தனை உதாரங்களை நம் புலவர்கள் எப்படி கடைந்து எடுத்தார்களோ.......மிக மிக அருமை..........

அடுதலுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகச் சிறப்பு ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி

நன்றி ராமன்
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 6:59 pm

35.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
36.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
37.
நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே.
38.
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.
39.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
40.
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று


பொருள் விளக்கம்

35.
கல்வி கற்பது சிறந்தது, கல்வி கற்பது சிறந்தது வறுமை வந்து தாழ்ந்து போனாலும் கல்வியை நிறுத்தாமல் கல்வி கற்பது என்றும் நன்று (கல்வியை வலியுறுத்த இரண்டு முறை கூறப்பட்டுள்ளது)

36.
கல்வி கற்காத ஒருவன் தன் குலத்தின் பெருமையை பேசுதல் நன்றாக விளைந்த நெல் இடையே இருக்கும் பதரைப் போன்றது. பதர் என்பது அரிசி மணி இல்லாமல் காலியாக இருக்கும் நெல் மணி. பார்ப்பதற்கு நெல் போன்று தோற்றம் அளித்தாலும் அரிசியாக்கும் இடத்தில் இதன் குணம் தெரிந்துவிடும். அது போல் நல்ல குலத்தில் பிறந்து ஊரார் இவர் சிறந்தவர் என்று எண்ணி இருந்தாலும் கல்வி கேள்வி விஷயங்கள் வரும் போது படிக்காதவரின் அறியாமை வெளியில் தெரிந்து விடும். ஊரார் மதிக்கும் மிக உயர்ந்து குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனுக்கும் கல்வி அவசியம்.

37.
நான்கு வர்ணத்தாரின் மேல் வர்ணம் என்று சொல்லப்படும் வர்ணத்தில் பிறந்தவன் கல்வி கற்கவில்லை என்றால் கீழானவன் ஆவான்.

38.
எந்த குடியில் பிறந்தவன் ஆனாலும், எந்த இடத்தில் இருந்து வந்தவன் ஆனாலும் அக்குடியில் கற்றோறை உலகத்தார் மேல் வருக என்பர்.

39.
அறிவுள்ள ஒருவனை அரசனும் ஆபத்து காலத்தில் உதவுவான் என்று, தன்னருகே வைத்து கொள்வான்.

40.
கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்து தவறு செய்ய அச்சமும், அறிவு அகத்துள்ளே இல்லாத ஒன்றுக்கும் உதவாத மக்களைப் பெறுவதை விட வாரிசு இல்லாமல் ஒரு குடி அழிவதே மேல்.

இந்த பாடலுக்கு மூலமாக இருந்து இதே கருத்தை வலியுறுத்தும் புறநானூறுப் பாடல்.

உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே


பொருள் விளக்கம்

கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.

ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.

பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.

தொடரும்


Last edited by சதாசிவம் on Mon Feb 06, 2012 5:43 pm; edited 2 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Mon Feb 06, 2012 2:46 pm

குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிற


மிக மிக அருமையான விளக்கமும், பாடலின் மூலமாய் திகழ்ந்த புறநானூற்றுப் பாடலும் அதன் விளக்கமும், பாடலின் சிறப்பும். மிகச் சிறப்பு ஐயா.

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum